என் மலர்
சினிமா செய்திகள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன், யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள ‘கர்ணன்’ படத்தின் முன்னோட்டம்.
தனுஷின் 41-வது படம் கர்ணன். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கி உள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ளது. இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுதி உள்ளார். திலீப் சுப்புராயன் ஸ்டாண்ட் பணிகளை கவனித்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகள் தொடர்ந்து நடத்த அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகள் தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சின்னத்திரை, திரைப்படக் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனையும், தடுப்பூசியும் போட்டு கொண்ட பின்னர் தான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனை சின்னத்திரை மற்றும் திரைப்படப் படப்பிடிப்பு நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி வருகிற ஏப்ரல் 10-ந் தேதி முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் தான் இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் வரை திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கி வந்தன. பின்னர் அதற்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் முதல் 100 சதவீதம் ஆக்கப்பட்டது.

தற்போது இரண்டே மாதத்தில் மீண்டும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். நாளை தனுஷின் கர்ணன் படம் ரிலீசாக உள்ள நிலையில், அரசின் இந்த அறிவிப்பு படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, கமல் ஆகியோர் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. சிவா இயக்கும் இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படமும் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தை கமல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். இப்படத்தில் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு திட்டமிட்டபடி முடிக்கப்பட்டால், இப்படத்தை தீபாவளிக்கு வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினியின் சந்திரமுகியும், கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் கடந்த 2005-ம் ஆண்டு ஒரே நாளில் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இதனிடையே, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், அந்த புகைப்படத்தின் பின்னணி குறித்து தெரியவந்துள்ளது.

அதன்படி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கண்ணன் இயக்கும், தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். அப்படத்தில் இவர் திருமணமான பெண்ணாக நடிக்கிறார். அதில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும், ராகுல் ரவீந்திரனுக்கும் திருமணமாகும் காட்சியை படமாக்கி வந்துள்ளனர். அந்த புகைப்படம் தான் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் நடிகை பவித்ரா லட்சுமி ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.
விளம்பரங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்த நடிகை பவித்ரா லட்சுமி, குக் வித் கோமாளி எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கும் அவர் தகுதி பெற்றுள்ளார்.
இந்நிலையில், நடிகை பவித்ரா, கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிகர் சதீஷுக்கு ஜோடியாக அவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்குகிறார்.

பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. பிரவீன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, அஜீஷ் அசோக் இசையமைக்கின்றனர். இந்தப் படத்தின் பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திரைப் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், பழம்பெரும் இயக்குனரான எஸ்.பி.முத்துராமன் கொரோனா அறிகுறியுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது.

தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு இருந்தாலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களை வைத்து கிட்டத்தட்ட 75 படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்றுள்ளார்.
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம், ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர்.
இதையடுத்து மூன்று மாதங்கள் நடைபெறாமல் இருந்த படப்பிடிப்பு, கடந்த மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் ரஜினிகாந்தும் பங்கேற்று நடித்து வந்தார்.

இந்நிலையில், அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஐதராபாத் சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் ஐதராபாத் சென்றுள்ளார்.
அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கும் இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்ணாத்த படப்பிடிப்பிற்காக சென்னை விமானநிலையத்தில் இருந்து ஐதராபாத் புறப்பட்டார் ரஜினிகாந்த்#Thalaivar#Rajinikanth#SuperStar#Annaatthepic.twitter.com/5RstaKBRzY
— Sathish Maalaimalar (@SatthiEshwar) April 8, 2021
பாகுபலி, தலைவி, விஜய்யின் மெர்சல் என பல்வேறு படங்களுக்கு விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் அர்த்தங்கி, ஸ்ரீ கிரிஷ்ணா, ராஜன்னா, ஸ்ரீ வள்ளி ஆகிய படங்களை இயக்கியவர் விஜயேந்திர பிரசாத். இயக்குனர் ராஜமவுலியின் தந்தையான இவர், பாகுபலி படத்துக்கு திரைக்கதை எழுதி பிரபலமானார். தற்போது கங்கனா ரணாவத் நடிப்பில் தயாராகி உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்துக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.
விஜய்யின் மெர்சல் படத்துக்கும் திரைக்கதை எழுதி இருந்தார். கங்கனா ரணாவத் நடிப்பில் வந்த ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கை கதையான மணிகர்ணிகா, தெலுங்கில் வெற்றி பெற்ற மகதீரா, எமதுங்கா, சத்ரபதி உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.

விஜயேந்திர பிரசாத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். தன்னுடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாராம் நடிகை நக்மா.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே அமீர் கான், மாதவன், அக்ஷய் குமார், ஆலியா பட், கத்ரீனா கைப் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது நடிகை நக்மாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாராம் நக்மா. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நடிகை நக்மா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்களில் சமூக கருத்துக்களை கூறும் சமுத்திரகனி ஓட்டு போடவில்லை என விமர்சனம் எழுந்த நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. திரையுலகினர் பலரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். அதேசமயம் பல முக்கிய திரைப்பிரபலங்கள் ஓட்டளிக்கவில்லை என தகவல் பரவியது. அதில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. படங்களில் சமூக கருத்துக்களை கூறும் சமுத்திரகனி ஓட்டு போடவில்லை என விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், அவர் ஓட்டு போட்ட விரல் ‘மை’ அடையாளத்துடன் புகைப்படம் வெளியிட்டு குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், அதில் கூறியதாவது: “நானும், என் மனைவியும் காலை 6.55 மணிக்கே வாக்குச்சாவடிக்கு சென்றுவிட்டோம்.

ஆனால் ஓட்டுப் பதிவு செய்யும் இயந்திரத்தில் சிறு கோளாறு ஏற்பட்டதால், அதை சரிசெய்ய 40 நிமிடம் ஆனது. பின்பு முதல் ஆளாக ஓட்டு போட்டு விட்டு வந்தோம். வழக்கம் போல் நான் என் கடமையை சரியாக செய்துவிட்டேன். நான் ஓட்டு போட்டதை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை” என தெரிவித்துள்ளார்.
சகுந்தலை படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டன, இறுதியில் சமந்தாவை ஒப்பந்தம் செய்தனர்.
சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் சகுந்தலையாக நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படம் நேரடியாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர். சகுந்தலை படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் சமந்தாவை ஒப்பந்தம் செய்தனர்.

இந்தப் படத்தில் நடிக்க சமந்தா ரூ.2.50 கோடி சம்பளம் வாங்குகிறார். இதற்கு முன்பு ரூ.3 கோடி வாங்கிய சமந்தா, சகுந்தலை படத்தில் தனது கதாபாத்திரம் பிரதானமாக இருப்பதாலும், தான் நடிக்கும் முதல் புராண படம் என்பதாலும் சம்பளத்தை ரூ.50 லட்சம் குறைத்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சமந்தாவுக்கு ஜோடியாக இளம் நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார்.






