என் மலர்tooltip icon

    சினிமா

    இலக்கியா
    X
    இலக்கியா

    கதாநாயகியாக களமிறங்கும் டிக்டாக் புகழ் இலக்கியா

    டிக்டாக் ஆப் மூலம் மிகவும் பிரபலமான இலக்கியா, தற்போது புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.
    டிக் டாக் உலகத்தில் தனது அதிரடியான கவர்ச்சி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்றவர் இலக்கியா. இவர் 'நீ சுடத்தான் வந்தியா?' என்ற படம் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். காடும் காடு சார்ந்த இடங்களிலும் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லராக இப்படம் உருவாக இருக்கிறது.

    ஆல்பைன் மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை எடிட்டிங் செய்து க.துரைராஜ் இயக்குகிறார். இவர் இயக்குனர் பிரவீன் காந்தியிடம் சினிமா கற்றவர். அருண்குமார் நாயகனாக நடிக்கிறார். மேலும் தங்கதுரை, நெல்லை சிவா, கொட்டாச்சி போன்றோரும் நடிக்கிறார்கள். செல்வா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு துரைராஜன் இசையமைக்கிறார். 

    'டிக் டாக் இலக்கியா'வை நடிக்க வைத்த அனுபவம் பற்றி இயக்குநர் க.துரைராஜ் கூறும்போது "டிக் டாக்கிற்காக வீடியோவில் தோன்றி நடிப்பது வேறு. படத்தில் காட்சிகளில் நடிப்பது வேறு.

    இலக்கியா

    ஆரம்பத்தில் சில நாட்களில் காட்சிகளில் நடிப்பதற்கு அவருக்குச் சிரமமாக இருந்தது. போகப் போக சரியாகிவிட்டது. சில நாட்களில் நான் சொல்வதைப் புரிந்துகொண்டு சரியாக நடித்தார். இந்தப்பட அனுபவம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததாக இலக்கியா கூறினார். டிக் டாக் போல மிகையாக இல்லாமல் அவர் படத்தில் நாகரிகமான அளவான கவர்ச்சித் தோற்றத்தில் நடித்திருக்கிறார்." என்றார். 
    Next Story
    ×