என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நான் வேலை பார்த்த பகுதி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். எல்லாருமே நான் வேலை செய்யும் இடத்தை கடந்துதான் போகவேண்டும்.
    ஒருநாள் அந்தப் பாட்டு அணைக்கரை தலைமை என்ஜினீயரின் காதில் கேட்டுவிட்டது.

    அதன் பிறகு நடந்தது பற்றி இளையராஜா கூறுகிறார்:

    "நான் வேலை பார்த்த பகுதி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். எல்லாருமே நான் வேலை செய்யும் இடத்தை கடந்துதான் போகவேண்டும். ஆனால் அன்று நான் பாடத்தொடங்கிய அந்த நேரத்தில் இருந்த கொஞ்ச சத்தமும் இல்லாமல் போயிருந்தது. என் பாட்டுக்காகத்தான் இப்படி எல்லோரும் அமைதியாகி விட்டார்களோ என்ற மகிழ்ச்சியில் பாடும் சத்தத்தை அதிகரித்தேன்.

    அப்போதுதான் `ஸ்பாட் விசிட்'டுக்காக அங்கே வந்திருந்த தலைமை என்ஜினீயர் என் பாட்டைக் கேட்டுவிட்டார். அப்போதும் கூட என் குரல் குறையவில்லை. நிற்கவும் இல்லை.

    என்னை நெருங்கியவர், "ஹேய்! கம் ஹியர் மேன்' (இங்கே வா) என்றார்.

    தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த `ஓஸ் பைப்'பை மடக்கி வைத்துவிட்டு அருகில் போனேன்.

    "ஹு ஆர் ? வாட் இஸ் யுவர் நேம்? (யார் நீ? உன் பெயர் என்ன?) என்று கேட்டார்.

    "ராஜையா'' என்றேன்.

    "கொஞ்சமும் தயங்காமல் நான் பதில் சொன்னதைப் பார்த்தவர், "நீ படித்திருக்கிறாயா?'' என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

    "எஸ் சார். எய்த் ஸ்டாண்டர்டு'' என்றேன்.

    "எய்த் ஸ்டாண்டர்டு?'' என்று ஆச்சரியமாக கேட்டவர், அரை டிராயரும், குள்ளமுமாக இருந்த என்னை ஆச்சரியமாக மேலும் கீழும் பார்த்தார். அதே வேகத்தில் "ஆபீசுக்கு வந்து என்னைப்பார்'' என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.

    அதன்படி ஆபீசுக்குப் போய் அவரை பார்த்தேன். "நீ நாளையில் இருந்து `ஓஸ் பைப்' பிடிக்க வேண்டாம். இங்கே ஆபீசுக்கு வந்துவிடு'' என்றார்.

    "சரி சார்'' என்று சொல்லிவிட்டு சந்தோஷத்துடன் வெளியே வந்தேன். அங்கிருந்த அவரது உதவியாளரிடம், "இங்கே வந்து நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டேன்.

    அவரோ, "ஏய்! உன்னை ஆபீஸ் பையனாகப் போட்டிருக்காருய்யா.  போ! போ!'' என்றார்.

    அடுத்த நாள் சந்தோஷமாக ஆபீசுக்குப் போனேன். அங்கே நாலைந்து செகரட்டரி, கிளார்க், லெட்ஜர் கீப்பர், அக்கவுண்டண்ட் இவ்வளவு பேர்தான் மொத்தம். இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்ட ஒரே கட்டிடத்தில் தடுப்பு வைத்து அமைக்கப்பட்ட நான்கு மேஜை - நாற்காலிகள். அவ்வளவுதான்.

    ஒரு பைலை கையில் கொடுத்து, "அவரிடம் கொடு'' என்பார், ஒருவர். "இதை அவர்கிட்டே கொடுத்து கையெழுத்து வாங்கி வா!'' என்பார், இன்னொருவர். இங்கும் அங்குமாக போய்க்கொண்டிருந்தேனே தவிர, மற்றபடி ஒரே போர். ஏனென்றால் பாட்டுப்பாடவே சான்ஸ்

    இல்லையே!இதுபோக மத்தியானம் ஆபீசர் கேம்பசில் இருந்த என்ஜினீயர் முரளீதரனுக்கு கேரியரில் சாப்பாடு எடுத்துப் போய் பரிமாறி வரவேண்டும். ஒரு மைல் தூரம் நடந்துதான் போய்வரவேண்டும்.

    ஒரு நாள் முன்னதாகவே போய் காத்திருப்பேன். இன்னொரு நாளோ அவர் காத்திருக்க, நான் லேட்டாகப்போய் திட்டு வாங்குவேன். சரிவரப் பரிமாறாவிட்டால், அதற்கு வேறு திட்டு.

    என்னுடைய சர்வீசில் அவருக்குத் திருப்தி இல்லாததால், என்னை மறுபடியும் அணைக்கட்டுப் பகுதிக்கு மாற்றி, `ஓஸ் பைப்' பிடிக்க அனுப்பி விட்டார்கள்.''

    இவ்வாறு கூறும் இளையராஜாவுக்குள் அணை தொடர்பான, ஒரு சோகமும் இருக்கிறது. அதுபற்றி கூறுகிறார்:

    "அப்போது பெரும்பாலும் அணையின் வேலைகள் முடிவுக்கு வந்து கொண்டிருந்த நேரம். திடீரென ஒருநாள் அரசாங்க அறிவிப்பாக தண்டோரா ஒலித்தது.

    அணையின் பின்பகுதியில் நீர் தேங்கும் இடத்தில் இருந்த ஊர்களான காமக்காபட்டி உள்ளிட்ட 11 கிராமங்களில் வசிப்பவர்கள் அதைக் காலி செய்துவிட்டு வேறு ஊருக்குப் போய்விட வேண்டும். இப்படி வெளியேற கடைசிநாள்'' என்று கெடு தேதியையும் அறிவித்தார்கள்.

    அணை உச்சியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்த என் கண்ணில் மக்கள் ஊரை காலி செய்துவிட்டுப் போகும் காட்சி கண்ணில் படும். கெடு நாள் நெருங்க நெருங்க, கூட்டம் கூட்டமாய் அங்கிருந்த மக்கள் வெளியேறுவதைக் காண மனம் சகிக்கவில்லை.

    அவர்கள் வாழ்வதற்கு அரசாங்கம் வேறு நிலங்கள் கொடுக்கலாம். நிலத்தோடு அவர்களுக்கிருந்த அந்த உறவின் பிரிவுக்கு எதை ஈடாகக் கொடுக்க முடியும்?''

    - இவ்வாறு மிக இளம் வயதிலேயே மற்றவர்களின் பிரச்சினைகளையும் மனதுக்குள் பதியமிட்டுக்கொண்ட இளையராஜா, ஒரு வருடம் வைகை அணையில் வேலை செய்து முடித்துவிட்டார். கையில் பணம் கொஞ்சம் சேர்ந்திருந்தது.

    "இந்த வருடம் நிச்சயம் தேவாரம் ஸ்கூலில் பணம் கட்டி சேர்ந்து ஜோதிடத்தை பொய்யாக்கி விடவேண்டும்'' என்று திட்டமிட்டார்.

    ஆனால், அவர் பள்ளியில் சேருவதற்கு முன்பாக கேரளாவில் நடந்த தேர்தலில் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவேண்டி இருந்தது. அதற்காக இளையராஜாவும் கேரளா சென்றார்.

    இதுபற்றி அவரே கூறுகிறார்:

    "1957-ல் நடந்த பொதுத்தேர்தலில் எல்லா இடத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்க, கேரளாவில் மட்டும் கம்யுனிஸ்டு கட்சி வெற்றி பெற்றது. ஒட்டு மொத்த இந்தியாவில் ஒரேயொரு மாகாணத்தில் (கேரளா) மட்டும் காங்கிரசுக்கு எதிராக வேறு கட்சி உருவானதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் தேவிகுளம் பீர்மேடு தொகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலை.

    இதனால் அந்தத் தொகுதிக்கு நடந்த மறு தேர்தலில் காங்கிரசுக்கும் கம்யுனிஸ்டுக்கும் "வாழ்வா சாவா'' நிலை. எல்லா தேசியத் தலைவர்களும் அங்கே முகாமிட்டு இருந்தனர். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற டென்ஷனான நிலை. இந்த தேர்தல் பிரசாரத்துக்கு கம்யுனிஸ்டு கட்சி சார்பில் பாவலர் அண்ணன் போயிருந்தார்.

    ஸ்கூலில் சேருவதற்கு முன் வந்த விடுமுறை நாட்களில் நானும் பாஸ்கரும் பாவலர் அண்ணனை பார்க்க மூணாறுக்கு போனோம்.

    கம்ïனிஸ்டு கட்சி ஆபீசில் ஏகப்பட்ட கூட்டம். தேர்தல் காரியதரிசி அமர்ந்திருக்க, பல எஸ்டேட் கட்சித் தலைவர்கள் வரிசையாக நின்றிருந்தார்கள். அவர்களிடம் பேசிய செயலாளர், "கம்யுனிஸ்டு தலைவர்கள் பி.ராமமூர்த்தி, பி.டி.ரணதிவே, எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.கோபாலன், ஜோதிபாசு, ராஜேஸ்வரராவ், ஜீவானந்தம் என அத்தனை பேரும் உங்கள் தொகுதிகளுக்கு அடுத்தடுத்து வருவார்கள்'' என்றார்.

    இதைக்கேட்ட எஸ்டேட் தொழிலாளர்கள் அத்தனை பேரும் ஒரே குரலில் "தோழரே! இவர்களெல்லாம் எங்களுக்கு வேண்டாம். பாவலர் கையில் ஒரு மைக்கை கொடுத்து அவரை மட்டும் எங்களுடன் அனுப்பினீர்களென்றால், இந்தத் தொகுதியை நாங்கள் ஜெயித்துக் காட்டுகிறோம்'' என்றார்கள்.

    இது என் கண் முன்னே நடந்த நிகழ்ச்சி.

    தொழிலாளர்கள் இப்படிச் சொன்னதும் அவர்களிடம் பேசிய செயலாளர், "பாவலர் கண்டிப்பாக வருவார். அவர் பாடியபின் கூட்டம் தலைவர்களோடு நடக்கும்'' என்றார்.

    உடனே மளமளவென வேலைகள் தொடர்ந்தன. பாவலர் அண்ணன் ஒரு ஜீப்பில் மைக்கை கட்டிக்கொண்டு ஒவ்வொரு எஸ்டேட்டாக பாடிச்சென்றதை கண்ணாரக் காணும் பாக்கியம் எனக்கும் பாஸ்கருக்கும் கிடைத்தது.
    கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்ட 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.
    சென்னை:

    இந்திய திரைப்பட துறைக்கு உயரிய விருதாகக் கருதப்படும் தேசிய விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே, 2019-ம் ஆண்டுக்கான 67-வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 7 விருதுகளை தமிழ்த் திரையுலகம் வென்றுள்ளது.

    சிறந்த தமிழ் படம் - அசுரன்

    சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்)
     
    சிறந்த இசையமைப்பாளர் - டி.இமான் (விஸ்வாசம்)

    சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)

    சிறந்த குழந்தை நட்சத்திரம் - நாகா விஷால் (கே.டி. எனும் கருப்புதுரை)

    சிறந்த ஒலிக்கலவை - ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு)

    சிறப்பு பிரிவு, ஜூரி விருது - ஒத்த செருப்பு (தமிழ்)

    இந்நிலையில், தமிழ் இசைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி என இசையமைப்பாளர் டி.இமான் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக டி.இமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆண்டவன் அருள், என் பெற்றோரின் ஆசி மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் இசைப்பிரியர்களின் ஆதரவால் இது சாத்தியமாகி இருக்கிறது.

    சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி. தமிழ் இசைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது தனி மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.
    பூபதிராஜா இயக்கத்தில் ஜெய்வந்த், சோனா, சரவணன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அசால்ட்’ படத்தின் முன்னோட்டம்.
    ‘காட்டுப்பய சார் இந்த காளி’, ‘மத்திய சென்னை’ ஆகிய படங்களில் நடித்த ஜெய்வந்த், ‘அசால்ட்’ என்ற படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இது, கதாநாயகனை மையப்படுத்திய படம். தாதாக்களை பற்றிய கதை.

    ‘பருத்தி வீரன்’ சரவணன், சென்ட்ராயன், ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சோனா, ‘களவாணி’ புகழ் தேவி, ‘மைனா’ புகழ் நாகு ஆகிய மூன்று கவர்ச்சி நடிகைகளும் வடசென்னை தாதாக்களாக நடித்து இருக்கிறார்கள். பூபதிராஜா இயக்கி இருக்கிறார். 

    ஜெய்வந்த்

    படத்தை பற்றி தயாரிப்பாளர் ஜெய்வந்த் கூறியதாவது: “இது, ஏற்கனவே குறும் படமாக வந்தது. இப்போது முழு நீள படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை ‘ரிலீஸ்’ செய்ய தியேட்டர் கிடைக்கவில்லை. அதனால் ஓடிடியில் ‘ரிலீஸ்’ செய்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.
    பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தினார் பார்த்திபன். இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இந்த படத்தை திரையுலகினர் பலரும் வியந்து பாராட்டினர்.

    இந்நிலையில், ஒத்த செருப்பு படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறப்பு தேசிய விருது, சிறந்த ஒலிப்பதிவு ஆகிய பிரிவுகளில் ஒத்தசெருப்பு படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

    பார்த்திபன்

    தேசிய விருது குழுவில் ஜூரியாக இருந்த கங்கை அமரன், ஒத்த செருப்பு படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “ஒத்த செருப்பு படத்திற்கு எந்த பிரிவில் விருது கொடுப்பதென்று தெரியாமல் ஜூரிக்கள் குழம்பிப் போயினர். ஏனெனில் அந்த படத்தில் கதை, வசனம், நடிப்பு, திரைக்கதை, இயக்கம் என அனைத்தையும் பார்த்திபனே செய்திருந்தார். அவை அனைத்துமே சிறப்பாக இருந்ததால் ஜூரிக்கள் அனைவரும் முடிவு செய்து, அப்படத்திற்கு சிறப்பு தேசிய விருது அறிவித்ததாக” கங்கை அமரன் தெரிவித்தார்.
    67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் விருது வென்றவர்கள் குறித்த முழு பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்.
    ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய திரைப்பட துறைக்கு உயரிய விருதாக கருதப்படும் இவ்விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால், 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படவில்லை. ஆதலால், 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன் பட்டியலை பார்ப்போம்

    சிறந்த தமிழ் படம் - அசுரன்

    சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்)

    சிறந்த நடிகர் - மனோஜ் பாஜ்பாய் (போன்ஸ்லே, இந்தி)

    சிறந்த நடிகை - கங்கனா ரணாவத் (பங்கா, மணிகர்னிகா)

    சிறந்த இயக்குனர் - சஞ்சய் பூரண் சிங் சவுகான் (பாத்தர் ஹூரைன் - இந்தி)

    சிறந்த படம் - மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் (மலையாளம்)

    சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் - விக்ரம் மோர்(கன்னடம்)

    சிறந்த நடன அமைப்பாளர் - ராஜு சுந்தரம் (மகாராசி, தெலுங்கு)

    சிறந்த இசையமைப்பாளர் - டி.இமான் (விஸ்வாசம்)

    சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)

    சிறந்த துணை நடிகை - பல்லவி ஜோசி (தி தாஸ்கென்ட் பைல்ஸ், இந்தி)

    சிறந்த குழந்தை நட்சத்திரம் - நாகா விஷால் (கே.டி. எனும் கருப்புதுரை)

    சிறந்த வசனகர்த்தா - விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி

    சிறந்த ஒளிப்பதிவு - கிரிஷ் கங்காதரன் (ஜல்லிக்கட்டு, மலையாளம்)

    சிறந்த ஒலிக்கலவை - ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு)

    சிறந்த அறிமுக இயக்குனர் - மதுக்குட்டி சேவியர் (ஹெலன், மலையாளம்)

    சிறந்த குழந்தைகள் படம் - கஸ்தூரி (இந்தி)

    சிறந்த படத்தொகுப்பு - நவீன் நூலி(ஜெர்சி, தெலுங்கு)

    சிறந்த பாடகர் - பி.பராக்(கேசரி, இந்தி)

    சிறந்த பாடகி - சவானி ரவீந்திரா (பார்டோ, மராத்தி)

    சிறப்பு பிரிவு, ஜூரி விருது - ஒத்த செருப்பு (தமிழ்)
    67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசுரன் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும், விஸ்வாசம் படத்திற்காக டி இமானுக்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

    நடிகர் பார்த்திபன், தயாரித்து, இயக்கி, நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு ஜூரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்த செருப்பு படத்தில் பணியாற்றிய ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிப்பதிவாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
    67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன, இதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் அசுரன் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
    மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்து, கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன். தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் நடித்திருந்தார். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

    தனுஷ் நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற பெயர் அசுரனுக்கு கிடைத்தது. இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரித்திருந்தார்.
    மலையாளத்தில் சாஷி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.
    கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தேசம் என்று கூறப்படும் கேரள மண்ணில் தயாரான சில படங்கள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், மலையாளத்தில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் தான் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். 

    இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 

    இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்கப்போகிறவர்கள் விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணும், ராணாவும் நடிக்கின்றனர்.

    பிருத்விராஜ், பிஜுமேனன்

    இந்நிலையில், இதன் இந்தி ரீமேக்கில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஜான் ஆபிரகாமும், அபிஷேக் பச்சனும் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஷன் மங்கல் படத்தை இயக்கிய ஜெகன் சக்தி இப்படத்தை இயக்க உள்ளார். ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
    ‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவிக்குமார், தற்போது அயலான் படத்தை இயக்கி வருகிறார்.
    விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘இன்று நேற்று நாளை’. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவிக்குமார். பேண்டஸி படமான இது அந்தாண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

    இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்த ரவிக்குமார், அயலான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    இயக்குனர் ரவிக்குமாரின் தாயார் 

    இந்நிலையில், இயக்குனர் ரவிக்குமாரின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை ரவிக்குமாரின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான கவுரவ் நாராயணன், தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் ரவிக்குமாரின் தாயார் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், தற்போது மலையாளத்தில் பிரபல நடிகரின் படத்தில் நடித்து வருகிறார்.
    ‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி திறமையை நிரூபித்தவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இவரது இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    இவர் கடந்த 2019-ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தில் இடம்பெறும் சிங்கப்பெண்ணே பாடல் காட்சியில் நடித்திருந்தார். அவர் நடித்த முதல் படமும் இதுதான்.

    ஏ.ஆர்.ரகுமான், உன்னிகிருஷ்ணன், மோகன்லால்

    இந்நிலையில், தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகும் ‘ஆராட்டு’ எனும் மலையாள படத்திலும் ஏ.ஆர்.ரகுமான் நடித்து வருகிறார். உன்னிகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சியில் ஏ.ஆர்.ரகுமான் நடிக்கிறாராம். படப்பிடிப்பு தளத்தில் மோகன்லாலுடன், ஏ.ஆர்.ரகுமான் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
    மாநகரம் படம் இந்தியில் மும்பைகார் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது, இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார்.
    தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மாநகரம் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. மும்பைகார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட்டில் அறிமுகமாகிறார். தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில், மும்பைகார் படத்தில் இடம்பெறும் விஜய் சேதுபதியின் தோற்றம் அடங்கிய புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. கோர்ட் சூட் அணிந்தபடி கையில் துப்பாக்கியுடன் இருக்கும் விஜய் சேதுபதியின் இந்த மாஸான புகைப்படம் வைரலாகி வருகிறது.

    மும்பைகார் பட போஸ்டர், விஜய் சேதுபதி

    மேலும் நடிகர் விஜய் சேதுபதி இந்தியில், கிஷோர் பாண்டுரங் இயக்கும் காந்தி டாக்ஸ், அந்தாதூன் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் மெரி கிறிஸ்துமஸ் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இதுதவிர ஷாஹித் கபூருடன் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகி உள்ள ‘தலைவி’ படத்தில் நடிகை கங்கனா ரணாவத் ஹீரோயினாக நடித்துள்ளார்.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தலைவி படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    கங்கனா ரணாவத்

    இந்நிலையில், தலைவி படத்திற்காக தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கங்கனா தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: “தலைவி படத்தின் டிரெய்லர் வெளியீட்டிற்கு இன்னும் ஒரு நாள்தான் உள்ளது. இந்த பயோபிக்கை படமாக்கும் போது நான் எதிர் கொண்ட ஒரே சவால், 20 கிலோ எடை கூடியதும், பின் சில மாதங்களில் எடை குறைத்ததும் தான்.” எனக் குறிப்பிட்டு படத்தின் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
    ×