என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஶ்ரீமன் நாராயண வைகுண்டர் நிகழ்த்திய அற்புதங்களை ‘ஒரு குடைக்குள்’ என்ற படம் மூலம் உருவாக்கி இருக்கிறார்கள்.
    படம் ஆரம்பத்தில் ஒரு கிளி, தான் என்று தெரிந்துக் கொள்ள கடவுளிடம் கேட்கிறது. அதன்பின் பிளாஸ்பேக்கில் கதை நகர்கிறது. நாயகி மேக்னாராஜ் மிகவும் கடவுள் பக்தியுடன் இருந்து வருகிறார். அப்போது நாடோடி சிறுவன் சிவ தினேஷ் கோவிலில் தூங்குவதை பார்த்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.

    சிவ தினேஷும் அவர்கள் வீட்டிலேயே தங்கி, கோவில் அருகே இருக்கும் ஒரு இடத்தில் தூங்கி வருகிறான். ஒருநாள் கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்கிறாள் மேக்னா. அப்போது பிரசாதம் தீர்ந்து போக, சிவ தினேஷ் வைத்திருக்கும் பழங்களை மற்றவர்களுக்கு கொடுக்கிறான். அந்த பழங்களை சாப்பிட்டவர்களுக்கு இருக்கும் குறைகள் நீங்குகிறது.

    விமர்சனம்

    இதே சமயம் அரக்கர்கள் ஓலைச்சுவடிக்காக நாயகி மேக்னாவின் அத்தை மகனை தேடி வருகிறார்கள். இதையறிந்த சிறுவன் சிவ தினேஷ், அரக்கர்களிடம் இருந்து மேக்னாவின் அத்தை மகனை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

    பூவண்டன் தோப்பு என்னும் சாமி தோப்பில் ஶ்ரீமன் நாராயண வைகுண்டர் நிகழ்த்திய அற்புதங்களை வரலாறாக எடுத்துச் சொல்லும் விதமாக ‘ஒரு குடைக்குள்’ படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.எல்.உதயகுமார். கடவுளின் அற்புதங்களை பேசும் படமாக இருப்பதால் பார்ப்பதற்கு ஆவண படம் போல் இருக்கிறது. திரைக்கதைக்காக கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். 

    விமர்சனம்

    வைகுண்டராக ஆனந்த் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஓரளவிற்கு பொருந்தி இருக்கிறார். பக்தையாக வரும் மேக்னா அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். அவதார சிறுவனாக சிவ தினேஷ் அறிமுகமாகிறார். இவரது நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. நிரோஷா, கருத்தம்மா ராஜஶ்ரீ, இளவரசு, இராஜேந்திரநாத், ரவிராகுல், சூசன் ஜார்ஜ் ஆகியோர் கொடுத்த வேலைகளை செய்திருக்கிறார்கள்.

    தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். இவர் பாடிய பாடல் ரசிக்க வைக்கிறது. வி.இராஜேந்திரன் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    மொத்தத்தில் ‘ஒரு குடைக்குள்’ கடவுளின் அற்புதம்.
    பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட நடிகை வரலட்சுமி சரத்குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு கோபப்பட்டு இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் ஒப்பந்தம் ஆகி பிசியாக நடித்து வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தன்னுடைய பிறந்தநாளை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுக்கு, பொம்மை, சாக்லேட், கேக், போன்றவற்றை வழங்கி கொண்டாடினார்.

    அதன்பின் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் எப்போது உங்களது திருமணம் என்ற கேள்வியை எழுப்பினார். இந்த கேள்விக்கு சட்டென்று கோபமான வரலட்சுமி, திருமணம் எப்போது என்ற கேவலமான கேள்வியை யாரிடமும் கேட்க வேண்டாம் என காட்டமாக தெரிவித்தார்.

    வரலட்சுமி சரத்குமார்

    மேலும் திருமணம் என்பது பெண்களுக்கு அவசியமான ஒன்றா? அது ஒரு கொள்கையா என்றும், பெண்கள் என்றால் திருமணம் செய்ய வேண்டும் என்று ஏதாவது உள்ளதா? பின்னர் ஏன் இப்படி ஒரு கேள்வியை தொடர்ந்து எழுப்பி வருகின்றீர்கள். ஆண்களுக்கு சில கொள்கைகள் இருக்கும் போது பெண்களுக்கு மட்டும் கொள்கைகள் இருக்கக் கூடாதா? என்றும் கல்யாணம் எப்போது என்கிற கேவலமான கேள்வியை மட்டும் யாரிடமும் கேட்காதீர்கள் என வரலட்சுமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
    தமிழில் பரதேசி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை வேதிகா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
    இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான “பரதேசி” படத்தில் கதாநாயகியாக நடித்தவர் வேதிகா. இப்படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். ஆனால் அதற்கு பின்பு தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்நிலையில் வேதிகா திருமண கோலத்தில் வெள்ளை கவுன் அணிந்த புகைப்படம் ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். ஆனால் கூடவே கேப்ஷனில் “நல்ல வேளை நீங்கள் நினைப்பது போல எதுவும் இல்லை. இது விளம்பர படத்திற்காக எடுக்கும் புகைப்படம்” எனப் பதிவிட்டு உள்ளார். இதன் மூலம் இந்தப் பதிவு தன்னுடைய திருமணத்தை பற்றியது இல்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார்.


    விஜய் சேதுபதியை வைத்து யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் சமூக வலைத்தள பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.
    விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படத்தின் டீசர் மார்ச் 4-ஆம் தேதி வெளியானது. இந்த டீசர் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய வெங்கட கிருஷ்ண ரோக்நாத் என்பவர் எனக்கு தெரியாமலேயே இந்த டீசர் வெளிவந்து விட்டது என்று அதிர்ச்சி தகவலை பதிவு செய்திருக்கிறார். 

    இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மன்னிக்கவும்... இது வரை நான் இயக்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த யாதும்ஊரே யாவரும்கேளிர் படம் பற்றிய அத்தனை அப்டேட்சையும் நான் தவறாமல் பதிவிட்டிருக்கிறேன். இந்த முறை டீசர் வெளிவருவது சம்மந்தமான போஸ்டரையோ வெளிவந்த டீசரையோ நான் எனது முக நூல் பக்கத்தில் வெளியிடவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம் நான் இயக்கிய படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்துக்கான டீசர் வெளி வருகிறது என்று எனக்கு தெரியாது. கூடவே மிக முக்கியமான தகவல் அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. நான் அந்த டீசர் ரிலீஸ் ஆகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன்.

    இயக்குனரின் பதிவு

    திரும்பவும் மன்னிக்கவும் நான் வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மௌனமாக கடந்து போகிறேன். உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்ட கூடிய நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல் RR செய்யப்படாமல் di செய்யப்படாமல் அப்படியே ராவாக இருக்கிறது. தயாரிப்பு தரப்போடு இந்த குளருபடிக்கு அடிப்படை காரணம் பற்றி கேட்டிருக்கிறேன். தக்க பதில் வந்தால் என் முக நூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்.

    இவ்வாறு இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோக்நாத் தெரிவித்துள்ளார்.
    பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே திரைப்படமாக வெளியான நிலையில் தற்போது மீண்டும் படமாக இருக்கிறது.
    பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை கதை ஏற்கனவே பி.எம். நரேந்திர மோடி என்ற பெயரில் சினிமா படமாக வெளிவந்தது. இதில் மோடி கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்து இருந்தார். தற்போது நரேந்திர மோடி வாழ்க்கையை மையமாக வைத்து இன்னொரு இந்தி படமும் தயாராகிறது. 

    இந்த படத்துக்கு ஏக் அவுர் நரேன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை பிரபல வங்க மொழி இயக்குனர் மிலன் பவுமிக் டைரக்டு செய்கிறார். இவர் டெல்லியில் பாலியல் வன்கொடுமையால் மரணம் அடைந்த நிர்பயா கதையை படமாக்கி பிரபலமானவர். 

    நரேந்திர மோடி படத்துக்கான திரைக்கதையை எழுதி தற்போது படப்பிடிப்புக்கு அவர் தயாராகி உள்ளார். இந்த படத்தில் நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் டி.வி. நடிகர் கஜேந்திர சவுகான் நடிக்கிறார். இவர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரத தொடரில் யுதிஷ்டிரர் வேடத்தில் நடித்து பிரபலமானவர். 

    நரேந்திர மோடி-கஜேந்திர சவுகான்

    நரேந்திர மோடி வாழ்க்கை படம் இரண்டு பாகமாக உருவாகும் என்றும், இதே படத்தில் விவேகானந்தர் வாழ்க்கை கதையும் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்த மாளவிகா மோகனனை ரசிகர்கள் அவரது பதிவை கண்டித்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.
    ரஜினியின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். சமீபத்தில் நடிகை டாப்சி, இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தியதை மாளவிகா மோகனன் கண்டித்தார்.

    வருமானவரி சோதனை நடந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நாம் பாசிசத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்ற பதிவையும் வெளியிட்டார். டாப்சியும், அனுராக் காஷ்யப்பும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்ததால் வருமான வரி சோதனை நடந்துள்ளது என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் பரவி வருகிறது. அதை தொடர்ந்து வருமான வரிதுறையின் செயலை மாளவிகா மோகனன் சாடி இருப்பதாக கூறப்படுகிறது.

    மாளவிகா

    இந்த நிலையில் மாளவிகா மோகனன் கருத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது அமைதியாக இருந்தது ஏன்? அப்போதும் இதுபோன்ற பதிவை வெளியிட்டு கண்டித்து இருக்கலாமே என்று மாளவிகாவை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
    வாலி எழுதிய "அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்.
    வாலி எழுதிய "அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்.

    இதுபற்றி வாலி கூறியிருப்பதாவது:-

    "அடிமைப்பெண்'' படத்துக்காக, "அம்மா என்றால் அன்பு'' என்னும் பாடல் எழுதியிருந்தேன்.

    "வாலி! இந்தப்பாட்டை அம்முவை (ஜெயலலிதா) பாட வைக்கலாம் என்றிருக்கிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.

    "ரொம்ப சந்தோஷம்'' என்று நான் சொல்லிவிட்டு, மேற்கொண்டு ஒரு விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன்.

    "அண்ணே! பிற்காலத்தில் இவங்களை நீங்க படத்திலே பாட வைப்பீங்கன்னுதான், ஏற்கனவே நான் தீர்க்கதரிசனமாக சொல்லி வைத்திருக்கிறேனே... கவிஞன் வாக்கு பொய்க்காது'' என்றேன்.

    "எப்படி? எப்படி?'' என்று எம்.ஜி.ஆர். ஆர்வமாகக் கேட்டார்.

    `அரசகட்டளை' திரைப்படத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களுக்காக நான் எழுதியிருந்த பாடலை அவருக்கு நினைவூட்டினேன்.

    அந்தப் பாடலின் வரிகள் இவைதான்:

    `என்னைப் பாட வைத்தவன் ஒருவன்; என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்!'

    - இதை நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். மகிழ்ந்து சிரித்து, "வாழ்க! வாழ்க! உங்கள் வாக்கு எப்போதும் இப்படி பலிக்கட்டும்'' என்றார்.

    "அம்மா என்றால் அன்பு'' என்ற பாட்டை கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் ஜெயலலிதா பாட, "அடிமைப்பெண்'' படத்தில் அப்பாடல் இடம் பெற்று பெரும் புகழ் பெற்றது.''

    இவ்வாறு வாலி கூறினார்.

    ஆரம்ப காலத்தில் வாலிக்கு மதுப்பழக்கம் இருந்தது. அதை விட்டுவிடும்படி எம்.ஜி.ஆர். சிலமுறை கூறியும், அந்த பழக்கம் தொடர்ந்தது.

    1978-ல் ஒருநாள் எம்.ஜி.ஆரும், வாலியும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். விமானப் பணிப்பெண் ஒரு தட்டில் சாக்லேட் கொண்டு வந்தார். அதில் ஒரு சாக்லெட்டை எடுத்து, வாலியிடம் கொடுத்தார், எம்.ஜி.ஆர்.

    "என்னண்ணே விசேஷம்? எதுக்கு சாக்லேட்?'' என்று கேட்டார், வாலி.

    "நேற்றுதான் ஒரு சந்தோஷ சமாசாரம் கேள்விப்பட்டேன். அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் உங்களுக்கு இனிப்பு கொடுத்தேன்'' என்று கூறினார், எம்.ஜி.ஆர்.

    "என்ன சந்தோஷ சமாசாரம்?'' என்று வாலி கேட்டார்.

    "நீங்க மது அருந்துறதை விட்டுட்டீங்கன்னு நேற்றுதான் கேள்விப்பட்டேன். ஏழெட்டு மாதமா அந்தப்பீடையைக் கையால் தொடறதில்லையாமே நீங்க? இது எனக்கு சந்தோஷ சமாசாரம்தானே!'' என்று கூறிய எம்.ஜி.ஆர்., "உங்க உடம்பு உங்களுக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழுக்குத்தேவை'' என்றார்.

    கண் கலங்கி விட்டார், வாலி.

    எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அவருடன் வாலி, மதுரை முத்து ஆகியோர் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, "கவிஞர்கள் வாக்கு பலிக்குமா?'' என்ற கேள்வி எழுந்தது.

    கவிஞர்களின் வாக்கு பலிக்கும் என்பதற்கு, பல உதாரணங்களை கூறினார், எம்.ஜி.ஆர்.

    அப்போது எம்.ஜி.ஆரிடம் மதுரை முத்து கூறினார்:

    "உங்களுக்காக வாலி எழுதின பாடல் அத்தனையும் பலிச்சிருக்கு.

    "நினைத்தேன் வந்தாய், நூறு வயது!'' என்று எழுதினாரு. குண்டடிபட்டுப் படுத்திருந்த நீங்க நல்லபடியாகப் பொழச்சு வந்தீங்க.

    "நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்...'' என்று "எங்க வீட்டு பிள்ளை''யிலே வாலி எழுதினாரு. நீங்க இப்போது ஆணையிடுகிற இடத்திலே இருக்கீங்க.

    "அன்னமிட்ட கை'' என்று உங்கள் கையைப் புகழ்ந்து எழுதினாரு. சத்துணவு திட்டத்தில் இப்போது நீங்கள் குழந்தைகளுக்கு அன்னமிடுகிறீர்கள்.''

    - இவ்வாறு முத்து கூறியபோது, வாலி குறுக்கிட்டார்.

    "அண்ணே! நான் சொன்னதெல்லாம் பலிச்சுதுன்னா அந்தப் பெருமை எல்லாம் நம் அண்ணனை (எம்.ஜி.ஆர்)தான் சாரும். ஏனென்றால், அவர் பாடியதால்தான், அந்தப் பாட்டுக்கெல்லாம் அவ்வளவு சக்தி வந்து பலிச்சிது'' என்றார்.

    அப்போது, முத்துவைப் பார்த்து எம்.ஜி.ஆர்., "என்னைப் பற்றி வாலி எழுதிய எல்லாப் பாட்டும் பலிச்சுது. ஆனால் ஒரு பாட்டுதான் பலிக்கவில்லை'' என்றார்.

    எந்தப்பாட்டை எம்.ஜி.ஆர். குறிப்பிடுகிறார் என்று, வாலிக்குப் புரியவில்லை.

    பிறகு எம்.ஜி.ஆரே சொன்னார்:

    "எனக்கொரு மகன் பிறப்பான்! அவன் என்னைப்போலவே இருப்பான். தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்' என்று பாட்டு எழுதினீர்களே! அந்தப் பாட்டைத்தான் சொல்கிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.

    வாலியின் முகம் வருத்தத்தால் வாடியது. எனினும், தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு, "அண்ணே! நாட்டில் உள்ள சின்னஞ்சிறார்கள் அனைவருமே, உங்களுடைய செல்வங்களாக இருக்கிறார்கள். அப்படி இருப்பதால், உங்களுக்கு தனியாக ஒரு வாரிசு அமைவதை இறைவனே விரும்பவில்லை. அதனால்தான் இந்தப்பாட்டு பலிக்காமல் போய்விட்டது'' என்று கூறினார்.

    மதுரை முத்துவும், வாலி சொன்னதை ஆமோதித்தார்.

    எம்.ஜி.ஆர். புன்னகை புரிந்தார்.
    தமிழ் சினிமாவில் சண்டக்கோழி, பையா படங்களை இயக்கிய லிங்குசாமி இயக்கும் அடுத்த படத்தில் இளம் நடிகை கதாநாயகியாக நடிக்கிறார்.
    தெலுங்கு திரையுலகில் தொடர் வெற்றிகளால் அசத்தி வரும், துறுதுறுப்பான இளம் நடிகரான, ராம் பொதினேனி, சண்டக்கோழி, பையா, வேட்டை படப்புகழ் இயக்குனர் லிங்குசாமியுடன் புதிய படத்தில் இணைந்திருக்கிறார்.

    ஒரு சில வாரங்களுக்கு முன் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், இன்று படக்குழு படத்தின் நாயகி குறித்த அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. பிரபல இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் நடிகர் ராம் பொதினேனி ஜோடியாக நடிக்கிறார்.

    கீர்த்தி ஷெட்டி

    ரபோ19 (RAPO19) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க, ஸ்டைலிஷ் ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது.
    சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட இயக்குனர் தேசிங் பெரியசாமி - நிரஞ்சனி தம்பதியினருக்கு தயாரிப்பாளர் ஒருவர் விலையுயர்ந்த கார் பரிசளித்து இருக்கிறார்.
    கடந்த வருடம் துல்கர் சல்மான், ரீது வர்மா, இயக்குனர் கௌதம் மேனன், ரக்ஷன், நிரஞ்சனி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த நிரஞ்சனி தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். நிரஞ்சனிக்கும் தேசிங்கு பெரியசாமிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

    கார் பரிசளித்த தயாரிப்பாளர்

    திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருக்கும் நிலையில், புதுமணத் தம்பதிக்கு, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் ஒரு காரை திருமண பரிசாக அளித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    2017 ஆம் ஆண்டு வெளியாகி பலருடைய கவனத்தை ஈர்த்த அருவி திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆவதை உறுதி செய்திருக்கிறார்கள்.
    அதிதி பாலன் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அருவி’. அருண் பிரபு இயக்கிய இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் இந்தியாவிலும் சர்வதேச திரைப்பட விழாவிலும் பெரும் விமர்சனங்களை பெற்றது. 

    அருவி படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்கல் புகழ் இளம் மற்றும் திறமையான நடிகை, பாத்திமா சனா ஷேக் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இ.நிவாஸ் இப்படத்தை இயக்குகிறார்.

    அருவி படக்குழு 

    நடிகை பாத்திமா தனது புதிய குழுவுடன் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதனை அறிந்து மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் கவினுக்காக தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்கள் 6 பேர் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.
    ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

    அதைத்தொடர்ந்து பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்ட கவின் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். பின்னர் வினீத் இயக்கத்தில் லிப்ட் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் கவின். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

    இயக்குனர்கள்

    இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், அஜய் ஞானமுத்து, வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், ரவிக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்த மோஷன் போஸ்டர் தற்போது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    ஜே.பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் மிருகா படத்தின் விமர்சனம்.
    நாயகன் ஸ்ரீகாந்த், கணவரை இழந்த வசதியான பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து வருகிறார். இதை ஒரு பெண் கண்டுபிடித்து ஸ்ரீகாந்த்தை மிரட்டுகிறார். இதற்கு பயப்படும் ஸ்ரீகாந்த்திடம் என் அக்கா ராய் லட்சுமியை காதலித்து ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் படி கேட்கிறார்.

    ஸ்ரீகாந்த்தும் இதை ஏற்று, ராய் லட்சுமி இருக்கும் இடத்தை தேடி போகிறார். ராய் லட்சுமியின் அழகில் மயங்கும் ஸ்ரீகாந்த், இறுதியில் அவரை ஏமாற்றி பணம் பறித்தாரா? ராய் லட்சுமியை உண்மையாக காதலித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். கொள்ளையடிப்பது, ஏமாற்றுவது என்று கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் இருந்து மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.

    நாயகியாக வரும் ராய் லட்சுமி, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். புலிக்கு பயப்படும் காட்சியில் கவனிக்க வைத்திருக்கிறார். தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    விமர்சனம்

    பாலாவின் உதவி இயக்குனர் ஜே பார்த்திபன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். அடுத்தடுத்து நடக்கும் காட்சிகளை யூகிக்கும் திரைக்கதை. தேவையில்லாத  புலி காட்சிகள் ஆகியவை படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. வித்தியாசமான கதை என்றாலும் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    எம்.வீ.பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது. அருள் தேவ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘மிருகா’ சுவாரஸ்யம் குறைவு.
    ×