என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வெற்றி மாறன் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘சங்கத்தலைவன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
    மணிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘சங்கத்தலைவன்’. சமுத்திரகனி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நடித்துள்ளார். வெற்றி மாறன் இந்த படத்தை தயாரித்துள்ளார். கைத்தறி தொழிலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கைத்தறி தொழிலாளராகவே சமுத்திரக்கனி நடித்துள்ளார். 

    சங்கத்தலைவன் பட போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி 26-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. நீண்ட நாட்களாக தயாரிப்பிலிருந்த இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். 
    நடிகர் விஜய்யின் 66-வது படத்தை இயக்க நான்கு இயக்குனர்களிடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
    நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய்யின் 66-வது படம் குறித்த தகவல்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. 

    விஜய்

    அதன்படி, விஜய்யின் 66-வது படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இந்நிறுவனம் ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்திருந்தது. அதேபோல் இப்படத்தை இயக்குவதற்காக லோகேஷ் கனகராஜ், எச்.வினோத், அட்லீ, அஜய் ஞானமுத்து ஆகிய நான்கு இயக்குனர்களிடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. 
    நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். இவர் நடித்துள்ள காடன், ஜகஜால கில்லாடி ஆகிய படங்களின் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. தற்போது எப்.ஐ.ஆர். எனும் படத்தை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதையடுத்து மோகன் தாஸ் படத்தில் நடிக்க உள்ளார் விஷ்ணு விஷால். களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இப்படத்தை இயக்க உள்ளார். உண்மைக்கதையை மையமாக வைத்து உருவாக உள்ள இப்படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

    மோகன் தாஸ் பட போஸ்டர்

    இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தை இயக்க உள்ளாராம்.
    ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர். 

    இவர் இயக்கி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன் நிறுத்தப்பட்டது. தற்போது படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையிலும் இன்னும் தொடங்கப்படவில்லை.

    ராம் சரண், ஷங்கர்

    இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறாராம். அப்படத்தில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படம் 2022-ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்து கருத்து சொல்லாமல் இருந்த ராஷ்மிகா, தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
    விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ராஷ்மிகாவின் வீடு கர்நாடக மாநிலம் குடகு விராஜ் பேட்டையில் உள்ளது. இந்த வீட்டில் வருமான வரி அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி ரொக்க பணம், நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். 

    இந்த சோதனை குறித்து கருத்து சொல்லாமல் இருந்த ராஷ்மிகா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “நான் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்குவதாக அப்போது தகவல் பரவியது. அந்த செய்திகள்தான் வருமானவரி துறையினர் சோதனைக்கு காரணம். உண்மையில் நான் ரூ.2 கோடி சம்பளம் வாங்கவில்லை. நான் அவ்வளவு பெரிய தொகையை கேட்டாலும் தயாரிப்பாளர்கள் தர மாட்டார்கள். 

    ராஷ்மிகா மந்தனா

    கதாநாயகனுக்கே அவ்வளவு சம்பளம் தருவது இல்லை. உங்களுக்கு எப்படி தர முடியும் என்பார்கள். நான் ஐதராபாத்தில் புது வீடு வாங்கி இருப்பது பற்றி பேசுகிறார்கள். ஓட்டலில் தங்குவது சிரமமாக இருந்ததால் வீடு வாங்கினேன். என்னை பற்றி வரும் கிசுகிசுக்கள் ஆரம்பத்தில் வருத்தம் ஏற்படுத்தின. இப்போது கண்டுகொள்வது இல்லை’’ என்றார்.
    திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய ஷாலினி தற்போது மணிரத்னம் படம் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    நடிகை ஷாலினி மலையாளத்தில் அனியாத பிறவு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை தமிழில் விஜய் நடிப்பில் காதலுக்கு மரியாதை என்ற பெயரில் ரீமேக் செய்தபோது ஷாலினியே கதாநாயகியாக நடித்தார். இதுதான் ஷாலினி தமிழில் அறிமுகமான முதல் படம். இந்த படம் வெற்றி பெற்றதால் வாய்ப்புகள் குவிந்தன. 

    அஜித்குமார் ஜோடியாக அமர்க்களம் படத்தில் நடித்தார். மணிரத்னம் இயக்கத்தில் நடித்த அலைபாயுதே இன்னொரு திருப்பு முனை படமாக அமைந்தது. கண்ணுக்குள் நிலவு, பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். பின்னர் அஜித்குமாரும் ஷாலினியும் காதலித்து 2000-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

    ஷாலினி, அஜித்

    திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய ஷாலினியை 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
    போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்து உள்ள நடிகை ராகிணி திவேதி ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
    போதைப்பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதனை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகை ராகிணி திவேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 145 நாள் சிறைவாசத்துக்கு பின் ராகிணிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. 

    இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நேற்று முதல் முறையாக இன்ஸ்டாகிராம் மூலம் தனது ரசிகர்களுடன் ராகிணி கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் சிலர் சிறை வாழ்க்கை குறித்து அவரிடம் கேட்டனர்.

    அப்போது அவர் கூறியதாவது: சில நேரங்களில் காலம் நம்மை சோதனைக்கு ஆளாக்கும். நாம் எதற்காக சோதிக்கப்படுகிறோம் என்பதும் நமக்கு தெரியாது. அத்தகைய சூழ்நிலையில் நாம் கடினமாகி விடுவோம். நான் என் வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை கண்டு உள்ளேன். நிறைய பேருக்கு என்னால் முயன்ற உதவிகளை செய்து உள்ளேன். சமூக நலனிலும் அக்கறை காட்டி வருகிறேன்.

    ராகிணி திவேதி

    கடந்த சில மாதங்களாக அனுபவித்தது போல என் வாழ்க்கையில் நான் கஷ்டத்தை அனுபவிக்கவில்லை. அந்த கடினமான காலகட்டத்தில் எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்தனர். ரசிகர்களும் ஆதரவு அளித்தனர். நான் சிறைக்கு சென்றதும் என்னை பற்றி நிறைய பேர் அவதூறாக விமர்சித்தனர். என்னை விமர்சிக்கும் போது என்னால் சிலருக்கு சந்தோஷம் ஏற்படுகிறது. இதுவும் எனக்கு மகிழ்ச்சி தான். இவ்வாறு அவர் கூறினார்.

    ராகிணி பேசும்போது அடிக்கடி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கண்ணீர்விட்டு அழுத ராகிணியை அவரது ரசிகர்கள் சமாதானப்படுத்தி ஆறுதல் கூறினார்கள்.
    தமிழில் விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை அனிதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது.
    தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஐஸ்வர்யாராயின் தால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கு, இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். 

    கடந்த 2013-ல் ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அனிதா கர்ப்பமானார். கர்ப்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். சில தினங்களுக்கு முன்பு அனிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

    அனிதா ஹசானந்தனி

    அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனது விரலை குழந்தை பிடித்து இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அவருக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
    டைரக்டர் கே.பாலசந்தரின் படங்கள் பலவற்றை, பேரறிஞர் அண்ணா பார்த்து பாராட்டியுள்ளார். அவர் மறைவதற்கு முன் பார்த்த படம் "எதிர்நீச்சல்.''
    டைரக்டர் கே.பாலசந்தரின் படங்கள் பலவற்றை, பேரறிஞர் அண்ணா பார்த்து பாராட்டியுள்ளார். அவர் மறைவதற்கு முன் பார்த்த படம் "எதிர்நீச்சல்.''

    அண்ணா மீது அளவு கடந்த அன்பும், மரியாதையும் கொண்டவர் பாலசந்தர். சிறு வயதில் இருந்தே, அண்ணாவின் நாடகங்களுக்கும், படங்களுக்கும் அவர் ரசிகர்.

    இதுபற்றி பாலசந்தர் எழுதியிருப்பதாவது:-

    "அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் மாணவனாக இருந்த சமயம். அப்பொழுது அண்ணாவின் சொற்பொழிவுகளை நான் கேட்டேன். தி.மு.கழகம் கூடத் தோன்றியிராத நேரம் அது. பொதுக்கூட்டங்களிலும், மாணவர் கூட்டங்களிலும் அண்ணாவின் பேச்சைக் கேட்க நேர்ந்தபோதெல்லாம், இவர் நிச்சயம் ஒரு பெரிய தலைவராக வரப்போகிறார் என்று நான் கருதுவேன்.

    அதே நேரத்தில் அண்ணா தீட்டிய "வேலைக்காரி'' நாடகமும் மேடையேறி மிகவும் பரபரப்பாக மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருந்தது. "வேலைக்காரி'' நாடகத்தை நானும் ஆவலுடன் சென்று பார்த்தேன்.

    என் உள்ளத்தில் நாடகச் சிந்தனை வளர்வதற்கு இந்த நாடகம்தான் முக்கிய காரணம். அதற்கு முன்னால் நான் நாடகங்களில் சிறிய அளவில் பங்கு கொண்டிருந்தேன். "வேலைக்காரி'' நாடகத்தைப் பார்த்த பிறகு என் முயற்சியில் புது வேகமும், மெருகும் ஏற்பட்டன. "வேலைக்காரி''யில் சீர்திருத்த பாணியில் அமைந்த கதைக்கரு, வசன நடையில் காணப்பட்ட புதுமை. கதையுடன் ஒன்றிக் கலந்த உயரிய நகைச்சுவை ஆகியவை மின்னலைச் சொடுக்கிவிட்ட மாதிரி அமைந்திருந்தன.

    அண்ணாவின் அரசியல் எழுச்சியையும், கலையுலக எழுச்சியையும் தள்ளி நின்று ரசித்த பல்லாயிரக்கணக்கான பேர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

    அடுத்து "நல்லதம்பி'' படம் பார்த்தேன். தன் புதுமைக் கருத்துக்களால் சிரிப்போடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்த கலைவாணரும், அண்ணாவும் சேர்ந்து அளித்த அந்தப் படமும் சொல்லப்பட்ட கருத்தும் என்னைப் பிரமிக்க வைத்தன.

    அதில் ஒரு காட்சி வருகிறது. தாயையும், மகளையும் காண ஒருவர் அவர்களது குடிசைக்கு வருகிறார். ஆனாலும், இருவரையும் சேர்ந்தாற்போல் காண முடிவதில்லை, அவரால். ஒருவர் வீட்டிற்குள் போனபின்தான் ஒருவர் வரமுடியும் என்ற நிலை. அதற்குக் காரணம், அவர்கள் இருவருக்கும் சேர்த்து ஒரே சேலைதான் வீட்டிலிருந்தது!

    இதற்குமேல் வறுமையின் கொடுமையைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்ட யாராலும் முடியாது. இந்தக் காட்சியை இவ்விதம் படமெடுத்த டைரக்டர்கள் கிருஷ்ணன், பஞ்சுவானாலும் இக்காட்சியை அமைத்த கலைவாணராக இருந்தாலும், வசனம் தீட்டிய அண்ணாவாக இருந்தாலும், பார்ப்பவர்களின் நெஞ்சங்களில் பசுமரத்தாணி பதிந்தது போல் "நல்லதம்பி'' படத்தில் வந்த இக்காட்சி என் மனதில் பதிந்து விட்டது. பின்னர் படத்துறைக்கு வந்த எனக்கு, இந்த "நல்லதம்பி'' படக்காட்சியே முன்னோடியாக இருந்தது.

    1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி பாரத நாடு, சுதந்திரத் திருநாடாக ஆகியது. அந்த ஆகஸ்டு 15-ம் நாளை, சுதந்திரத் திருநாளாகக் கொண்டாட வேண்டாம் என்று பெரியார் ஈ.வெ.ரா. கருத்து தெரிவித்தார்.

    ஆனால், முற்போக்கு கருத்துக்களைக் கொண்ட அண்ணாவோ "நாடு விடுதலையடையும் நாளைக் கொண்டாடத்தான் வேண்டும்'' என்று பெரியாருக்கு எதிரான கருத்தைப் பிரகடனப்படுத்திப் பேசினார்; எழுதினார்.

    அந்த ஒரு நிகழ்ச்சியால் அதுவரை மாநிலத் தலைவராக மட்டுமே இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் மதிப்பு தேசிய அளவில் வளர்ந்து விட்டது. அவர் மீது என் தனிப்பட்ட மதிப்பும் மேலும் உயர்ந்தது.

    சென்னையில் அண்ணா அவர்களை சந்திக்கும் வாய்ப்பை எங்கள் நாடகக் குழுவின் மூலம் பெற்றேன். என்னுடைய நாடகமான மேஜர் சந்திரகாந்தை அண்ணா பார்த்தார். அதன் விழா ஒன்றிற்குத் தலைமை தாங்கி என் நாடகத்தைப் பாராட்டிப் பேசிய அந்நாள் என் வாழ்வில் ஒரு பொன்னாள். தொடர்ந்து என் நாடகங்கள் அனைத்திற்கும் அண்ணாவை அழைத்திருந்தேன். ஆரம்பம் முதல் இறுதி வரை அமர்ந்து பார்த்திருக்கிறார்கள்.

    என்னுடைய நாடகங்களை ஐம்பதாவது, எழுபத்தைந்தாவது, நூறாவது நாடகம் வரை நடந்து சபாக்களில் அவை விழாக்களாக நடக்கும் பொழுதெல்லாம் அண்ணா தலைமை தாங்குவதை ஆவலோடு எதிர் நோக்குவேன். நாடக ஆசிரியரான என்னை மட்டுமல்ல, நாடகத்தில் பங்கு பெறும் கலைஞர்களையும், அவர்கள் ஏற்று நடிக்கும் கேரக்டர், நடிப்பு இவற்றையெல்லாம் விமர்சித்து, பாராட்டிப் பேசுவார். ஒப்புக்குத் தலைமை தாங்காமல் நாடகங்களை முழுவதும் ரசித்துப் பார்த்து அதைப் பாராட்டிப் பேசும் விதம், விமர்சிக்கும் விதம் அண்ணாவின் தனிச்சிறப்பாகும். நேற்றுதான் நடந்தது போல இவை எல்லாம் என் மனக்கண்ணில் அழகிய காட்சிகளாகத் தெரிகின்றன.

    இன்னொரு மகத்தான நிகழ்ச்சி. "தாமரை நெஞ்சம்'' படத்தை இயக்கி முடித்துவிட்டேன். அவருக்கும் திரையிட்டுக் காண்பிக்க விரும்பினேன். என் நண்பரான இராம.அரங்கண்ணலுடன் அண்ணா வீட்டிற்குச் சென்றேன். படம் பார்க்க அழைத்தோம். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

    "தாமரை நெஞ்சம்'' படத்தை அவருக்காக விசேடமாக கலைவாணர் அரங்கில் திரையிட்டுக் காண்பித்தோம். படத்தைப் பார்த்துவிட்டு அண்ணா தரப்போகும் தீர்ப்புக்காகக் காத்திருந்தேன். தனக்கே உரித்தான புன்முறுவலுடன் ஒரே ஒரு வாக்கியத்தைக் கூறிவிட்டு அண்ணா காரில் ஏறிப் போய்விட்டார்.

    அவர்கள் சொன்ன அந்த ஒரு வாக்கியம். "ஒரு காவியத்தைப் பார்த்த திருப்தி இன்று எனக்கிருக்கிறது.''

    அந்த ஒரு பாராட்டு என்னை எங்கேயோ சிறகடித்துப் பறக்க வைத்துவிட்டது. பூரித்துப் போனேன். அவருக்குத்தான் எத்தனை பெரிய பரந்த உள்ளம்!

    "எதிர்நீச்சல்'' படம் தயாராகி விட்டது. கால வெள்ளத்தில் எதிர்நீச்சல் அடித்து பல வெற்றிப் படிகளைத் தாண்டியவரான அந்தப் பேரறிஞரை எதிர்நீச்சல் படத்தைக் காணச்செய்யவும் பேரவாக் கொண்டோம். அப்பொழுது அவர் தமிழகத்தின் முதல்-அமைச்சர். தவிர, அமெரிக்கா சென்று புற்று நோய்க்காக சிகிச்சை செய்து கொண்டு தாயகம் திரும்பியிருந்த நேரம். நண்பர் அரங்கண்ணலுடன் சென்று நுங்கம்பாக்கம் அவென்ï ரோடிலுள்ள இல்லத்தில் அண்ணாவை சந்தித்தோம்.

    அவரிடம், "நீங்கள் எதிர்நீச்சல் படத்தைப் பார்க்க வேண்டும்'' என்று பணிவுடன் கேட்டுக்கொண்டேன். பைல்களைப் புரட்டிக்கொண்டே, "ம்... பார்த்துடுவோமே'' என்று பதில் அளித்தார்.

    சற்று தயங்கியபடியே, "இன்றுள்ள உடல் நிலையில் உங்களால் படம் பார்க்க வர இயலுமா?'' என்று என் சந்தேகத்தை மெல்லக் கேட்டேன். "நிச்சயமாக வருகிறேன்!'' என்றார் அண்ணா.

    கற்பகம் ஸ்டூடியோவில் படத்தைத் திரையிட உடனே ஏற்பாடு செய்யப்பட்டது. அன்று பொங்கல் திருநாள். கலைவாணர் என்.எஸ்.கே. சிலையை வாணி மகால் அருகே திறந்து வைத்த அன்றே "எதிர்நீச்சல்'' படத்தைப் பார்க்கவும் வந்திருந்தார்.

    கலைவாணர் சிலை திறப்பு விழாதான் அண்ணா சென்னையில் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி. அவர் பார்த்த கடைசித் தமிழ்ப்படம் எதிர்நீச்சல்.

    அண்ணா இன்று நம்மிடையே இல்லை. ஆனால் இப்போதும் நான் ஒவ்வொரு புதுப்படத்தை எடுத்து முடிக்கும் பொழுதும், `இப்படத்தைப் பார்த்து அபிப்ராயம் சொல்ல அண்ணா இல்லையே' என்ற ஏக்கம் என் நெஞ்சைப் பெரும் சுமையாக அழுத்துவதுண்டு. என் கலையுலக வாழ்க்கையில் நான் மறக்க முடியாத அளவுக்கு அப்படியொரு தனியிடத்தைப் பிடித்திருந்தவர், அவர்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
    மாஸ்டர் மகேந்திரன், அன்பு மயில்சாமி, நீரஜா, காயத்ரி நடிப்பில், சிவபாலன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் சிதம்பரம் ரயில்வே கேட் படத்தின் விமர்சனம்.
    மாஸ்டர் மகேந்திரனும், அன்பு மயில்சாமியும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். மகேந்திரன் ஆட்டோ ஓட்டி அன்பு மயில்சாமியை படிக்க வைக்கிறார். இதே ஊரில் பெரிய தாதாவாக இருக்கும் சூப்பர் சுப்புராயன் சிலைகளை கடத்தி விற்பனை செய்கிறார்.

    இதை மகேந்திரன் போலீசிடம் சொல்லி சூப்பர் சுப்புராயனை சிக்க வைத்து விடுகிறார். இதனால் கோபமடையும் சுப்பர் சுப்புராயன், மகேந்திரனை கொலை செய்ய நினைக்கிறார். இந்நிலையில் அன்பு மயில்சாமி, சூப்பர் சுப்புராயன் மகள் நீரஜாவை காதலிக்கிறார்.

    விமர்சனம்

    சூப்பர் சுப்புராயனுக்கும், மகேந்திரனுக்கும் பிரச்சனை இருப்பதை அறிந்து நீரஜாவை காதலிக்க மறுக்கிறார் அன்பு மயில்சாமி. ஆனால், மகேந்திரன் நண்பனின் காதலை சேர்த்து வைக்க முடிவு செய்கிறார். இறுதியில், தன்னை கொல்ல நினைக்கும் தாதா சூப்பர் சுப்புராயனை எதிர்த்தாரா? அல்லது சமரசமாகி நண்பன் காதலுக்கு உதவினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் நாயகன்களாக நடித்திருக்கும் மகேந்திரன் மற்றும் அன்பு மயில்சாமி இருவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநராகவும், நண்பனுக்காக பேசும்போதும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மகேந்திரன். நண்பனுக்காக காதலை மறுக்கும் அன்பு மயில்சாமியின் நடிப்பில் ஏதோ குறைவது போல் உள்ளது. கல்லூரி மாணவியாக வரும் நீரஜா, மகேந்திரனின் காதலியாக வரும் காயத்ரி ஆகியோரின் நடிப்பு செயற்கை தனமாக இருக்கிறது. வில்லனாக நடித்திருக்கும் சுப்பர் சுப்புராயன் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.

    உயிருக்கு உயிரான இரண்டு நண்பர்கள், இவர்களுக்குள் ஏற்படும் பகை, காதல் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் சிவபாலன். ஆனால், சுவாரஸ்யம் இல்லாமல் திரைக்கதை தடுமாறி இருக்கிறது. தேவையில்லாத காட்சிகள், மற்ற படங்களில் வரும் வழக்கமான காட்சிகள் ஆகியவை படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களிடையே வேலை வாங்காமல் விட்டிருக்கிறார் இயக்குனர்.

    விமர்சனம்

    கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு பலம். குறிப்பாக இளையராஜா பாடிய பாடலும், காதல் இனிக்குதையா பாடலும் மீண்டும் கேட்கும் ரகம். ஆர்.வேலுவின் ஒளிப்பதிவை ரசிக்க முடிகிறது. பல இடங்களில் இவரது ஒளிப்பதிவு பளிச்சிடுகிறது.

    மொத்தத்தில் ‘சிதம்பரம் ரயில்வேகேட்’ சுவாரஸ்யம் இல்லை.
    வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வசந்தபாலன் 25 வருட கனவு என்று கூறியிருக்கிறார்.
    இயக்குனர் ஷங்கருடன் துணை, இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்தபாலன். இப்படத்தை தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.

    தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து, இசையமைக்கும் ஜெயில் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றன. இந்நிலையில், காமராஜர் படித்த நூறு ஆண்டுகளைக் கடந்த பெருமைமிகு பள்ளியான க்ஷத்திரிய வித்யாசாலாவில் தன்னுடன் பயின்ற மூன்று நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குனர் வசந்தபாலன் தொடங்கியுள்ளார்.

    வசந்தபாலன்

    விரைவில் இவர்கள் தயாரிக்கவுள்ள திரைப்படத்தின் பெயரும், அதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகளின் பெயர்களும் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். தனது முந்தைய படங்களைப் போலவே, புதிய படமும் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அழுத்தமாகவும், அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் இருக்கும் என்று இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். மேலும் இது எனது 25 வருட கனவு என்றும் கூறியுள்ளார்.
    இந்திய சினிமாவில் இயக்குனராகவும் நடன இயக்குனராகவும் இருக்கும் பிரபு தேவாவுடன் பிரபல நடன இயக்குனர் இணைந்து இருக்கிறார்.
    ‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன மச்சான்’ பாடல் அதன் இசைக்காகவும், நடன அசைவுகளுக்காகவும் பிரபலமானது. 
    உற்சாகம் மிக்க நாட்டுப்புற இசைக்கு ஏற்ப பிரபுதேவா மற்றும் நிக்கி கல்ரானி ஆடிய அப்பாடலுக்கு நடனம் அமைத்த ஸ்ரீதர், பிரபுதேவாவுடன் மீண்டுமொருமுறை கைகோர்த்திருக்கிறார்.

    அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெறுகிறது. ‘மஞ்சபை’ புகழ் என்.ராகவன் இயக்கும் படத்திற்கு, டி.இமான் இசையமைக்கிறார். மேற்கத்திய இசையின் அடிப்படையில் அமைந்துள்ள துள்ளலான பாடலுக்கு, யுகபாரதி வரிகளை எழுத, ஸ்ரீதரின் நடன இயக்கத்தில் பிரபுதேவா ஆடியுள்ளார். 

    பிரபுதேவா - ஸ்ரீதர்

    இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இந்த பாடல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பேசிய ஸ்ரீதர், “பிரபுதேவா அவர்களுடன் பணிபுரிவது எப்போதுமே ஒரு உற்சாக அனுபவம். ‘சின்ன மச்சான்’ பாடலின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு மீண்டும் அவருடன் பணியாற்றியுள்ளேன். இது ஒரு ‘ஸ்டைலிஷ் வெஸ்டர்ன்’ பாடல். மிகவும் நன்றாக வந்துள்ளது. பிரபுதேவா, இயக்குநர் உட்பட அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,” என்றார்.
    ×