என் மலர்
சினிமா செய்திகள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய, பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் 9-ந் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரத்தம் சொட்ட சொட்ட, தனுஷ் கைவிலங்குடன் இருப்பது போன்று அமைந்துள்ள அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபாஸ் - பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
காதலர் தினமான இன்று பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ‘ராதே ஷ்யாம்’ படக்குழு, அத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளதோடு, படத்திலிருந்து ஒரு காதல் காட்சியையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி ‘ராதே ஷ்யாம்’ படம் வருகிற ஜூலை 30 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபாஸ், காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, ராதா கிருஷ்ண குமார் இப்படத்தை இயக்கி உள்ளார். யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிக்கின்றனர்.

இன்று வெளியிடப்பட்டுள்ள காட்சியானது ரோமில் படமாக்கப்பட்டுள்ளது. ரயில் ஒன்றில் தொடங்கும் காணொலி, காடுகளை நோக்கி பயணிக்கிறது. இத்தாலி மொழியில் ‘செய் உன் அங்கெலோ? தேவோ மோரிர் பெர் இன்காண்ட்ரர்டி?’என்று காதல் பொங்க பூஜாவிடம் பிரபாஸ் உரையாடுகிறார். இதன் பொருள் என்னவாக இருக்கும் என்று பிரபாஸ் ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர்.
இக்காணொலி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், காதலர் தினத்திற்கான சரியான பரிசாக இது அமைந்துள்ளது என அவர்கள் கூறி வருகின்றனர். இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய காதல் படமாக ‘ராதே ஷ்யாம்’ இருக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சிறப்பு காட்சி வெளியாகி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
#RadheShyam to release in a theatre near you on 30th July! 💥💥 #ValentinesWithRS
— Maalai Malar News (@maalaimalar) February 14, 2021
Tamil : https://t.co/nB0tghhaVD#Prabhas@hegdepooja@director_radhaa@UV_Creations@RickshaRani@manojdft@justin_tunes@onlynikil#ValentinesWithRS#RadheShyamOnJuly30thpic.twitter.com/HSofeHX2Vq
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்து இயக்குனர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் மிக பிரமாண்டமான படங்களை இயக்கி, தொடர் வெற்றிகளை கொடுத்தவர், ஷங்கர். ‘ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், முதல்வன், இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன், ஐ, நண்பன்’ என வரிசையாக பல வெற்றி படங்களை கொடுத்து இந்திய திரையுலகையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.
அடுத்து இவர், கமல்ஹாசன் நடிக்க, ‘இந்தியன்-2’ படத்தை இயக்கி வந்தார். அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலுக்கு தயாராகி வருவதால், இந்தியன்-2 படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் ஒரு பிரமாண்டமான படத்தை ஷங்கர் இயக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. பிரபல தெலுங்கு பட அதிபர்கள் தில்ராஜு, சிரிஷ் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.
இதனிடையே இந்தியன் 2 ஷூட்டிங் குறித்து ஷங்கர் கூறியதாவது: ‘‘ராம்சரண் படம் குறுகிய கால தயாரிப்பாக இருக்கும். அதற்குள் தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்துவிடும். தேர்தல் பணிகள் முடிவடைந்ததும், ‘இந்தியன்-2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும். அதில் கமல்ஹாசன் கலந்துகொண்டு நடிப்பார்’’ என்று ஷங்கர் கூறினார்.
காதலில் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை உள்ளத்தை உலுக்கும் வகையில் சித்தரித்த படம் பாலசந்தரின் "புன்னகை மன்னன்.''
காதலைப் பற்றிய சில படங்கள், காதல் காவியங்களாக அமைந்துள்ளன. காதலில் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை உள்ளத்தை உலுக்கும் வகையில் சித்தரித்த படம் பாலசந்தரின் "புன்னகை மன்னன்.''
1986-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி வெளியான "புன்னகை மன்னன்'' படத்தில், கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
கமலஹாசனும், ரேகாவும் காதலர்கள். காதல் நிறைவேறாததால், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். காட்டுப்பகுதியில் நடந்து செல்வார்கள். அழகிய நீர்வீழ்ச்சியையும், இயற்கை எழிலையும் கடைசி முறையாக ரசித்துவிட்டு மலை உச்சியில் இருந்து குதிப்பார்கள். இதில், ரேகா மலைப்பாறையில் விழுந்து இறந்து போவார். கமலஹாசன், மரக்கிளையில் மாட்டிக் கொண்டு, உயிர் தப்புவார்.
படத்தின் தொடக்கக் காட்சியே பிரமாதமாக அமைந்திருந்தது. தற்கொலை செய்யும் காதல் ஜோடி, கடைசி நிமிடத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை தத்ரூபமாக -நெஞ்சைத் தொடும் விதத்தில் காட்டியிருந்தார், பாலசந்தர்.
படத்தில் ரேவதியும் சிறப்பாக நடித்திருந்தார். படம் எல்லா அம்சங்களிலும் சிறப்பாக அமைந்து, பெரிய வெற்றி பெற்றது. இதன் பிறகு மனதில் உறுதிவேண்டும் (1987), உன்னால் முடியும் தம்பி (1988), புதுப்புது அர்த்தங்கள் (1989) ஆகிய படங்களை பாலசந்தர் எடுத்தார்.
"மனதில் உறுதி வேண்டும்'' படத்தில் விவாகரத்து பிரச்சினையை அலசியிருந்தார். கதாநாயகியாக சுகாசினி நன்கு நடித்திருந்தார்.
"உன்னால் முடியும் தம்பி'' படத்தில், ஜெமினிகணேசன் அப்பாவாகவும், கமலஹாசன் மகனாகவும் நடித்தனர். ஜெமினிகணேசன், ஒரு இசை மேதை. கமலஹாசனும் இசைக் கலைஞனாக வேண்டும் என்று ஜெமினி விரும்புவார். ஆனால் கமல் அதை ஏற்கமாட்டார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்படும் மோதல் நன்கு சித்தரிக்கப்பட்ட போதிலும், படம் பெரிதாக ஓடவில்லை.
ரகுமானும், சித்தாராவும் ஜோடியாக நடித்த படம் "புதுப்புது அர்த்தங்கள்'' (1989).
1990-ல் "ரெயில் சிநேகம்'', "ஒரு வீடு இரு வாசல்'' ஆகிய படங்கள் பாலசந்தர் தயாரிப்பில் வெளிவந்தன.
பேசும் படங்கள் வெளிவந்த தொடக்க காலத்தில், ஒரே படத்தில் இரண்டு மூன்று கதைகள் இடம் பெற்றது உண்டு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த "நவீன விக்ரமாதித்தன்'' படத்தில், "புத்திமான் பலவான்'' என்ற இன்னொரு கதையும் இணைந்திருந்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "சௌ-சௌ'' என்ற படத்தில் 3 கதைகள் இடம் பெற்றன.
அதுபோல், பாலசந்தரின் "ஒரு வீடு இரு வாசல்'' படத்தில் இரு கதைகள் இடம் பெற்றிருந்தன. படத்தின் முடிவில், இரண்டு கதைகளுக்கும் ஒரு இணைப்பு கொடுத்திருந்தார், டைரக்டர்.
1991-ல் கோவை செழியன் தயாரித்த "அழகன்'' படத்தை டைரக்ட் செய்தார், பாலசந்தர்.
ஓட்டல் நடத்தும் மம்முட்டியை 3 பெண்கள் (பானுபிரியா, கீதா, மதுபாலா) காதலிப்பதுதான் கதையின் மையம்.
கதாபாத்திரங்களை நன்கு வடிவமைத்து, படத்தை மிகப்பிரமாதமாக உருவாக்கியிருந்தார், பாலசந்தர். குறிப்பாக, மம்முட்டியும், பானுபிரியாவும் விடிய விடிய டெலிபோனில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்ட, புதுவிதமாக காட்சியை எடுத்திருந்தார்.
ஒரே ஒரு டெலிவிஷன் சேனல் ("தூர்தர்ஷன்'') மட்டும் இயங்கி வந்த காலக்கட்டம் அது. இரவு 10 மணியுடன் நிகழ்ச்சிகள் முடிவடைந்து விடும். அப்போது மம்முட்டியும், பானுபிரியாவும் பேச ஆரம்பிப்பார்கள். பின்னணியில் "சங்கீத ஸ்வரங்கள்'' என்ற அருமையான பாட்டு ஒலிக்கும்.
காலை 6 மணிக்கு தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும். அதுவரை இருவரும் பேசிக்கொண்டே இருப்பார்கள்! அப்போது இருவரின் நடிப்பும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக பானுபிரியாவின் முகபாவங்களும், விதம் விதமான சிரிப்புகளும்.... அவர் நடிப்பின் சிகரத்துக்கே சென்றுவிட்டார் என்று சொல்லலாம்.
பாலசந்தரின் சிறந்த படங்களில் ஒன்று "அழகன்.''
1986-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி வெளியான "புன்னகை மன்னன்'' படத்தில், கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
கமலஹாசனும், ரேகாவும் காதலர்கள். காதல் நிறைவேறாததால், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். காட்டுப்பகுதியில் நடந்து செல்வார்கள். அழகிய நீர்வீழ்ச்சியையும், இயற்கை எழிலையும் கடைசி முறையாக ரசித்துவிட்டு மலை உச்சியில் இருந்து குதிப்பார்கள். இதில், ரேகா மலைப்பாறையில் விழுந்து இறந்து போவார். கமலஹாசன், மரக்கிளையில் மாட்டிக் கொண்டு, உயிர் தப்புவார்.
படத்தின் தொடக்கக் காட்சியே பிரமாதமாக அமைந்திருந்தது. தற்கொலை செய்யும் காதல் ஜோடி, கடைசி நிமிடத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை தத்ரூபமாக -நெஞ்சைத் தொடும் விதத்தில் காட்டியிருந்தார், பாலசந்தர்.
படத்தில் ரேவதியும் சிறப்பாக நடித்திருந்தார். படம் எல்லா அம்சங்களிலும் சிறப்பாக அமைந்து, பெரிய வெற்றி பெற்றது. இதன் பிறகு மனதில் உறுதிவேண்டும் (1987), உன்னால் முடியும் தம்பி (1988), புதுப்புது அர்த்தங்கள் (1989) ஆகிய படங்களை பாலசந்தர் எடுத்தார்.
"மனதில் உறுதி வேண்டும்'' படத்தில் விவாகரத்து பிரச்சினையை அலசியிருந்தார். கதாநாயகியாக சுகாசினி நன்கு நடித்திருந்தார்.
"உன்னால் முடியும் தம்பி'' படத்தில், ஜெமினிகணேசன் அப்பாவாகவும், கமலஹாசன் மகனாகவும் நடித்தனர். ஜெமினிகணேசன், ஒரு இசை மேதை. கமலஹாசனும் இசைக் கலைஞனாக வேண்டும் என்று ஜெமினி விரும்புவார். ஆனால் கமல் அதை ஏற்கமாட்டார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்படும் மோதல் நன்கு சித்தரிக்கப்பட்ட போதிலும், படம் பெரிதாக ஓடவில்லை.
ரகுமானும், சித்தாராவும் ஜோடியாக நடித்த படம் "புதுப்புது அர்த்தங்கள்'' (1989).
1990-ல் "ரெயில் சிநேகம்'', "ஒரு வீடு இரு வாசல்'' ஆகிய படங்கள் பாலசந்தர் தயாரிப்பில் வெளிவந்தன.
பேசும் படங்கள் வெளிவந்த தொடக்க காலத்தில், ஒரே படத்தில் இரண்டு மூன்று கதைகள் இடம் பெற்றது உண்டு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த "நவீன விக்ரமாதித்தன்'' படத்தில், "புத்திமான் பலவான்'' என்ற இன்னொரு கதையும் இணைந்திருந்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "சௌ-சௌ'' என்ற படத்தில் 3 கதைகள் இடம் பெற்றன.
அதுபோல், பாலசந்தரின் "ஒரு வீடு இரு வாசல்'' படத்தில் இரு கதைகள் இடம் பெற்றிருந்தன. படத்தின் முடிவில், இரண்டு கதைகளுக்கும் ஒரு இணைப்பு கொடுத்திருந்தார், டைரக்டர்.
1991-ல் கோவை செழியன் தயாரித்த "அழகன்'' படத்தை டைரக்ட் செய்தார், பாலசந்தர்.
ஓட்டல் நடத்தும் மம்முட்டியை 3 பெண்கள் (பானுபிரியா, கீதா, மதுபாலா) காதலிப்பதுதான் கதையின் மையம்.
கதாபாத்திரங்களை நன்கு வடிவமைத்து, படத்தை மிகப்பிரமாதமாக உருவாக்கியிருந்தார், பாலசந்தர். குறிப்பாக, மம்முட்டியும், பானுபிரியாவும் விடிய விடிய டெலிபோனில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்ட, புதுவிதமாக காட்சியை எடுத்திருந்தார்.
ஒரே ஒரு டெலிவிஷன் சேனல் ("தூர்தர்ஷன்'') மட்டும் இயங்கி வந்த காலக்கட்டம் அது. இரவு 10 மணியுடன் நிகழ்ச்சிகள் முடிவடைந்து விடும். அப்போது மம்முட்டியும், பானுபிரியாவும் பேச ஆரம்பிப்பார்கள். பின்னணியில் "சங்கீத ஸ்வரங்கள்'' என்ற அருமையான பாட்டு ஒலிக்கும்.
காலை 6 மணிக்கு தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும். அதுவரை இருவரும் பேசிக்கொண்டே இருப்பார்கள்! அப்போது இருவரின் நடிப்பும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக பானுபிரியாவின் முகபாவங்களும், விதம் விதமான சிரிப்புகளும்.... அவர் நடிப்பின் சிகரத்துக்கே சென்றுவிட்டார் என்று சொல்லலாம்.
பாலசந்தரின் சிறந்த படங்களில் ஒன்று "அழகன்.''
சேவியர் பிரிட்டோவின் எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனம் தயாரிக்கும் "அழகிய கண்ணே" படத்தின் முன்னோட்டம்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார்.
பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் I.லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத, N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார். காடன் திரைப்பட ஒளிப்பதிவாளர் A.R.அசோக் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பினை பிரபல படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மாணவர் சங்கத் தமிழன் கவனிக்கிறார். நடன இயக்குநராக ராதிகா மாஸ்டரும், படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை இளையராஜா செல்வம் அவர்களும் கவனிக்கிறார்கள்.
இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில் துவங்கி சென்னை மற்றும் மதுரையில் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதர கதாபாத்திரங்களுக்கான நட்சத்திர தேர்வு நடைபெறுகிறது.
சந்தானம், அனைகா நடிப்பில் ஜான்சன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் விமர்சனம்.
பாரிஸ் பகுதியில் கானா பாடகராக இருக்கிறார் சந்தானம். இவருடைய முதல் காதல் தோல்வியில் முடிந்துவிட, அடுத்ததாக அனைகாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். முதலில் இந்தக் காதலுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜெயராஜின் தந்தை பிருத்விராஜ், பிறகு கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார். திவ்யாவின் தந்தையும் இந்தக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். ஜெயராஜின் காதலை முதலில் ஆதரித்த தந்தை, பிறகு எதிர்ப்பது ஏன்?, தந்தையின் எதிர்ப்புகளை மீறி சந்தானம் அனைகாவை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சந்தானம் கானா பாடகராக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும், காதலி பின்னால் சுற்றும் வழக்கமான சந்தானத்தையே பார்க்க முடிகிறது. கிளைமாக்ஸில் இவருடைய உடல் மொழி ரசிக்க வைக்கிறது. சண்டைக்காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகியாக வரும் அனைகா, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். சில இடங்களில் இவர் பேசும் வசனம் படத்தோடு ஒட்டாமல் இருக்கிறது.
சந்தானத்திற்கு அப்பாவாக வரும் பிருத்வி ராஜின் நடிப்பு சிறப்பு. சந்தானத்திற்கு நிகராக இவருடைய கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. மாறன், சேது, சேஷு, 'நான் கடவுள்' ராஜேந்திரன், கலக்கப்போவது யாரு வினோத், மற்றும் தங்கதுரை ஆகியோர் டைமிங் காமெடியில் பேசி அசத்தி இருக்கிறார்கள். ஆனால், ஒரு சில இடங்களில் நமக்கு பேட் டைமிங்காகவும் மாறுகிறது.

சந்தானம் நடித்து ஜான்சன் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிந்த ஏ 1 படம் வெற்றி பெற்றதையடுத்து, அதே குழு மீண்டும் இணைந்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார்கள். படத்தின் முதற்பாதியில் காமெடி பெரியதாக எடுபடவில்லை. ஆனால், இரண்டாம் பாதியில் கூடுதலாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். டைமிங் காமெடியை ஒரு சில இடங்களில் தவிர்த்திருக்கலாம். அதுபோல் அனைத்து கதாபாத்திரமும் டைமிங் காமெடியில் பேசுவது நெருடலாக இருக்கிறது.
சந்தானம் கானா பாடகர் என்பதால் எல்லாப் பாடல்களுமே அதே பாணியில் இடம்பெற்றிருக்கிறது. சந்தோஷ் நாராயணின் இசையில் முதல் மூன்று பாடல்களும் தேவையில்லாத இடங்களில் வந்ததுபோல் இருக்கிறது. ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு படத்துக்கு வலு சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘பாரிஸ் ஜெயராஜ்’ பார்க்கலாம்.
மறைந்த நடிகை சித்ராவின் முதல் படமான கால்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமாகி, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜே சித்ரா. சமீபத்தில் இவர் தற்கொலை செய்து கொண்டது இன்றும் அவரது ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் மறைந்த சித்ரா நடித்த முதல் திரைப்படம் "கால்ஸ்".

இந்த படத்தில் சித்ரா கால் சென்டரில் வேலை செய்யும் கனவுகள் நிறைந்த தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்பட கல்லூரியில் பயின்று வரும் மாணவரான ஜே.சபரீஷ் என்பவர் இந்த படத்தினை இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கால்ஸ் திரைப்படத்தினை வரும் பிப்ரவரி 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவருமான ஐஸ்வர்யா தத்தா படத்திற்காக உடல் எடையை 13 கிலோ குறைத்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவருமான ஐஸ்வர்யா தத்தா, நடிப்பில் தற்போது ‘ஷ்’ என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக 13 கிலோ உடல் எடையினை குறைத்து இருக்கிறார்.

கதாப்பாத்திரத்திற்காக நடிகர்கள் உடல் எடையை குறைப்பதையும், கூட்டுவதையும் நாம் அறிந்திருப்போம். ஆனால் எப்போதும், நடிகைகள் அவ்வாறு செய்வதில்லை. ஆனால் இந்த விதியினை உடைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

பிக்பாஸ் மூலம் புகழடைந்த அவர், தற்போது தமிழில் நாயகியாக 7 படங்களில் நடித்து வருகிறார். ஆரி நடிக்கும் அலேகா, பப்ஜி, கூடவன், கன்னித்தீவு, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, பாலாஜி மோகன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் தலைப்பிடப்படாத படம் மற்றும் மிளிர் முதலான படங்களில் நடித்து வருகிறார்.
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான கதைகளங்களில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்துடன் அமைந்திருக்கின்றன. இப்படங்கள் தன் திரைவாழ்வின் முக்கியமான படங்களாக, திருப்புமுனை தருமென பெரும் நம்பிக்கையில் உள்ளார்.
நான் நடித்த படங்கள் எம்.ஜி.ஆருக்கே பிடிக்கவில்லை என்று முதல் மரியாதை படத்தில் நடித்த தீபன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
சிவாஜி கணேசன், ராதா நடிப்பில் பாரதிராஜா இயக்கிய பெரும் வெற்றிப்படம் ‘முதல் மரியாதை’. கடந்த 1985ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் தீபன் மற்றும் ரஞ்சனி இளம் ஜோடிகளாக நடித்திருப்பார்கள். தீபன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மருமகன். அதாவது ஜானகி எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன். இந்த நிலையில் 36 ஆண்டுகளுக்கு பின் தீபன் நேற்று வெளியான கேர் ஆப் காதல் படத்தில் நாயகனாக நடித்துளார்.

அவரது நடிப்புக்கு விமர்சகரகளிடமும் ரசிகர்களிடமும் பாராட்டு கிடைத்து வருகிறது. தீபன் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘எல்லா பாராட்டுகளும் இயக்குனர் ஹேமம்பர் ஜஸ்தியையே சேரும். நான் யார் என்று தெரியாமலேயே விமான நிலையத்தில் தற்செயலாக பார்த்து நடிக்க அணுகினார். நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த என்னை வற்புறுத்தி நடிக்க வைத்தார்.

இந்த படத்துக்காக படப்பிடிப்புக்கு முன்பே 3 மாதங்கள் நடிப்பு பயிற்சி கொடுத்தார். இந்த கதாபாத்திரத்துக்காக எடையை குறைத்தேன். பள்ளி, கல்லூரி நிர்வாகத்திலேயே தீவிரமாக இருந்த நான் இந்த படத்துக்காக வாக்கிங் செல்ல தொடங்கினேன். முதல் மரியாதை படத்துக்கு பின் மிஸ்டர் பாரத், நிலாவை கையில புடிச்சேன், ஊர்க்குருவி, நல்லதே நடக்கும் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடித்தேன்.
முதல் மரியாதைக்கு பின் நான் நடித்த படங்கள் எம்.ஜி.ஆருக்கே பிடிக்கவில்லை. அவர் தயாரிப்பில் நடிக்க வைப்பதாக சொன்னார். ஆனால் அதன் பின்னர் அவர் உடல்நலம் குன்றிவிட்டது. எம்.ஜி.ஆர் அனுமதியுடன் தான் நடிக்க வந்தேன். மற்றபடி எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. இந்த படத்துக்கு கிடைத்த பாராட்டுகள் உற்சாகம் அளிக்கிறது. தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்’. இவ்வாறு அவர் கூறினார்.
தினேஷ், தீப்தி சதி, மொட்ட ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் ஆர்.கோபி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் நானும் சிங்கிள் தான் படத்தின் விமர்சனம்.
தினேஷ் பெண்களிடம் பேச தயங்கும் 90களில் பிறந்த ஒரு பையன். டாட்டூ போடும் கடை நடத்தி வருகிறார். 29 வயதாகும் அவருக்கு 30 வயதுக்குள் திருமணம் முடிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் சொல்லிவிட அவரின் நண்பர்களான கதிர், ஆதித்யா, செல்வா மூவரும் தீவிரமாக பெண் தேடுகிறார்கள். ஒரு ஆபத்தில் இருந்து தீப்தியை காப்பாற்றும் தினேஷ் அவர்மீது காதலாகிறார்.


தீப்தியின் தோழிகள் வைக்கும் சோதனைகளில் தினேஷ் வெற்றி பெற்றாலும் காதலே பிடிக்காத தீப்தி, தினேஷ் காதலை ஏற்காமல் லண்டன் சென்றுவிடுகிறார். அங்கும் சென்று தினேஷ் தன் காதலை தெரிவிக்கிறார். தினேஷின் காதலை நிராகரிக்க தீப்தி ஒரு அதிர்ச்சியான முடிவை எடுக்கிறார். அது என்ன முடிவு? தினேஷ் தீப்தியை எப்படி கரம் பிடித்தார்? என்பதே நானும் சிங்கிள் தான் கதை.

தினேஷ் நவநாகரீக இளைஞராக நடித்திருக்கிறார். பெண்களை பற்றி பேசுவது ஆனால் பெண்களிடம் பேச தயங்குவது என்று 90’ஸ் கிட்ஸ் இளைஞனை பிரதிபலிக்கிறார். அவரது இயல்பான உடல்மொழி கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறது.
நாயகியாக நடித்திருக்கும் தீப்தி தன்னை சுற்றித்தான் படம் நகர்கிறது என்பதை உணர்ந்து நடித்துள்ளார். அவர் காதலை வெறுக்க வலுவான காரணம் வைத்திருக்கலாம். தினேஷின் நண்பர்களாக வரும் கதிர், ஆதித்யா, செல்வா மூவரும் படத்தை கலகலப்பாக நகர்த்துகிறார்கள். மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, ரமா ஆகியோரும் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவுகிறார்கள்.

ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஆனந்த்ராஜின் ஒளிப்பதிவில் லண்டன் காட்சிகள் அழகாக இருக்கின்றன. ஆண்டனியின் படத்தொகுப்பில் 2ஆம் பாதியில் சில நிமிட காட்சிகள் மட்டும் சற்று நீளமாக தெரிகிறது.
ஆண்கள் மேல் நம்பிக்கையே இல்லாமல் தன்னால் சிங்கிளாவே வாழ்க்கை முழுவதும் வாழமுடியும் என நினைக்கும் பெண்ணுக்கும், கனவிலும் காதல் கைகூடாமல் சிங்கிளாவே இருக்கும் இளைஞனுக்கும் இடையே நடக்கும் காதல், மோதல் என சுவாரசியமான கதையை பிடித்துள்ளார் இயக்குனர் ஆர்.கோபி. இளைஞர்களை கவரும் வகையில் காட்சிகளை வைத்து கிளைமாக்சில் அழுத்தமான கருத்தையும் முன்வைத்துள்ளார். இன்றைய இளைஞர்களுக்கான படமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘நானும் சிங்கிள் தான்’ இளமை துள்ளல்.
பல்வேறு திட்டங்களை தொடங்கி தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகைக்கு பிரபல நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.35 மணிக்கு சென்னை வரும் அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

இந்நிலையில் பிரதமரின் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்து வருகின்றனர். அந்தவகையில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஓவியா கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்திருக்கிறார். இந்திய பிரதமர் தென்னிந்தியா பக்கம் திரும்பும்போதெல்லாம் #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
டிக்டாக் ஆப் மூலம் மிகவும் பிரபலமான இலக்கியா, தற்போது புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.
டிக் டாக் உலகத்தில் தனது அதிரடியான கவர்ச்சி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்றவர் இலக்கியா. இவர் 'நீ சுடத்தான் வந்தியா?' என்ற படம் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். காடும் காடு சார்ந்த இடங்களிலும் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லராக இப்படம் உருவாக இருக்கிறது.
ஆல்பைன் மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை எடிட்டிங் செய்து க.துரைராஜ் இயக்குகிறார். இவர் இயக்குனர் பிரவீன் காந்தியிடம் சினிமா கற்றவர். அருண்குமார் நாயகனாக நடிக்கிறார். மேலும் தங்கதுரை, நெல்லை சிவா, கொட்டாச்சி போன்றோரும் நடிக்கிறார்கள். செல்வா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு துரைராஜன் இசையமைக்கிறார்.
'டிக் டாக் இலக்கியா'வை நடிக்க வைத்த அனுபவம் பற்றி இயக்குநர் க.துரைராஜ் கூறும்போது "டிக் டாக்கிற்காக வீடியோவில் தோன்றி நடிப்பது வேறு. படத்தில் காட்சிகளில் நடிப்பது வேறு.

ஆரம்பத்தில் சில நாட்களில் காட்சிகளில் நடிப்பதற்கு அவருக்குச் சிரமமாக இருந்தது. போகப் போக சரியாகிவிட்டது. சில நாட்களில் நான் சொல்வதைப் புரிந்துகொண்டு சரியாக நடித்தார். இந்தப்பட அனுபவம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததாக இலக்கியா கூறினார். டிக் டாக் போல மிகையாக இல்லாமல் அவர் படத்தில் நாகரிகமான அளவான கவர்ச்சித் தோற்றத்தில் நடித்திருக்கிறார்." என்றார்.






