என் மலர்
சினிமா

வரலட்சுமி சரத்குமார்
கேவலமான கேள்வியை யாரிடமும் கேட்காதீங்க... வரலட்சுமி காட்டம்
பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட நடிகை வரலட்சுமி சரத்குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு கோபப்பட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் ஒப்பந்தம் ஆகி பிசியாக நடித்து வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தன்னுடைய பிறந்தநாளை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுக்கு, பொம்மை, சாக்லேட், கேக், போன்றவற்றை வழங்கி கொண்டாடினார்.
அதன்பின் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் எப்போது உங்களது திருமணம் என்ற கேள்வியை எழுப்பினார். இந்த கேள்விக்கு சட்டென்று கோபமான வரலட்சுமி, திருமணம் எப்போது என்ற கேவலமான கேள்வியை யாரிடமும் கேட்க வேண்டாம் என காட்டமாக தெரிவித்தார்.

மேலும் திருமணம் என்பது பெண்களுக்கு அவசியமான ஒன்றா? அது ஒரு கொள்கையா என்றும், பெண்கள் என்றால் திருமணம் செய்ய வேண்டும் என்று ஏதாவது உள்ளதா? பின்னர் ஏன் இப்படி ஒரு கேள்வியை தொடர்ந்து எழுப்பி வருகின்றீர்கள். ஆண்களுக்கு சில கொள்கைகள் இருக்கும் போது பெண்களுக்கு மட்டும் கொள்கைகள் இருக்கக் கூடாதா? என்றும் கல்யாணம் எப்போது என்கிற கேவலமான கேள்வியை மட்டும் யாரிடமும் கேட்காதீர்கள் என வரலட்சுமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






