என் மலர்
சினிமா செய்திகள்
மறைந்த காதல் கணவரை நினைவுகூர்ந்து முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை நேற்று சமூக வலைத்தளங்களில் நடிகை மேக்னா ராஜ் வெளியிட்டார்.
கன்னட திரைஉலகில் முன்னணி நடிகராக இருந்து வந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். இதனால் அவரது மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜ் சோகத்தில் மூழ்கினார். இவர்கள் இருவரும் 10 வருடங்களாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்தபோது மேக்னா ராஜ் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
பின்னர் ஆண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை மேக்னா ராஜ், இதுவரையில் குழந்தையின் முகத்தை வெளியுலகிற்கு காட்டாமல் இருந்து வந்தார். தனக்கு, தன்னுடைய கணவர் சிரஞ்சீவி சர்ஜா கொடுத்த காதல் பரிசுதான் தன்னுடைய மகன் என்று மேக்னா ராஜ் கூறி வந்தார்.

மேலும் காதலர் தினத்தன்று தன்னுடைய கணவரை நினைவுகூறும் வகையில் தனது மகனை வெளியுலகிற்கு காட்டுவதாக அவர் அறிவித்து இருந்தார். அதேபோல் காதலர் தினமான நேற்று நடிகை மேக்னா ராஜ் தனது மகனின் புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
தற்போது அந்த குழந்தையின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த குழந்தையின் புகைப்படத்தை பார்த்த பலரும் ‘குட்டி சிரு வந்துவிட்டார்’ என்று சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.
விஷால் நடித்த படங்கள் தமிழ் தெலுங்கில் மட்டுமே வெளியாகி வந்த நிலையில், தற்போது முதன்முறையாக இந்தியிலும் வெளியாக உள்ளது.
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சக்ரா’. எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷால் இப்படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 19-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தை ‘சக்ரா கா ரக்சக்’ என்ற பெயரில் இந்தியிலும் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தியில் விஷால் படம் வெளியாவது இதுவே முதன்முறை. சக்ரா படத்தை இந்தி மொழி ரசிகர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்பதை காண ஆவலுடன் இருப்பதாக விஷால் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் தர்பார் படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஷமதா அஞ்சான், கவுரவ் வர்மா என்பவரை மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த இப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பெண் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஷமதா அஞ்சன். மும்பையைச் சேர்ந்த இவர் நிறைய விளம்பரப் படங்களில் நடித்து, பின் சினிமாவில் நடிக்க தொடங்கினார்

இந்நிலையில், கவுரவ் வர்மா என்பவரை மிக எளிமையான முறையில் திருமணம் செய்துள்ளார் ஷமதா அஞ்சான். கடந்த 8-ந் தேதியே இவர்களது திருமணம் நடைபெற்றாலும் கூட, அந்த தகவலை தற்போது தான் சமூக வலைதள பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார் ஷமதா. கடந்த ஓராண்டாக லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த இவர்கள், தங்களுக்குள் ஏற்பட்ட புரிதலை தொடர்ந்து தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
காதலர் தினத்தன்று நடிகர் சிம்பு, தனது நாய் கோகோவுடன் வேடிக்கையாகப் பேசி கொஞ்சி விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிம்பு, உடல் எடையை குறைத்த பின் படங்களில் பிசியாக நடிக்கத் தொடங்கி உள்ளார். அவர் கைவசம் மாநாடு, பத்து தல, கவுதம் மேனனுடன் ஒரு படம், ராம் இயக்கும் படம், சுசீந்திரனுடன் ஒரு படம் என ஏராளமான படங்கள் உள்ளன.
இந்நிலையில், நேற்று காதலர் தினத்தன்று தனது நாய் கோகோவுடன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார் சிம்பு. அதனுடன் அவர் வேடிக்கையாகப் பேசி கொஞ்சி விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “முதல்ல எனக்கு கல்யாணம் நடக்கணும், அப்புறம் தான் உனக்கு. நான் மட்டும் தனியா இருக்கும் போது நீ ஜாலியா இருந்தா அது நியாயம் கிடையாது.
என் கஷ்டம் உனக்கு புரியுதா? தங்கம் என்னமா அப்படி பாக்குற. எனக்கு கல்யாணம் ஆகிடும்னு சொல்ல வர்றியா? ஆகாதுனு சொல்ல வர்றியா?. ஓ ஆகிடும்னு சொல்றியா?” என சிம்பு கேட்க, அதற்கு அந்த நாய் கொடுக்கும் ரியாக்ஷன்களும் ரசிக்கும் படியாக உள்ளது.
டைரக்டர் பாலசந்தர் டைரக்ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் "ஜாதிமல்லி.'' குஷ்பு புகழின் சிகரத்தில் இருந்த நேரத்தில், தங்கள் படத்தில் அவரை நடிக்கச் செய்யவேண்டும் என்று பட அதிபர்களும், டைரக்டர்களும் விரும்பினர்.

பாலசந்தரும் குஷ்புவை வைத்து "ஜாதிமல்லி'' என்ற படத்தை உருவாக்கினார். சரிதாவின் கணவரான மலையாள நடிகர் முகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார். புகழ் பெற்ற பாடகியாக இப்படத்தில் குஷ்பு நடித்தார். படம் நன்றாகவே இருந்தது. ஆனால் ஓட்டம் சுமார்தான்.
இதே காலக்கட்டத்தில் பாலசந்தர் இயக்கிய "வானமே எல்லை'' சிறந்த படமாக அமைந்தது. ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை இப்படம் அலசியது. ரம்யாகிருஷ்ணன், மதுபாலா சிறப்பாக நடித்தனர்.
இந்தப் படத்தில் ஒரு விசேஷம்: ஊனமுற்றவர்கள் மனம் தளரக்கூடாது, உழைத்து முன்னேறலாம் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசு அதிகாரியாக இருந்த எச்.ராமகிருஷ்ணன், கால் ஊனமுற்றவராக இருந்தும், படித்து முன்னேறி அரிய சாதனைகளை நிகழ்த்திய காட்சி, படத்தில் இடம் பெற்றது.
இதன் பிறகு பாலசந்தர் இயக்கிய படம் "டூயட்'' (1994) இந்தப் படத்தின் மூலம்தான் பிரகாஷ்ராஜ் தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகமானார். அவருடன் பிரபு இணைந்து நடித்தார்.
தன்னை அறிமுகப்படுத்திய பாலசந்தர் மீது மிகவும் அன்பும், மரியாதையும் வைத்திருப்பவர் பிரகாஷ்ராஜ். தன் படக்கம்பெனிக்கு, தான் நடித்த முதல் படத்தின் பெயரையே ("டூயட்'' மூவிஸ்) சூட்டியுள்ளார்.
1996-ல் "கல்கி'' என்ற படத்தைத் தயாரித்தார் பாலசந்தர். கதாநாயகியை புரட்சிப் பெண்ணாகப் படைத்தார். அந்த வேடத்தில் ஸ்ருதி நடித்தார்.
10 ஆண்டுகள் கழித்து சொல்ல வேண்டிய கருத்தை, மிகவும் முன்னதாக சொன்னதால், அதை ரசிகர்கள் ஜீரணிக்க முடியவில்லை. படம் தோல்வி அடைந்தது.
பாலசந்தர் தயாரித்த சில படங்களை வேறு டைரக்டர்கள் டைரக்ட் செய்தனர். அவற்றில் முக்கியமான படம் "ரோஜா'' (1992). மணிரத்தினம் இயக்கிய இந்தப் படத்தின் மூலமாகத்தான் இசை அமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் அறிமுகமானார்.
காஷ்மீர் தீவிரவாதிகளைப் பற்றிய இப்படத்தில், அரவிந்தசாமியும், மதுபாலாவும் ஜோடியாக நடித்தனர். தமிழில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக "ரோஜா'' மதிப்பிடப்படுகிறது.
இந்தக் காலக்கட்டத்தில், டெலிவிஷன் சீரியல்கள் தயாரிப்பதில் பாலசந்தர் கவனம் செலுத்தினார்.
"ரெயில் சினேகம்'', "கையளவு மனசு'', "காசளவு நேசம்'', "காதல் பகடை'', "ப்ரேமி'', "அண்ணி'', "சஹானா'' உள்பட சுமார் 12 மெகா சீரியல்களை உருவாக்கியுள்ளார். இவற்றில் "அண்ணி'' 338 நாட்களும், "சஹானா'' 317 நாட்களும் ஒளிபரப்பாயின.
பாலசந்தரின் நீண்ட திரை உலகப்பயணத்தில், 1982-ம் ஆண்டு மே மாதம் 6-ந்தேதி நடந்த விபத்து, மிக பயங்கரமானதாகும்.
நினைத்தாலே நெஞ்சை பதறச் செய்யும் அந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
தமிழில் கமலஹாசன் - ஸ்ரீதேவி நடித்த "வறுமையின் நிறம் சிவப்பு'' படத்தை, இந்தியில் "ஜராசி ஜிந்தகி'' (வாழ்க்கையின் ஒரு துளி) என்ற பெயரில் தயாரித்தார், பாலசந்தர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இமாசலபிரதேசத்தில், இயற்கை அழகு மிக்க "குளு'' பள்ளத்தாக்கில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும், பாலசந்தர், கமலஹாசன், ஒளிப்பதிவாளர் லோகநாதன் ஆகியோர் விமானம் மூலம் சென்னை திரும்பி விட்டனர்.
படப்பிடிப்பு குழுவினர் ஒரு பஸ்சில் மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். பஸ்சில் 29 பேர் இருந்தனர்.
வளைந்து வளைந்து சென்ற மலைப்பாதையில், பஸ் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. கடைசியாக இன்னும் ஒரே ஒரு வளைவுதான். அதைத் தாண்டிவிட்டால், சம வெளிக்கு வந்து விடலாம்.
அந்த சமயத்தில்தான், எதிர்பாராத விதமாக பயங்கர விபத்து ஏற்பட்டது. எதிரே வந்த ஒரு காரின் மீது மோதி விடாமல் தடுக்க பஸ்சை திருப்பினார் டிரைவர்.
பஸ் ஒரு பாறையில் மோதி, உருண்டு, அதள பாதாளத்தில் விழுந்தது.
இந்த பயங்கர விபத்தில், ஒளிப்பதிவாளர் லோகநாதனின் சகோதரர் உள்பட 8 பேர் மாண்டனர். இணை இயக்குனர் அமீர்ஜான் படுகாயம் அடைந்தார். அப்போது உதவி நடன ஆசிரியையாக இருந்த கலாவும், உதவி இயக்குனராக இருந்த சுரேஷ்கிருஷ்ணாவும் அதிக காயம் இல்லாமல் தப்பினர்.
இறந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை. எட்டுப் பேர்களின் உடல்களும் அங்கேயே தகனம் செய்யப்பட்டன.
இந்த பயங்கர விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள பாலசந்தருக்கு நீண்ட காலம் பிடித்தது.

வெற்றியடையும் படங்களை பிற மொழிகளில் ரீமேக் செய்வதில் தனக்கு உடன்பாடில்லை என நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.
அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், தேவராட்டம், களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன். தற்போது அவர் துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே தான் ரீமேக் படங்களுக்கு எதிரானவள் என நடிகை மஞ்சிமா மோகன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் "மலையாள படங்கள் பல மொழிகளில் ரீமேக் பண்ணுகிறார்கள். ஆனால் அவை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறுவதில்லையே" என்ற கேள்விக்கு மஞ்சிமா மோகன் கூறியிருப்பதாவது: "சில படங்களை அப்படியே விட்டுவிட வேண்டும். நானும் 'குயின்' ரீமேக்கில் நடித்துள்ளேன்.

ரீமேக் படங்களுக்கு எதிரானவள் நான். படங்களுக்கு மொழி, களம் என அனைத்துமே கச்சிதமாக இருக்க வேண்டும். மலையாளப் படம் மலையாளத்தில், தமிழ் படம் தமிழில், தெலுங்கு படம் தெலுங்கில் தான் பார்க்க வேண்டும். வெற்றியடையும் படங்களை ரீமேக் செய்வதில் உடன்பாடில்லை. ஏன் ரீமேக் செய்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியவில்லை". இவ்வாறு மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள ‘சுல்தான்’ படத்தின் முன்னோட்டம்.
ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். மேலும் யோகிபாபு, கேஜிஎஃப் வில்லன் ராம்சந்திர ராஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படம் குறித்து பாக்கியராஜ் கண்ணன் கூறியதாவது: மகாபாரதத்துல கிருஷ்ணர் கௌரவர்கள் பக்கம் நின்னா எப்படி இருக்கும், அந்த புள்ளி தான் இந்த படம். முழுக்கதையும் இப்பவே சொல்லிட முடியாது. படத்தில் பாருங்க, உங்களுக்கு அந்த சர்ப்ரைஸ் இருந்துட்டே இருக்கும். நீரின்றி அமையாது உலகுனு சொல்லுவாங்க அதே போல் தான் உறவின்றி அமையாது உலகு. உறவுகளுக்காக முன்ன வந்து நிற்கும் ஒருவனின் கதை தான் இந்தப்படம்.

பரபரப்பான திரைக்கதையில் காதல், காமெடி எல்லாம் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் படமா இருக்கும். தெலுங்கில் ராஷ்மிகாவ கொண்டாடுறாங்க. ஆனா பக்கத்து வீட்டு பெண் போல, அவ்வளவு எளிமையா இருப்பார். நடிப்புனு வந்தா அசத்திடுறார். இப்படத்தில் கார்த்தி, ராஷ்மிகா ஜோடி கலர்ஃபுல்லா இருக்கும். கார்த்தி, யோகிபாபு காமெடி கூட்டணிஅதகளப்படுத்யியிருக்காங்க. கேஜிஎஃப் வில்லன் ராம்சந்திர ராஜு மிரட்டியிருக்க்கார். வெறுமெனே அவர பார்த்தால் கூட பயமா இருக்கும், அந்த அளவு மனுஷன் நடிப்பில் பின்னியிருக்கார்.
விவேக் மெர்வின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒரு பெரும் கூட்டத்தை வைத்து, மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணியிருக்கோம். தன்னை நம்பி வந்த உறவுகள எப்படி பாத்துக்கறதுங்கறத சுல்தான் சொல்லுவான். இது குடும்பத்துடன் ஜாலியா பார்க்ககூடிய படமா, அனைவருக்கும் பிடிக்கும் படமா இருக்கும். படம் அழகா வந்தததில் எங்களுக்கு முழு திருப்தி. ரசிகர்களின் பாராட்டுதலுக்காக தான் காத்திருக்கிறோம். ஏப்ரல் 2 ஆம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது “சுல்தான்” திரைப்படம்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான ஷாலு ஷம்மு, காதலர் தினத்திற்காக படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ளார்.
கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஷாலு ஷம்மு. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டர் லோக்கல்’ ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் ஷாலு ஷம்மு, தற்போது மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில், இன்று காதலர் தினத்தை முன்னிட்டு, படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ, அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தை, அஜித் பட இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மாஸ்டர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனையும் படைத்தது. மாஸ்டர் படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். மாஸ்டர் படம் கொடுத்த உத்வேகத்தால் அடுத்தடுத்து படங்களை அவர் தயாரிக்க உள்ளாராம்.
அவர் அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் அவரின் மருமகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில், அப்படத்தை இயக்க உள்ள இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அஜித்தை வைத்து பில்லா மற்றும் ஆரம்பம் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த விஷ்ணுவர்தன் தான் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், லவ் யூ தங்கமே என குறிப்பிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் பட்டுவேட்டி சட்டையுடனும், நயன்தாரா பட்டுப்புடவை அணிந்தபடியும் ஜோடியாக போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
நடிகர் தனுஷுடன் பட்டாஸ் படத்தில் நடித்த நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, அரசியல்வாதியை திருமணம் செய்ய உள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ’நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாடா. இதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்தில் நடித்தார். பின்னர் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை மெஹ்ரீன் பிர்சாடா திருமணத்துக்கு தயாராகி வருகிறார். இவர் அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோய்யை காதல் திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் வருகிற மார்ச் 13-ந் தேதி ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற உள்ளது. பவ்யா பிஷ்னோயும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சாக்ஷி அகர்வால், காதலர் தினத்தையொட்டி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி உள்ளார்.
ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் திரைக்கு வர காத்திருக்கும் டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் போராளியாக ‘புரவி’ படத்தில் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் நடிகை சாக்ஷி, காதலர் தினத்தையொட்டி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி தன் அன்பை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “காதல் எப்படி வேண்டுமானாலும் வரலாம். அதற்கு எல்லைகளோ, விதிகளோ இல்லை. என்னைப் பொருத்தவரை காதலர் தினம் என்பது அன்பை வெளிப்படுத்துவது தான். இந்தாண்டு நான் காதலர் தினத்தை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என அவர் கூறினார்.