என் மலர்
சினிமா செய்திகள்
தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை என பல முகங்களை கொண்ட மறைந்த நடிகை சித்ராவின் புகைப்படத்திற்கு கேக் ஊட்டி அவரது தந்தை கண்கலங்கி இருக்கிறார்.
பிரபல தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை என பல முகங்களை கொண்டவர் நடிகை சித்ரா. இவர் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி நள்ளிரவில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


அவரது தற்கொலைக்கு காதல் கணவர் ஹேமந்த்தான் காரணம் என விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் விஜே சித்ராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பெற்றோர் தங்களின் போலீஸ் குடியிருப்பில் அவரது பிறந்த நாளை கொண்டாடினர். சித்ரா போட்டோவுக்கு முன்னால் அவருக்கு பிடித்த பொருட்களை வைத்தும் கேக் வெட்டியும் பிறந்த நாளை கொண்டாடினர்.

அப்போது சித்ராவின் தந்தை சித்ராவின் போட்டோவுக்கு கேக் ஊட்டிவிட்டு கலங்கினார். காண்போரை கலங்க வைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திரிஷ்யம் 2 திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டூடியோஸ் இண்டர்நேஷனல் வாங்கி இருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2013ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான படம் திரிஷ்யம். தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அத்தனையிலும் வெற்றி கண்டது.

சில மாதங்களுக்கு முன் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் ஓடிடி தளத்தில் 'திரிஷ்யம் 2' வெளியாகி முதல் பாகத்தைப் போலவே விமர்சனங்களிலும், ரசிகர்களாலும் பெரும் பாராட்டைப் பெற்றது.

இந்த வரவேற்பால் 'த்ரிஷ்யம் 2' படத்தின் ரீமேக் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே வெங்கடேஷ் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இரண்டாம் பாகத்தின் தெலுங்கு ரீமேக்கும், ரவிச்சந்திரன் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கன்னட ரீமேக்கும் தயாராகி வருகிறது.
தற்போது படத்தின் இந்தி ரீமேக்கும் உறுதியாகியுள்ளது. ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டூடியோஸ் குமார் மங்கத் பதக் வாங்கி இருக்கிறார்.
தமிழில் 'மாநகரம்' 'மாயவன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சந்தீப் கிஷன் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ நடிகர் முன்வந்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் கோரத் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஏப்ரல் இறுதி முதல் இந்தியாவில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் 3417 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ நடிகர் சந்தீப் கிஷன் முன்வந்துள்ளார்.
தமிழில் 'மாநகரம்' 'மாயவன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சந்தீப் கிஷன், தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த சவாலான காலகட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக கொரோனா தொற்றுக்கு தங்கள் பெற்றோரை இழந்த குழந்தைகள் யாரேனும் உங்களுக்கு தெரிந்தால், அவர்களைப் பற்றி கீழ்கண்ட இ மெயில் முகவரியில் தெரியப்படுத்துங்கள்.

நானும் என்னுடைய குழுவினரும் எங்களின் சக்திக்கு உட்பட்ட வகையில் அது போன்ற குழந்தைகளின் அடுத்த இரண்டு ஆண்டுக்காக உணவு மற்றும் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறோம். இது சோதனைக் காலம். இதில் மனிதர்களாக ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்பதே முக்கியம். கீழ்கண்ட முகவரிக்கு தகவல்களை அனுப்பவும்:
sundeepkishancovidhelp@gmail.com
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தனது மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார்.


இந்நிலையில், நடிகர் தனுஷ், ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வரும் இளமைத் திரும்புதே என்ற பாடலைப் பாடிக்கொண்டு தனது மனைவியை அழகாக ரொமான்ஸ் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
காதலுக்கு
— Subramaniam Shiva (@DirectorS_Shiva) May 3, 2021
அர்த்தம்..
இளைமை தான்
போலிருக்கிறது..♥️♥️💐 @dhanushkraja@ash_r_dhanush@anirudhofficial@karthiksubbaraj
pic.twitter.com/GAoVPL5LU5
சிவி குமார் இயக்கத்தில் ராஜேஷ் கனகசபை, சந்தனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொற்றவை’ படத்தின் முன்னோட்டம்.
சி.வி.குமார் எழுதி இயக்கும் படம் ‘கொற்றவை’. மயில் பிலிம்சுடன் இணைந்து திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. கதையின் நாயகனாக ராஜேஷ் கனகசபை, கதைநாயகியாக சந்தனா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.
இயக்குனர்கள் வேலுபிரபாகரன், கவுரவ் நாராயணன் மற்றும் அபிஷேக், அனுபமா குமார், பவன், வேல.ராமமூர்த்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு எழுத்தாளர் தமிழ்மகன் வசனம் எழுதியிருக்கிறார்.

படத்தை பற்றி அவர் கூறியதாவது: “கொற்றவை, உண்மையில் நடந்த வரலாற்று நிகழ்வின் அடிப்படையில் தயாராகும் படம். இவ்வகை படங்கள் ஹாலிவுட்டில் பிரபலமானவை. வரலாறும் புனைவும் கலந்து சொல்லும் இவ்வகை கதைகள், ரசிகர்களுக்கு மிகுந்த சுவாரஸ்யத்தைக் கொடுக்கும்” என கூறினார்.
டோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே, தற்போது ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. அந்த படத்துக்கு அவர் ரூ.30 லட்சம் சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
தற்போது தென்னிந்திய மொழிகளில், நடிகை பூஜா ஹெக்டேவுக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது. இதுவரை அவர் தெலுங்கு, இந்தியில் நடித்த படங்கள் நல்ல வசூல் ஈட்டி உள்ளன. சமீபத்தில் அல்லு அர்ஜுடன் நடித்த தெலுங்கு படமும் மாபெரும் வெற்றி பெற்றது. எனவே சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கிறாராம் பூஜா ஹெக்டே.

இது நயன்தாரா வாங்கும் சம்பளத்துக்கு இணையானது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கில் மகேஷ்பாவுடன் நடித்தபோது ரூ.2 கோடி சம்பளம் வாங்கினாராம். தற்போது இந்தியில் 2 படங்கள், தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘தளபதி 65’ படம், தெலுங்கில் 2 படங்கள் என்று 5 படங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. அவர் நடித்த எல்லா படங்களும் வெற்றி பெறுவதால் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் வருகிற ஜூன் மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

தமிழில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை பல தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானாலும், அவை அதிக மொழிகளில் டப் செய்யப்படவில்லை. ஓடிடியில் வெளியாகும் தமிழ் படம் ஒன்று 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
டுவிட்டர் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி, நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் நடிப்பில் தற்போது தலைவி படம் உருவாகி உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை கங்கனா, ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளார். கொரோனா காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் கங்கனா, அரசியல் கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வந்தார். சில சமயங்களில் அதன்மூலம், அவர் சர்ச்சையில் சிக்குவதும் உண்டு, அந்தவகையில், தற்போது மேற்குவங்க தேர்தல் மற்றும் அம்மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து கங்கனா தெரிவித்த கருத்துகள், அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. டுவிட்டர் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி, நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக செய்திகள் வலம் வந்த நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
துல்கர் சல்மானின் 25-வது படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. புதுமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய இப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டினர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார். முடிந்தால், தனக்கும் ஒரு கதை தயார் செய்யும்படி ரஜினி கேட்டிருந்தார்.
இதையடுத்து, இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, ரஜினிக்காக ஒரு கதை தயார் செய்ததாகவும், அந்தக் கதையை ரஜினியிடம் சொல்லி சம்மதம் வாங்கியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. மேலும் ரஜினியின் அடுத்த படத்தை இவர் இயக்க உள்ளதாகவும் செய்திகள் வலம்வந்தன.

இந்நிலையில், இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள தேசிங்கு பெரியசாமி, டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “என்னுடைய அடுத்த படம் குறித்து பரவும் செய்திகள் உண்மையில்லை. விரைவில் அடுத்த படம் குறித்து அறிவிப்பேன். தங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. பாதுகாப்பாக இருங்கள்” என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் ரஜினியின் அடுத்த படத்தை இவர் இயக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகை பியாவின் சகோதரர் மரணமடைந்ததையடுத்து, அவருக்கு ரசிகர்கள் டுவிட்டரில் ஆறுதல் கூறி வருகிறார்கள்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். தொடர்ந்து அஜித்தின் ஏகன், வெங்கட்பிரபு இயக்கிய கோவா, கே.வி.ஆனந்தின் கோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதுதவிர தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தன் சகோதரருக்கு இன்று காலை முதலே டுவிட்டர் மூலம் உதவிகேட்டு வந்தார் பியா. “உத்தர பிரதேசத்தில் உள்ள பரூகாபாத் நகரில் தனது சகோதரர் இருப்பதாகவும், உடனடியாக படுக்கையும், வென்டிலேட்டர் வசதியும் அவருக்குத் தேவை, தயவு செய்து உதவுங்கள்” என பதிவிட்டிருந்தார்.

ஆனால், நடிகை பியாவின் சகோதரருக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை போலிருக்கிறது. சிறிது நேரத்தில் “எனது சகோதரர் இறந்துவிட்டார்” என பதிவிட்டுள்ளார் பியா. அவருக்கு ரசிகர்கள் டுவிட்டரில் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் பிரபல நடிகை ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் ‘கே.ஜி.எப்’. இப்படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் ‘கோப்ரா’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இதுதவிர கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.


இந்நிலையில், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி அடுத்ததாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் ‘சலார்’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சலார் படப்பிடிப்பு, மீண்டும் தொடங்கும்போது பிரபாசுடன் ஸ்ரீநிதி நடனமாடும் அந்த பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாம்.
மலையாளத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்சேதுபதி, கடந்த 2019ம் ஆண்டு வெளியான ‘மார்க்கோனி மத்தாய்’ என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து இந்து வி.எஸ் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் 19 (1)(a) என்கிற மலையாள படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் ஹீரோயினாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி எழுத்தளார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இப்படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக முன்னணி ஓடிடி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனம், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாம்.
இதேபோல் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் உருவாகி உள்ள துக்ளக் தர்பார் படமும் ஓடிடி-யில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.






