என் மலர்
சினிமா

அரவிந்த் சாமி, கங்கனா ரணாவத்
அசத்தல் வசனங்களுடன் பிரம்மிப்பூட்டும் தலைவி பட டிரெய்லர்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள தலைவி படத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி, சமுத்திரகனி ஆகியோர் நடித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தின் நாயகி கங்கனா ரணாவத்தின் பிறந்தநாளான இன்று, தலைவி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘நீ மக்கள விரும்புனா... மக்கள் உன்ன விரும்புவாங்க... அதுதான் அரசியல்’, ‘என்ன அம்மாவா பாத்திங்கனா என் இதயத்துல உங்களுக்கு இடம் இருக்கும்’ என்பன போன்ற வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த டிரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தலைவி படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
Here's the #ThalaiviTrailer (Tamil).https://t.co/jN2jqteMJJ@KanganaTeam#Vijay@thearvindswami@vishinduri@ShaaileshRSingh@BrindaPrasad1@KarmaMediaent@TSeries@vibri_media@ZeeStudios_@Thalaivithefilm#HiteshThakkar#ThirumalReddy
— VIBRI (@vibri_media) March 23, 2021
Next Story






