என் மலர்
சினிமா செய்திகள்
ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் படத்தில் இருந்து இயக்குனர் ஷங்கர் விலகிவிட்டதாக தகவல் வெளியானது. இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

அதற்கு முன்பாக தெலுங்கு படமொன்றை இயக்க ஷங்கர் தயாராகி உள்ளார். இந்த படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க தென்கொரிய நடிகை பேசூஜியிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
‘தளபதி 65’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.
கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன், அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில், படத்தின் இயக்குனர் நெல்சன், படப்பிடிப்புக்காக லொகேஷன் தேட ரஷ்யா சென்றுள்ளார். மேலும் ரஷ்யாவில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நெல்சன். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஷ்ணு விஷால், அண்மையில் தனது காதலி ஜுவாலா கட்டா உடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
வெண்ணிலா கபடி குழு, ஜீவா, குள்ள நரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் நடித்துள்ள காடன், ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
லாக்டவுன் மற்றும் தொடர் படப்பிடிப்பு காரணமாக கடந்த ஓராண்டாக வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருந்த விஷ்ணு விஷால், அண்மையில் தனது காதலி ஜுவாலா கட்டா உடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
அங்கு சில நாட்கள் தங்கியிருந்த விஷ்ணு விஷால், தற்போது சென்னை திரும்பியவுடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ‘மோகன் தாஸ்’ படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். உண்மைக்கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
சூர்யா - பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் வினய் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் 2007-ல் வெளியான ‘உன்னாலே உன்னாலே’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் வினய். தொடர்ந்து ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு, என்றென்றும் புன்னகை, அரண்மனை என பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்த வினய், மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கிய உப்பென்னா திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் கடந்த பிப்.12-ந் தேதி தெலுங்கில் வெளியான படம் உப்பென்னா. அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதோடு, ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்ட பலர், இந்தப் படத்தை பார்த்துவிட்டுப் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினர்.

இந்நிலையில், உப்பென்னா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், உலகளாவிய மொத்த வசூலில் ‘உப்பென்னா’ திரைப்படம் 100 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.
நிகழ்ச்சியில் மட்டும்தான் நான் கோமாளி, நிஜத்திலும் அல்ல என ‘குக் வித் கோமாளி’ புகழ் உருக்கமாக பேசியுள்ளார்.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். சந்தானத்துடன் ஒரு படம், அருண் விஜய்யுடன் ஒரு படம் என நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அஜித் நடித்து வரும் வலிமை படத்திலும் இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இயக்குனர் ஷங்கர் பெயரில் தன்னை ஒருவர் ஏமாற்றியது குறித்து உணர்வுப் பூர்வமாகப் பேசியுள்ளார்.

அதில் ‘ஒருநாள் இயக்குனர் ஷங்கரின் அலுவலகத்திலிருந்து பேசுவதாக எனக்கு ஒரு போன் வந்தது. போனில் பேசியவர் கிண்டியில் உள்ள ஒரு இடத்திற்கு என்னை வரச் சொன்னார். நான் அங்கே சென்று அவரை அழைத்த போது அந்த போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் ஏமாற்றமடைந்த புகழ், நிகழ்ச்சியில் மட்டும்தான் நான் கோமாளி, நிஜத்திலும் அல்ல’ என உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.
எம்.ஜி.ஆரின் ஏராளமான படங்களுக்கு வாலி பாடல் எழுதிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் (1964), சிவாஜி படங்களுக்கும் பாட்டு எழுத அழைப்பு வந்தது.
ஆமதாபாத்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமாக விளங்கிய சுனில் கவாஸ்கர் 1971-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி போர்ட் ஆப் ஸ்பெயினில் தொடங்கிய வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகம் ஆனார். 5 ஆட்டங்கள் கொண்ட அந்த தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. தனது அறிமுக தொடரிலேயே கவாஸ்கர் 4 சதம், 3 அரைசதம் உள்பட 774 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தினார். 1987-ம் ஆண்டில் ஓய்வு பெற்ற அவர் 125 டெஸ்டில் ஆடி 34 சதம் உள்பட 10,122 ரன்களும், 108 ஒருநாள் போட்டியில் விளையாடி 3,092 ரன்களும் எடுத்துள்ளார்.
71 வயதான கவாஸ்கர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆமதாபாத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான நேற்று மதிய உணவு இடைவேளையின் போது அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நினைவு பரிசாக தொப்பியை வழங்கி கவுரவித்தார். முன்னதாக கவாஸ்கர் ஸ்டேடியத்தில் ‘கேக்’ வெட்டி சிறப்பித்தார். முன்னாள் வீரர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். ‘நான் அவரது ஆட்டத்தை வியந்து பார்த்ததுடன் அவரை போன்று உருவாக முயற்சித்தேன். அதில் ஒருபோதும் மாற்றமில்லை. அவர் தான் என்றும் எனது கதாநாயகன்’ என்று சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமாக விளங்கிய சுனில் கவாஸ்கர் 1971-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி போர்ட் ஆப் ஸ்பெயினில் தொடங்கிய வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகம் ஆனார். 5 ஆட்டங்கள் கொண்ட அந்த தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. தனது அறிமுக தொடரிலேயே கவாஸ்கர் 4 சதம், 3 அரைசதம் உள்பட 774 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தினார். 1987-ம் ஆண்டில் ஓய்வு பெற்ற அவர் 125 டெஸ்டில் ஆடி 34 சதம் உள்பட 10,122 ரன்களும், 108 ஒருநாள் போட்டியில் விளையாடி 3,092 ரன்களும் எடுத்துள்ளார்.
71 வயதான கவாஸ்கர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆமதாபாத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான நேற்று மதிய உணவு இடைவேளையின் போது அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நினைவு பரிசாக தொப்பியை வழங்கி கவுரவித்தார். முன்னதாக கவாஸ்கர் ஸ்டேடியத்தில் ‘கேக்’ வெட்டி சிறப்பித்தார். முன்னாள் வீரர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். ‘நான் அவரது ஆட்டத்தை வியந்து பார்த்ததுடன் அவரை போன்று உருவாக முயற்சித்தேன். அதில் ஒருபோதும் மாற்றமில்லை. அவர் தான் என்றும் எனது கதாநாயகன்’ என்று சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
விரைவில் தாயாக இருக்கும் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், குழந்தைக்கு நல்ல பெயரை தேர்ந்தெடுக்க ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் செம பிசியாகப் பாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.

சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு அழகிய புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்தார். இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நாங்கள் குழந்தையின் பெயர்களைப் பற்றி இதுவரை சிந்திக்கவில்லை. நாங்கள் பல விருப்பங்களை பரிசீலித்து வருகிறோம், குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் பரிந்துரைகளை கேட்கிறோம், என்று அவர் கூறினார், மேலும், "நான் இப்போது அதை என் ரசிகர்களிடமும் கேட்க நினைக்கிறேன். அவர்கள் நிச்சயமாக மிகவும் அர்த்தமுள்ள மற்றும் தனித்துவமான பெயர்களைக் கொண்டு வருவார்கள் என்று கூறினார்.
சுற்றுச்சூழலுக்கு மேலும் உகந்த, எளிதில் மட்கும் நாப்கின்கள், மட்கும் பைகளை கண்டுபிடிக்க வேண்டும் என டாப்ஸி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான டாப்ஸி, சமூக பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவ்வகையில், பிளாஸ்டிக் தீமைகள் குறித்து அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பிளாஸ்டிக் மற்றும் அதன் விளைவுகள் பற்றி நிறைய கூறப்பட்டு, அதுபற்றி விவாதிக்கப்பட்டுள்ளன. பசுமை இல்ல விளைவு, பிளாஸ்டிக் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களாக மாறுவது, பருவநிலை மாற்றம் மற்றும் பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. நமக்கு நேரடியாகத் தெரியும் ஒரு வகையான பிளாஸ்டிக் உள்ளது. அதை நாம் எளிதில் தவிர்க்கலாம்.
ஆனால், கண்ணுக்கு தெரியாமல் மறைந்துள்ள பிளாஸ்டிக்கை சரியான முறையில் அப்புறப்படுத்தாவிட்டால், அதை பயன்படுத்துவோருக்கு மட்டுமல்லாமல், உலகத்திற்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை கூறலாம். ஒரு சானிட்டரி நாப்கின் பேடில் எவ்வளவு பிளாஸ்டிக் இருக்கிறது தெரியுமா? 4 கிராம். இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 120 மில்லியன் பெண்கள் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 12.3 பில்லியன் பேடுகளை அப்புறப்படுத்துகிறார்கள்.
இப்போது உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் அளவை கற்பனை செய்து பாருங்கள். நம்மில் பலர் இதைப் பற்றி பேசுவதில்லை, ஏனென்றால் அதைப் பற்றி நமக்கு அவ்வளவாகத் தெரியாது.
இந்த நாப்கின் பேடுகளை எவ்வாறு அப்புறப்படுத்தப்படுகின்றன என்பது தெரியுமா? குப்பைத் தொட்டிகளில் இருந்து நிலப்பரப்புகளுக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? குப்பைகளை சேகரிக்கும் நபர்கள் மிகவும் கவனக்குறைவாக அவற்றை அப்புறப்படுத்திய பின்னர் என்ன நடக்கும் என்று நீங்கள் நினைத்தீர்களா?
அதிக சதவீத பிளாஸ்டிக் மற்றும் ரசாயனங்கள் உள்ள சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவது, கருப்பை புற்றுநோய் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது என்ற உண்மையைப் பற்றி சிந்தியுங்கள்.
தயவுசெய்து சுற்றுச்சூழலுக்கு மேலும் உகந்த, எளிதில் மட்கும் நாப்கின்கள், மட்கும் பைகளை கண்டுபிடிப்பதில் முன்னேற முடியுமா? என பாருங்கள்.
நண்பர்களே... அறிவுரை வழங்குவது மிகவும் எளிதானது, அதைச் செயல்படுத்துவது தான் கடினம். அடிமட்டத்தில் அதை செய்வதும் கடினம். இந்த கடினமான பணியை செய்ய வேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன். நாம் பார்க்க விரும்பும் மாற்றத்தைக் கொண்டு வரலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ராப் வேன் டேம் (ஆர்விடி) நடிப்பில் டேவிட் டிஃபல்கோ இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கேங்ஸ்டர்ஸ் படத்தின் விமர்சனம்.
முன்னாள் கடற்படை அதிகாரியான நாயகன் ராப் வேன் டேம் (ஆர்விடி) மனைவி மகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் வீட்டுக்கு அருகில் ஒரு குடும்பம் குடி வருகிறார்கள். அந்த குடும்பத்தினர் ஆர்விடி மற்றும் மனைவியை ஒரு பார்ட்டிக்கு அழைத்து செல்கிறார்கள்.
அங்கு கிளப் ஓனரின் தம்பி ஒருவர் குடிபோதையில் ஆர்விடி-யின் மனைவிடம் தகராறு செய்கிறார். இதில் எதிர்பாராதவிதமாக கிளப் ஓனரின் தம்பி இறந்து விடுகிறார். இதனால் கோபமடையும் கிளப் ஓனர், ஆர்விடி தலையை கொண்டு வருபவர்களுக்கு பணம் தருவதாக அறிவிக்கிறார்.

இதனால் ஊரில் இருக்கும் கேங்ஸ்டர்ஸ் அனைவரும் ஆர்விடியை கொல்ல முயற்சி செய்கிறார்கள். இதை ஆர்விடி எப்படி சமாளித்தார்? எப்படி தப்பித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
டபிள்யூ டபிள்யூ ஈ-யில் வரும் ஆர்விடி இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை போக போக வேகமெடுக்கிறது. ஆனால், தலைப்புக்கு ஏற்றார் போல் கேங்ஸ்டர்ஸ்கள் அதிக பேர் இருந்தாலும் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் சுவாரஸ்யத்தை சேர்க்காமல் விட்டிருக்கிறார் இயக்குனர் டேவிட் டிஃபல்கோ.

ஜிம் காஃப்மேனின் பின்னணி இசையும், தாமஸ் லெம்ப்கேவின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘கேங்ஸ்டர்ஸ்’ ரவுடிசம் குறைவு.
பிரபல நடிகையின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தியதால் நீக்க கோரி கோர்ட்டு உத்தரவிட்டுதுள்ளது.
நானி, அதிதிராவ், நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்து வி என்ற பெயரில் தயாரான தெலுங்கு படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. இந்த படத்தில் தனது புகைப்படத்தை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி உள்ளதாக இந்தி நடிகை சாக்ஷி மாலிக் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஒரு போட்டோ ஷூட்டில் எடுத்த படங்களை சாக்ஷி மாலிக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்கள் வி படத்தில் இடம்பெற்று இருந்தன. அத்துடன் படத்தில் பாலியல் தொழிலாளி சம்பந்தமான வசனத்திலும் சாக்ஷி மாலிக் படம் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து சாக்ஷி மாலிக் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். தனது அனுமதி இல்லாமல் புகைப்படங்களை பயன்படுத்தியது தவறு என்றும், இதற்காக ரூ.30 கோடி நஷ்டஈடு வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு சாக்ஷியின் புகைப்படத்தை நீக்கும்படி ஓ.டி.டி. தளத்துக்கு உத்தரவிட்டது. புகைப்படத்தை நீக்கும்வரை வி படத்தை எந்த தளத்திலும் வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
அசோக் குமார் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் ஆறா எனும் ஆரா என்னும் படத்தின் முன்னோட்டம்.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் "ஆறா எனும் ஆரா".
ஆக்க்ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை சாபு அவர்கள் சாபு பிக் டிவி பானரில் தயாரித்துள்ளார். அதன் இணை தயாரிப்பாளர் ஜோஸ். ஸ்டீபன்.ஜெ எழுதி இயக்க, அஷோக்குமார் கதாநாயகனாகவும், ஸ்வேதா ஜோயல் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் நிழல்கள் ரவி, மனோபாலா, ஆனந்தராஜ், பில்லி, ஷைனி, ஷகிலா மற்றும் பலர் நடிக்கின்றனர். சுலக்ஷா டாடி இசையில், ரக்சகன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். ரவிசாமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்கம் சியோ ஜோஸ், எடிட்டிங் விபின்,. புரொடக்ஷன் கன்ட்ரோலர் செபாஸ்டியன்.ஜெ. ஜாக்கி ஜான்ஸன் சண்டை காட்சிகளை அமைக்க, நடனம் செல்வி மாஸ்டர், தொடர்ந்து சென்னை மற்றும் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தி, வெகு விரைவில் இரு மொழிகளிலும் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.






