என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பட விழாவில் விஜய் அளவிற்கு யாரும் மரியாதையாக நடத்தவில்லை என்று பேசி இருக்கிறார்.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், ’தலைவி’ படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய கங்கனா, ஏ.எல்.விஜய் அளவிற்கு தன்னை மரியாதையாக எந்த இயக்குநரும் நடத்தியதில்லை’ என்று கூறி கண் கலங்கினார்.

    இயக்குனர் விஜய் - கங்கனா ரணாவத்

    ’தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23-ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நேற்று அறிவிக்கப்பட்ட 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் நடிகை கங்கனா ரணாவத்திற்கு 'மணிகர்னிகா: ஜான்சி ராணி' மற்றும் 'பங்கா' படங்களுக்காக சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
    பரத் நடிப்பில் வெளியான ’காதல்’ படத்தில் நடித்த நடிகர் பாபு சடலமாக மீட்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதல்’. பாலாஜி சக்திவேல் இயக்கிய இப்படத்தில் பரத் ஹீரோவாகவும், சந்தியா ஹீரோயினாகவும் நடித்திருந்தார்கள். உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

    இந்த படத்தில் விருச்சிககாந்த் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பாபு. மேன்சனில் தங்கியிருக்கும் வருங்கால இயக்குநரிடம், சான்ஸ் கேட்க போவதாக அவரின் கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். மேலும் ’ஆனா டைரக்டா ஹீரோ தான்’ என்பார். சிறிய கதாப்பாத்திரம் என்றாலும் ரசிகர்களிடம் அதிகம் கவரப்பட்டது.

    காதல் பாபு

    இப்படத்திற்கு பிறகு பாபுவுக்கு சரியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். சமீபத்தில் அவரது தாய், தந்தை இருவரும் மரணமடைந்ததால், மிகவும் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார். அவர் சாலைகளில் சுற்றித்திரியும் புகைப்படம் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, திரைத்துறையினர் சிலர் அவருக்கு உதவி செய்தனர். ஆனால் ஊரடங்குக்கு பிறகு பாபுவின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்நிலையில் சாலையோரம் நின்ற ஆட்டோவில் படுத்து உறங்கிய அவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கர்ணன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது.
    பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் கர்ணன். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

    அதனையடுத்து, தொடர்ந்து வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், கண்டா வரச் சொல்லுங்க, பண்டாரத்தி, தட்டான் தட்டான் உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கர்ணன் படத்தின் டீசர் இன்று வெளியானது. 

    தனுஷ்

    இதில் தனுஷின் அறிமுகம் கடைசியில் இருக்கிறது. மக்களின் துயர் துடைக்க வாளுடன் வரும் வரும் தனுஷிடம், அடிச்சு தொரத்து கர்ணா, ஒருத்தரையும் விடாத என்ற வசனம் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. இப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக இருக்கிறது.
    இ.வி.ஆர்.முத்துக்குட்டி இயக்கத்தில் ஸ்ரீ, கவுசிக், தீசிகா, வெண்பா, கிரிஜா நடிப்பில் உருவாகி வரும் ‘பேராசை’ படத்தின் முன்னோட்டம்.
    இ.வி.ஆர்.முத்துக்குட்டி இயக்கத்தில் உருவாகும் படம் ‘பேராசை’. பிரபல இசையமைப்பாளர் சங்கர்கணேசின் மகன் ஸ்ரீ, இந்த படத்தின் மூலம் கதாநாயகன் ஆகியிருக்கிறார். இன்னொரு கதாநாயகன், கவுசிக். மாடல் அழகிகளான தீசிகா, வெண்பா, கிரிஜா ஆகிய மூன்று பேரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். 

    ‘பூவிலங்கு’ மோகன், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, வி.ஆர்.ராஜேஷ் என்கிற சுதர்சன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதையை ஈசன் எழுத, சக்தி அருண்கேசவன், சிஹான் சரவணன் ஆகிய மூவரும் தயாரிக்கிறார்கள்.

    பேராசை படக்குழு

    ‘பேராசை’ படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: “குடிபோதைக்கு அடிமையானவன் போதையில் எடுக்கும் முடிவுகள் எல்லாமே அவனுக்கு எதிராக அமைகின்றன. போதையில் இருந்து அவன் மீண்டானா, இல்லையா? என்பதே படத்தின் கதை என கூறினார்.
    டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர் தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை புதுமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சிவகார்த்திகேயன்

    இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக அயன், கவண், கோ, காப்பான் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும், விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது, இயக்குனர் ஆர்.கண்ணன் இதனை இயக்குகிறார்.
    மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இப்படத்தை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். இதற்கான ரீமேக் உரிமையை இயக்குனர் ஆர்.கண்ணன் கைப்பற்றி உள்ளார். இப்படத்தை அவரே இயக்கியும் வருகிறார். பெயரிடப்படாத இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.

    இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது அதுகுறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பாடகி சின்மயியின் கணவரும், நடிகருமான ராகுல் ரவீந்திரன் தான் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். 

    ராகுல் ரவீந்திரன், சின்மயி

    இவர் ஏற்கனவே ‘மாஸ்கோவின் காவிரி’, ‘விண்மீன்கள்’, ‘வணக்கம் சென்னை’ போன்ற தமிழ் படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    காடன் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் விஷ்ணு விஷால், சூரி புகார் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
    நிலம் வாங்கி தருவதாக கூறி விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா தன்னை ஏமாற்றியதாக நடிகர் சூரி சமீபத்தில் பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்த விஷ்ணு விஷால், தன் தந்தை குற்றமற்றவர் என சமூக வலைதளங்களில் கூறி வந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், காடன் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் விஷ்ணு விஷாலிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘இந்த வழக்கின் விசாரணை நடந்து வருவதால் என்னால் இதுபற்றி அதிகம் பேசமுடியாது. ஆனால் நிலம் சம்பந்தப்பட்ட புகாரில் எனக்கும், என் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். அவர் அளித்த புகாரின் ஒவ்வொரு வரிக்கும் என்னால் விளக்கம் அளிக்கமுடியும். 

    சூரி, விஷ்ணு விஷால்

    அப்படி செய்தால், சூரியின் இருண்ட பக்கங்களை விளக்க வேண்டி இருக்கும். அவ்வாறு செய்தால், எனக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். சில வருடங்களுக்கு முன்னர் என் தந்தையின் காலில் விழுந்து வணங்கி, நீங்கள் தான் என்னுடைய கடவுள் என்று சொன்ன ஒருவர், தற்போது எங்கள் மீது புகார் அளித்திருக்கிறார். சூரி மூலம் தான் சம்பாதித்து சாப்பிடவேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை’ எனக் கூறினார்.
    தலைவி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
    2019-ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் 7 விருதுகளை தமிழ்த் திரையுலகம் வென்றுள்ளது. அசுரன் படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் விருதும், சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருதும், விஸ்வாசம் படத்திற்காக டி இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும், ஒத்த செருப்பு படத்துக்கு 2 தேசிய விருதுகளும் அறிவிக்கப்பட்டன.

    ஜிவி பிரகாஷ்

    இந்நிலையில் தலைவி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, தேசிய விருது வாங்கிய கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அசுரன் படத்தின் பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கிடைக்காதது தனக்கு வருத்தத்தை தந்ததாகவும் கூறினார். வரும் ஆண்டுகளில் ஜிவி பிரகாஷுக்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
    காதல், சரித்திர, நகைச்சுவை கதைகளில் நடிக்க விருப்பம் இருப்பதாக நடிகை காஜல் அகர்வால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “திருமணத்துக்கு பிறகு அதிக மரியாதை தருகிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனது அம்மாவின் கஷ்டம் என்ன என்பது திருமணம் செய்த பிறகுதான் எனக்கு தெரிய வந்தது. எனது காதல் திருமணத்தில் ஒரு சினிமா எடுக்கும் அளவுக்கு கதை உள்ளது. 

    எனது கணவரை பத்து வருடத்துக்கு முன்பே தெரியும். ஆரம்பத்தில் நட்பாகத்தான் பழகினோம். கொரோனா ஊரடங்கில்தான் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் வந்தது. இதை ஊரடங்கு திருமணம் என்று சொல்லலாம். திருமணத்துக்கு பிறகு வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. 

    காஜல் அகர்வால்

    கதை தேர்விலும் வித்தியாசம் பார்க்கவில்லை. எனக்கு காதல், சரித்திர, நகைச்சுவை கதைகளில் நடிக்க விருப்பம். வில்லியாக நடிப்பதிலும் பிரச்சினை இல்லை. ஆனால் கதை பிடித்து இருக்க வேண்டும்”. இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
    தமிழில் ‘மைனா’, ‘பீட்சா’, ‘பேட்ட’ உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள வெங்கடேஷ் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்,
    குணச்சித்திர நடிகரான வெங்கடேஷ், தமிழில்  ‘மைனா’, ‘பீட்சா’, ‘பேட்ட’ உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விருதுநகரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் நடிப்புத்துறையின் மீது இருந்த ஆர்வத்தால் சென்னைக்கு குடிபெயர்ந்தார்.  கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வந்துள்ளார்.

    வெங்கடேஷ்

    ‘பாரதி கண்ணம்மா’, ‘ஈரமான ரோஜாவே’ ஆகிய தொடர்களில் நடித்து வந்த இவர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவருக்கு வயது 55. நடிகர் வெங்கடேஷுக்கு, பாமா என்ற மனைவியும், நிவேதா என்ற மகளும், தேவ் ஆனந்த் என்ற மகனும் உள்ளனர். நடிகர் வெங்கடேஷின் திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது, இதில் திரையுலகை சேர்ந்த சிலரும் போட்டியிடுகின்றனர்.
    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் திரையுலகை சேர்ந்த சிலரும் தேர்தலில் போட்டியிட உள்ளனர். 

    அந்த வகையில் பிரபல நடிகர் மயில்சாமியும் தேர்தலில் போட்டியிட உள்ளார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். அதன்பின் அக்கட்சியில் இருந்து வெளியேறிய அவர், தற்போது சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட உள்ளார். அவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். 

    மயில்சாமி

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருந்தது. அந்த வகையில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மயில்சாமிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

    விசில் சின்னம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ள மயில்சாமி, இதுகுறித்து கூறியதாவது: “எம்ஜிஆர் படத்தை பார்த்து பலமுறை நான் விசில் அடித்திருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு விசில் சின்னமே கிடைத்துள்ளது பெருமையாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
    ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள தலைவி படத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி, சமுத்திரகனி ஆகியோர் நடித்துள்ளனர்.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    கங்கனா ரணாவத்

    இந்நிலையில், இப்படத்தின் நாயகி கங்கனா ரணாவத்தின் பிறந்தநாளான இன்று, தலைவி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘நீ மக்கள விரும்புனா... மக்கள் உன்ன விரும்புவாங்க... அதுதான் அரசியல்’, ‘என்ன அம்மாவா பாத்திங்கனா என் இதயத்துல உங்களுக்கு இடம் இருக்கும்’ என்பன போன்ற வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த டிரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தலைவி படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


    ×