என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாரிஸ் ஜெயராஜ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட சந்தானம், எம்.பி. பதவி கொடுத்தால் கட்சியில் இணைய தயார் என்று கூறியிருக்கிறார்.
    சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் பாரிஸ் ஜெயராஜ். ஜான்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் பிப்ரவரி 12-ம் தேதி தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டிரைலர், கானா பாடல்கள் என இணையத்தில் ட்ரெண்ட்டிங்கில் இருப்பதால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

    இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சந்தானத்திடம் அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சந்தானம் ராஜ்ய சபா எம்பி பதவி கொடுத்தால் எந்த கட்சியிலும் இணைய தயார் என்று காமெடியாக பதில் கூறினார். மேலும் சசிகலா அழைத்தால் செல்வீர்களா என்று கேட்டதற்கு நிச்சயமாக யார் சீட்டு கொடுத்தாலும் செல்ல தயார் என்றார்.

    சந்தானம்

    மேலும் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் ரொம்ப தனித்துவமான கதை. காமெடி அருமையாக வந்திருக்கிறது. எனக்காக அவருடைய அணியுடன் உட்கார்ந்து காமெடிக்காக உழைத்துள்ளார் இயக்குநர் ஜான்சன். நிறைய விஷயங்கள் எழுதி எழுதி இந்தப் படத்தின் வசனங்களை இறுதிச் செய்தார்’ என்றார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்ஷிகா, பிரபல இசை பாடகர் ஆல்பத்தில் நடனமாடி இருக்கிறார்.
    இந்திய மொழிகள் அனைத்திலும் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டிருப்பவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. அவரது நடிப்பில் 50 வது படமான ”மஹா” திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் பிரபல பாலிவுட் இசைப்பாடகர் டோனி கக்கார் ( Tony Kakkar ) உருவாக்கியிருக்கும் ஒரு ஆல்பம் பாடலில் நடனமாடியுள்ளார் நடிகை ஹன்ஷிகா. கக்கார் ( Tony Kakkar ) இசையமைத்து உருவாக்கியுள்ள இப்பாடலை சட்டி தில்லான் இயக்கியுள்ளார்.  

    இது குறித்து நடிகை ஹன்ஷிகா மோத்வானி கூறியதாவது....

    ஹன்ஷிகா

    இசை துறையில் அனைவரும் கொண்டாடும், இந்தியா முழுதும் வெறித்தனமான ரசிகர்களை கொண்டிருக்கும் இசைப்பாடகர் டோனி கக்கார்
    அவர்கள் உருவாக்கிய பாடலில் நானும் பங்கேற்பது மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. மிகப்பெரும் சாதனைகள் படைத்து வெற்றியின் உச்சத்தில் இருந்தாலும் மிக எளிமையாகவே பழகினார். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அற்புதமானதாக இருந்தது. இப்பாடல் உருவாகியுள்ள பெரும் திருப்தியை அளித்துள்ளது. ரசிகர்களின் வரவேற்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் கண்டிப்பாக அவர்களும் கொண்டாடுவார்கள் என்றார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், இசையமைப்பாளர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள் கதாநாயகர்களாக மாறுவதும் நடிப்புத்துறையிலும் அவர்கள் வெற்றி பெறுவதும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார், ஹிப் ஹாப் தமிழா ஆதி வரிசையில் கதையின் நாயகனாக களம் இறங்குகிறார் இன்னொரு இசையமைப்பாளரான பாலாஜி என்கிற விது.

    இவர் தமிழில் இன்பா, சூரன் மஸ்து மஜா மாடி (கன்னடா) உட்பட மேலும் இரண்டு புதிய கன்னடா மற்றும் தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தின் கன்னட ரீமேக்கில் இவர் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    சாக்ஷி அகர்வால்

    தற்போது கதையின் நாயகனாக புதிய
    தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறார். இதில் நாயகியாக 'பிக்பாஸ்' புகழ் சாக்ஷி அகர்வால் நடிக்கிறார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ரங்கா புவனேஷ்வர்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.
    தென்னிந்திய சினிமாவில் மிகவும் குறிப்பிடத்தக்க இளம் சாதனையாளர்களில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம், பவன் கல்யாண், சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் ’நடிகையர் திலகம்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார். 

    கீர்த்தி ஒரு பன்முக திறமை வாய்ந்தவர். முன்னதாக ஓவியங்கள் மூலம் தனது திறன்களை வெளிப்படுத்தினார். விஜய் பிறந்தநாளன்று வயலின் வாசித்து வாழ்த்து தெரிவித்தார். இப்போது புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    கீர்த்தி சுரேஷ்

    அதில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவில் 'ரங் தே' படத்திற்கான பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இசைக்கு ஏற்ப கீர்த்தி பாடுகிறார். கீர்த்தியின் இனிமையான குரலைக் கேட்டு ரசிகர்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். மேலும் இந்த வீடியோ அதிக லைக்குகளைப் பெற்று வருகிறது. 
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
    தனுஷின் 41-வது படம் கர்ணன். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கி உள்ளார். லாக்டவுனுக்கு முன் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. எஞ்சியுள்ள காட்சிகளை கடந்த சில நாட்களாக படமாக்கி வந்தனர்.

    சமீபத்தில் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக தனுஷ் டுவிட்டரில் தெரிவித்தார். இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் கிட்டதட்ட முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் தனுஷ் டப்பிங் செய்த புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கின்றனர்.

    தனுஷ்

    இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது.
    அறிமுக இயக்குனர் வீராங்கன் இயக்கத்தில் சின்னா, ரிஷா ஹரிதாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் கணேசாபுரம் படத்தின் முன்னோட்டம்.
    சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் பி.காசிமாயன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வீராங்கன் இயக்கியுள்ள திரைப்படம் கணேசாபுரம். இத்திரைப்படத்தில் நாயகனாக புதுமுகம் சின்னாவும், நாயகியாக கேரளாவைச் சேர்ந்த ரிஷா ஹரிதாசும் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து சரவண சக்தி, ராட்சசன் பசுபதி ராஜ், ராஜசிம்மன், கயல் பெரேரா, ஹலோ கந்தசாமி மற்றும் டிக்- டாக் ராஜ்பிரியன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: மதுரையை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் 90ஸ் காலகட்டத்தில் நடைபெறுவதைப் போல் பயணிக்கிறது. இத்திரைப்படத்தில் வீரம், காதல், நட்பு என்று ஒரு ஜனரஞ்சகமான  கதைக்களத்தை மையமாக வைத்து எடுத்துள்ளோம். இதில் நாயகன் சின்னா மற்றும் நாயகி ரிஷா ஹரிதாஸ் புதுமுகங்களை போலல்லாமல் தங்கள் கதாபாத்திரத்தை உள்வாங்கி மிகவும் எதார்த்தமாக நடித்து உள்ளனர்.

    இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வாசு தனது கேமராவின் மூலம் ரசிகர்களை 90 காலகட்டத்திற்கு கொண்டு செல்வார் என நம்புகிறோம் அதேபோல் இசையமைப்பாளர் ராஜாசாயும் தனது இசையின் மூலம் இக்கதைக்கு உயிர் ஊட்டி உள்ளார் எனலாம். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்தை ஸ்டாண்டர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.
    வலிமை அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு மாஸ்டர் பட நடிகை முக்கிய அப்டேட்டை சொல்லியிருக்கிறார்.
    அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதற்கு பின், எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடாமல் உள்ளது. குறிப்பாக இப்படத்தில் அஜித்தை தவிர யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைக்கூட இதுவரை தெரிவிக்கவில்லை. 

    சங்கீதா

    இந்நிலையில், மாஸ்டர் படத்தில் மருத்துவராக நடித்த நடிகை சங்கீதா, தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறாராம். அவர் வலிமை படம் குறித்து கூறியதாவது: வலிமை படம் 90 சதவிகிதத்துக்கும் மேலாக முடிவடைந்து விட்டது. விரைவில் படம் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளிவரும். இப்படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் எனக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் இயக்குனர் வினோத் உடன் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவமாக அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ரஜினியும், பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்னமும் பட வெளியீட்டில் மோத உள்ளார்களாம்.
    ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். 

    ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் மீண்டும் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் முதல் பாகத்துக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம்.

    பொன்னியின் செல்வன், அண்ணாத்த பட போஸ்டர்கள்

    தற்போது வரை 70 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளனர். மார்ச் 5-ந் தேதிக்குள் முதல் பாகத்துக்கான முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது. அதேபோல் பின்னணி பணிகளை நான்கு, ஐந்து மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அவ்வாறு முடிக்கப்பட்டால் இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது. 

    ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஜினியும் மணிரத்னமும் பட வெளியீட்டில் நேருக்கு நேர் களம் காண்பார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால், முக்கிய பிரபலம் ஒருவர் படத்தில் இருந்து விலகியுள்ளாராம்.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் இந்தியன்-2. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கிய படக்குழுவினர், பின்னர் ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் படமாக்கினர். 

    விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஷுட்டிங், கடந்தாண்டு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக தடைபட்டது. அப்போது நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு ஓராண்டாகியும் இன்னும் தொடங்கப்படவில்லை.

    இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தாமதாகி வருவதால், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, அப்படத்தில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு வேறு படங்களில் ஒப்பந்தமாக முடியாத காரணத்தால், ரத்னவேலு இத்தகைய முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

    ரத்னவேலு

    இருப்பினும் இதுகுறித்து படக்குழு தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. முதலில் இப்படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானார். பின்னர் அவர் விலகியதால் ரத்னவேலுவை ஒப்பந்தம் செய்தனர். தற்போது அவரும் விலக உள்ளதாக கூறப்படுவது படத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
    ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படம் தற்போது மீண்டும் டிரெண்டாகி வருகிறது.
    லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு நெய்வேலியில் நடந்த போது, நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது.

    பின்னர் விசாரணைக்காக நெய்வேலி படப்பிடிப்பிலிருந்த விஜய், சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. வருமானவரிச் சோதனை முடிந்த பின்னர், விஜய் மீண்டும் நெய்வேலியில் நடந்த 'மாஸ்டர்' படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

    தினந்தோறும் விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடிவந்த நிலையில், வருமானவரிச் சோதனைக்குப் பிறகு, விஜய்யைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடினர். இதை அறிந்த நடிகர் விஜய் படப்பிடிப்பு முடிந்ததும் படப்பிடிப்பு தளத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தின் மீது ஏறி கூட்டமாக நின்ற ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் இந்த புகைப்படம் டுவிட்டரில் வெளியிடப்பட்டது.

    விஜய்யின் செல்பி

    நடிகர் விஜய், ரசிகர்களுடன் எடுத்த இந்த செல்பி சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. தற்போது அந்த செல்பி எடுத்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டுவிட்டரில்  #1YearOfMasterSelfie என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். 

    கடந்தாண்டில் டுவிட்டரில் அதிகப்படியான ரீ-டுவிட்டுகளை பெற்ற ஒரு பிரபலத்தின் டுவிட் என்ற சாதனையை விஜய்யின் செல்பி படைத்தது குறிப்பிடத்தக்கது.
    சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ராகுல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
    கேரள மாநிலம் ஆலப்புழா ஆழியாடு பாலப்பரம்பு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி ரவீந்திரன். இவரது மகன் ராகுல்(வயது34). கேரளாவில் சினிமா உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்தார். பல்வேறு மலையாள திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ராகுல், தற்போது நடிகர் பிரத்விராஜ் நடிக்கும் ஒரு படத்தில் பணிபுரிந்து வந்தார். அதற்காக கடந்த மாதம் 21-ந் தேதி முதல் கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

    இந்நிலையில் நேற்று அவர் தங்கி இருந்த அறை வெகு நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள், ராகுல் தங்கியிருந்த அறையை பார்த்தனர். அப்போது அறையின் மின்விசிறியில் ராகுல் பிணமாக தொங்கினார். இதுகுறித்து கொச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உதவி இயக்குனர் ராகுல் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் எதற்காக தற்கொலை செய்தார்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விஷால் பட நடிகையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவதூறு பரப்புவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள' படத்தில் நடித்தவர் மாதவி லதா. தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். மாதவி லதா அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தெலுங்கு சினிமா விருந்துகளில் போதை பொருள் நடமாட்டம் உள்ளது என்றும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார். 

    இந்நிலையில் மாதவி லதா சைபராபாத் போலீசில் தனது புகைப்படத்தை மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவதூறு பரப்புவதாக புகார் அளித்துள்ளார். 

    மாதவி லதா

    இதுகுறித்து மாதவி லதா கூறும்போது “ஆந்திராவில் கோவில்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களை கண்டித்து பேசினேன். அதன்பிறகு மர்ம நபர்கள் வலைத்தளத்தில் என்னை மோசமாக திட்டி கருத்துகள் பதிவிடுகிறார்கள். எனது புகைப்படத்தை மார்பிங் செய்தும் பதிவேற்றி உள்ளனர். எனது நடத்தை பற்றியும் கேவலமாக பேசுகிறார்கள். இதனால் சொந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.” என்றார்.
    ×