என் மலர்
சினிமா செய்திகள்
நடிகை கீர்த்தி சுரேஷும், இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.
தெலுங்கில், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். மேலும் 2 தெலுங்கு படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேசும், இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. 3 மாதங்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடிய அனிருத்துக்கு, நடிகை கீர்த்தி சுரேஷ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததுடன் அவருடன் நெருக்கமாக இருக்கும் 2 புகைப்படங்களையும் பகிர்ந்தார்.

தற்போது அந்த புகைப்படங்களை வலைத்தளத்தில் வைரலாக்கி, இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரப்பி வருகிறார்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் பேசுகிறார்கள். ஆனால், இதனை கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. இருவரும் நண்பர்கள்தான். காதல் இல்லை என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மறுத்தார்கள். ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியாவை அனிருத் முத்தமிடும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
டைரக்டர் கே.பாலசந்தர் வாழ்க்கையில் சில சோக சம்பவங்கள் நடந்தன. அதன் விளைவாக, அவர் படங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் புகுத்தினார்.
டைரக்டர் கே.பாலசந்தர் வாழ்க்கையில் சில சோக சம்பவங்கள் நடந்தன. அதன் விளைவாக, அவர் படங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் புகுத்தினார்.
பொதுவாக பாலசந்தரின் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். பெண்களின் பிரச்சினைகள் அலசப்படும். பெண் உரிமை வலியுறுத்தப்படும். சமூக சீர்திருத்த கருத்துக்கள் எடுத்துக் கூறப்படும்.
இதற்குக் காரணம் என்ன என்பது குறித்து பாலசந்தர் எழுதியிருப்பதாவது:-
"எங்கள் குடும்பம் பெரிய குடும்பம்தான். அண்ணன் பாலசுப்பிரமணியன் மூத்தவர். அவருக்குப்பின் சேதுலட்சுமி, மங்களம், சரசுவதி என்ற மூன்று மூத்த சகோதரிகள். ஐந்தாவதாக நான். எனக்கு அடுத்து ஒரு தங்கை ஜெயலட்சுமி.
நான் சின்னஞ்சிறுவனாக இருந்தபோதே எனது மூத்த சகோதரிகளான சேதுலட்சுமி, மங்களம், சரசுவதி ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது.
அதுவும் நான் பிறப்பதற்கு முன்பே மங்களம் அக்காவுக்குத் திருமணம் முடிந்து விட்டது. அப்போது அக்காவுக்கு வயது 8.
நான் பிறப்பதற்கு முன்பே திருமணம் ஆன மங்களம் அக்கா, அடுத்த ஆண்டே கணவனை இழந்து விட்டாள். 8 வயதில் திருமணம்; 9 வயதில் விதவை. பெயரோ மங்களம். என்ன வினோதம்.
சின்னஞ்சிறு வயதில் என் சகோதரிக்கு ஏற்பட்ட அந்த இழப்பு இன்னமும் என் நெஞ்சை கனக்க வைக்கிறது.
இதெல்லாம் புரிய எனக்கு 13 ஆண்டுகள் ஆயின. அவ்வளவு இடைவெளிக்குப் பிறகுதான் அதன் தாக்கம் முழுமையாக எனக்குத் தெரிந்தது.
என்னுடைய இளைய சகோதரி ஜெயா, மும்பையில் தனது கணவர் சங்கருடன் வாழ்ந்து வந்தாள். அவளது கணவர் "எல்.ஐ.சி.''யில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்து வந்தார்.
அப்போது எனக்கு 27 வயது இருக்கும். என் தங்கைக்கு 25 வயது இருக்கும். அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.
"என் கணவருக்கு உடல் நலம் இல்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதால், உதவிக்கு நீ இங்கு வந்து சில நாட்கள் தங்கவும்'' என்று, தங்கையிடம் இருந்து கடிதம் வந்தது. நானும் என் மனைவியும் புறப்பட்டுச் சென்றோம்.
மும்பை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட என் மைத்துனருக்கு என்ன நோய் என்பதை, என் தங்கையிடம் சொல்லவே இல்லை. நான் டாக்டரைப் போய்ப் பார்த்தேன். அவர், "உங்கள் மைத்துனருக்கு கேன்சர். அவர் அதிக நாள் உயிரோடு இருக்கமாட்டார். இதை உங்கள் தங்கையிடம் சொல்லவில்லை. வேறு யாரிடமாவது சொல்ல வேண்டும் என்பதால், உங்களிடம் மட்டும் சொல்லி இருக்கிறேன். நீங்கள் அவரை இங்கிருந்து அழைத்துச்சென்று விடுங்கள். அவருக்கு என்ன மருந்து தந்தாலும் பயன் இல்லை. வீண் செலவு செய்யவேண்டாம்'' என்றார்.
டாக்டர் சொன்னதைக் கேட்டு எனக்கு தலை சுற்றியது. என்ன செய்வது என்று தெரியவில்லை. மனைவியிடம் சொல்லலாமா அல்லது தங்கையிடம் சொல்லி விடலாமா என்று தவித்தேன். ஏனென்றால் அப்போது எனக்கும் இள வயதுதானே.
வீடு திரும்பும்போது, வழியில் ரெயில் நிலையத்தில் உட்கார்ந்து அழுதேன்.
பிறகு என் தங்கையை சந்தித்தபோது, "டாக்டர் என்ன சொன்னார்... இன்னும் ஒரு வாரத்தில் வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்று என்னிடம் கூறினாரே...!'' என்றாள்.
என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்தேன்.
"அவர்தான் ஒரு வாரத்தில் வந்து விடுவாரே! நீ நாலைந்து நாள் லீவு போட்டு விட்டு இங்கேயே இரு'' என்றாள்.
டாக்டர் சொன்னதை தங்கையிடம் சொல்லி, அவள் கணவரை ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்து வந்து விடலாம் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தபோது, அந்த சில மணி நேரங்களில் ஆஸ்பத்திரியில் எனது தங்கையின் கணவர் இறந்து போனார். எனக்கு இது பேரிடிபோல் இருந்தது. இதற்குமுன் எத்தனையோ துயர நிகழ்ச்சிகள் என் வாழ்க்கையில் நடந்திருந்தாலும், இதுதான் பேரிடியாக வந்து இறங்கியது.
இளம் வயதிலேயே விதவையான எனது தங்கையின் நிலையைக்கண்டு இடிந்து போய்விட்டேன்.
அங்கேயே காரியங்கள் எல்லாம் முடிந்தன. சில நாள் கழித்து மூட்டை முடிச்சுகளுடன் சென்னைக்குப் புறப்பட்டோம்.
நான்கு வயது, இரண்டு வயது என்று இரு பெண் குழந்தைகளோடு எனது வீட்டுக்கு வந்தாள் என் தங்கை.
என் மனைவிக்கு பெரும் பொறுப்பாகி விட்டது. பள்ளிக்குச் செல்லும் இரண்டு குழந்தைகளையும் பராமரிப்பது எப்படி என்று முதலில் சங்கடம் ஏற்பட்டாலும், பின்னர் எனது சகோதரியை அவளது சகோதரியாகவும், அவள் குழந்தைகளை தன் குழந்தைகளாகவும் ஏற்றுக்கொண்டாள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் பின்னே, இனம் புரியாத சோகம் உள்ளது. அந்த சோகத்தின் தாக்கம் அவ்வப்போது வெளிப்படும்போதும் அது புதிய சிந்தனைகளை -சீர்திருத்தக் கருத்துக்களை அள்ளி வழங்குகிறது. எப்போதுமே அடிபட்டவனுக்குத்தானே அதிகம் வலிக்கும்.
எனது படங்களில் வந்த சீர்திருத்தக் கருத்துக்களுக்குப் பின்னணி என்ன என்பது இப்போது புரிகிறதா?''
இவ்வாறு பாலசந்தர் எழுதியுள்ளார்.

நான் காதல் திருமணம் செய்ய வில்லை என்று பிரபல நடிகை கயல் ஆனந்தி பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டி அளித்துள்ளார்.
கயல் படம் மூலம் அறிமுகமான ஆனந்தி தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். கடந்த மாதம் திடீரென்று திருமணம் செய்துகொண்டார். அவர் முதன்மை நாயகியாக நடித்துள்ள கமலி பிரம் நடுக்காவேரி படம் வரும் 19ந்தேதி வெளியாகிறது. ராஜசேகர் துரைசாமி இயக்கி உள்ளார்.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஆனந்தி அளித்த பேட்டி, ‘என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இது முக்கியமான படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அனைத்து பெண்களையும் இணைக்கும் விதமாக இருக்கும். பெற்றோர்கள் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் ஏன் இதேபோல படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டதுதான் நினைவிற்கு வந்தது. ஆனால், இந்த கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்.

என் திருமணத்தை சென்னையில் ஒரு வரவேற்பு வைத்து அறிவிக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அதற்குள் வெளியில் வந்துவிட்டது. இது முழுக்க முழுக்க பெற்றோர் நிச்சயித்த திருமணம். காதல் திருமணம் அல்ல. அவர் எங்கள் குடும்ப நண்பர். மரைன் இஞ்சினியர். மேலும் இணை இயக்குனரும் கூட. விரைவில் அவர் படம் இயக்குவார். எனக்கு நாயகியாக வாய்ப்பு தருவார் என காத்திருக்கிறேன். திருமணத்துக்கு முன்பே நான் தேர்ந்தெடுத்து தான் நடிப்பேன். இனியும் அப்படியே நடிப்பேன். கணவர் குடும்பத்தில் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்கள்’. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் ஹாலிவுட் படமான மான்ஸ்டர் ஹன்டர் திரைப்படத்தின் விமர்சனம்.
அமெரிக்கா ராணுவ கேப்டனான இருக்கும் நாயகி மிலா ஜோவோவிச், காணாமல்போன சில வீரர்களைத் தேடி ஒரு பாலைவனப் பகுதியில் ரோந்து செல்கிறாள். அப்போது ஏற்படும் ஒரு மணல் புயலில் சிக்கி, வேறு ஒரு உலகத்திற்குள் சென்று விடுகிறாள்.

அங்கே இருக்கும் விசித்திரமான சில ராட்சச ஜந்துகள்தான் வீரர்கள் காணாமல் போனதற்குக் காரணம் என்பதை தெரிந்துக் கொள்கிறார். அந்த உலகில் நாயகன் டோனி ஜாவும் ஏற்கனவே சிக்கி இருக்கிறார். இவர்கள் இருவரும் ராட்சச ஜந்துகளை சமாளித்து அந்த உலகத்தில் இருந்து வெளியேறினார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
மிலா ஜோவோவிச்சின் ஆக்ஷன் அவ்வப்போது படத்தை ரசிக்க வைக்கிறது. இது தவிர, ஆக்ஷன் காட்சி ரசிகர்களுக்கென டோனி ஜாவும் இருக்கிறார். இவர்களின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

இயக்குனர் பவுல் ஆண்டர்சன் புதிய உலகம், அதில் நடக்கும் சண்டை, என கதையை அமைத்திருக்கிறார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. மெதுவாக செல்லும் திரைக்கதை படத்திற்கு பலவீனம். சில இடங்களில் காட்சிகள் நீளமாகவும், இன்னும் ஏதோ ஒன்று குறைகிறது என்னும் எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது.

கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ஏற்ப கிளென் மேக்பெர்சன் ஒளிப்பதிவும் பவுல் ஹஸ்லிங்கர் பின்னணி இசையும் அற்புதமாகவே அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில் 'மான்ஸ்டர் ஹன்டர்' ஆறுதல்.
மீசையை முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக இயக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார்.

மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி இயக்கும் 2-வது படத்திற்கு சிவகுமாரின் சபதம் என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்கிறார்.
விஜய், விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், பலமுறை யோசித்து யோசித்து எடுத்த முடிவு என்று கூறியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓட்டிக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யமான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'மாஸ்டர்' படத்தில் டெலிட்டட் சீன்கள் நீக்கப்பட்டது குறித்து லோகேஷ் கனகராஜ் கூறும்போது, படத்தின் ஃப்ளோ பாதிக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக சில காட்சிகளை எடுக்க முடிவு செய்தோம்.

படத்தின் நீளமும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அதோடு, விஜய் சார் இந்த மாதிரி பேச ஆரம்பிப்பது செகெண்ட் ஆஃப்ல இருந்துதான். அப்போது, கேரக்டர் முழுமையாக மாறியபிறகு, இந்தக் காட்சிகள் வைத்தால் நேர்கோடாகிவிடும். இப்படி, அந்தக் காட்சி இடம்பெறாமல் போனதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. பலமுறை யோசித்து யோசித்து எடுத்த முடிவு இது. ஆனால், இந்த முடிவு மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த முடிவு என்றார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சேர்ந்த பிரபலமானவர் இணைந்து இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்க இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கிறது. முதலாவதாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ’டாக்டர்’ படத்தின் நாயகி பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அடுத்ததாக இந்த படத்தின் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் நடிகர்கள் சூரி மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் இந்த படத்தில் இணைந்திருப்பதாக அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி இணைந்து இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் சொந்த வீடு அளித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் கதிர் தந்தையாக தங்கராசு என்ற நாடகக் கலைஞர் நடித்திருந்தார்.

இவர் சமீபத்தில் ஏழ்மையால் வாடுவது குறித்த செய்தி வெளியானது. இந்த செய்தியை பார்த்த நெல்லை கலெக்டர் அவருக்கு குடிசைமாற்று தொகுப்பில் வீடு ஒன்றை வழங்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி அவரது மகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக பணி ஒன்றை வழங்கியுள்ளார். இதுகுறித்த பணி ஆணையை அவர் கொடுக்கும் போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் மாஸ் அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கொடுத்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அஜித் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள்.

இப்படத்தின் எந்த அப்டேட்டும் படக்குழுவினர் இதுவரை வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் விரக்தியில் தயாரிப்பாளர் போனி கபூர் எந்தவொரு ட்வீட் செய்தாலும், அதற்குப் பதிலாக 'வலிமை அப்டேட்' என்று கேட்கத் தொடங்கினார்கள்.

இந்நிலையில் 'வலிமை' படத்தின் அறிமுகப் பாடலை யுவன் முடித்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இது அதிரடியான, ஒரு துள்ளலிசைப் பாடலாக, ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும் என்று யுவன் கூறியுள்ளார். ஒடிசாவில் திருவிழாக் காலங்களில் வாசிக்கும் ட்ரம்ஸ் இசைக் கலைஞர்கள் இந்தப் பாடலில் பங்கெடுத்துள்ளனர். 'இது ஒரு சரியான மாஸ் பாட்டு' என்று யுவன் கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
சமுத்திரகனி நடிப்பில் உருவாகியிருக்கும் ஏலே திரைப்படம் தியேட்டரில் வெளியாக இருக்கும் நிலையில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சில்லுகருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் தற்போது சமுத்திரக்கனியை வைத்து ‘ஏலே’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் தயாரிப்பாளர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள்.

இப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. மேலும் 27ம் தேதி ஓடிடி-யில் ரிலீஸாக ஒப்பந்தமும் செய்து இருந்தார்கள்.
மாஸ்டர் சர்ச்சையால் தியேட்டரில் ரிலீஸாகி குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு பிறகுதான் ஓடிடி-யில் ரிலீஸ் செய்வோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால்தான் தியேட்டரில் வெளியிடவே அனுமதி அளித்துள்ளார்கள்.

இந்த திடீர் சிக்கலால் ஏலே நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பிரியதர்ஷன் அசோக் நடிப்பில் உருவாகியிருக்கும் மாயத்திரைக்கு கை கொடுத்திருக்கிறார்.
பிடிச்சிருக்கு, முருகா, கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார். டூலெட், திரௌபதி படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். ப.சாய் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பிரியதர்ஷன் டீசரை வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.

மாயத்திரை -இது ஒரு பேய் படம். ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும். இந்தப் படத்தில் அதிகமா பயமுறுத்தும் காட்சிகள் இருக்காது. அதனால் ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு வந்து படம் பார்க்கலாம். இது ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.
எடிட்டர் ரமேஷ் பாரதி இயக்கத்தில் சிரிஷ், மிருதுல்லா முரளி, அருந்ததி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் பிஸ்தா படத்தின் முன்னோட்டம்.
மெட்ரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிரிஷ். மெட்ரோ படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அடுத்ததாக சிரிஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் பிஸ்தா. இந்த படத்தில் சிரிஷ் ஜோடியாக மிருதுல்லா முரளி, சைத்தான் படத்தில் நடித்த அருந்ததி நாயர் ஆகியோர் நடித்துள்ளனர்.

கிராமப் பின்னணியில் காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை எடிட்டர் ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். செந்தில், சதீஷ், யோகி பாபு, சென்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். இது அவர் இசையமைக்கும் 25-வது படமாகும். விஜயன் முனுசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.