என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா, தற்போது சமுத்திரகனிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
    பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.

    மேலும் சிம்ரன், வனிதா, சமுத்திரகனி, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    அந்தகன் படக்குழு

    இந்நிலையில், இப்படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவலை நடிகை வனிதா வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சமுத்திரகனிக்கு, மனைவியாக நடிப்பதாக வனிதா தெரிவித்துள்ளார்.
    மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு இதுவரை 70 சதவீதம் முடிந்துள்ளது.
    மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக அமிதாப்பச்சன், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா, ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

    ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். இதன் படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்து காடுகளில் நடத்தினர். பின்னர் கொரோனா பரவலால் படப்பிடிப்பு பல மாதங்களாக முடங்கியது. ஊரடங்கு தளர்வில் மீண்டும் ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்தினர். அடுத்து அம்பாசமுத்திரம் பகுதியில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்கும் காட்சிகளை படமாக்க திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்தனர். 

    பொன்னியின் செல்வன் போஸ்டர், மணிரத்னம்

    ஆனால் கொரோனா இரண்டாவது அலை பரவி நடிகர், நடிகைகள் நோய் தொற்றில் சிக்குவதாலும் மும்பையில் நடந்த அக்‌ஷய்குமாரின் இந்தி படப்பிடிப்பில் பங்கேற்ற 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும், அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெறுவதாக இருந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை படக்குழுவினர் ரத்து செய்து விட்டனர். இதுவரை பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ளது.
    மனோரஞ்சிதம் படமாகும்போது, பல சோதனைகளைச் சந்தித்தது.
    "மனோரஞ்சிதம்'' படமாகும்போது, பல சோதனைகளைச் சந்தித்தது.

    அதுபற்றி கோவி.மணிசேகரன் கூறியதாவது:-

    "மனோரஞ்சிதம் நாவல், அக்காலத்தில் மிகப்பிரபலம்.

    ஒரு சலவைத் தொழிலாளியின் மகள் தன் வீட்டுக்கு வரும் அழுக்குத் துணிகளில், ஒரு பட்டு ஜிப்பாவில் மட்டும் மனோரஞ்சிதம் வாசனை மணப்பதை கவனிப்பாள். அந்த சென்ட் வாசனையை வைத்து, அதை அணிபவன் எத்தகைய அழகான இளைஞனாக இருப்பான் என்று கற்பனை செய்வாள்; காதல் கொள்வாள். கடைசியில் அவன் ஒரு குஷ்டரோகி என்பதுதான் கிளைமாக்ஸ்!

    எஸ்.வி.சுப்பையாதான், அந்த சென்ட் வாசனை ஜிப்பாக்காரராக நடித்தார்.

    4 பக்கங்கள் கொண்ட நீண்ட வசனத்தை அவர் பேசி நடிக்க வேண்டிய காட்சியைப் படமாக்கும்போது அவருக்கு சோதனை ஏற்பட்டது; எனக்கும் சோதனைதான்!

    "ரத்தக்கண்ணீர்'' படத்தில், எம்.ஆர்.ராதா பேசிக்கொண்டே உடம்பை சொறிந்து கொள்வார். அந்த பாணியில் நடிக்க வேண்டிய சுப்பையா, பேசும்போது சொறிய மறந்து விடுவார்; சொறியும்போது வசனம் மறந்துவிடும்!

    10 முறை படம் எடுத்தும் காட்சி "ஓகே'' ஆகவில்லை.

    நேரம் பகல் ஒரு மணி. சாப்பாட்டு நேரம். இந்த காட்சியை எடுத்து விட்டால், நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தேன். "ஒன் மோர் டேக்'' என்றேன்.

    சுப்பையாவோ, "சாப்பிட்டு விட்டு வந்து முயற்சிக்கலாமே'' என்றார்.

    நான் விடவில்லை. "அண்ணே! இந்த ஒரு டேக்கில் ஓகே ஆகிவிடும் ப்ளீஸ்!'' என்றேன்.

    ஆனால் சுப்பையா, தன் "விக்''கை கழற்றி எறிந்தார். "பிரேக்'' என்று கூறிவிட்டார்.

    படப்பிடிப்பு முடிந்தது என்பதை குறிப்பிடும் "பிரேக்'' என்ற சொல்லை டைரக்டர்தான் கூறவேண்டும். அதை சுப்பையா கூறியதால் கோபம் அடைந்தேன்.

    "மிஸ்டர் சுப்பையா! `பிரேக்' சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை. பிளீஸ் கெட் அவுட்!'' என்றேன்.

    சுப்பையா கோபித்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டார். படப்பிடிப்பு ரத்து ஆனது. ஒரு மாத காலம் படப்பிடிப்பு

    நடைபெறவில்லை.சிவாஜிகணேசன் தீர்ப்பு

    நான் எஸ்.வி.சுப்பையாவை அவமானப்படுத்தி விட்டதாக, அவர் தரப்பில் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். நான் டைரக்டர்கள் சங்கத்தில், சுப்பையா மீது புகார் செய்தேன்.

    அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். செயலாளர் மேஜர் சுந்தரராஜன்.

    இரு தரப்பையும் அழைத்து சிவாஜி விசாரித்தார்.

    பிறகு எஸ்.வி.சுப்பையாவை நோக்கி, "நீங்கள் இப்படி நடந்திருக்கக் கூடாது. ஒரு துரும்பைக் கிள்ளி, டைரக்டர் என்று சொன்னாலும், உரிய மரியாதை தரவேண்டும். கோவி.மணிசேகரன் பெரிய இலக்கியவாதி. விருதுகள் பெற்றவர். நாம் எல்லோரும் மதிக்கும் கே.பி.யின் மாணவர். ஒரு டேக் எடுக்க விட்டுக் கொடுக்காமல் `பிரேக்' என்று நீங்கள் சொன்னது தவறு'' என்றார்.

    ஆனால், எஸ்.வி.சுப்பையா தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார். வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறினார்.

    "வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடலாம். ஆனால் இதுவரை ஆன செலவை யார் தருவது? தயவு செய்து நடிக்க வாருங்கள்'' என்று நான் கேட்டுக்கொண்டும், சுப்பையா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

    நான் கோர்ட்டுக்குப் போகப்போவதாகக் கூறினேன்.

    அப்போது சிவாஜி, மேஜர் சுந்தரராஜனை அழைத்து, "சுந்தர்ராஜா! நீ போய் அந்த குஷ்டரோகி வேடத்தில் நடித்துவிடு. பணம் எதுவும் கேட்காதே!'' என்றார்.

    சிவாஜி இவ்வாறு கூறியதும் மெய்சிலிர்த்துப் போனேன்.

    சிவாஜி சொன்னபடியே, மேஜர் சுந்தரராஜன் அந்த வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.

    படம் 90 சதவீதம் வளர்ந்தபோது, படத்தயாரிப்பாளர் சிதம்பரத்துக்கும் அவருடைய பார்ட்னருக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டது. அந்த பார்ட்னருடன், என்னால் நியமனம் செய்யப்பட்ட இசை அமைப்பார் வி.குமாரும் சேர்ந்து கொண்டார்.

    மூவரும் என்னை சந்தித்தார்கள். டைரக்டர் பொறுப்பில் இருந்து என்னை விலகிக் கொள்ளச் சொன்னார்கள்.

    சிதம்பரம் நல்லவர். ஆனால், மற்ற இருவரும் செய்த சூழ்ச்சியினால் நான் டைரக்டர் பொறுப்பில் இருந்து விலகினேன்.

    மீதிப்பகுதியை டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவை வைத்து, படத்தை முடிக்க முயற்சி செய்தார்கள்.

    அவர்கள், அதுவரை படமாக்கியிருந்த காட்சிகளைப் போட்டு பார்த்தார்கள். பாதி புரிந்தது; பாதி புரியவில்லை.

    நான் காட்சிகளைப் பகுதி பகுதியாக படமாக்கியிருந்தேன். அதனால் மேற்கொண்டு எப்படி எடுப்பது என்று அவர்கள் குழம்பினார்கள். "முக்கால்வாசி எடுத்த படத்தில் அரை பாகத்தை நீக்கிவிட்டு, கால் பாகத்தை வைத்துக்கொண்டு மீதி படத்தை எடுக்கலாம். சம்மதமா?'' என்று டைரக்டர் பஞ்சு கேட்டார்.

    மீண்டும் கால்ஷீட் பெறுவதில் உள்ள சிக்கல்கள், மேற்கொண்டு ஆகக்கூடிய செலவுகள் என்று யோசித்தபோது, சிதம்பரத்துக்கு தலை

    சுற்றியது."கோவி.மணிசேகரன் வந்து விளக்கங்கள் சொன்னால் தவிர, நாங்கள் இந்தப் படத்தை தொடர்ந்து டைரக்ட் செய்ய இயலாது'' என்று கிருஷ்ணன் - பஞ்சு முடிவாக கூறிவிட்டார்கள்.

    பட அதிபர்கள் வன்நெஞ்சம் அவர்களையே சுட்டது. இனி எப்படி அவர்கள் என்னிடம் வரமுடியும்?

    சிதம்பரத்தை எண்ணி நான் வருந்தினேன் என்பதை விட, கண்ணீர் விட்டேன். அப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர்.

    மனோரஞ்சிதம் வெளிவராமல் போனதில், இன்னமும் எனக்கு வருத்தம் உண்டு. நட்சத்திரங்கள் நிறைந்த படம். முக்கால்வாசி முடிந்தும், நின்று போய்விட்டது. என்ன செய்வது? இதுதான் விதி!''

    இவ்வாறு மணிசேகரன் கூறினார்.
    கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், விஷால் மற்றும் தனுஷுடன் நடித்த பிரபல நடிகைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் ஜோடியாக  நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. 

    ஐஸ்வர்யா லட்சுமி

    இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறிய அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு பாசிடிவ் வந்துள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கை முறைகளையும் அவர் எடுத்துள்ளார்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை சனாவிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
    ‘ராஜபாட்டை’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சனா. விக்ரம் நடித்த இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சனா நடித்திருந்தார். இப்படம் இவருக்கும் சிறந்த அடையாளத்தை கொடுத்தது.

    இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் பிசியாக நடித்து வருகிறார்.

    சனா

    இந்நிலையில், படப்பிடிப்பின் போது கீழே விழுந்த விபத்தில் நடிகை சனாவிற்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பை நிறுத்திய படக்குழுவினர் உடனே அவருக்கு தீவிர சிகிச்சைக்கு அளித்தனர். இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள சனாவை டாக்டர்கள் ஓய்வு எடுக்க வலியுறுத்தியுள்ளனர். 
    நடிகர் சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி ஆகிய இருவருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
    ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ஒன்றில் நாயகனாக சதீஷ் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    சதீஷ் - பவித்ரா லட்சுமி - நட்ராஜன்

    ஹீரோவாகி உள்ள சதீஷ்க்கு திரையுலகினர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில், தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கர் கிங் நடராஜனும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘சதீஷ் அண்ணா உங்களுடைய புதிய படத்திற்கு எனது வாழ்த்துக்கள்’ என்று அவர் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
    நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்விகபூர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர். இவர் 2018-ம் ஆண்டு தடக் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்த படம் ‘கைராத்’ என்ற மராத்தி படத்தின் ரீமேக் ஆகும். அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா: தி கார்கிள் கேர்ள் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர் நடிப்பில் டோஸ்டானா 2, குட் லக் ஜெரி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

    ஜான்வி கபூர்

    இவர் சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவார். இந்நிலையில், தற்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவு செய்திருக்கிறார்.
    ‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் மாஸ்டர் மகேந்திரன். இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

    சமீபத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில், மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்து எல்லோராலும் பாராட்டப்பட்டார் மகேந்திரன்.

    லோகேஷ் கனகராஜ் - மகேந்திரன்

    இந்நிலையில், மாஸ்டர் மகேந்திரன் புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த காரின் சாவியை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கையால் வாங்கி இருக்கிறார். மேலும் புதிய ஆண்டு, புதிய வாழ்க்கை, புதிய பயணம் எல்லாம் மாஸ்டரில் இருந்து தொடங்கியது என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் மாஸ்டர் மகேந்திரனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், ரஜினி பேசிய வசனத்தை தன்னுடைய படத்தின் தலைப்பாக வைக்க இருக்கிறார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்து நிலையில், அடுத்ததாக ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

    இப்படத்தை அடுத்து, கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படத்தில் இயக்குனர் அட்லீயின் துணை இயக்குனர் அஷோக் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு 'சிங்க பாதை' என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    சிவகார்த்திகேயன்

    சிவாஜி படத்தில் ரஜினி பேசும் சிங்க பாதை என்ற வசனத்தை அடுத்த படத்தின் தலைப்பாக சிவகார்த்திகேயன் வைத்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    தமிழில் அங்காடி தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அஞ்சலி, வதந்திகளை நம்பாதீங்க என்று கூறியிருக்கிறார்.
    ‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறிய அவர், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார். 

    இந்நிலையில் அஞ்சலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளம் மற்றும் இணையத்தளங்களில் செய்திகள் வெளியானது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த அஞ்சலி, தனது சமூக வலைத்தள பக்கத்தில், எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை. நான் சந்தோஷமாக இருக்கிறேன். இணையத்தளங்களில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியானதை அறிந்தேன். அது முற்றியும் பொய்யான செய்தி. நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் யாரும் அதை நம்ப வேண்டாம்’ என்று பதிவு செய்திருக்கிறார்.


    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் கர்ணன் படத்திற்காக ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்திருக்கிறார்கள்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது கர்ணன் திரைப்படம் உருவாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது. இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் நடுக்கடலில் கர்ணன் படத்தின் பேனரை வைத்து இருக்கிறார்கள். இதன் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கர்ணன் படம் குறித்து வெளியாகி இருக்கும் செய்திக்கு தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
    தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கர்ணன்’. மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லால், யோகிபாபு, லட்சுமி பிரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது. 

    இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக வருகிற ஏப்ரல் 10-ந் தேதி முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் தான் இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கர்ணன் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று செய்திகள் வெளியானது.

    கலைப்புலி தாணு

    இதற்கு கர்ணன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ‘சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்’ என்று கூறியிருக்கிறார்.
    ×