என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். 

    யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

    சிம்பு

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மாநாடு திரைப்படத்தை ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சிம்பு முஸ்லிம் இளைஞராக நடித்துள்ளதால், படத்தை அந்த பண்டிகை நாளில் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என கருதுகிறார்களாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழில் வாமணன், எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வைராஜா வை, எல்.கே.ஜி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார் பிரியா ஆனந்த்.
    நடிகைகள் சினிமா வாய்ப்புகளை பிடிக்க சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று கடற்கரையில் நீச்சல் உடையிலும் அரைகுறை ஆடைகளுடனும் சுற்றும் புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். 

    இந்த வரிசையில் பிரியா ஆனந்தும் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இவர் தமிழில் வாமணன், எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வைராஜா வை, எல்.கே.ஜி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இரண்டு கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

    பிரியா ஆனந்த் பதிவிட்ட புகைப்படம்

    பிரியா ஆனந்த் சூரிய உதயத்தில் கவர்ச்சியாக நின்று போஸ் கொடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு சூரிய உதயமும் புதிய வழியை காண்பதற்கு உதவுகிறது என்றும் பதிவிட்டுள்ளார். கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள். பிரியா ஆனந்த் ஆடை அணிந்துள்ளாரா இல்லையா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் பேசி வருகிறார்கள்.
    "இன்றோடு உன் தரித்திரம் முடிந்தது'' என்று வாலியிடம் முக்தா சீனிவாசன் சொன்னது உண்மை ஆயிற்று.
    "என் படங்களுக்கு `வாலி' என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டு எழுதுவார்'' என்று பொதுக்கூட்டத்திலேயே எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

    "இன்றோடு உன் தரித்திரம் முடிந்தது'' என்று வாலியிடம் முக்தா சீனிவாசன் சொன்னது உண்மை ஆயிற்று.

    விஸ்வநாதன் -ராமமூர்த்தியுடன் பணியாற்றத் தொடங்கியவுடனேயே, வாலியை கோடம்பாக்கம் கவனிக்கத் தொடங்கியது.

    கம்பெனி கம்பெனியாக, வாலியின் திறமை பற்றி எம்.எஸ்.விஸ்வநாதன் கூறியதன் பயனாக, வாய்ப்புகள் குவியலாயின.

    "சாரதா'' படத்திற்கு பிறகு டைரக்டராக பெரும் புகழ் பெற்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் இருந்து ஒரு நாள் வாலிக்கு அழைப்பு வந்தது. வாலி அவரை சந்தித்தார்.

    "எம்.எஸ்.வி. உங்களைப் பற்றி நிறைய சொன்னார். முதலில் இப்போது ஒரு பாட்டு எழுதுங்கள். மற்றதை பிறகு பார்ப்போம்'' என்றார், கோபாலகிருஷ்ணன்.

    "ரொம்ப நன்றி சார்!'' என்றார் வாலி.

    "எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு எழுதின ஏதாவது ஒரு பாட்டை சொல்லுங்கள்'' என்று கே.எஸ்.ஜி. கேட்டார்.

    "உறவு என்றொரு சொல் இருந்தால், பிரிவு என்றொரு பொருளிருக்கும். காதல் என்றொரு கதை இருந்தால், கனவு என்றொரு முடிவிருக்கும்'' என்ற பாடலை, மெட்டோடு வாலி பாடிக்காட்டினார். இது, "இதயத்தில் நீ'' என்ற படத்துக்காக எழுதப்பட்ட பாடல்.

    "ஓகே! பாடல் நன்றாக இருக்கிறது. ஒரு பானை சேற்றுக்கு ஒரு அரிசி பதம். நீங்கள் போய்விட்டு, நாளைக்கு வாருங்கள். கார் அனுப்புகிறேன்'' என்றார், கோபாலகிருஷ்ணன்.

    நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்க, கிளப்ஹவுசுக்குத் திரும்பினார், வாலி.

    சொன்னபடி, மறுநாள் வண்டி அனுப்பினார், கோபாலகிருஷ்ணன். எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும், பக்கவாத்தியக்காரர்களுடன் அமர்ந்திருந்தார்கள்.

    படத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியை விவரித்து, அதற்கான தாலாட்டுப் பாடலை எழுதும்படி வாலியிடம் கோபாலகிருஷ்ணன் சொன்னார்.

    "அத்தைமடி மெத்தையடி, ஆடி விளையாடம்மா'' என்ற பல்லவியை எழுதி, விஸ்வநாதனிடம் கொடுத்தார். அதை அவர் படித்துப் பார்த்துவிட்டு, கே.எஸ்.ஜி.யிடம் நீட்டினார்.

    ஒரு சிட்டிகை பொடியை உறிஞ்சிவிட்டு, பல்லவியை கே.எஸ்.ஜி. படித்துப் பார்த்தார். மகிழ்ச்சியுடன் வாலி முதுகில் ஒரு தட்டு தட்டினார்.

    கோபாலகிருஷ்ணனின் முதல் தயாரிப்பான "கற்பகம்'' படத்துக்கு அனைத்துப் பாடல்களையும் வாலிதான் எழுதினார். அந்தப் படம், அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை தேடித்தந்தது.

    ஜி.என்.வேலுமணியின் சரவணா பிலிம்ஸ், வரிசையாக வெற்றிப் படங்களைத் தயாரித்து வந்தது. ஒருநாள், எம்.எஸ்.விஸ்வநாதன் தன்னுடைய காரை வாலிக்கு அனுப்பி, சரவணா பிலிம்சுக்கு வரச்சொன்னார்.

    வாலி உடனே புறப்பட்டுச் சென்றார். வாலியை வேலுமணிக்கு விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார்.

    சரவணா பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் படத்தின் முழுக் கதையையும் கதாசிரியர் சக்தி கிருஷ்ணசாமி சொன்னார்.

    "வாலி! கதையைக் கேட்டுட்டீங்க! இந்தக் கதைக்கு ஐந்து எழுத்தில் வருவது மாதிரி ஒரு `டைட்டில் சொல்லுங்க!'' என்றார், வேலுமணி.

    உடனே "படகோட்டி'' என்று சொன்னார், வாலி.

    "பிரமாதம்'' என்று கூறியபடி, தன் கதர் ஜிப்பாவில் இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து வாலியின் கையில் திணித்தார், வேலுமணி.

    "படகோட்டி''க்கு இரண்டு பாடல்கள் பதிவாயின. முன்பு இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசனால் நிராகரிக்கப்பட்ட "கொடுத்ததெல்லாம் கொடுத்தான், யாருக்காகக் கொடுத்தான்?'' என்ற பாடலும் விஸ்வநாதன் இசை அமைப்பில், டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பிரமாதமாக அமைந்தது.

    "படகோட்டி'' படத்துக்கு வாலி பாட்டு எழுதுகிறார் என்பது, அதுவரை எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. இரண்டு பாடல்கள் பதிவான பிறகு, அவற்றை ராமாவரம் தோட்டத்துக்கு வேலுமணி கொண்டு சென்று, எம்.ஜி.ஆருக்குப் போட்டுக் காட்டினார்.

    பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போயின.

    அன்று மாலை, பரங்கிமலையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், எம்.ஜி.ஆர். பேசினார். "என்னுடைய படங்களுக்கு வாலி என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டுகள் எழுதுவார்'' என்று அக்கூட்டத்தில் அறிவித்தார்.

    இதுபற்றி, வாலி கூறியிருப்பதாவது:-

    "அப்போது எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் நிறைய இடைவெளி ஏற்பட்டிருந்தது. என்னைக் கொண்டு அதை சரி செய்து கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆர். எண்ணினார். அவர் எண்ணத்திற்கேற்ப என்னுடைய வளர்ச்சியும் அமைந்தது.

    `படகோட்டி'யின் பாடல்கள் பெரும்பாலும் பதிவாகிவிட்ட நிலையில், ஒரே ஒரு பாடல் எழுதி ஒலிப்பதிவு செய்யவேண்டியிருந்தது.

    அந்த நேரத்தில் நான் கடுமையான ஜ×ரத்தால் பாதிக்கப்பட்டு, வீட்டில் படுத்த படுக்கையாகக் கிடந்தேன்.

    வேலுமணி அவர்களுக்கோ, பாட்டு மிகமிக அவசரத்தேவை. உடனே ஒலிப்பதிவு செய்து மறுநாள் படப்பிடிப்பை நடத்தியாக வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் இன்னும் மூன்று மாதத்திற்கு எம்.ஜி.ஆர். கால்ஷீட் கிடைப்பது கடினம்.

    இந்த ஒரு பாட்டை மட்டும், வேறு யாரையாவது வைத்து எழுதிவிடலாம் என்ற நிலை வந்தபோது, விஸ்வநாதன் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

    "அருமையான பாடல்களை வாலி அண்ணன் இந்தப் படத்துல எழுதியிருக்காரு. இந்த ஒரு பாட்டுக்காக இன்னொருவரைத் தேடிச் செல்வது தர்ம நியாயமல்ல...'' என்று வாதாடினார்.

    ஆர்மோனியப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, பக்கவாத்தியக்காரர்களோடு என் வீட்டிற்கே வந்துவிட்டார்.

    அப்போது நான் தனிக்கட்டை; திருமணமாகவில்லை.

    படுக்கையில் படுத்தவாறே, விஸ்வநாதன் அவர்களின் வர்ணமெட்டிற்கேற்ப நான் வார்த்தைகளைச் சொல்ல, உதவி இயக்குனர் ஒருவர் அதை எழுதி முடித்தார்.

    "அழகு ஒரு ராகம்; ஆசை ஒரு தாளம்'' என்பதே அந்தப்பாடல்.''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
    பணம் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் திருநாவுக்கரசு கொடுத்த புகாருக்கு நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார்.
    நடிகர் விமலிடம் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு என்பவர் ரூ.50 லட்சம் பணம் கொடுத்ததாகவும், அதை திருப்பி தரவில்லை என்றும் புகார் கொடுத்தார். இதற்கு பதில் அளித்துள்ளார் விமல்.

    விமல் கூறியதாவது, என்னை பற்றிய தவறான செய்திகளை சமூக ஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பிடிக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் என்மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்.

    திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ பணம் பரிமாற்றமோ இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்வதோடு மேலும் அவர் மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பறிப்பதே ஆகும் என்று திட்டவட்டமாக நடிகர் விமல் கூறி இருக்கிறார்.
    சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டு, ஊட்டியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    ஸ்ரீநிதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிக்கும் புதிய படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜே பப்பு, தேவி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

    மணி பாரதி இயக்கும் இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவையும், தாஜ் நூர் இசையும் கவனிக்கிறார்கள். எடிட்டிங் பணிகளை அகமது மேற்கொள்கிறார். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டு தற்போது ஊட்டியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    ஸ்ரீகாந்த் - சிருஷ்டி டாங்கே

    சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட மற்ற விவரங்களை படக்குழுவினர் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.
    சகாயநாதன் இயக்கத்தில் டிட்டோ, ஸ்ரீ மகேஷ், தீபா உமாபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் செந்தா படத்தின் விமர்சனம்.
    பள்ளியில் படித்து வரும் நாயகி செந்தாமரை, தன்னுடன் படிக்கும் சிவாவை காதலித்து வருகிறார். சிவாவிற்கு நண்பராகவும், செந்தாமரையின் குடும்ப நண்பராகவும் சூர்யா இருக்கிறார். சிவாவை காதலிக்கும் விஷயம் செந்தாமரையின் பெற்றோர்களுக்கு தெரிந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    பெற்றோர்களின் எதிர்ப்பால் சிவாவுடன் பழகுவதை நிறுத்திக் கொள்கிறார் செந்தாமரை. பின்னர் செந்தாமரையை சூர்யாவிற்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். இதற்கு சூர்யா மறுக்க, வேறொருவருக்கு செந்தாமரையை திருமணம் செய்து வைக்கிறார்கள். 

    திருமணத்திற்குப் பிறகு செந்தாமரையின் கணவர் இறக்க, அவரது வாழ்க்கை கேள்வி குறியாகிறது. இறுதியில் செந்தாமரையின் நிலைமை என்ன? மீண்டும் காதலருடன் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    சூர்யா, சிவா கதாபாத்திரத்தில் டிட்டோ, ஸ்ரீ மகேஷ் நடித்திருக்கிறார்கள். புதுமுகங்கள் என்பதால் ஓரளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நாயகியாக செந்தாமரை கதாபாத்திரத்தில் தீபா உமாபதி நடித்திருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படம் என்பதை நாயகி உணரவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

    கதை எழுதி தயாரித்திருக்கும் வி.மணிபாய் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். கதையிலும் சகாயநாதனின் இயக்கத்திலும் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒவ்வொரு காட்சிக்கும் சம்மந்தம் இல்லாதது போல் இருக்கிறது. நிறைய தேவையில்லாத காட்சிகளை புகுத்தி இருக்கிறார்கள்.

    பால் லிவிங்ஸ்டனின் ஒளிப்பதிவும், டி.எஸ்.முரளிதரனின் இசையும் படத்திற்கு பெரியதாக கைக்கொடுக்கவில்லை.

    மொத்தத்தில் ‘செந்தா’ ஓவர் பந்தா.
    மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்த மாளவிகா மோகனன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது என்று பதிவு செய்திருக்கிறார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இப்படத்தின் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் 50 நாட்களை கடந்தும் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் படம் 50வது நாள் பற்றி உருக்கமான பதிவு ஒன்றினை பதிவு செய்துள்ளார். அதில், “50 நாட்கள் கடந்துவிட்டது மாஸ்டர். இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது. பெரும் ஆளுமைகளுடன் பணிபுரியும் வாய்ப்பு, மிகச்சிறந்த வாழ்நாள் கால நண்பர்கள், இனிவரும் எனது வாழ்நாள் முழுவதும் அசைபோடவைக்கும் நிறைய நினைவுகள்..” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.


    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், மனிதர்களைப் பார்த்துத்தான் பயம் என்று பட விழாவில் கூறியிருக்கிறார்.
    பிரபுசாலமன் இயக்கத்தில், ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காடன்'. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. இப்படம் மார்ச் 26-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர் ராணா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    விழாவில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், "யானைகளைப் பார்த்து சின்ன வயசுல நான் ரொம்ப பயப்படுவேன். படத்துல நடிச்சிருக்கிற யானையை முதல் முறை பார்க்கும் போதும் கொஞ்சம் பயம் இருந்தது. கடைசி மூன்று வருசமா என் வாழ்க்கைல நடக்கிறத பார்க்கும் போது, மனிதர்களைப் பார்த்துத்தான் நாம் பயப்படணும்னு புரிஞ்சுக்கிட்டேன். யானைகள் கூட பாசமாகத்தான் இருக்கின்றன.

    விஷ்ணு விஷால்

    மனிதர்கள் அப்படி இல்லை. என்னுடைய அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். யானைகளுக்கு நினைவாற்றல் அதிகம். இந்த யானை கூட நான் நடிச்சு கிட்டத்தட்ட மூன்று வருஷம் ஆகிருச்சு. இன்னைக்கு அதுகிட்ட நான் போய் நின்றாலும் என்னை அடையாளம் கண்டு பிடிச்சுடும்; என் கூட விளையாடும். மனுசங்க எல்லாத்தையும் சீக்கிரம் மறந்துறாங்க. யானையா மனிதனானு கேட்டா யானைன்னுதான் நான் சொல்லுவேன்" எனக் கூறினார்.
    தமிழ்ப்படம் மூலம் மிகவும் பிரபலமான மிர்ச்சி சிவா நடிக்கும் புதிய படத்தில் அஜித் பட நடிகை இணைந்திருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட திரையுலகில் மாடல் மற்றும் நடிகையாக விளங்குபவர் அக்‌ஷரா கவுடா. இவர் தமிழில் உயர்திரு 140 படத்தில் அறிமுகமானார், அதன் பின்னர் விஜய்யின் துப்பாக்கி, அஜித்தின் ஆரம்பம், ஜெயம் ரவி, அரவிந்த் சாமி நடித்த போகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

    அக்‌ஷரா கவுடா

    குறிப்பாக ஆரம்பம் படத்தில் அவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது அக்‌ஷரா கவுடா, மிர்ச்சி சிவா நடிக்கும் இடியட் எனும் படத்தில் நடிக்கிறார். மேலும் ரெஜினா நடிப்பில் உருவாகும் சூர்ப்பனகை படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் அக்‌ஷரா கவுடா நடிக்கிறார்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் ஒருவர் மோசடி புகார் கொடுத்துள்ளார்.
    நடிகர் விமலின் மனைவி அக்‌ஷயா சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது விமல் மீது தி.மு.க. தலைவர் முக.ஸ்டாலினிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பட்டுக்கோட்டையில் தியேட்டர் ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தபோது, விமலுடன் பழக்கம் ஏற்பட்டது.

    'மன்னர் வகையறா' படத்தை தயாரிக்க, என்னிடம் விமல், 50 லட்சம் ரூபாய் கேட்டார். என் வீட்டை அடமானம் வைத்து, பணம் கொடுத்தேன். அதற்காக எனக்கு, 80 லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்த நிலையில், விமல் சொன்ன தேதியில், காசோலையை வங்கியில் செலுத்திய போது, பணமில்லாமல் திரும்பியது.

    விமல்

    இது குறித்து பலமுறை, விமலிடம் முறையிட்டபோதும், பணத்தை தரவில்லை. என் வீட்டை விற்று, கடனை அடைத்தேன். விமலுக்கு உதவப் போய், தற்போது நடுத்தெருவில் நிற்கிறேன். இந்நிலையில், தி.மு.க., சார்பில், விமலின் மனைவி, மணப்பாறையில் போட்டியிட போவதாக தகவல் அறிந்தேன். 'ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப் போறாரு' என, என்னைப் போன்றவர்கள் நம்பியுள்ள வேளையில், மோசடியின் மொத்த உருவமாய் திகழும் விமலுக்காக, அவரது மனைவிக்கு, 'சீட்' கொடுப்பது, அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.
    சினிமாவில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டிருக்கும் நடிகர் ரஜினி, அடுத்தடுத்து 2 கதைகளை தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    கொரோனா ஊரடங்குக்கு பின்னர் தொடங்கிய ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு படக்குழுவில் சிலருக்கு கொரோனா பரவியதால் நிறுத்தப்பட்டது. அரசியல் ஓய்வு அறிக்கைக்கு பிறகு வெளியில் வராமல் இருந்த ரஜினி தனுசின் புது வீட்டு பூஜை, இளையராஜாவின் புது ஸ்டூடியோவுக்கு வருகை இரண்டுக்கு மெட்டும் வெளியில் வந்தார். 

    இந்நிலையில் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க ரஜினி கூறிவிட்டதாகவும் வரும் 8ந்தேதி படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் இறுதிவரை படப்பிடிப்புக்கு தேதிகள் கொடுத்துள்ள ரஜினி தேர்தலுக்கு முதல் நாள் தான் சென்னைக்கு திரும்பி வாக்களிப்பார் என்கிறார்கள்.

    ரஜினிகாந்த்

    ரஜினி தொடர்ந்து நடிக்கும் விருப்பத்தில் இருக்கிறார். அடுத்தடுத்து கதைகளை கேட்டு வந்தவர் 2 கதைகளுக்கு சம்மதம் சொல்லி இருக்கிறார் என்றும் இளம் இயக்குனர்களுடன் இணையும் அந்த படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
    கே.வீரகுமார் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சேஸிங் படத்தின் முன்னோட்டம்.
    தமிழ் பட உலகின் துணிச்சல் மிகுந்த கதாநாயகிகளில் வரலட்சுமி சரத்குமாரும் ஒருவர். இவர் நடித்திருக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘சேஸிங்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. மதியழகன் முனியாண்டி தயாரிக்கிறார். பாலசரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, யமுனா ஆகியோருடன் வரலட்சுமி சரத்குமார், போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். 

    கே.வீரகுமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தாசி இசையமைத்துள்ளார். பாலசரவணன், இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    வரலட்சுமி சரத்குமார்

    படத்தை பற்றி இயக்குனர் கே.வீரகுமார் கூறியதாவது: “இது, திகிலான கதையம்சம் கொண்ட படம். பெண்களை கடத்தி ஆசைகளை தீர்த்துக் கொண்டபின் கொலை செய்கிறது, ஒரு கும்பல். இளைஞர்களுக்கு போதை மருந்து கொடுத்து அடிமையாக்குகிறார்கள். அவனை பிடிக்க துப்பறிகிறார், வரலட்சுமி. அப்போது சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளி யார், அவன் கொலை குற்றங்களில் ஈடுபடுவது ஏன்? என்பதே கதை.” என கூறினார்.
    ×