என் மலர்
சினிமா செய்திகள்
தனது சமூக வலைத்தள பக்கத்தில் நேரலையில் கலந்துக் கொண்ட நடிகை பூர்ணா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை பூர்ணாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டி உள்ளது. இதனால் அவர் மகிழ்ச்சியில் இருக்கிறார். இதையொட்டி வலைத்தளத்தில் இன்று நேரலையில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது, “என்னை சமூக வலைத்தள பக்கத்தில் 10 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி.

உங்களுடைய ஆதரவு என்னை மேலும் கடினமாக உழைக்க தூண்டுகிறது. என்னை உற்சாகப்படுத்தி ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள்தான் எனது பலம். அர்ப்பணிப்போடு தொடர்ந்து கடினமாக உழைப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

பூர்ணாவை சமீபத்தில் திருமண மோசடி கும்பல் ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் படம் பேசும், அம்மாயி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்திலும் நடித்துள்ளார். நான்கு தெலுங்கு படங்கள், ஒரு மலையாள படம், ஒரு கன்னட படமும் கைவசம் உள்ளன.
வலிமை படத்தில் நடித்துள்ள அஜித் படப்பிடிப்பின் போது பிரபல நடிகைக்கு பைக் ஓட்ட கற்றுக் கொடுத்துள்ளார்.
அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி உள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


இந்த நிலையில், வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ஹூமா குரேஷியிடம் சமீபத்தில் சில கேள்விகள் கேட்டகப்பட்டது. அப்போது ஒருவர் வலிமை படத்தில் அஜித்திற்கு இணையாக பைக் ஓட்டினீர்களா என்று கேட்டதற்கு, "நான் படத்தில் நடிப்பதற்காக கற்றுக்கொண்டேன். " அஜித் சார் பைக் ஓட்டுவதில் கில்லாடி. அவர் எனக்கு பைக் ஓட்டுவதற்கான சில டிப்ஸ்கள் சொல்லிக்கொடுத்தார் என்று கூறியுள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வரும் மணிரத்னம் வில்லன் நடிகரை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றி இருக்கிறார்.
கடந்த 2004-ம் ஆண்டில் வெளியான 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லால். அதை தொடர்ந்து சண்டக்கோழி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதை தொடர்ந்து மருதமலை, ஓரம் போ, ஆழ்வார் போன்ற படங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார்.

மலையாளப் படங்களில் ஹீரோவாக நடித்து இருந்தாலும், தமிழில் பெரும்பாலான படங்களில் அவர் வில்லனாகவே நடித்தார். விரைவில் வெளிவரவுள்ள 'கர்ணன்' படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் லால் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் அவர் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. எனினும், தன்னுடைய வில்லன் தோற்றத்தை மாற்றி முற்றிலும் வித்தியாசமான கெட்-அப் போட்டுள்ளார் லால்.
இந்த கெட்-அப்பில் அவரை யாரும் அடையாளம் காண முடியாது. அந்த அளவிற்கு இயக்குனர் மணிரத்னம் அவரை மாற்றி இருக்கிறார்.
கார்த்தி நடித்துள்ள படத்தில் முதல் முறையாக நடிகர் சிம்பு இணைந்திருப்பது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘சுல்தான்’. ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கி இருக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிட்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளனர்.
இந்நிலையில், சுல்தான் படத்தில் இடம் பெறும் ‘யாரையும் இவ்ளோ அழகா’ என்ற பாடலை நடிகர் சிம்பு பாடி இருக்கிறார். விவேகா எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். இந்த பாடல் இன்று மாலை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
முதல் முறையாக கார்த்தி படத்துக்கு சிம்பு பாடியிருப்பது, ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சுல்தான் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.
“யாரையும் இவ்ளோ அழகா” Lyric Promo
— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 5, 2021
Sung by: @SilambarasanTR_⭐️⭐️
A Vivek-Mervin Musical 🎶
“Yaaraiyum ivlo azhaga”#Sulthan2ndSingleFromToday7pm#சுல்தான்#Sulthan2ndSingle@Karthi_Offl@iamRashmika@Bakkiyaraj_k@iamviveksiva@MervinJSolomonpic.twitter.com/KzfFVo0tkJ
பி.எம்.ரவிநாயக் இயக்கத்தில் ரவிதேஜா வர்மா, மனோசித்ரா நடிப்பில் உருவாகும் ‘மாயமுகி’ படத்தின் முன்னோட்டம்.
சமூக பிரச்சினைகளுடன் ஆன்மிகம் கலந்த படமாக தயாராகிறது, ‘மாயமுகி.’ கதாநாயகியை மையப்படுத்திய கதையம்சம் கொண்ட படம், இது. இன்னொருவன், அவள் பெயர் தமிழரசி ஆகிய படங்களில் நடித்த மனோசித்ரா கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக ரவிதேஜா வர்மா நடிக்கிறார். இவர்களுடன் சத்யதேவ், கார்த்திகா, ஆம்னி, சுவாதி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

பெண்கள் மற்றும் சிறுவர்களையும் தியேட்டருக்கு அழைத்து வரும் கதையம்சம் கொண்ட படம், இது. சமூக பிரச்சினைகள் பற்றியும் படம் பேசும். தமிழ்,தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தை பி.எம்.ரவிநாயக் இயக்கி உள்ளார். டில்லி பாபு கே.தயாரிக்கிறார்.
கொரோனா பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை மற்றும் அத்தியாவசிய தேவைகளை செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் மோகன் குமார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு "நெறி" எனும் படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் மோகன் குமார். இப்படம் அந்நேரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது. கொரோனா பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறக்கட்டளைகள் மூலமாக உணவு, உடை மற்றும் அத்தியாவசிய தேவைகளை செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அநாதை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி கிராமப்புற ஏழை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு பெறுவதற்கு வழிவகை செய்துள்ளார். விவசாயிகளுக்கு தாட்கோ மற்றும் வங்கி கடன் வாங்கி கொடுத்து விவசாயிகளின் நன்மதிப்பை பெற்ற இவர் பல லட்சம் செலவில் அன்னதான கூடம் கட்டி உணவின்றி இருக்கும் பல ஏழை மக்களுக்கு பசியாற்றி வருகிறார்.

இவரது சமூக சேவைகளை அனைத்து அமைப்புகளும் வியந்து பாராட்டியுள்ளன. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தான் சார்ந்துள்ள தி.மு.கழகம் சார்பில் கிராமசபை கூட்டம், பொதுக்கூட்டங்களை நடத்தி மூத்த தலைவர்களின் அன்பையும் பாராட்டையும் பெற்றுள்ளார் நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் குமார்.
வின் டீசல், மிச்செல் ரோட்ரிகஸ், டுவைன் ஜான்சன் ஆகியோர் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உலக சினிமாவில் கார் ரேஸ் சம்பந்தமாக பல படங்கள் வந்தாலும் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ பாகங்களுக்கு ரசிகர்களிடையே தனி மவுசு இருக்கத் தான் செய்கிறது. அந்த வகையில் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ வரிசையில் இதுவரை 8 பாகங்கள் வெளியாகி இருக்கிறது.
இதில் வின் டீசல், மிச்செல் ரோட்ரிகஸ், ஜோர்டானா ப்ரீவ்ஸ்டார், ஈவா மெண்டஸ், டைரிஸ் கிப்சன், கிரிஸ் பிரிட்ஜஸ், லூகாஸ் பிளாக், சங் காங், கேல் கேடட், ஜேசன் ஸ்டாதம் டுவைன் ஜான்சன், கர்ட் ரசல், நாதாலியா இம்மானுவேல், சார்லஸ் தெரோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதில் நடித்த பால் வாக்கர் 7-வது பாகம் உருவாகும் போது கார் விபத்தில் உயிரிழந்தார். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தினாலும் இந்த படத்தின் மீதான மவுசு குறையவில்லை.

இந்நிலையில், ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படத்தின் 9-ம் பாகம் வருகிற ஜூன் மாதம் 25-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக இப்படத்தை கடந்தாண்டு மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக படத்தின் பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்படாததால், படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் சேதுபதி தற்போது இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்டார். ஏனெனில் இவர் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் இவர் நடிப்பில் ஏராளமான படங்கள் உருவாகி வருகின்றன. அதுமட்டுமின்றி சில படங்கள் ரிலீசுக்கும் காத்திருக்கின்றன.
அந்தவகையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள லாபம், துக்ளக் தர்பார், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய நான்கு படங்கள் கோடையில் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாம்.

இதுதவிர தமிழில் இவர் நடித்து வெற்றி பெற்ற ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கின்றன.
ஏற்கனவே இந்த ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் மாஸ்டர், குட்டி ஸ்டோரி, உப்பென்னா ஆகிய மூன்று படங்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ விமர்சனம்.
கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக செலவு செய்கிறார். மறுபுறம் சபல குணம் படைத்த நாயகன் எஸ்.ஜே.சூர்யா, பணக்கார பெண்ணான நந்திதாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிறார். இவர்களுக்கு 4 வயதில் ஆண்குழந்தை இருக்கிறது.
அந்தக் குழந்தையை பார்த்துக் கொள்ள ரெஜினாவை அணுகுகிறார்கள். அதற்காக பெருந்தொகையை சம்பளமாக கொடுக்கிறேன் என சொல்கிறார்கள். அந்தப் பணம் ஆசிரமத்திற்கு உதவியாக இருக்கும் என்பதால், அதற்கு சம்மதிக்கிறார் ரெஜினா. நாளடைவில் நாயகன் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரெஜினா மீது ஆசை வருகிறது. அவரை அடைய முயல்கிறார். இதன்பின் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் எஸ்.ஜே.சூர்யா, நடிப்பில் மிரட்டி இருக்கிறார். ஹீரோயிசம், வில்லத்தனம், காமெடி என அனைத்திலும் ஸ்கோர் செய்து ஆல்ரவுண்டராக வலம் வருகிறார். அவரது முழு நடிப்பு திறமையும் இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நடித்துள்ள நந்திதா, முதல் பாதியில் பெரிதாக ஸ்கோர் செய்யாவிட்டாலும், இரண்டாம் பாதியில் அசத்தி இருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் கைதட்டல்களை பெறுகின்றன. மறுபுறம் ரெஜினா நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி கவனிக்க வைக்கிறார்.

இயக்குனர் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா இவர்கள் மூவரையும் திறம்பட கையாண்டுள்ளார். குறிப்பாக எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். அதேபோல் வசனங்களும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன. முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம் பாதியில் சற்று தொய்வு தெரிகிறது. திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

படத்தின் மற்றொரு ஹீரோ என்றால் அது யுவன் தான், அசத்தலான பின்னணி இசையின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். பாடல்களும் காட்சிகளோடு ஒன்றி பயணிக்கின்றன. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிகளும் கண்களுக்கு விருந்தாக அமைக்கின்றன.
மொத்தத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மனதில் நிற்கிறது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘திரிஷ்யம்-2 ’ படத்தை பிற மொழிகளிலும் ரீமேக் செய்ய உள்ளனர்.
மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளனர். அதன்படி திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.
‘திரிஷ்யம்’ முதல் பாகத்தை தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, இரண்டாம் பாகத்தின் ரீமேக்கிற்கும் தயாராகிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில், வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
மலையாளத்தில் திரிஷ்யம் இரண்டாம் பாகத்தில் ஐஜி கதாபாத்திரம் ஒன்று புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. அதில் நடிகர் முரளிகோபி நடித்திருந்தார்.

இந்நிலையில், தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் ராணாவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளார்களாம். வெங்கடேஷும் ராணாவும் நெருங்கிய உறவினர்கள் என்பதால், இப்படத்தில் நடிக்க ராணா ஒப்புக்கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
கோகுல் இயக்கத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அன்பிற்கினியாள்’ படத்தின் விமர்சனம்.
எல்.ஐ.சி. ஏஜெண்டாகப் பணிபுரிந்து வருகிறார் அருண் பாண்டியன். இவரது ஒரே மகள் கீர்த்தி பாண்டியன் நர்ஸ் கோர்ஸ் முடித்து, அப்பாவின் கடனை அடைக்க கனடா சென்று வேலை பார்க்க முயற்சி செய்து வருகிறார். அதே சமயம் ஒரு சிக்கன் ஹப்பில் பார்ட் டைம் வேலை பார்க்கிறார் கீர்த்தி பாண்டியன்.
இதற்கிடையில் பிரவீன் ராஜை தந்தைக்கு தெரியாமல் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் அருண் பாண்டியனுக்கு தெரியவர மன உளைச்சலுக்கு ஆளாகிறார். தந்தையின் வருத்தத்தை உணர்ந்து இரவு நேரம் ஆகியும் கவலைப்பட்டுக் கொண்டு சிக்கன் ஹப்பில் இருக்கிறார்.
அப்போது எதிர்பாராத விதமாக குளிரூட்டும் அறைக்குள் மாட்டிக் கொள்கிறார். இறுதியில் குளிரூட்டும் அறையில் இருந்து கீர்த்தி பாண்டியன் எப்படி வெளியே வந்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருண் பாண்டியன் சொந்த மகள் கீர்த்தி பாண்டியனுக்காக ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். தன்னுடைய அனுபவ நடிப்பையும், உடல் மொழியையும் வெளிப்படுத்தி இருக்கிறார். மகள் மீதான பாசத்தையும், காணாமல் போன பிறகு ஏற்படும் தவிப்பையும் உணர வைக்கிறார். காவல் நிலையத்தில் போலீஸாரை அணுகும் விதத்தில் கைத்தட்டல் வாங்குகிறார்.
தும்பா படத்துக்குப் பிறகு இரண்டாவது படத்திலேயே நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படம் கீர்த்தி பாண்டியனுக்கு கிடைத்து இருக்கிறது. அன்பு கதாபாத்திரத்தை உணர்ந்து முழுமையான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார். துறுதுறு நடிப்பாலும், குளிரூட்டும் அறைக்குள் சிக்கிக் கொண்டு கஷ்டப்படும் காட்சிகளிலும் அசர வைக்கிறார்.

கீர்த்தி பாண்டியனின் காதலனாக வரும் பிரவீன் ராஜ் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். எஸ்.ஐ.யாக நடித்த ரவீந்திர விஜய், சிக்கன் கடை மேலாளராக நடித்த பூபதி ராஜா, மால் செக்யூரிட்டியாக நடித்த ஜெயராஜ், ஏட்டாக நடித்த அடிநாட் சசி என அனைவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். ஒரு காட்சியில் வந்தாலும், நடிப்பில் அசத்தி இருக்கிறார் இயக்குனர் கோகுல்.
மலையாளத்தில் வெற்றி பெற்ற 'ஹெலன்' படத்தைத் தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் கோகுல். 'ரௌத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா', 'ஜுங்கா' படங்களுக்குப் பிறகு அவர் இயக்கிய ஐந்தாவது படம். ரீமேக் படத்தை இயக்க தனி திறமை வேண்டும். கதையின் தன்மை மாறாமல் விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஸ்கோர் செய்ய வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸின் இசையும், பின்னணியும் படத்திற்கு பெரிய பலம். இவரது இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி குளிரூட்டும் அறையை வெவ்வேறு கோணங்களில் காட்டி கவனிக்க வைக்கிறார்.
மொத்தத்தில் ‘அன்பிற்கினியாள்’ பேரன்பு.
இயக்குனர் வெற்றிமாறன், தற்போது சூரியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார்.
தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி, தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணியாக விளங்கி வருகிறது. இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அனைத்துமே மாஸ்டர் பீஸ் தான்.
கடந்த 2018-ம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் வெளியாகி வெற்றிபெற்ற படம் வடசென்னை. இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகும் எனவும் அப்போது அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியாகி மூன்று வருடங்கள் ஆகியும், அப்படம் குறித்த அடுத்தக்கட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனால் வடசென்னை 2 உருவாகிறதா, இல்லையா என்கிற குழப்ப நிலை நீடித்து வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், வடசென்னை 2-ம் பாகம் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து உருவாக வாய்ப்புள்ளதாக கூறினார். மேலும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகே தனுஷின் வடசென்னை-2 படத்தை இயக்குவார் என தெரிகிறது.






