என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பா.விஜய் இயக்கத்தில், ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் உருவாகும் மேதாவி படத்தின் முன்னோட்டம்.
    மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் “மேதாவி”. பிரபல பாடல் ஆசிரியரும் இயக்குனருமான பா.விஜய் இப்படத்தை இயக்குகிறார். ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் – ஜீவா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கின்றார்.

    நகைச்சுவை பங்கிற்கு சாரா, “கைதி” படம் தினா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா இவர்களோடு ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தீபக் குமார் பாடி ஒளிப்பதிவு மேற்கொள்ள, சான்லோகேஸ் படத்தொகுப்பை செய்கிறார்.
    ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘தி கிரே மேன்’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க நடிகர் தனுஷ் அமெரிக்கா செல்ல உள்ளார்.
    நடிகர் தனுஷ் ஏற்கனவே ‘எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகீர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘தி கிரே மேன்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

    அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இப்படத்தை இயக்குகிறார்கள். 

    இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர். 

    தி கிரே மேன் பட போஸ்டர்

    இந்நிலையில், தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் தனுஷ், நாளை அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்காவில் 2 மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு மே மாதம் தான் தனுஷ் தமிழகம் திரும்புவார் என கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடிப்பதற்காக செல்ல உள்ள தனுஷுக்கு ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  
    கமலின் ‘விக்ரம்’ படத்தை இயக்குவதாக இருந்த லோகேஷ் கனகராஜ், அதற்கு முன் பிரபல நடிகரின் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.
    மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக இயக்கும் படம் விக்ரம். கமல் நடிப்பில் உருவாக உள்ள இப்படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டு நவம்பர் மாதமே வெளியானது. 

    இருப்பினும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் கமல் ஈடுபட்டுள்ளதால் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை. தேர்தலுக்கு பின்னரே விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    விஜய் சேதுபதி

    இந்நிலையில், விக்ரம் படத்துக்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம். இப்படம், குறைந்த பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும், ஒரே கட்டத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
    செல்வராகவன் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார். 

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அரவிந்த கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் எடுக்கப்பட்டு 5 வருடங்கள் ஆனாலும், சில காரணங்களால் இன்று வரை ரிலீசாகாமல் உள்ளது. 

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் வருகிற மார்ச் மாதம் 5-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ரஜினி, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி நடித்த பேட்ட படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வந்தப் இப்படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். பேட்ட படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

    ரஜினி

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தையும் பேட்ட படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகாவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாகவும், பிரபல பெண் இயக்குனர் அதற்கான ஸ்கிரிப்ட் எழுதி வருகிறாராம்.
    நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா கடைசியாக இணைந்து நடித்த படம் ‘சில்லுனு ஒரு காதல்’. கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஒரு மிகச்சிறந்த ரொமான்ஸ் படமாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இதன்பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின் ஜோதிகா நடிக்கும் படங்களை தயாரித்துள்ள சூர்யா, அவருடன் இணைந்து நடிக்கவில்லை.

    இந்நிலையில், சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து நடிப்பதற்கான ஒரு கதையை தயார் செய்து வருவதாக சில்லுக்கருப்பட்டி பட இயக்குனர் ஹலீதா ஷமீம் தெரிவித்துள்ளார். 

    ஹலீதா ஷமீம்

    மேலும் அவர் கூறியதாவது: “சில்லுகருப்பட்டி படத்தின் 50-வது நாள் வெற்றியை சூர்யாவின் வீட்டில் கொண்டாடிய போது தான் இருவரையும் ஒன்றாக சந்தித்தேன். அப்போது சூர்யா சார் என்னிடம், நாங்க சேர்ந்து நடிக்கிறதுக்கு கதை தயார் செய்யுங்கனு சொன்னார். அவர்களுக்காக ஒரு ஸ்கிரிப்ட் எழுதி வருகிறேன். விரைவில் அதை முடித்துவிடுவேன்” என கூறியுள்ளார்.
    விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஒவ்வொரு முறையும் தனக்கு பாலியல் மற்றும் கொலை மிரட்டல் வருவதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
    மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இதற்கு வெளிநாட்டு பிரபலங்கள் பலர் ஆதரவு அளித்து வருவதால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. 

    இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த நடிகை ஜமீலா ஜமீல் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் ஒவ்வொருமுறையும் தனக்கு கொலை மற்றும் பாலியல் மிரட்டல்கள் வருவதாக பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜமீலா ஜமீல்

    இது குறித்து நடிகை ஜமீலா ஜமீல் பதிவிட்டுள்ளதாவது: “இந்திய விவசாயிகள் குறித்தும், அங்கு நடைபெற்று வரும் போராட்டம் குறித்தும் கடந்த சில மாதங்களாக நான் பலமுறை பேசியிருக்கிறேன். ஒவ்வொருமுறை அவ்வாறு பேசும்போதும் நான் கொலை மிரட்டல்களையும், பாலியல் அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகிறேன். நானும் ஒரு சக மனிதர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு மிரட்டுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். நடிகை ஜமீலா ஜமீலின் இந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்ணாண்டஸ், விஜய் பட நடிகையின் பழைய வீட்டை ரூ.7 கோடிக்கு வாங்கி உள்ளார்.
    தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து அங்கேயே ஆடம்பர பங்களாவில் குடியேறி இருக்கிறார். தொடர்ந்து ஹாலிவுட் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். 

    பிரியங்கா சோப்ராவுக்கு மும்பையில் சொத்துகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக விற்க முடிவு செய்துள்ளார். சினிமாவில் அறிமுகமான போது மும்பையில் வாங்கிய தனது பழைய வீட்டை விற்கவும் விலை பேசினார். இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் அந்த வீட்டை ராசியான வீடாக கருதி தனக்கு விற்குமாறு கேட்டுக்கொண்டார். 

    ஜாக்குலின் பெர்ணாண்டஸ், பிரியங்கா சோப்ரா வீடு

    வீட்டுக்கு ரூ.7 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த தொகையை கொடுத்து பிரியங்கா சோப்ரா வீட்டை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் வாங்கி இருக்கிறார். விரைவில் அந்த வீட்டில் ஜாக்குலின் குடியேறுகிறார்.
    பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ள ‘கூழாங்கல்’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.
    நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்கள். அந்த வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூழாங்கல் என்ற திரைப்படத்தின் உரிமையை சமீபத்தில் கைப்பற்றினர். இப்படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

    கூழாங்கல் திரைப்படம், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், கடந்த சில தினங்களுக்கு முன் திரையிடப்பட்டது. இதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் கூழாங்கல் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

    கூழாங்கல் பட போஸ்டர்

    இந்நிலையில், கூழாங்கல் திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் டைகர் விருது வெல்லும் முதல் தமிழ் திரைப்படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது. 
    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், ஆபாச படம் எடுத்ததால் கைதாகி உள்ளார்.
    தமிழில் 2016-ல் திரைக்கு வந்த பேய்கள் ஜாக்கிரதை திகில் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் கெஹனா வசிஸ்த். ஏராளமான இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். கெஹனா வசிஸ்த் சமீபத்தில் ஆன்லைன் சேனல் தொடங்கி அதில் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி வந்துள்ளார். அந்த படங்களை பார்க்க ரூ.2 ஆயிரம் செலுத்தி சந்தாதாரர் ஆகவேண்டும். 

    பலர் பணம் கட்டி படம் பார்த்துள்ளனர். இதற்காக மும்பை மலாட் மல்வானி பகுதியில் உள்ள தனி பங்களாவில் இளம் பெண்களை வைத்து ஆபாச படங்கள் தயாரித்து வந்துள்ளார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த பங்களாவில் சோதனை நடத்தி அங்கிருந்த 2 ஆபாச பட நடிகர்கள். ஒரு பெண் புகைப்பட கலைஞர், ஒரு இளம் பெண் ஆகியோரை கைது செய்தனர்.

    கெஹனா வசிஸ்த் 

    கெஹனாவும், கைது செய்யப்பட்டார். விசாரணையில் இதுவரை 87 ஆபாச வீடியோக்களை தயாரித்து பதிவேற்றியது தெரிய வந்துள்ளது. ஆபாச படம் தயாரித்த நடிகை கைதாகி இருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    டைரக்டர் பாலசந்தர் டைரக்ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் "ஜாதிமல்லி.'' குஷ்பு புகழின் சிகரத்தில் இருந்த நேரத்தில், தங்கள் படத்தில் அவரை நடிக்கச் செய்யவேண்டும் என்று பட அதிபர்களும், டைரக்டர்களும் விரும்பினர்.
    டைரக்டர் பாலசந்தர் டைரக்ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் "ஜாதிமல்லி.'' குஷ்பு புகழின் சிகரத்தில் இருந்த நேரத்தில், தங்கள் படத்தில் அவரை நடிக்கச் செய்யவேண்டும் என்று பட அதிபர்களும், டைரக்டர்களும் விரும்பினர்.

    பாலசந்தரும் குஷ்புவை வைத்து "ஜாதிமல்லி'' என்ற படத்தை உருவாக்கினார். சரிதாவின் கணவரான மலையாள நடிகர் முகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார். புகழ் பெற்ற பாடகியாக இப்படத்தில் குஷ்பு நடித்தார். படம் நன்றாகவே இருந்தது. ஆனால் ஓட்டம் சுமார்தான்.

    இதே காலக்கட்டத்தில் பாலசந்தர் இயக்கிய "வானமே எல்லை'' சிறந்த படமாக அமைந்தது. ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை இப்படம் அலசியது. ரம்யாகிருஷ்ணன், மதுபாலா சிறப்பாக நடித்தனர்.

    இந்தப் படத்தில் ஒரு விசேஷம்: ஊனமுற்றவர்கள் மனம் தளரக்கூடாது, உழைத்து முன்னேறலாம் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசு அதிகாரியாக இருந்த எச்.ராமகிருஷ்ணன், கால் ஊனமுற்றவராக இருந்தும், படித்து முன்னேறி அரிய சாதனைகளை நிகழ்த்திய காட்சி, படத்தில் இடம் பெற்றது.

    இதன் பிறகு பாலசந்தர் இயக்கிய படம் "டூயட்'' (1994) இந்தப் படத்தின் மூலம்தான் பிரகாஷ்ராஜ் தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகமானார். அவருடன் பிரபு இணைந்து நடித்தார்.

    தன்னை அறிமுகப்படுத்திய பாலசந்தர் மீது மிகவும் அன்பும், மரியாதையும் வைத்திருப்பவர் பிரகாஷ்ராஜ். தன் படக்கம்பெனிக்கு, தான் நடித்த முதல் படத்தின் பெயரையே ("டூயட்'' மூவிஸ்) சூட்டியுள்ளார்.

    1996-ல் "கல்கி'' என்ற படத்தைத் தயாரித்தார் பாலசந்தர். கதாநாயகியை புரட்சிப் பெண்ணாகப் படைத்தார். அந்த வேடத்தில் ஸ்ருதி நடித்தார்.

    10 ஆண்டுகள் கழித்து சொல்ல வேண்டிய கருத்தை, மிகவும் முன்னதாக சொன்னதால், அதை ரசிகர்கள் ஜீரணிக்க முடியவில்லை. படம் தோல்வி அடைந்தது.

    பாலசந்தர் தயாரித்த சில படங்களை வேறு டைரக்டர்கள் டைரக்ட் செய்தனர். அவற்றில் முக்கியமான படம் "ரோஜா'' (1992). மணிரத்தினம் இயக்கிய இந்தப் படத்தின் மூலமாகத்தான் இசை அமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் அறிமுகமானார்.

    காஷ்மீர் தீவிரவாதிகளைப் பற்றிய இப்படத்தில், அரவிந்தசாமியும், மதுபாலாவும் ஜோடியாக நடித்தனர். தமிழில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக "ரோஜா'' மதிப்பிடப்படுகிறது.

    இந்தக் காலக்கட்டத்தில், டெலிவிஷன் சீரியல்கள் தயாரிப்பதில் பாலசந்தர் கவனம் செலுத்தினார்.

    "ரெயில் சினேகம்'', "கையளவு மனசு'', "காசளவு நேசம்'', "காதல் பகடை'', "ப்ரேமி'', "அண்ணி'', "சஹானா'' உள்பட சுமார் 12 மெகா சீரியல்களை உருவாக்கியுள்ளார். இவற்றில் "அண்ணி'' 338 நாட்களும், "சஹானா'' 317 நாட்களும் ஒளிபரப்பாயின.

    பாலசந்தரின் நீண்ட திரை உலகப்பயணத்தில், 1982-ம் ஆண்டு மே மாதம் 6-ந்தேதி நடந்த விபத்து, மிக பயங்கரமானதாகும்.

    நினைத்தாலே நெஞ்சை பதறச் செய்யும் அந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

    தமிழில் கமலஹாசன் - ஸ்ரீதேவி நடித்த "வறுமையின் நிறம் சிவப்பு'' படத்தை, இந்தியில் "ஜராசி ஜிந்தகி'' (வாழ்க்கையின் ஒரு துளி) என்ற பெயரில் தயாரித்தார், பாலசந்தர்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு இமாசலபிரதேசத்தில், இயற்கை அழகு மிக்க "குளு'' பள்ளத்தாக்கில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும், பாலசந்தர், கமலஹாசன், ஒளிப்பதிவாளர் லோகநாதன் ஆகியோர் விமானம் மூலம் சென்னை திரும்பி விட்டனர்.

    படப்பிடிப்பு குழுவினர் ஒரு பஸ்சில் மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். பஸ்சில் 29 பேர் இருந்தனர்.

    வளைந்து வளைந்து சென்ற மலைப்பாதையில், பஸ் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. கடைசியாக இன்னும் ஒரே ஒரு வளைவுதான். அதைத் தாண்டிவிட்டால், சம வெளிக்கு வந்து விடலாம்.

    அந்த சமயத்தில்தான், எதிர்பாராத விதமாக பயங்கர விபத்து ஏற்பட்டது. எதிரே வந்த ஒரு காரின் மீது மோதி விடாமல் தடுக்க பஸ்சை திருப்பினார் டிரைவர்.

    பஸ் ஒரு பாறையில் மோதி, உருண்டு, அதள பாதாளத்தில் விழுந்தது.

    இந்த பயங்கர விபத்தில், ஒளிப்பதிவாளர் லோகநாதனின் சகோதரர் உள்பட 8 பேர் மாண்டனர். இணை இயக்குனர் அமீர்ஜான் படுகாயம் அடைந்தார். அப்போது உதவி நடன ஆசிரியையாக இருந்த கலாவும், உதவி இயக்குனராக இருந்த சுரேஷ்கிருஷ்ணாவும் அதிக காயம் இல்லாமல் தப்பினர்.

    இறந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை. எட்டுப் பேர்களின் உடல்களும் அங்கேயே தகனம் செய்யப்பட்டன.

    இந்த பயங்கர விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள பாலசந்தருக்கு நீண்ட காலம் பிடித்தது.
    நடிகர் சூர்யா, தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
    நடிகர் சூர்யா டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘’கொரோனா  பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும்  உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.’’ எனத் தெரிவித்துள்ளார்.
    ×