என் மலர்
சினிமா செய்திகள்
பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக புதிய படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார்.

பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில் துவங்கி சென்னை மற்றும் மதுரையில் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இந்திய சினிமா உலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கும் பி.சி.ஸ்ரீராம் கலை அடுத்த லெவலுக்கு போகும் என்று கூறி இருக்கிறார்.
இந்திய சினிமா உலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பவர் பி.சி.ஸ்ரீராம். இவர் 12 மாடல் அழகிகளை வைத்து 12 விதமான பாரம்பரிய திருமண ஆடைகள் அணிந்து உருவாக்கப்பட்ட தி பிரைட் ஷாப் 2021 ஆண்டிற்கான காலண்டரை சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார்.



அதன்பின் செய்தியாளர்கள் பி.சி.ஸ்ரீராம் அவர்களிடம், தற்போது கையில் மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லோரும் கேமரா மேன் ஆகிவிட்டார்கள். அதற்கு உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டதற்கு, எல்லோருடைய கையிலும் கேமரா போன் இருப்பது ஆரோக்கியமான விஷயம். அவர்களுடைய திறமையை அவர்களே வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு பெரிய இயக்குனர் 30 வருடங்களுக்கு முன்பு, எப்போது எல்லோருடைய கையில் கேமரா கிடைக்குதோ, அப்போது தான் கலைக்கான மேடையாக ஏற்றுக் கொள்வேன் என்று சொன்னார். அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது. யாருமே எதிர் பார்க்கவில்லை இப்படி ஒரு புரட்சி நடக்கும் என்று. கலை அடுத்த லெவலுக்கு போகும் என்று நினைக்கிறேன் என்றார்.

இவ்விழாவில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குடும்பத்தினர், சபாபதி ராஜரத்தினம், யோகேஷ் ஶ்ரீ ரத்னம், ரோஷன் ஶ்ரீ ரத்னம், பிரபல ஓவியர், ஏ.பி.ஸ்ரீதர், ஸ்டில்ஸ் ரவி, ஜவகர் அலி, மாடல் அழகிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
"திரை உலகிற்கு வந்தபோது நான் வெறும் களிமண். என்னை நடிகை ஆக்கியவர் பாலசந்தர் என்று சரிதா கூறினார்.
"திரை உலகிற்கு வந்தபோது நான் வெறும் களிமண். என்னை நடிகை ஆக்கியவர் பாலசந்தர் என்று சரிதா கூறினார்.
பாலசந்தர் இயக்கிய 15 படங்களில் நடித்தவர் சரிதா. மாபெரும் வெற்றி பெற்ற "மரோசரித்ரா'' படத்தின் கதாநாயகி.
அவர் பாலசந்தர் பற்றி கூறியிருப்பதாவது:-
"நான் ஒரு "அ.கெ.மு'' என்ன, புரியவில்லையா? அதுதான் "அறிவு கெட்ட முண்டம்.'' பாலசந்தர் சார் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்! அப்படி அவர் கூப்பிடுவதற்கு நான் ரொம்பவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
திரை உலகிற்கு வருவதற்கு முன் நான் வெறும் களிமண். இதை சொல்வதற்கு எனக்கு கொஞ்சம் கூட தயக்கமோ, வெட்கமோ கிடையாது.
என்னை பக்குவமாக "மோல்ட்'' செய்து, நல்ல நடிகை என்று பெயர் வாங்கித் தந்தவர் பாலசந்தர். நடிப்பு என்றால் என்ன, அதன் எல்லைகள் என்ன, கனபரிமாணங்கள் என்ன, இதை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு பாலசந்தர் பல்கலைக்கழகத்தை விட உயர்ந்த இடம் வேறு என்ன இருக்கிறது?
பாலசந்தர் படத்தில் நடிக்கிற எந்த ஆர்டிஸ்டுமே அவர் செய்து காட்டுகிற நடிப்பிலே, பத்து சதவீதம் வெளிப்படுத்தினால் போதும், சிறந்த நடிகராக வரமுடியும்.
தமிழில் என்னுடைய முதல் படமான தப்புத்தாளங்களில் நடிக்கும்போது, எனக்கு என்ன தெரியும் என்று நினைக்கிறீர்கள்? வெறும் ஜீரோதான் நான்!
நான் ஓரளவு நடிக்கக் கற்றுக்கொண்ட பிறகு பாலசந்தர் சார் என்னிடம் "உன் திறமைக்கு சவாலாக இருக்கக்கூடிய வித்தியாசமான ரோல்களாகப் பார்த்து ஒத்துக்கொள். ஒரு சீனில் அழுகிற மாதிரி, இன்னொரு சீனில் இருக்கக் கூடாது. வித்தியாசம் இருக்க வேண்டும். எந்த ஒரு நடிகையின் நடிப்பின் சாயலும் உனக்கு வந்து விடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்'' என்றார்.
இப்போது கூட எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. "நூல்வேலி'' தெலுங்குப் படத்திலே ஸ்ரீதேவி நடிச்சி இருந்தாங்க. அதை நான் ஒருதரம் பார்த்தேன். தமிழில் நான் நடிக்கிறபோது, தெலுங்கில் ஸ்ரீதேவி உதட்டைக் கடித்த மாதிரி செய்தேன்.
பாலசந்தர் அதை சட்டென்று கண்டுபிடித்துவிட்டார். "உன்னோட பாணியில் புதுவிதமா அதைச்செய். ஸ்ரீதேவி மாதிரி செய்ய வேண்டுமென்றால், தமிழிலும் ஸ்ரீதேவியையே இந்த வேடத்திற்கு போட்டிருப்பேனே!'' என்றார்.
சாதாரணமாக செட்டுக்கு போய்விட்டால் அந்த கேரக்டர் பற்றியே நினைத்துக்கொண்டு இருப்பேன். மனதை வேறு எங்கேயும் அலைபாய விடமாட்டேன். அதுவும் பாலசந்தர் சார் படம் என்றால், இன்னும் இறுக்கமாக இருப்பேன்.
டைரக்டர் என்னிடம் ஒரு காட்சியை சொல்லி விட்டு, "எப்படி செய்யலாம் என்று யோசித்து வை'' என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் டயம் கொடுப்பார்.
`இப்படி செய்யலாமா, அப்படி செய்யலாமா' என்று மனதுக்குள் நூறு முறை ஒத்திகை பார்த்துக் கொள்வேன்.
"என்ன, இந்த சீனை எப்படி செய்யப்போறே?'' என்று அவர் என்னைக் கேட்கும்போது, நாலைந்து விதமாய் செய்து காட்டுவேன். பளிச்சென்று அவருக்கு ஒருவிதம் பிடித்து விடும். "அப்படியே செய்'' என்று சொல்லி, சில மாற்றங்களை மட்டும் செய்து காட்டுவார். அதை அப்படியே நடித்துக்காட்டினால் போதும். காட்சி பிரமாதமாக அமைந்துவிடும்.''
இவ்வாறு சரிதா கூறியுள்ளார்.
பாலசந்தர் டைரக்ஷனில், சிவகுமார், சரிதாவும் இணைந்து நடித்த படம் "அக்னிசாட்சி.'' பாலசந்தரின் லட்சிய படங்களில் ஒன்று.
அந்தப்படம் தயாராகும்போது நடந்த நிகழ்ச்சிகள் பற்றி சிவகுமார் எழுதியிருப்பதாவது:-
"புதுக்கவிதையில் நாட்டம் உள்ள, சிறு வயதில் மனதில் காயம் ஏற்பட்ட கண்ணம்மா என்பவள்தான் "அக்னி சாட்சி''யின் கதாநாயகி. அவளை நேசிக்கும் அற்புத மனிதன் அரவிந்தன் (நான்).
`என் தலைவா! உன் பெயரை, ஒரு பேப்பரில் எழுதித் தடவிப்பார்! அதில் ஈரப்பசை இருக்கும்...! ஏனெனில், உன் திருநாமம், என் உதட்டு எச்சில்களால், ஒரு நாளைக்கு ஆயிரம் முறைகளுக்கு மேல் குளிப்பாட்டப்பட்டதல்லவோ...!' என்று அரவிந்தன் மீது, தான் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவாள்.
கண்ணம்மா கருத்தரிப்பாள். வயிற்றுக்குள் வளரும் குழந்தைக்கு ஒரு கவிதை எழுதுவாள்!
"அன்புக்குழந்தையே! அம்மா எழுதுகிறேன்... தாய்ப்பால் வருவதற்கு முன்பு, தபால் வருகிறதே என்று பார்க்கிறாயா...!'' என்று துவங்கும் பாடலைப் படமாக்கும்போது, சரிதா, அளவு கடந்த களைப்பு காரணமாக கே.பி. எதிர்பார்த்தபடி செய்யவில்லை.
"இந்த சீன் படத்தில் வரவே வராதுன்னு நெனைச்சு இப்படி நடிக்கிறியா?'' என்று சீறினார். அந்தக் கோபத்தின் உக்கிரமë தாங்காமல் சரிதா மயக்கமாகி விட்டார். அப்படியும் அவர் விடவில்லை. தண்ணீர் தெளித்து எழுப்பி, நடிக்க வைத்தார்.
படத்தின் கிளைமாக்ஸ்... சரிதா பிரசவத்தில் இறந்து போவது கதை. "ஒரு `பிரேம்' கூட சரிதா பிரசவ வேதனைப்படுவதைக் காட்டமாட்டேன்...! உன் மூலம் ஆஸ்பத்திரியில் அவள் முடிவைச் சொல்லப்போகிறேன்'' என்று என்னிடம் சொல்லி, பிரமாதமாக அந்தக் காட்சியைப் படமாக்கினார்.
பின்னணி இசை (ரீ-ரிக்கார்டிங்) சேர்க்காமல் படத்தை மேனா தியேட்டரில் கே.பி. அவர்களும் நானும் சரிதாவும் பார்த்தோம்.
படத்தின் உச்சகட்டக் காட்சியைப் பார்த்து நான் கேவிக்கேவி அழுதேன். சரிதா கிட்டத்தட்ட மூர்ச்சையடைந்து விட்டார். அவ்வளவு அழுத்தம். கே.பி.தான் எங்களைத் தேற்றினார்.
அப்படி இழைத்து இழைத்து அவர் உருவாக்கிய படம், எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. பல மாதங்கள் டைரக்டர் படுத்து விட்டார்.
மல்யுத்த மேடைதானே திரையுலகம்...! மீண்டும் சிலிர்த்து எழுந்தார்! `சிந்து பைரவி' படம் உருவாக்கினார்.''
இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷை நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் ஈர்க்கப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.


தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வில் வித்தை பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும், ஆண்ட்ரியா கிட்ட கத்துக்கோங்கா என கலாய்த்துள்ளனர். காரணம் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ஆண்ட்ரியாவின் காட்சி லாஜிக் இல்லாமல் இருந்ததாக கூறி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஷங்கர் அடுத்ததாக இயக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம். இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பல்வேறு வசூல் ரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரும் ராம் சரண், இந்தப் படத்தின் மூலம் இந்திய அளவில் ஸ்டாராக வலம் வரவுள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனரான தில் ராஜு இந்த மெகா கூட்டணி இணைந்துள்ள படத்தைத் தயாரிக்கவுள்ளது குறித்து, "இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநரான ஷங்கருடன், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசிய அளவில் இந்தியாவின் அத்தனை விதமான ரசிகர்களுக்குமான ஒரு பொழுதுபோக்குப் படத்தை நாங்கள் கொண்டுவரவிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் - நடிகர் ராம் சரண் - தயாரிப்பாளர் தில் ராஜு இணைந்துள்ள இந்தப் படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது. இது ராம் சரணின் 15வது திரைப்படமாகவும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 50-வது மைல்கல் திரைப்படமாகவும் இருக்கும். தில் ராஜுவோடு சேர்ந்து ஷிரிஷ் அவர்களும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு தொடக்க விவரம், ராம் சரணுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
கைதி, அந்தகாரம் மற்றும் மாஸ்டர் படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் அடுத்ததாக கேரள இயக்குனர் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் தனது அற்புதமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். கைதியின் வெற்றியைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் விக்னராஜன் இயக்கத்தில் வெளியான அந்தகாரம் படமும் அர்ஜுன் தாஸுக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக்கொடுத்தது.

சமீபத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் அர்ஜுன் தாஸ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

கைதி, அந்தகாரம் மற்றும் மாஸ்டர் என வரிசையாக நல்ல படங்களில் நடித்திருந்த அர்ஜுன் தாஸ் தற்போது இயக்குனர் வசந்தபாலன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள வசந்தபாலன் மற்றும் அவரது நண்பர்கள் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில் செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா படத்தின் முன்னோட்டம்.
ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில் செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா திரைப்படம் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் சையத் இயக்கியுள்ளார்.
நாயகனாக விஜு இப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார். "அங்காடித் தெரு" "அசுரன் " ஆகிய படங்களில் நடித்த இயக்குனர் A.வெங்கடேஷ் எதிர்நாயகனாக நடித்துள்ளார்.
மேலும் எஸ்.சக்தி வேல் ஒளிப்பதிவில் எல். வி முத்து கணேஷ் அவர்களின் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் "யாமா" திரைப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் செகண்ட் லுக் வெளியாகியிருந்தது. முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.
வெற்றி, தீபன், கார்த்திக் ரத்தினம், சோனியா கிரி, மும்தாஜ் சார்கர், அயிரா நடிப்பில் ஹேமம்பர் ஜஸ்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கேர் ஆப் காதல் படத்தின் விமர்சனம்.
வெற்றி மதுக்கடையில் பணிபுரிபவர். அங்கு வழக்கமாக மது வாங்க வரும் மும்தாஜ் சார்கர் மீது வெற்றிக்கு தீவிர காதல். மும்தாஜின் பின்னணி தெரிய வரும்போது அவர் அதிர்ச்சி ஆகிறார். ஆனாலும் தனது காதலை அதிகப்படுத்தி அவரை மகிழ்ச்சியான பெண்ணாக வைத்துக்கொள்கிறார். இருவரும் திருமணத்துக்கு தயாராகும்போது ஒரு அதிர்ச்சி நடக்கிறது.



கார்த்திக் ரத்தினம் ஒரு தாதாவிடம் அடியாளாக இருக்கிறார். கல்லூரியில் படிக்கும் அயிராவும் அவரும் முதலில் மோதிக்கொள்கிறார்கள். அந்த மோதலே காதலாகிறது. இந்த காதலுக்கு மதம் குறுக்கே நிற்கிறது.

பள்ளியில் படிக்கும் நிஷேஷுக்கு சக மாணவி ஸ்வேதா மீது காதல். ஸ்வேதாவின் பாட்டு போட்டி ஆசையை நிறைவேற்ற நிஷேஷ் பாடுபடுகிறான். ஆனால் அது நிறைவேறும்போது இருவரும் பிரிய நேரிடுகிறது.
தீபன் ஒரு அரசு அலுவலகத்தில் பியூனாக பணிபுரிகிறார். 49 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் அவருடன் நட்பு பாராட்டுகிறார் அவருக்கு அதிகாரியாக வரும் சோனியா கிரி. ஒரு கட்டத்தில் சோனியாவுக்கு தீபன் மீது காதல் வர அவரும் சம்மதிக்க இந்த வயதான ஜோடியின் காதலை சமூகம் ஏற்றுக்கொண்டதா? என்பது படத்தின் முடிவு.
தாடியாக வரும் வெற்றி சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். சின்ன உடலசைவுகள் மற்றும் வசனங்கள் மூலம் நம்பகத்தன்மை கொடுக்கிறார். அவருக்கு ஜோடியாக வரும் மும்தாஜ் சார்கரும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளார்.

முதல் மரியாதை படத்துக்கு பின்னர் நடிப்பில் இருந்து ஒதுங்கி மீண்டும் வந்துள்ள தீபனை இனி சினிமாவில் அடிக்கடி பார்க்கலாம். தீபன் - சோனியா ஜோடி நடுத்தர வயது நேசத்தை கண்முன்னே கொண்டு வந்துள்ளது. கார்த்திக் ரத்தினம் - அயிரா ஜோடியின் காதலில் இளமை துள்ளல்.
4 வெவ்வேறு வயதினருடைய கதை. 4 கதைகளையும் இணைக்கும் புள்ளி காதல் மட்டுமே. 4 காதல்களில் வெற்றியில் முடிந்த காதல் எது? தோல்வியில் முடிந்த காதல்கள் எவை? அவற்றுக்கான காரணம் என்ன? என சுவாரசியமான கேள்விகளை எழுப்பி கடைசியில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது படம்.
தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற கேர் ஆப் கச்சரபள்ளம் என்ற படத்தை தமிழ்நாட்டு மண்ணுக்கு தகுந்தாற்போல் மாற்றி கொடுத்துள்ளார் ஹேமன்பர் ஜஸ்தி.

சுவீகர் அகஸ்தியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு இனிமை கூட்டுகிறது. கே.குணசேகரின் ஒளிப்பதிவும் அழகு. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு படத்திற்கு தன் தேவையை உணர்ந்து சிறப்பாக செய்துள்ளார்.
நடிகர்களின் வசன உச்சரிப்பு, உடல் மொழியில் தெரியும் வித்தியாசம் மட்டுமே சின்ன பலவீனம். வெற்றியை போல பிற கதாபாத்திரங்களும் தெரிந்த முகங்களாக இருந்து இருக்கலாம்.
சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் 4 காதல்களுமே அழகான கவிதைகளாக அமைந்துள்ளது. 4 கதைகளையும் இணைக்கும் கிளைமாக்சும் நெகிழ வைக்கிறது.
மொத்தத்தில் 'கேர் ஆப் காதல்' ரசிக்கலாம்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ராதிகாவின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற 'சித்தி' தொடரின் இரண்டாம் பாகம் தனியார் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடிகை ராதிகா நடித்து வந்தார். இந்நிலையில் சீரியல் நடிப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக ராதிகா தரப்பில் கூறும்போது, ''சில வாரங்களுக்கு முன்பே எடுத்த முடிவுதான் இது.

அடுத்தடுத்த சில காலம் தீவிர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதால் ராதிகா இந்த முடிவை எடுத்துள்ளார். சினிமா நடிப்பில் எப்போதும்போல கவனம் செலுத்துவார். அதேபோல, அவரது தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் 'சித்தி 2' சீரியல் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும். அவர் சீரியலில் நடிப்பதை மட்டுமே தற்போது நிறுத்தியுள்ளார். என்றார்.
ஜீவா, அருள்நிதி நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் படத்தின் ரீமேக் உரிமைக்கு மற்ற நடிகர்கள் போட்டி போட்டு வருகிறார்கள்.
ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ள படம் களத்தில் சந்திப்போம். என்.ராஜசேகர் இயக்கிய இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்பி.சவுத்ரி தயாரித்து இருந்தார். இந்த நிறுவனத்தின் 90வது தயாரிப்பு இது. குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய பொழுதுபோக்கு படமாக அமைந்துள்ளதால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா காரணமாக மக்கள் தியேட்டர்களுக்கு வர தயங்கிய நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைத்தது. அடுத்து களத்தில் சந்திப்போம் படம் தியேட்டர்களுக்கு குடும்ப ரசிகர்களை வரவழைத்துள்ளது. அனைவரும் ரசிக்கும் வகையில் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு படமாக அமைந்ததால் இரண்டாவது வாரமும் படத்துக்கு வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் படத்தின் தெலுங்கு, கன்னட உரிமைக்கு அங்குள்ள பெரிய நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர். படம் நிச்சயம் வெற்றி அடையும் ரீமேக் உரிமைக்கு போட்டி வரும் என்பதாலேயே படத்தை பிற மொழிகளில் டப் செய்து வெளியிடவில்லை. ஆர்பி.சவுத்ரியின் இந்த முடிவை பலரும் பாராட்டி உள்ளனர்.
கெளதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ‘குட்டி ஸ்டோரி’ என்கிற ஆந்தாலஜி படத்தின் விமர்சனம்.
திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கெளதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் ‘குட்டி ஸ்டோரி’. காதலை கதைக்கருவாக வைத்து இந்த நான்கு குறும்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.
எதிர்பாரா முத்தம்
கெளதம் மேனன் தனது கல்லூரி பருவ நண்பர்களை நீண்ட நாட்களுக்கு பின் சந்திக்கிறார். அப்போது அவருடைய கல்லூரி கால நினைவுகளை பற்றி பேசுகிறார் கெளதம் மேனன். அப்போது காதலை பற்றி பேசும் கெளதம் மேனன், அமலா பால் உடனான தன்னுடைய நட்பை பற்றி சொல்கிறார். அந்த நிகழ்வுக்கு பின் அமலா பாலும், கெளதம் மேனும் நண்பர்களாக இருந்தார்களா? இல்லையா என்பதே மீதிக்கதை.

கெளதம் மேனனின் கல்லூரி பருவ கதாபாத்திரமாக நடித்துள்ள வினோத் கிஷன் திறம்பட நடித்துள்ளார். அமலா பாலின் நடிப்பும், ரோபோ சங்கரின் கவுன்ட்டர்களும் ரசிக்கும்படி உள்ளன. கெளதம் மேனனும் தன் பங்கிற்கு ஸ்டைலிஷாக நடித்துள்ளார். மனோஜ் பரம ஹம்சாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. தனது திரைப்படங்களைப் போல் இந்த குறும்படத்திலும் தன் காதல் முத்திரையை பதிக்கத் தவராத கெளதம் மேனன், காதல் காட்சிகளின் நீளத்தை குறைத்திருந்தால், எதிர்பாரா முத்தம் நினைவில் இருந்திருக்கும்.
அவனும் நானும்
ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் அவனும் நானும். அமிதாஷ், மேகா ஆகாஷ் இருவரும் காதலித்து வருகிறார்கள். இருவரின் எல்லைமீறிய காதலால் மேகா ஆகாஷ் கர்ப்பமாகிறார். இதை தனது காதலன் அமிதாஷிடம் போனில் தெரிவிக்கிறார். இந்த விஷயம் தெரிந்ததில் இருந்தே அமிதாஷின் போன் ஸ்விட்ச் ஆப்பில் இருக்கிறது. இதையடுத்து அமிதாஷ் என்ன ஆனார்? மேகா ஆகாஷ் என்ன முடிவெடுத்தார் என்பதே மீதிக்கதை.

படத்தில் அமிதாஷுக்கு குறைந்தளவு காட்சிகளே உள்ளன. ஆனால் மேகா ஆகாஷ் தான் படம் முழுக்க பயணிக்கிறார். நடிப்பிலும் ஸ்கோர் செய்துள்ளார். மதுவின் இசை, அரவிந்த் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் எடிட்டிங் ஆகியவை படத்துக்கு பலமாக அமைந்துள்ளன. படத்தில் ஒருசில டுவிஸ்ட் கொடுத்து விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய்.
லோகம்
அனிமேஷன் கேமை மையமாகக் கொண்டு ஒரு காதலைச் சொல்ல முயன்றுள்ளார் வெங்கட் பிரபு. லோகம் என்ற கேமை நாயகன் வருண் விளையாடி வருகிறார். அந்த விளையாட்டில் ஒரு பெண்ணும் இணைகிறார். அவர் மீது நாயகன் வருண் காதல் வயப்படுகிறார். அந்தப் பெண்ணிடம் வருண் வாட்ஸ் அப் நம்பர் கேட்க, கேமில் குறிப்பிட்ட லெவலை முடித்துவிட்டால் நம்பர் தருகிறேன் என்கிறார் அந்தப் பெண். இறுதியில் அந்தப் பெண் அந்த லெவலை முடித்தாரா? வருணின் காதல் கைகூடியதா? என்பதே படத்தின் மீதிக் கதை.

இந்தக் கதையில் பெரும்பாலும் அனிமேஷன் கேம் தான் வருகிறது. அந்த கேமை தரமாக உருவாக்கி உள்ளார்கள். வருண், சாக்ஷி, சங்கீதா ஆகியோர் நேர்த்தியாக நடித்துள்ளனர். பிரேம்ஜியின் பின்னணி இசை கதையோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது. கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டி இருந்தால் லோகம் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். வெங்கட் பிரபுவின் மேஜிக் இதில் மிஸ்ஸிங்.
ஆடல் பாடல்
விஜய்சேதுபதியும், அதிதி பாலனும் கணவன் மனைவி, இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. ஆனால் விஜய் சேதுபதி வேறு ஒரு பெண்ணுடன் அடிக்கடி போனில் பேசி வருகிறார். ஒருகட்டத்தில் விஜய் சேதுபதியின் கள்ளக்காதல் அவரது மனைவி அதிதி பாலனுக்கு தெரிந்து விடுகிறது. அதன்பின் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.
திரைக்கதையை திறம்பட கையாண்டுள்ளார் இயக்குனர் நலன் குமாரசாமி. நாயகன் விஜய் சேதுபதியின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். குறிப்பாக தன்னுடைய கள்ளக்காதல் மனைவிக்கு தெரிந்த போது என்ன செய்வதென்று திகைத்துப்போகும் காட்சியில் விஜய் சேதுபதியின் நடிப்பு அற்புதம். அதிதி பாலனும் போட்டிபோட்டு நடித்துள்ளார்.

எட்வின் லூயிஸ் விஸ்வநாத் பின்னணி இசை பிரமாதம். ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றாலும் காட்சிகளில் கைவண்ணத்தை காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம். மேற்கண்ட நான்கு குறும்படங்களில் தனியாக ஜொலிக்கிறது ஆடல் பாடல்.
மொத்தத்தில் ‘குட்டி ஸ்டோரி’ காதலுக்காக.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக இருக்கும் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக பிரபல நடிகையின் மகள் நடிக்க இருக்கிறார்.
வாரிசு நடிகைகள் பலர் ஏற்கனவே பிரபல கதாநாயகிகளாக வலம் வருகின்றனர். கமல்ஹாசன் மகள் சுருதிஹாசன் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இன்னொரு மகள் அக்ஷரா ஹாசனும் படங்களில் நடிக்கிறார். நடிகை மேனகா மகள் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை லிசியின் மகள் கல்யாணியும் நடிக்க வந்துள்ளார். நடிகை ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி ஆகியோரும் கதாநாயகியாக நடித்துள்ளனர். மறைந்த ஶ்ரீதேவி மகள் ஜான்வி இந்தி படங்களில் நடித்து வருகிறார்.


இந்த வரிசையில் நட்சத்திர தம்பதிகளான ஜீவிதா, ராஜசேகரின் இளைய மகள் சுவாத்மிகாவும் கதாநாயகியாகிறார். நந்தா பெரியசாமி இயக்கும் புதிய தமிழ் படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் சேரனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். கார்த்திக் நடித்த வருஷம் 16 படம் சாயலில் இந்த படம் தயாராக உள்ளது. படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.






