என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நேற்று நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், வாக்களிக்காத திரைப்பிரபலங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்.
    தமிழக சட்டசபை தேர்தல் நேற்று பாதுகாப்பான முறையில் நடந்து முடிந்தது. ரஜினி, விஜய், கமல், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். அதேபோல் திரைப் பிரபலங்கள் சிலர் தேர்தலில் வாக்களிக்காமல் இருந்துள்ளனர்.

    அவர்கள் யார்.. யார் என்பது பின்வருமாறு: ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா, யுவன், ஜி.வி.பிரகாஷ், மணிரத்னம், வெற்றிமாறன், கவுண்டமணி, மோகன், கார்த்திக், ராஜ்கிரண், அரவிந்த் சுவாமி, வடிவேலு, விஜயகாந்த், பிரபுதேவா, லாரன்ஸ், விஷால், இயக்குனர் சுந்தர் சி, சிவா, சமுத்திரக்கனி, கவுதம் மேனன், கோவை சரளா, மீனா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இதற்கான காரணம் என்னவென்றும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

    தனுஷ், ஐஸ்வர்யா


    அதேபோல் நடிகர் தனுஷும் வாக்களிக்கவில்லை. 'தி க்ரே மேன்' எனும் ஹாலிவுட் படத்துக்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளதால் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. ஐஸ்வர்யா தனுஷும் அவருடன் சென்றிருப்பதால் வாக்களிக்கவில்லை. அதேபோல் ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்தும் வாக்களிக்கவில்லை. இதற்கான காரணம் என்னவென்று அவருடைய தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

    நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் தன்னால் வாக்களிக்க முடியவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழக சட்டசபை தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.
    நடிகர் கமலின் 232 வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டே வெளியிடப்பட்டாலும், கமலின் அரசியல் பணிகள் காரணமாக படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.

    கமல்


    இதனிடையே தமிழக சட்டசபை தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். மேலும் கமல்ஹாசனுடன் விமானத்தில் பயணிக்கும் போது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ் ‘ஆரம்பிக்கலாங்களா’ என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது உறுதியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
    மலையாள நடிகரான பஹத் பாசில் தமிழில் ஏற்கனவே வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக இயக்கும் படம் விக்ரம். கமல் நடிப்பில் உருவாக உள்ள இப்படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டு நவம்பர் மாதமே வெளியானது. இருப்பினும் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.

    இதனிடையே விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக பஹத் பாசில் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் பஹத் பாசில், சமீபத்திய பேட்டியில் அதனை உறுதி செய்துள்ளார். மேலும் இப்படத்தில் அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாகவும், அந்த கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்ததால் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் பஹத் பாசில் கூறி உள்ளார்.

    விக்ரம் பட போஸ்டர்


    விக்ரம் படத்தில் பஹத் பாசில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இவர் ஏற்கனவே மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சிம்புவுடன் எடுத்த புகைப்படங்களை நடிகர் ஜெய் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான பகவதி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இவர் கைவசம் பிரேக்கிங் நியூஸ், எண்ணித் துணிக, பார்ட்டி போன்ற படங்கள் உள்ளன.

    நடிகர் ஜெய் தற்போது இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் சிவ சிவா படத்திற்கு ஜெய் தான் இசையமைத்துள்ளார்.

    ஜெய், சிம்பு


    நடிகர் ஜெய் நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். இந்நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடிகர் சிம்பு திடீரென கலந்துகொண்டு சர்ப்ரைஸ் கொடுத்ததாக, நடிகர் ஜெய் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சிம்புவுடன் எடுத்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படம், காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராக உள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அடுத்ததாக நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு கடந்த வாரமே பூஜை போடப்பட்டாலும், படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. ஏனெனில் சட்டசபை தேர்தலுக்கு பின் தொடங்க திட்டமிட்டிருந்தனர்.

    அதன்படி தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் சைக்கிளில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

    விஜய்


    இந்நிலையில், நடிகர் விஜய் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றுள்ளார். ஜார்ஜியா செல்வதற்காக, அவர் விமான நிலையம் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

    தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற உள்ளது. அதை முடித்துவிட்டு சென்னை திரும்பும் படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்பை மே மாதம் நடத்த உள்ளனர்.

    விஜய்


    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

    அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்தப் படம் தயாராக உள்ளது.
    நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வாக்களிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழக சட்டசபைத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் பார்த்திபன் வாக்களிக்கவில்லை. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தேர்தலுக்கு முந்தைய நாள் டுவிட் செய்திருந்த அவர், தேர்தலில் ஓட்டு போடாதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். 

    இந்நிலையில், இது குறித்து நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண், காது, முகம் முழுவதும் வீங்கிவிட்டது. டாக்டருக்கு போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன். 

    பார்த்திபன்

    எனவே தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற ஒவ்வாமை ஏற்படும். அதுவும் எனக்கு ஏற்கனவே அலர்ஜி இருந்ததால் மட்டுமே இவ்வாறு ஆனது. என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்” என்று பதிவிட்டுள்ளார். 



    நடிகை சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
    தென்னிந்திய நடிகை என்ற பெயரே போதும் என்று நடித்து வருபவர் அனுஷ்கா. இந்தி படங்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை மறுத்துவிட்டார். சமந்தாவும் தன்னை தேடிவந்த ஒரு இந்தி பட வாய்ப்பை மறுத்துள்ளார். தமிழ், தெலுங்கில் சமந்தா நடித்து வெளியான படம் யு-டர்ன். இதை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள்.

    அதனால் இந்தி பதிப்பிலும் சமந்தாவையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியபோது, ஏற்கனவே நடித்த வேடத்தில் மீண்டும் நடிக்க விரும்பவில்லை என்று மறுத்து விட்டாராம் சமந்தா. அதனால் சமந்தாவின் வேடத்தில் நடிக்க, பிரபல பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

    சமந்தா

    நடிகை சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர தெலுங்கில் உருவாகும் சகுந்தலம் எனும் புராண கதையம்சம் கொண்ட படத்திலும் நடித்து வருகிறார்.
    ஏழை மாணவிக்கு உதவிய நடிகை காஜல் அகர்வாலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
    தமிழில் இந்தியன்-2, தெலுங்கில் ஆச்சார்யா போன்ற பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்நிலையில், டுவிட்டரில் கல்வி உதவி கேட்ட மாணவி ஒருவருக்கு, அவர் பண உதவி செய்துள்ளார்.

    ஐதராபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர், தான் கல்லூரி தேர்வுக்கு ரூ. 83 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், சமீபத்தில் வேலையை இழந்ததால், தன்னால் அந்தத் தொகையை செலுத்த முடியவில்லை. அதனால் தனக்கு உதவி செய்யுமாறு காஜல் அகர்வாலிடம் கேட்டிருந்தார்.

    காஜல் அகர்வால்

    இதையடுத்து நடிகை காஜல் அகர்வால், தனது உதவியாளர் மூலமாக சம்பந்தப்பட்ட மாணவியை தொடர்பு கொண்டு, அவரது வங்கி கணக்கு விவரங்களை கேட்டறிந்து, தன்னிடம் ரூ.83 ஆயிரம் கேட்ட மாணவியின் வங்கி கணக்கில் ரூ. 1 லட்சம் செலுத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஏழை மாணவிக்கு உதவிய நடிகை காஜல் அகர்வாலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தை, அவரது தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.
    பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.

    மேலும் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சமுத்திரக்கனி

    இந்நிலையில், இப்படத்தில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனியும் ஒப்பந்தமாகி உள்ளாராம். அவர் இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

    அதேபோல் அந்தகன் படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக இயக்குனர் தியாகராஜன், சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. `அன்பாலயா' பிரபாகரன் தயாரித்த "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் ஹீரோவானார்.
    நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. `அன்பாலயா' பிரபாகரன் தயாரித்த "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் ஹீரோவானார்.

    நடிகர் விஜயகுமாருக்கு ஒரே ஆண் வாரிசு அருண்குமார். சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்.'' இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது சினிமா வாய்ப்பு தேடி வந்தது. அதனால் "எம்.பி.ஏ.'' படிக்க அமெரிக்காவுக்கு போக இருந்த திட்டத்தை கைவிட்டு, முழுநேர நடிகராகி விட்டார், அருண்குமார்.

    மகன் அருண்குமார் சினிமாவுக்கு வந்தது பற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "அருண்குமார் படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்துக் கொண்டிருந்தார். அவரது பள்ளி வாழ்க்கையே, பல பள்ளிகளில் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் நாடு விட்டு நாடும் தொடர்ந்தது.

    ஆரம்பப் படிப்பு சென்னை டான்போஸ்கோவில் தொடங்கியது. அதன் பிறகு `சோ'வின் சகோதரர் நடத்தி வரும் "லா சாட்டலின்'' பள்ளி. அதன் பின்னர் அமெரிக்காவில்

    2 வருடம் என உலகம் சுற்றியது. நான் நடிப்பை நிறுத்திவிட்டு அமெரிக்காவில் 2 வருடம் ரெஸ்டாரெண்ட் நடத்திய நேரத்தில், அருண் 2 வருடமும் அமெரிக்காவில் படித்தார். அதன் பிறகு சென்னை வந்தபோது மறுபடியும் `லா சாட்டலின்' பள்ளியில் படிப்பு.

    அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்குத்தான் பெற்றோர்களின் டிரான்ஸ்பரை பொறுத்து, இப்படி ஊர்ஊராய் பள்ளிகளில் மாறி மாறி படிக்க வேண்டியிருக்கும். அருணுக்கும் இந்த மாதிரியான அனுபவம் கிடைத்தது.

    பள்ளிப்படிப்பை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்.'' பட்டப்படிப்பில் சேர்ந்த பிறகு கூட, அருணுக்குள் சினிமா ஆர்வம் இருந்ததாக தெரியவில்லை. அந்த வாய்ப்பை தேடி வந்து ஏற்படுத்திக் கொடுத்தவர் தயாரிப்பாளர் `அன்பாலயா' பிரபாகரன்.

    அருண் "பி.காம்.'' இரண்டாம் ஆண்டு படிப்பை தொடர்ந்த நேரத்தில் `அன்பாலயா' பிரபாகரன், என்னை வந்து சந்தித்தார். அவரது படத்தில் நான் நடிப்பது தொடர்பாகத்தான் பேச வந்திருக்கிறார் என்று எண்ணினேன். அவரோ வந்ததும் வராததுமாக, "ஒரு நல்ல லவ் ஸ்டோரி. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். உங்க மகன் அருணை ஹீரோவாக அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்'' என்றார்.

    எனக்கு அதிர்ச்சி. சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் எந்த எண்ணமும் இல்லாத மகனுக்குள் வலுக்கட்டாயமாக சினிமாவை திணிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அதனால் அவரிடம், "பையன் பி.காம். முடித்து விட்டு, அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிக்க இருக்கிறான். அதனால் சினிமா வேண்டாமே'' என்று தவிர்க்கப்பார்த்தேன்.

    ஆனால் நடந்ததை தனது அம்மா மூலம் தெரிந்து கொண்ட அருண், "நான் நடிக்கிறேன். தயாரிப்பாளர் கிட்ட `சரி'ன்னு சொல்லும்படி அப்பாகிட்ட சொல்லுங்க'' என்று கூறியிருக்கிறார்.

    மகனின் விருப்பம் அதுவென தெரிந்த பிறகு தடைபோட விரும்பவில்லை. அதோடு லவ் ஸ்டோரி, ஏ.ஆர்.ரகுமான் இசை என்று தயாரிப்பாளர் பிரமாண்டம் காட்டி விட்டுப் போவதால், "சரி; நடிக்கட்டும்'' என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் படத் தயாரிப்பு தாமதித்துக் கொண்டே போனது. தயாரிப்பாளரைக் கேட்டால், "ஏ.ஆர்.ரகுமான் 3 பாட்டுக்கு டிïன் தந்துவிட்டார். இன்னும் 2 பாட்டுக்கு டிïன் தந்து விட்டால் படத்தை முழு வீச்சில் தொடங்கி முடிக்க ஏதுவாக இருக்கும்'' என்று சொன்னார்.

    எனக்கு நம்பிக்கை குறைந்தது. அவசரப்பட்டு சரி சொல்லிவிட்டோமோ என்று கூட நினைத்தேன்.

    இந்த நிலையில் திடுமென ஒரு நாள் வந்து நின்றார், தயாரிப்பாளர். ரகுமான் இசை தாமதமாவதால் வேறு ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறேன். சுந்தர் சி. இயக்குகிறார். படத்துக்கு "முறை மாப்பிள்ளை'' என்று பெயர் வைத்திருக்கிறேன். முதலில் அருண் இந்தப் படத்தில் நடிக்கட்டும். அடுத்து ரகுமான் பாட்டை முடித்துக் கொடுத்ததும் `லவ் ஸ்டோரி' எடுக்கலாம்'' என்றார்.

    சரி! நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து சினிமாவுக்குள் அருண் காலெடுத்து வைத்தாயிற்று. இனி பின்வாங்கினால் சரியாக இருக்காது. நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்றபடி "முறை மாப்பிள்ளை'' படத்துக்கு அருணை ஹீரோவாக்க சம்மதித்தேன்.

    படத்தின் பூஜை ஏவி.எம். ஸ்டூடியோ பிள்ளையார் கோவிலில் நடந்தது. நண்பர் ரஜினி வந்து அருணுக்கு பொட்டு வைத்து வாழ்த்தி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அப்போது அவர், "என் இனிய நண்பர் விஜயகுமாரின் மகன் அருண் சினிமாவுக்கு வருவதை வாழ்த்துகிறேன். அவர் நல்லா வரவேண்டும். நல்லா வருவார்'' என்று வாழ்த்தினார்.

    அவர் வாழ்த்து பலித்தது. "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் அருண் நிலையான ஹீரோ ஆனார். தொடர்ந்து "பிரியம்'', "காத்திருந்த காதல்'', "கங்கா கவுரி'', "துள்ளித்திரிந்த காலம்'', "கண்ணால் பேசவா'', "அன்புடன்'', "பாண்டவர் பூமி'', "முத்தம்'', "இயற்கை'', "ஜனனம்'', "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது'' என தொடர்ந்து இப்போது ரிலீசான "தவம்'' வரை நடிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    இப்போதும் "வேதா'', "துணிச்சல்'' என திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கும் படங்களும் உண்டு.''

    இப்படிச் சொன்ன விஜயகுமார், நடிகர் அர்ஜ×ன், அருணை வைத்து தயாரித்த "தவம்'' படம் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து
    கொண்டார்.

    "அர்ஜ×ன் சார் என்னிடம் அடிக்கடி அருண் பற்றி கேட்பார். "நன்றாக நடிக்கவும் செய்கிறார். `பைட்'டும் சூப்பரா போடறார். பிறகு ஏன் விஜய், அஜித் மாதிரி இன்னும் அருண் பேசப்படவில்லை?'' என்று கவலை தெரிவிப்பார்.

    "எல்லாத்துக்குமே நேரம்னு ஒண்ணு இருக்கே'' என்பேன் நான்.

    ஒருநாள் திடுமென என்னை சந்தித்த அர்ஜ×ன், "அருண் விஷயத்தில் நீங்கள் சொன்ன `நேரம்' இப்போது வந்து விட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள். நான் அருணை ஹீரோவாகப்போட்டு ஒரு படம் தயாரிக்கிறேன். `தவம்' என்பது படத்துக்கு பெயர்'' என்றார்.

    எனக்கு ஆனந்த அதிர்ச்சி. தமிழ் சினிமாவில் ஒரு முதல் தர நடிகர்; `ஆக்ஷன் கிங்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் மாதிரி ஹீரோக்கள் தொடர்ந்து படம் எடுத்து தங்களை வளர்த்துக் கொள்ளவே நினைப்பார்கள். மாறுபட்டு என் மகனை ஹீரோவாகப் போட்டு படம் தயாரிக்கப்போகிறேன் என்று சொல்கிறாரே! இப்படியும் ஒரு அபூர்வ மனிதரா?'' என்ற வியப்புதான் ஆனந்த

    அதிர்ச்சியாகியிருந்தது.சொன்னபடியே `தவம்' படத்தை தயாரித்து ரிலீஸ் பண்ணி அருணுக்கு ஒரு வெற்றிப்படம் கொடுத்த தயாரிப்பாளராகவும் எனக்குள் நிலைத்து விட்டார்.

    படத்தில் அருணை வித்தியாசமான கதைக் களத்தில் நடிக்க வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் தற்கொலைக்கு முயலும் கதாநாயகியை, "எங்கே என் கண்ணைப் பார்த்து சொல்லு'' என்று அருண் கேட்கிறபோது, அருணின் அப்பா, ஒரு நடிகர் என்பதையெல்லாம் நான் மறந்து ஒரு ரசிகனாக அந்தக் காட்சியில் அருணின் நடிப்போடு ஒன்றிவிட்டேன்.

    அருண்குமார் இந்தப்படம் முதல் `அருண் விஜய்' என்று, பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். புதிய பெயரில் வெற்றியும் அவரோடு கைகோர்த்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை.

    அர்ஜ×ன் என் மகன் அருண் விஜய்யை ஹீரோவாக்கியது என்னை ரொம்பவே நெகிழ்ச்சியாக்கி விட்டது. இதன் விளைவு `தவம்' பட பாடல் கேசட்டு வெளியீட்டு விழாவின்போது என்னில் எதிரொலித்தது. அந்த விழாவில், "இனி நானும் வருஷம் 2 படம் தயாரிப்பேன். அதில் ஒரு படத்தில் அருண் விஜய் நடிப்பார். அடுத்த ஆண்டு முதல் தயாரிப்பு தொடங்கும்'' என்று கூறினேன். சொன்னபடி அடுத்த ஆண்டு படத்தயாரிப்பு தொடர்பான வேலைகளை இப்போதே தொடங்கி விட்டேன்.

    அருண் விஜய்யிடம் நான் அடிக்கடி சொல்லும் வாசகம்: "எப்போதும் `பிரஷ்' ஆகவே இரு! எந்தப்படம் பண்ணினாலும் அதை முதல் படமாக நினைத்து சிரத்தையோடு பண்ணு! உழைப்பு இருக்கிறது; தொழில் அக்கறை இருக்கிறது. இதோடு முழு ஈடுபாடும் கலந்து கொள்ளும்போது வெற்றியும் உன்னுடன் பின்னிப் பிணைந்திருக்கும்'' என்பதுதான்.

    சினிமா மீதான அவரது `தவம்' தொடர்ந்து நல்லவிதமாகவே கைகூடும் என்பது அவரது அப்பாவாக என் நம்பிக்கை.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
    துவாரக் ராஜா இயக்கத்தில் கார்த்திக், லிங்கா, மோனிஷா, கல்பிக்கா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரோல்’ படத்தின் முன்னோட்டம்.
    ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே "காதல் கசக்குதய்யா" படத்தை இயக்கியவர்.‘பரோல்’ படத்தில் கார்த்திக் மற்றும் லிங்கா கதாநாயகர்களாக நடித்துள்ளனர். 

    இவர்களுக்கு ஜோடியாக மோனிஷா மற்றும் கல்பிக்கா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். மேலும் வினோதினி, ஜானகி சுரேஷ், டி.கே.ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மகேஷ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜ்குமார் அமல் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை முனீஸ் கவனிக்கிறார்.
    அம்மா கொடுத்த தைரியத்தில்தான் இன்னும் சினிமாவில் நீடிக்கிறேன் என நடிகை அஞ்சலி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    ‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறிய அவர், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார். 

    அவர் காதல் தோல்வியில் இருந்து மீண்டது குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: நான் காதலில் விழுந்தேன் என்றும், எனக்கு குழந்தைகள் இருக்கிறது என்றும் தகவல் பரவி உள்ளது. காதலில் விழவே இல்லை என்று நான் பொய் சொல்ல மாட்டேன். ஒருவரோடு காதலில் இருந்தேன். அது நிறைவேறவில்லை. அது நடந்து இருந்தால் நானே பெருமையாக எல்லோருக்கும் சொல்லி இருப்பேன். 

    அஞ்சலி

    நடிகை மட்டுமன்றி எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் காதல் தோல்வியானால் அந்த வேதனையை தாங்கி கொள்வது கஷ்டம்தான். பெண்கள் இதயம் கல் இல்லை. ஆனால் அந்த வேதனையில் இருந்து நான் கொஞ்சம் சீக்கிரமாகவே வெளியே வந்து விட்டேன். அதற்கு எனது அம்மாதான் காரணம். அவர் வலிமையான பெண். அம்மா கொடுத்த தைரியத்தில்தான் இன்னும் சினிமாவில் நீடிக்கிறேன்”. இவ்வாறு அவர் கூறினார். 
    ×