என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரேமம் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை மடோனா செபாஸ்டியன், தனது காதலரை அறிமுகப்படுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் 'பிரேமம்'. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அந்த படம் வெகுவாக கவர்ந்தது. 

    இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் ராபி ஆபிரகாம். இவர் 'நேரம்', 'ஓம் ஷாந்தி ஓஷானா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் மடோனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் "உன்னை சந்தித்து ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது. உன்னை சந்தித்தையும், உன்னோடு சேர்ந்து இருப்பதையும் மிகவும் அருமையாக உணர்கிறேன். கடவுள் உங்களை எப்போதும் ஆசிவதிப்பார்" என்று பதிவு செய்திருக்கிறார்.

    மடோனா

    தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்துடன் இந்த பதிவை செய்திருக்கிறார் மடோனா. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
    திருடா திருடி,யோகி, வெள்ளை யானை போன்ற படங்களை இயக்கிய சுப்ரமணியம் சிவா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
    திருடா திருடி,யோகி, வெள்ளை யானை போன்ற படங்களை இயக்கியவர் சுப்ரமணியம் சிவா. வடசென்னை, அசுரன் படத்தின் மூலம் தன் நடிப்பால் அனைவரையும் அசர வைத்தவர். இவர் "அம்மா உணவகம்" படத்தில் இடம் பெறும் தத்துவ பாடல் காட்சிக்கு கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மனமே மனமே கலங்காதே மனமே நிழலாய் வருமே.. நாளை உன் கனவே கவலைகள் இங்கு நிரந்தரமில்லை துன்பங்கள் துயரங்கள் தொடர்வதில்லை... எனும் பாடலை கானாபாலா பாடியுள்ளார்.

    Siva

    விவேக பாரதி இயக்கத்தில் படிக்கட் பாய் புரொடக்ஷன்ஸ் சார்பில் 
    எம்.பி.இப்ராகீம் தயாரித்து வருகிறார்.

    அஸ்வின் கார்த்திக், சசிசரத், கதாநாயகர்களாகவும், கதாநாயகிகளாக ஸ்ரீநிதி, பாத்திமா நடிக்க "குள்ளபூதம்" இந்திரன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்ரமணியம் சிவா, ஷரவண சக்தி, ஈரமான ரோஜாவே சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதன் நிறைவு கட்ட படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதிகளில் நடைபெற்று முடிவந்தது.
    கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் சூர்யாவின் உடல் நலம் குறித்து அவரது தம்பி நடிகர் கார்த்தி டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
    நடிகர் சூர்யா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிப்ரவரி 7 ஆம் தேதி கூறியிருந்தார். இதுகுறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.” என்று பதிவிட்டிருந்தார். 

    இந்நிலையில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை எடுத்துவந்த சூர்யாவுக்கு இப்போது குணமாகியுள்ளது.

    கார்த்தி

    இதுகுறித்து நடிகர் கார்த்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “கொரோனா சிகிச்சை முடிந்து அண்ணா வீடு திரும்பியுள்ளார். அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் அண்ணா இருப்பார். பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார். 
    சமுத்திரகனி நடிப்பில் உருவாகியிருக்கும் ஏலே திரைப்படம் தியேட்டரில் ரிலீசாக சிக்கல் ஏற்பட்டதால் படக்குழுவினர் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.
    சில்லுகருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் தற்போது சமுத்திரக்கனியை வைத்து ‘ஏலே’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் தயாரிப்பாளர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள். இப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. மேலும் 27ம் தேதி ஓடிடி-யில் ரிலீஸாக ஒப்பந்தமும் செய்து இருந்தார்கள்.

    மாஸ்டர் சர்ச்சையால் தியேட்டரில் ரிலீஸாகி குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு பிறகுதான் ஓடிடி-யில் ரிலீஸ் செய்வோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால்தான் தியேட்டரில் வெளியிடவே அனுமதி அளித்துள்ளார்கள். இதனால் இப்படத்தின் தியேட்டர் ரிலீசுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஏலே படக்குழுவினர்

    ஆனால், படக்குழுவினர் நேரடியாக பிப்ரவரி 28 ஆம் தேதி ஞாயிற்று கிழமை பிற்பகல் 3 மணிக்கு டிவியில் ஒளிபரப்ப முடிவு செய்திருக்கிறார்கள். சமீபத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் உருவான புலிக்குத்தி பாண்டி திரைப்படமும் நேரடியாக டி.வியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
    புதுமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கமலி பிரம் நடுக்காவேரி படத்தின் முன்னோட்டம்.
    அபுண்டு ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகி வரும் படம் கமலி பிரம் நடுக்காவேரி‬. இதில் கமலி என்ற கனமான கதாபாத்திரத்தில் ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். மேலும், புது முகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஸ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஶ்ரீனிவாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தீனதயாளன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜகதீசன் லோகயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    ஆனந்தி

    காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி. அவள் இந்த இரண்டும் இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதை தெளிவான திரைக்கதை புதுமையான வசனங்களுடன் உருவாக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் ராஜசேகர்.
    லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் தொடரில் பேயாக நடித்த பின் தூங்க முடியவில்லை என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ள வெப் தொடர் "லைவ் டெலிகாஸ்ட்". இத்தொடர் வருகிற 12-ந் தேதி உலகெங்கும் ஓடிடி-யில் ஒளிபரப்பு ஆக உள்ளது.  மாந்த்ரீக சக்திகள் நிறைந்த, ஒரு ஆள் அரவமற்ற வீட்டில் ஒரு தொலைக்காட்சி தொடர் ஒன்றை படமாக்கப்படும் போது ஏற்படும் வினோத அனுபவங்களின் தொகுப்பே இந்த "லைவ் டெலிகாஸ்ட்".

    இத்தொடரில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட காஜல் அகர்வால் "நாங்கள் படப்பிடிப்புக்கு தேர்ந்தெடுத்த இடம் மிக மிக பொருத்தமானது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தோழர் ஒருவருடைய வீடு அது. மலையின் உச்சியில் இருக்கும் அந்த வீட்டில் தான் பெரும்பாலும் படப்பிடிப்பு நடந்தது. 

    லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடர் போஸ்டர்

    படப்பிடிப்புக்கு பின்னரும் அந்த இடம்  தந்த அச்சம் காரணமாக என்னால் தூங்க கூட முடியவில்லை. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட அந்த வீட்டிலேயே நான் இருப்பதாக ஒரு பிரம்மை என்னை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. இன்று நினைத்தாலும் என் குலை நடுங்குகிறது. தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கும் அந்த உணர்வு உண்டாகும்" என்று திகில் மாறா உணர்வுடன் கூறினார். 

    இந்த தொடரில் காஜல் அகர்வாலுடன் வைபவ், ‘கயல்’ ஆனந்தி, பிரியங்கா,  டேனியல் போப், சுப்பு பஞ்சு அருணாசலம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
    மகேஷ் ராவ் இயக்கத்தில் யஷ், ராதிகா பண்டிட் நடிப்பில் வெளியாகி இருக்கும் சூர்யவம்சி படத்தின் விமர்சனம்.
    தப்புனா தட்டி கேட்கும் குணமுடைய நாயகன் யஷ், அப்பா, அம்மா, தங்கையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். மறுபுறம் வில்லன் ஷ்யாம், தாதாவான அவர், தன்னை யார் பகைத்துக் கொண்டாலும் அவர்களை கொல்லாமல் விடமாட்டார். 

    நாயகன் யஷுக்கு நாயகி உடனான முதல் சந்திப்பே மோதலில் தான் ஆரம்பிக்கிறது. பின்னர் போகப்போக அது காதலாக மாறுகிறது. நாயகி ராதிகா பண்டிட்டை யஷ் காதலிக்க ஆரம்பிக்கிறார். அந்த சமயத்தில் தான், நாயகி ராதிகா, வில்லன் ஷியாமின் முறைப்பெண் என்பதும், அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதும் யஷுக்கு தெரிய வருகிறது. 

    சூர்யவம்சி விமர்சனம்

    பின்னர் நாயகியின் மனதை மாற்ற முயற்சிக்கிறார் யஷ். இறுதியில் யஷ், ராதிகாவின் மனதை மாற்றினாரா? ராதிகாவுக்கு யாருடன் திருமணம் நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தை தற்போது தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். கே.ஜி.எப் படம் வருவதற்கு முன்னர் யஷ் நடித்த படம் என்பதால், ஆளே வித்தியாசமாக தெரிகிறார். காதலியை திருமணம் செய்ய அவர் செய்யும் முயற்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார்.

    சூர்யவம்சி விமர்சனம்

    நாயகியாக வரும் ராதிகா பண்டிட், இவர் நாயகன் யஷின் மனைவி, இப்படத்திற்கு பின்னர் தான் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். படத்திலும் அவர்களின் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க் அவுட் ஆகி உள்ளது. ஷ்யாம், கோர்ட் சூட் என ஸ்டைலிஷ் வில்லனாக வந்து மிரட்டுகிறார். 

    யஷுக்கு டப்பிங் குரல் சுத்தமாக எடுபடாதது படத்திற்கு பின்னடைவு. இயக்குனர் மகேஷ் ராவ், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். இரண்டாம் பாதியில் இருந்த திரைக்கதை வேகம், முதல் பாதியில் இல்லாதது படத்திற்கு மைனஸ்.

    சூர்யவம்சி விமர்சனம்

    பெண் இசையமைப்பாளர் வாணி ஹரிகிருஷ்ணா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசை ஓகே. பாடல்கள் சுமார் ரகம் தான். ஆண்ட்ரூவின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளது.

    மொத்தத்தில் ‘சூர்யவம்சி’ வேகம் குறைவு.
    சமீபத்தில் திருமணமான நடிகை ஆனந்தி, திருமணத்துக்கு பிறகு தனக்கு அதிக பட வாய்ப்புகள் வருவதாக தெரிவித்துள்ளார்.
    கயல், விசாரணை, பரியேறும் பெருமாள். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்று தொடர்ந்து அழுத்தமான கதைகளில் நடித்து வரும் ஆனந்தி தற்போது ராஜசேகர் துரைசாமி இயக்கிய “கமலி பிரம் நடுக்காவேரி” படத்தில் நடித்துள்ளார். 

    அவர் அளித்த பேட்டி வருமாறு: “குடும்ப வாழ்க்கையில் எனது கணவர் ஆதரவாக இருக்கிறார். நான் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது தான் அவர் ஆசை. திருமணத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் வராது என்பார்கள். ஆனால் எனக்கு இப்போதுதான் அதிக படங்கள் வருகிறது. பெற்றோரை விட ஒரு பெண் மேல் அன்பு செலுத்துவது யாராகவும் இருக்க முடியாது. 

    ஆனந்தி

    ஆனால் சில பெண்கள் தன் வாழ்வை பற்றி அறிந்து கொள்வதில்லை. எங்காவது வழி தவறி விடுகிறார்கள். அதனால் தான் பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளை எப்படி கடப்பது என்று கமலி பிரம் நடுக்காவேரி படத்தில் சொல்லப்பட்டு உள்ளது. ஆண்களுக்கு இருப்பதுபோல் பெண்களுக்கு ஆதரவு கிடைப்பதில்லை. அவர்களுக்கு திறமையிருந்தாலும் கனவு நிறைவேறுவதில்லை.'' இவ்வாறு ஆனந்தி கூறினார்.
    நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் விஜய்யுடன் தான் நடித்த முதல் படம் குறித்த அனுபவங்களை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா அன்பினிஷ்டு (Unfinished)  என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார் அதில் தனது திரையுலக அனுபவங்களை  பகிர்ந்து உள்ளார். அந்த புத்தகத்தில் தனது முதல் தமிழ் படமான தமிழன் படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்தது குறித்தும், அவரிடம் கற்றுக்கொண்டது குறித்தும் எழுதி உள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது: 2000-ம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்ற சில நாட்களிலேயே நான் திரையுலகில் நுழைந்தேன். முதலில் தமிழன் என்ற தமிழ் படத்தில் நடித்தேன். என் முதல் கதாநாயகன் தளபதி விஜய். நடிகர் விஜய்யின் பணிவு மற்றும் ரசிகர்களுடன் அவர் நட்பாக பழகும் விதம், எனக்குள் ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்கியது.

    பிரியங்கா சோப்ரா

    பல ஆண்டுகளுக்குப் பிறகு, எனது வெப் தொடரான குவாண்டிகோவின் படப்பிடிப்பிற்காக நியூயார்க் நகரில் இருந்தேன். படப்பிடிப்பு நடத்தி வருவதை ரசிகர்கள் அறிந்து, என்னுடன் புகைப்படம் எடுக்க திரண்டனர். நான் மதிய உணவு இடைவேளையின் போது ரசிகர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அது எனது முதல்பட நடிகர் விஜய் எனக்கு கற்றுத்தந்த பாடம் என கூறியுள்ளார்.
    ஆபாசத்துக்கும், நிர்வாணத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் சமூக வலைத்தள நிறுவனங்கள் செயல்படுவதாக நடிகை நிகிதா கோகலே விமர்சித்துள்ளார்.
    பிரபல மராத்தி நடிகை நிகிதா கோகலே. இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக நிர்வாண போஸ் கொடுத்து எடுத்த தனது புகைப்படங்களை பதிவேற்றி வந்தார். இதற்காக அவரது கணக்கை ஏராளமானோர் பின் தொடர்ந்தனர். இந்த நிலையில் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்த காரணத்தினால் நிகிதா கோகலேவின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டது. இது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நிகிதா கோகலே

    இதனை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆபாசத்துக்கும், நிர்வாணத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் சமூக வலைத்தள நிறுவனங்கள் செயல்படுகின்றன. கோவில்களில் இருக்கும் சிற்பங்கள் போன்றதுதான் நிர்வாண கலை. சமூக வலைத்தளங்களில் கண்ட உணவை சாப்பிடும் புகைப்படங்களையும், பைத்தியக்காரத்தனமான புகைப்படங்களையும் அனுமதிக்கும் சமூக வலைத்தளங்கள் கலை நயமிக்க புகைப்படங்களை வெளியிட அனுமதி மறுப்பது வியப்பாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.
    அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள டான் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.
    சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்க உள்ளார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். மேலும் சூரி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி, ஆர்ஜே விஜய், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

    டான் படக்குழுவினர்

    டான் படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். 

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. கல்லூரி பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளதால், இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை கல்லூரியில் நடத்த உள்ளனர். 
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் குறித்த முக்கிய அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக படக்குழுவிடம் அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர்.

    அஜித்

    இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “வலிமை படத்தின் ஒரு சண்டை காட்சியை வெளிநாட்டில் படமாக்க வேண்டி உள்ளது. அதை தவிர்த்து முழு படப்பிடிப்பும் பிப்ரவரி 15க்குள் முடிவடையும். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை” என போனி கபூர் தெரிவித்துள்ளார்.
    ×