என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்.
    மூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்.

    "சினிமாவில் ஹீரோவாக, இன்னொரு முறை முயற்சி செய்கிறேன்'' என்று அப்பா விடம் கூறிவிட்டு சென்னைக்கு வந்த விஜயகுமார், தனியாக ஒரு அறை எடுத்து தங்கினார். 6 வருட இடைவெளியில் எஸ்.வி.எஸ்.குழுவினர் நாடகங்கள்நடத்துவது குறைந்து விட்டதால், நடிகை சந்திரகாந்தாவின் நாடகக் குழுவில் சேர்ந்தார். கதாநாயகன் வேடத்தில் நடித்தார்.

    நாடகம் இல்லாத நாட் களில் மறுபடியும் சினிமா வாய்ப்புக்கு முயலுவார்.போகிற கம்பெனிகளில் எல்லாமே சொல்லி வைத்தது போல் `பார்க்கலாம்'என்பதே பதிலாக இருந்தது.

    இப்படியே 11 மாதம் ஆகிவிட்டது. ஒரு மாதத்திற்குள் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஊருக்குப் போகவேண்டியதுதான். இதனால் கடைசி ஒரு மாதத்தில் வாய்ப்பு தேடும் முயற்சியை தீவிரமாக்கினார்.

    அப்போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:-

    "சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் சிவாஜி சார் நடித்த படத்தை மேட்னி ஷோ பார்க்கச் சென்றிருந்தேன். படம் முடிந்ததும், அறைக்குத் திரும்புவதற்காக சாந்தி தியேட்டரை ஒட்டியுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது மாலை 6 மணி இருக்கும்.

    திடீரென என்னையே கூர்மையாக பார்த்தபடி வந்த ஒருவர், "தம்பி, எங்கே இருக்கிறீங்க?'' என்று கேட்டார்.

    சினிமாவுக்கு கதை எழுதும் கதாசிரியர் பாலமுருகன்தான் அவர். ஏற்கனவே வாய்ப்பு கேட்டுப் போனதில் அவரிடமும் நான் அறிமுக மாகியிருந்தேன். ரொம்பவும் அக்கறையாக என்னை விசாரிப்பார். என் முயற்சி நிச்சயம் வெற்றி தேடித்தரும் என்று மனதுக்குள் தன்னம் பிக்கை

    விதைப்பார்.அப்படிப்பட்டவர் என்னிடம் வந்து விசாரித்ததும் என் மனதிலும் கொஞ்சம் சந்தோஷம். "நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதோடுசினிமா வாய்ப் புக்கும் முயன்று கொண்டிருக் கிறேன்'' என்றேன்.

    அவர் உடனே ரொம்பவே உரிமையுடன் "ஏன் தம்பி என்னை வந்து பார்க் காமல் இருந்தீர்கள்? டைரக்டர் பி.மாதவன் சார்புதுமுகங்களை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். உங்கள் முகவரி தெரியாததால் உடனடியாக உங்களை தொடர்பு கொள்ள முடியாமல் போயிற்று'' என்றவர், "தம்பி! நாளைக்கு காலை 10 மணிக்கு தேனாம்பேட்டையில் இருக்கும் மாதவன் சார் கம்பெனிக்கு வந்திடுங்க'' என்று கேட்டுக் கொண்டார். முகவரியையும் கொடுத்தார்.

    பாலமுருகன் சொன்னபடி மறுநாள் காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை ஆபீசுக்கு போனேன். அங்கே டைரக்டர் பி.மாதவன், கேமராமேன் பி.என்.சுந்தரம் ஆகியோர் இருந்தார்கள்.

    நான் போயிருந்த நேரத்தில் கதாசிரியர் பாலமுருகனும் வந்துவிட்டார். நேராக என்னை டைரக்டர் பி.மாதவனிடம் அழைத்துச் சென்று, "சார்! நம்ம கதைக்கு 2 ஹீரோ. அதுல ஒரு ஹீரோவுக்கு இவர் சரியா இருப்பார். சிவகுமார்னு பேரு'' என்றார்.

    டைரக்டர் பி.மாதவன் என்னை மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்தார். பிறகு கேமராமேன் பி.என்.சுந்தரத்தை அழைத்தவர்,  "ஒரு டெஸ்ட் எடுத்திடுங்க'' என்றார்.

    மறுநாளே டெஸ்ட்! ஏவி.எம். 6-வது மாடிக்கு வரச்சொல்லி டெஸ்ட் எடுத்தார்கள். முடிவு டைரக்டர் பி.மாதவனுக்கு திருப்தியாக இருந்ததால், "தம்பி! வசனம் பேசிக் காட்டுங்க'' என்றார். பேசிக்காட்டினேன்.

    பிறகு, "ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் சிவாஜி சார் நடிக்கும்போது பயன் படுத்திய உடைகளை எனக்கு தந்து நடிக்கச் சொன்

    னார்கள்.நான் நடிக்கும்போது, அதை படமாக்கினார்கள்.

    அதை திரையிட்டுப் பார்த்த டைரக்டர் பி.மாதவன், "தம்பி! நம்ம படத்தில் நீங்க நடிக்கிறீங்க'' என்றார்.

    "கந்தன் கருணை'' படத்தில் முருகன்வேடத்துக்காக எந்த சிவகுமாருடன் போட்டி ஏற்பட்டதோ, அதே சிவகுமாரும் நானும் இந்தப் படத்தில் இரட்டை நாயகர்கள். அந்தப்படம்தான் "பொண்ணுக்கு தங்க மனசு.''

    "ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி சார் சாதாரண கிராமத்து இளைஞன் ராமனாக இருந்து பின்னாளில் பிரபல நடிகராக வருவது போல் கதை அமைக்கப்பட்டிருந்தது. நடிகராகும்போது அவருக்கு பெயர் விஜயகுமார். அதனால் அதுவரை சிவகுமாராக இருந்த எனக்கு `விஜயகுமார்' என்ற பெயரை சூட்டினார், டைரக்டர் பி.மாதவன்.

    பஞ்சாட்சரம், சிவகுமாராகி பிறகு விஜயகுமாராக மாறியது இப்படித்தான்.''

    இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாசலம், உடலமைப்பு பற்றி வரும் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபிராமி வெங்கடாசலம். இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் ரிலீசுக்கு முன்பே பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றுவிட்டார்.

    கொரோனா லாக்டவுன் நேரத்தில் அபிராமியின் உடல் எடை அதிகரித்துவிட்டதால் அதற்குப்பின் அவரை பார்த்தவர்கள், குண்டாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. தற்போது அபிராமியின் உடல் அமைப்பு குறித்து ட்ரோல் செய்பவர்கள், ஆபாசமாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

    அபிராமி

    "நான் குண்டாகிவிட்டதாக கமெண்டுகளில் பலரும் கூறுவதை பார்க்கிறேன். ஆம் குண்டான தென்னிந்திய பெண் தான். எங்களுக்கும் இப்படிப்பட்ட ஆண்களுக்கும் உள்ள வித்யாசம் இதுதான். உங்களை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது உங்கள் அம்மா தான். என்னை பற்றி கமெண்ட் செய்யும் முன் உங்கள் அம்மா பற்றி நினைவில் கொள்ளுங்கள். பெண்களை மரியாதை உடன் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்."

    "இது ஜனநாயக நாடு, ஆனால் வெட்கமில்லாத, மரியாதை இல்லாத நாடு இல்லை. அதனால் கொஞ்சம் உணர்வோடு பேசுங்கள், இப்படிபட்ட நான்சென்ஸ் வேண்டாம்." என்று அபிராமி கூறி உள்ளார்.
    தமிழில் ரன், ஜீ, சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய லிங்குசாமி கோபமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு செய்திருக்கிறார்.
    தமிழக சட்டசபை தேர்தல் நேற்று பாதுகாப்பான முறையில் நடந்து முடிந்தது. ரஜினி, விஜய், கமல், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். அதேபோல் திரைப் பிரபலங்கள் சிலர் தேர்தலில் வாக்களிக்காமல் இருந்துள்ளனர்.

    இதில் இயக்குனர் லிங்குசாமியும் ஓட்டு போட வில்லை என்று செய்திகள் வெளியானது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ராஜ்முந்திரியில் எனது அடுத்த படத்திற்கான வேலைக்கு இடையில், என் வாக்கை செலுத்தவே சென்னை வந்து பதிவு செய்தேன். 

    லிங்குசாமி

    சில ஊடகங்கள் நான் வாக்கை செலுத்தவில்லை என்று தவறாக செய்தி வெளியிட்டுள்ளது. நான் எனது கடமையை செய்தது போல் நீங்களும் உங்கள் கடமையை சரியாக செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று புகைப்படத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையின் ஒரு வயது குழந்தை பியானோ வாசிக்கும் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
    தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. 

    ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார். குழந்தை பெற்ற பிறகும் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் முன்பை போலவே வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வாழ்ந்து வருகிறார்.

    எமி ஜாக்சன்

    இந்நிலையில் தற்போது தன் செல்ல மகன் ஆண்ட்ரியாஸ் கியூட்டாக பியானோ வாசிக்கும் அழகான வீடியோவை ரசித்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


    ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
    லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் தயாரிப்பில், ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு “முருங்கைக்காய் சிப்ஸ்” என பெயரிட்டுள்ளனர். இதில் ஹீரோவாக சாந்தனுவும், அவருக்கு ஜோடியாக அதுல்யாவும் நடிக்கிறார்கள். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ஊர்வசி, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    சாந்தனு - அதுல்யா ரவி

    ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இதில் சாந்தனுவே இது ஏ-வா யு-வா? என்று கேட்கிறார். ஒரு திருமணமாகிய புதிய இளம்ஜோடிக்கு முதலிரவு நடப்பதை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார்கள். தற்போது இந்த டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.
    மலையாளத்தில் முன்னணி நடிகையாகவும், கர்ணன் படத்தின் கதாநாயகியுமான ரஜிஷா விஜயன், நான் ஒரு மண் மாதிரி என்று பேட்டியளித்துள்ளார்.
    மலையாளத்தில் முன்னணி நடிகையான ரஜிஷா விஜயன் கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வரும் 9ந்தேதி வெளியாக இருக்கும் கர்ணன் படத்தை மாரி செல்வராஜ் இயக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ரஜிஷா விஜயன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது சின்ன விபத்து ஏற்பட்டு காலில் கட்டு போட்டிருந்தேன். அப்போதுதான் கர்ணன் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. 

    தாணு சார் அலுவலகத்தில் தான் கதை கேட்டேன். கதை கேட்டதும் மிகவும் பிடித்துவிட்டது. என்னுடைய ஜூன் படம் பார்த்துவிட்டு தான் என்னை தேர்வு செய்ததாக மாரி செல்வராஜ் கூறினார்.

    ரஜிஷா விஜயன்

    ஒரு படத்தில் என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதுதான் முக்கியம். உடையோ அலங்காரமோ அல்ல. அதே சமயம் என் உடல்வாகுக்கு பொருத்தமான உடை தான் அணிந்து நடிக்க முடியும். நான் ஒரு மண் மாதிரி. அதை அழகாக உருவாக்குவது டைரக்டர் கைகளில் தான் இருக்கிறது. கர்ணன் படத்திலேயே எனக்கு மேக்கப் கிடையாது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தன்னுடைய பலத்தை நிரூபித்து இருக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    காதல் திருமணம் செய்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் அவ்வப்போது தங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருவார்கள்.

    அது இணையத்தில் வைரல் ஆகிவிடும். முன்னதாக அகமதாபாத் விமான நிலையத்தில் குழந்தை வமிகாவுடன் அனுஷ்கா ஷர்மா முன்னே செல்ல பின்னால் விராட் கோலி அனைத்து பைகளையும் சுமந்து சென்ற புகைப்படம் வைரல் ஆனது.

    அனுஷ்கா ஷர்மா - விராட் கோலி

    தற்போது, அனுஷ்கா சர்மா, விராட் கோலியை தூக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். விராட் கோலியை பின்னால் இருந்து தூக்குகிறார் அனுஷ்கா, பின்னர் மீண்டும் தூக்க சொல்லி விராட் கேட்க மீண்டும் தூக்குகிறார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. 


    அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தில் நடித்து வரும் பிரசாந்த், தனது பிறந்தநாளை சிம்ரனுடன் கொண்டாடி இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் பிரசாந்த். இவர் தற்போது அந்தகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2018 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது. பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இப்படத்தை இயக்குகிறார்.

    இதில் பிரசாந்த்துக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், சமுத்திரகனி, யோகிபாபு, பிரியா ஆனந்த், வனிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    அந்தகன் படக்குழுவினர்

    இந்நிலையில், நடிகர் பிரசாந்த் தனது பிறந்தநாளை அந்தகன் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். இதில் நடிகை சிம்ரன், வனிதா, சமுத்திரகனி, மனோபாலா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
    தமிழில் பொல்லாதவன், ஆடுகளம், ரௌத்திரம் ஆகிய படங்களில் நடித்த சென்ட்ராயன் பட விழாவில் கண்கலங்கி பேசி இருக்கிறார்.
    தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் அறிமுகமானவர் நடிகர் சென்ட்ராயன். தொடர்ந்து ‘சிலம்பாட்டம்’ , ‘ஆடுகளம்’, ‘மூடர் கூடம்’, ‘ரௌத்திரம்’ என பல படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றார். தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்து குறித்து சென்ட்ராயன் கூறும்போது, ‘நான் தியேட்டரில் கைத்தட்டல் வாங்கி ரொம்ப நாள் ஆச்சு. பொல்லாதவன், ஆடுகளம் நல்ல படங்களில் நடித்தேன். அது ரொம்ப பெரிய போதை. அந்த படங்களில் நிறைய கைத்தட்டல் வாங்கிட்டு, பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் தான் இருந்தேன். அது ரொம்ப பெரிய வலி. திரும்பி ஊருக்கே போய் விடலாம் என்று நினைத்தேன்’ என்று கூறி கண்கலங்கினார்.

    சென்ட்ராயன்

    மேலும் தற்போது சுல்தான் வெளியாகி இருக்கிறது. என் கதாபாத்திரத்தை நிறைய மக்கள் ரசித்து கைத்தட்டினார்கள். நான் வேலை செய்த தியேட்டரில் என் படம் ஓடுகிறது என்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது’ என்றார்.
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
    பூனம் பாஜ்வா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சேவல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் அதையடுத்து சில தமிழ் படங்களில் நடித்தார். கடைசியாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாசின் ‘குப்பத்து ராஜா’ படத்தில் நடித்திருந்தார்.

    பூனம் பாஜ்வா

    அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் சமூகவலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பூனம் தற்போது வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. இந்த போட்டோஷூட்டிற்கு ரசிகர்கள் லைக்குகள் குவிந்து வருகின்றன.
    வெற்றி துரைசாமி இயக்கத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என்றாவது ஒருநாள்’ படத்தின் முன்னோட்டம்.
    உண்மை சம்பவங்களின் தொகுப்பாக ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்துக்கு, ‘என்றாவது ஒருநாள்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. முன்னாள் மேயர் சைதை துரைசாமி யின் மகன் வெற்றி துரைசாமி, இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். 

    தனது முதல் படம் பற்றி அவர் கூறியதாவது: “நாளிதழில் வரும் செய்திகளை படித்து விட்டு எளிதில் கடந்து விடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில், ‘என்றாவது ஒருநாள்’ படத்தின் கதை உருவாக்கப்பட்டது. கால்நடை வளர்ப்பு மற்றும் உலகமயமாக்கல் கொண்டு வந்த இடம் பெயர்வு பற்றிய கதை, இது.

    விதார்த், ரம்யா நம்பீசன்

    குடிநீர் பஞ்சம், குழந்தை தொழிலாளர்கள், நல்ல எதிர்காலத்துக்காக காத்திருக்கும் மக்களின் சவால்களை எல்லாம் காட்சிகளாக்கி, மக்களை சிந்திக்க தூண்டும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. எளிய மக்களும், கால்நடைகளுடனான அவர்களின் உறவும் கதையில் முக்கிய பகுதியாக வைக்கப்பட்டுள்ளது.

    நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் விதார்த், வித்தியாசமான கதைகளில் மட்டுமே நடிக்கும் ரம்யா நம்பீசன், ‘சேதுபதி’ படத்தில் நடித்த ராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தி தியேட்டர் பீப்பிள் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார்”.
    பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.
    தமிழ்த் திரையுலகில் வடிவேலு, சந்தானம், யோகிபாபு, சூரி உள்பட பல்வேறு பிரபலங்கள் நகைச்சுவை நடிகர்களாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக உயர்ந்துள்ளனர். தற்போது நடிகர் சதீஷும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளார். இவர் தற்போது, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கவுள்ளார். இது அவர் இயக்கும் முதல் படமாகும்.

    படக்குழுவினருடன் சதீஷ்

    பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை, இன்று நடைபெற்றது. இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் சென்னையிலேயே நடைபெற உள்ளது. இப்படத்தில் சதீஷுக்கு ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்கவுள்ளார். பிரவீன் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, அஜீஷ் அசோக் இசையமைக்க உள்ளனர்.

    இந்தப் படத்தின் பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
    ×