என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் விஷ்ணு விஷால் நடித்த படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படமாக ராட்சசன் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
    ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘ராட்சசன்’. ஜிப்ரான் இசையமைத்த இந்தப் படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது.

    விஷ்ணு விஷால் நடித்த படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழை அடுத்து இந்தப் படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி ஐ.எம்.டி.பி இணையத்தில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற படம் என்ற சாதனையை 'ராட்சசன்' நிகழ்த்தியது.

    விஷ்ணு விஷால்

    இந்நிலையில், ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இயக்குனர் ராம்குமார், தனுஷ் படத்தை இயக்கி முடித்த பின் ராட்சசன் 2-ம் பாகத்தை இயக்குவார் என விஷ்ணு விஷால் கூறியுள்ளார். மேலும் இப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  
    கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்ததாக ‘அடங்காதே’ பட இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ளார்.
    காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

    தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் இவர், துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    சண்முகம் முத்துசாமி, ஐஸ்வர்யா ராஜேஷ்

    இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்தும் கொண்ட படமாக உருவாகும் இதில் சமுத்திரகனி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தை இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே அடங்காதே படத்தை இயக்கி உள்ளார். ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படம் இன்னும் ரிலீசாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகை பூஜா ஹெக்டே கைவசம், ஆச்சார்யா, ராதே ஷியாம், மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர், சர்க்கஸ், தளபதி 65 போன்ற படங்கள் உள்ளன.
    தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது தமிழ், தெலுங்கும், இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ஆச்சார்யா, ராதே ஷியாம், மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர், சர்க்கஸ், தளபதி 65 போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் உள்ளன.

    இந்நிலையில் மகேஷ்பாபு, திரிவிக்ரம் இணையும் படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள பூஜா ஹெக்டே, இப்போதைக்கு தனது முழுக் கவனமும் கைவசமுள்ள படங்களில் தான் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    பூஜா ஹெக்டே

    கொரோனா பரவல் குறைந்த பிறகு கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்த பிறகுதான் மற்ற நடிகர்களின் படங்களில் நடிப்பது பற்றி யோசிப்பேன் என கூறியுள்ள பூஜா ஹெக்டே, அதுவரை புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
    நடிகை ரகுல் பிரீத் சிங், தற்போது கமலுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
    தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது கமலுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்குவதும் உண்டு.

    இந்நிலையில் சமீபத்திய பேட்டியில், தன்னைப்பற்றி காதல் கிசுகிசுக்கள் தற்போது வராததால் நிம்மதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “கடந்த சில ஆண்டுகளாக இந்தி மற்றும் தெலுங்கு நடிகர்களுடன் இணைத்து என்னைப்பற்றி பலதரப்பட்ட காதல் கிசுகிசுக்கள் வெளியாகின. அவை அனைத்துமே பொய்யான செய்திகள் என்பதால் அவற்றுக்கு நான் பதில் கொடுக்கவில்லை. 

    ரகுல் பிரீத் சிங்

    அந்த சமயத்தில் நான் அமைதியாக இருந்ததால், ஒரு கட்டத்தில் அந்த வதந்திகள் மாயமாகி விட்டன. இப்போது என்னைப் பற்றி காதல் செய்திகள் வருவதில்லை. இது நிம்மதியை தருவதாக தெரிவித்துள்ள ரகுல் பிரீத் சிங், இதுவரை தான் யாருடனும் காதலில் விழுந்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
    கொரோனா பரவும் இந்த இக்கட்டான சமயத்தில் ஒருவருக்கு ஒருவர் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என நடிகை அனுஷ்கா கேட்டுக்கொண்டுள்ளார்.
    கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளம் மூலமாக கொரோனா தொடர்பான உதவிகளைப் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகை அனுஷ்கா, கொரோனாவை எதிர்கொள்ள சில அறிவுரைகளை கூறியுள்ளார்.

    அனுஷ்கா ஷெட்டி 

    அவர் தெரிவித்துள்ளதாவது: “இந்த இக்கட்டான சமயத்தில் ஒருவருக்கு ஒருவர் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். வழிகாட்டு முறைகளை தயவு செய்து கடைபிடியுங்கள். வீட்டிலேயே இருங்கள். சுய ஊரடங்கை கடைபிடிப்போம். சில மூச்சு பயிற்சிகளை செய்யுங்கள். ஒவ்வொரு நாளையும் நேர்மறை எண்ணத்துடன் அணுகுங்கள். எந்த நிலையிலும் சோர்ந்து விடாதீர்கள். எதிர்மறை எண்ணங்களை வர விடாதீர்கள். நாம் ஒன்றாக இணைந்து மனிதகுலத்தின் பலத்தை காட்ட வேண்டும்” என கூறியுள்ளார்.
    மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்ததற்காக கிண்டலடித்த நெட்டிசன்களுக்கு நடிகை பிரியா பவானி சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
    தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வரும் பிரியா பவானி சங்கர், தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை, கிண்டலடித்து பதிவிட்டு வந்தனர். இதற்கு நடிகை பிரியா பவானி சங்கர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

    நெட்டிசன் ஒருவர், “மேடம் நீங்களும் திருட்டு திராவிட சொம்பு தான” எனக் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர், “பெரிய சிஐடி... ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் டைம்லைன்ல இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் பத்திரிக்கை துறைல இருந்திருக்கேன். என் வேலையே அதுதான். இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

    பிரியா பவானி சங்கர்

    மற்றொருவர், “மேடம் இன்னும் 5 வருஷத்துல சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட், கிளவுட் நைன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களில் பட வாய்ப்பு பெறுவதற்காக தான் இப்படி டுவிட் செய்து கொண்டிருக்கிறார், எனக் குறிப்பிட்டிருந்தார். 

    இதற்கு பதிலளித்த பிரியா, “ஆமாங்க ஐயா. ஒரே பதட்டமா இருக்கு. முதல்வர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்னு சொன்னா நாலஞ்சு கம்பெனில பட வாய்ப்பு தர்றதா உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க. அதான் வாய்ப்பு தேடி டுவிட் போட்டுகிட்டு இருக்கேன். என்ன ஒரு யுக்தி இல்ல” என பதிலடி கொடுத்திருக்கிறார். பிரியா பவானி சங்கரின் இந்த டுவிட்கள் தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகின்றன.
    சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் ரஜினி, அதன்பின் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    நடிகர் ரஜினிகாந்தின் 168-வது படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கும் இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    ரஜினிகாந்த்

    இன்னும் ஒரு சில தினங்களில் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை திரும்பும் ரஜினி, அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளார். அந்த பணிகள் முடிந்த பின், நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவ பரிசோதனைக்காக அவர் ஜூன் மாதம் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதற்காக விஜய் உள்பட சில நடிகர்-நடிகைகள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டும் ஜார்ஜியாவுக்கு சென்று வந்தார்கள்.

    அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் சென்னையில் தொடங்க உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

    ஷைன் டாம் சாக்கோ

    இந்நிலையில் தளபதி 65 படத்தில் பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா தீபிகா படுகோனேவின் தந்தை, தாய், தங்கை என அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    இந்தி திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. கர்நாடகாவைச் சேர்ந்த தீபிகா படுகோனே, முன்னாள் இந்திய பாட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகள். பிரகாஷ் படுகோனே பெங்களூருவில் வசித்து வருகிறார். 

    பிரகாஷ் படுகோனே தற்போது கொரானோவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பிரகாஷ் அவரது மனைவி உஜ்ஜாலா, இளைய மகள் அனிஷா ஆகியோருக்கும் பரிசோதனை செய்ததில் கொரானோ தொற்று என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    தந்தையுடன் தீபிகா படுகோனே

    அவர்கள் தங்களை வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். ஆனால், பிரகாஷுக்கு உடல் வெப்பநிலை குறையாத காரணத்தால் பெங்களூருவில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    மறைந்த முரளியின் மகனும், நடிகருமான அதர்வாவிற்கு கொரோனா தொற்றில் இருந்து மீண்டு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    தமிழகத்தில் கொரோனாவின் 2-அலை வேகமாக பரவி வருகிறது. அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

    இந்த நிலையில், மறைந்த முரளியின் மகனும், நடிகருமான அதர்வாவிற்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    அதர்வா

    இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றில் இருந்து மீண்டு இருப்பதாக அதர்வா கூறி இருக்கிறார். மேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்கள் விரைவில் மீண்டு வர வேண்டும் என்றும், நலமுடனும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

    கொரோனா காலத்தை பணம் சம்பாதிப்பதற்காக பயன்படுத்தும் நடிகர் சோனுசூட் மோசடிக்காரர் என நெட்டிசன் பதிவிட்டதை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் லைக் செய்துள்ளார்.
    ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் பலர் சிகிச்சைக் கிடைக்காமல் இறந்து வருகின்றனர். இதனால், சந்தையில் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் மற்றும் சிலிண்டர்களுக்கு பெரும் டிமாண்ட் நிலவி வருகிறது. இந்த சூழலில், நிறுவனம் ஒன்றின் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டரை நடிகர் சோனுசூட் புரோமோட் செய்யும் புகைப்படத்தை நெட்டிசன் ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், சோனுசூட் புகைப்படத்துடன், ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் ரூ.2 லட்சம் மட்டுமே என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனை கடுமையாக விமர்சனம் செய்துள்ள நெட்டிசன் ஒருவர், கொரோனா காலத்தைப் பயன்படுத்தி நடிகர் சோனுசூட் பணம் சம்பாதிக்கும் 'மோசடிக்காரர்' வசைபாடியுள்ளார். மேலும், தனது டிவிட்டை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கும் டேக் செய்திருந்தார்.

    சோனுசூட்டை விமர்சிக்கும் அந்த டிவிட்டை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் லைக் செய்துள்ளார். இதனால் சோனுசூட் மோசடிக்காரர் என நெட்டிசன் கூறியதை கங்கனாவும் அமோதிக்கிறாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டே அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் மற்றும் தெர்மோமீட்டர் பிராண்டுக்காக நடிகர் சோனுசூட் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

    கங்கனா ரனாவத் - சோனு சூட்

    இந்த தகவல், ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனத்தின் வலைதளத்திலும் இடம்பெற்றுள்ளது. சரியான மெடிக்கல் உபகரணங்களை உபயோகப்படுத்துவது குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் சோனுசூட் கூறியிருந்தார். அந்த பழைய புகைப்படத்தை எடுத்து, தற்போது நாட்டில் நிலவும் சூல்நிலைக்கு ஏற்ப சிலர் பரப்பி வருகின்றனர். 
    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    புகழ்பெற்ற இசை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் '99' பாடல்களுடன்ஒரு தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் மாறிய பின்னர் 'மூப்பிலா தமிழ் தாயே' என்ற பாடலை உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அதிகம் இளைஞர்களுடன் பணியாற்றுவதில் வல்லவர், தற்பொழுது சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் மற்றும் கேப்ரியெல்லா ஆகியோரை 'மூப்பிலா தமிழ் தாயே" பாடலுக்காக அவர்களுடன் பணியாற்றி இருக்கிறார்.

    ஏ ஆர் ரகுமான் பூவையார்

    கேப்ரியெல்லா மற்றும் பாடகர் பூவையார் ஆகியோருடன் ஏ.ஆர்.ரகுமான் எடுத்துக்கொண்ட செல்பியை வெளியிட்டுள்ளார். இந்த செல்பி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
    ×