என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை இலியானா கர்ப்பமாக இருந்தார் என்றும், காதல் தோல்வி மன உளைச்சலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.
    தமிழில் கேடி படத்தில் அறிமுகமான இலியானா விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபோனும் காதலித்தனர். 

    இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை இலியானா அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தி வந்தார். ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும் கிசுகிசுத்தனர். ஆனால் சமீபத்தில் இலியானாவுக்கும், காதலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. 

    இந்நிலையில் இலியானா கர்ப்பமாக இருந்தார் என்றும், கருக்கலைப்பு செய்தார் என்றும், காதல் தோல்வி மன உளைச்சலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.

    இலியானா

    இதற்கு விளக்கம் அளித்து நடிகை இலியானா கூறியதாவது: “நான் கர்ப்பமாக இருந்தேன். கருக்கலைப்பு செய்தேன் என்று வெளியான தகவல்கள் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் தற்கொலைக்கு முயன்று பிறகு உயிர்பிழைத்ததாக எனது வேலைக்காரி சொன்னார் என்றும் தகவல் வெளியானது. எனக்கு வேலைக்காரியே இல்லை. நான் தற்கொலைக்கு முயற்சி செய்யவும் இல்லை. இப்போது உயிருடன்தான் இருக்கிறேன்” என்றார்.
    உயிருக்கு போராடிய கொரோனா நோயாளியை காப்பாற்ற நடிகர் சோனு சூட், ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பி உதவி உள்ளார்.
    உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் கைலாஷ் அகர்வால். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், ஜான்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு இவரது உடல்நிலை மோசமானதால், உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையை தேடி அலைந்துள்ளனர். ஆனால் எங்கும் இடம் கிடைக்க வில்லையாம். 

    சோனு சூட்

    இதையடுத்து டுவிட்டர் வாயிலாக நடிகர் சோனு சூட்டுக்கு நிலமையை எடுத்துக் கூறி உள்ளனர். இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இடம் இருப்பதை அறிந்த சோனு சூட், கைலாஷ் அகர்வாலை ஜான்சியில் இருந்து ஐதராபாத்துக்கு கூட்டிச் செல்ல தன் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வரும் கைலாஷ் அகர்வால் தற்போது நலமுடன் உள்ளாராம். சோனு சூட்டின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 
    அண்ணாத்த படத்தை முடித்ததும் தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்க ரஜினி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ஐதராபாத்தில் 3 வாரங்களுக்கு மேல் முகாமிட்டு இந்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இன்னும் ஒரு வாரத்தில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். அண்ணாத்த படத்தை முடித்ததும் தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்க ரஜினி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த படத்தை இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ் அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

    ரஜினிகாந்துடன் கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி

    இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி பிரபலமானார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இந்த இரு இயக்குனர்களும் ரஜினியிடம் கதை சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் யாரை ரஜினி தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
    அனுபவங்கள் பதிவு: ஜனவரி 03, 2019 23:04 IST சிவாஜிகணேசன் நடித்த "எதிரொலி'' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.
    சிவாஜிகணேசன் நடித்த "எதிரொலி'' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.

    இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது:-

    "சிவாஜியின் அலங்கார நிபுணரான ராமகிருஷ்ணன் என்று ஒருவர் இருந்தார். என் நாடகங்களைப் பார்த்தவர். என் கதையில் சிவாஜி நடிக்க வேண்டும், அதை மாதவன் இயக்க வேண்டும் என்று விரும்பினார்.

    நானும் சரி என்று சொல்லிவிட்டேன். மாதவனுடன் உட்கார்ந்து ஒரு கதை தயார் செய்தோம்.

    சிவாஜியிடம் கதை சொல்ல ஏற்பாடு நடந்தது.

    "நான் நாலைந்து நாட்கள் சூரக்கோட்டைக்குப் போகிறேன். அங்கு ஓய்வு எடுக்கும் வேளையில், கதையும் கேட்கலாமே. அவர்கள் இரண்டு பேரையும் சூரக்கோட்டைக்கு அழைத்துக்கொண்டு வந்துடுங்க'' என்றார், சிவாஜி.

    இதை, ராமகிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தார். அவருக்கு சிவாஜி ஏற்கனவே ஒரு படம் நடித்துக் கொடுத்திருக்கிறார். இது இரண்டாவது படம்.

    கதை சொல்வதற்காக அதுவரை நான் எந்த வெளிïருக்கும் போனதில்லை. முதல் தடவையாக சூரக்கோட்டைக்கு சென்றேன்.

    அங்கு, சிவாஜியின் வீடு பெரிதாக இருந்தது. நிறைய அறைகள் இருந்தன. மாதவன் அப்போது சிவாஜியை வைத்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தார். நான் சூரக்கோட்டையில் மாதவனுடன் நான்கைந்து நாள் தங்கினேன்.

    சிவாஜி அவ்வப்போது என்னை பார்ப்பார். "சாப்பிட்டீங்களா?'' என்று கேட்பார்.

    நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவ்வப்போது வேட்டைக்குப் போவார். ஆனால், கதை கேட்க என்னை அழைக்கவில்லை.

    சும்மா உட்கார்ந்து இருப்பது, எனக்கு போரடித்தது. இதுபற்றி ராமகிருஷ்ணனிடம் கூறினேன். `ஓய்வு எடுப்பதற்காக இங்கே வந்திருக்கிறார். அவரே உங்களைக் கூப்பிடுவார்' என்றார்.

    அதேபோல, மூன்றாவது நாள் சிவாஜி என்னை அழைத்து கதை கேட்டார். நான் சொன்னேன். அவருக்குப் பிடித்து இருந்தது. "கதை நன்றாக இருக்கிறது. பண்ணலாம்'' என்று சொல்லிவிட்டார்.

    ஆனால், பிறகு என்னுடன் பேசவில்லை. ஒருவேளை மாதவனிடம் பேசியிருக்கலாம். சிவாஜி பிசியாக இருந்ததால், படம் தள்ளிக்கொண்டே போயிற்று. இதற்கிடையே, ராமகிருஷ்ணன் இறந்து போனார். அதனால், அப்படம் தயாரிக்கப்படவில்லை.

    இதன் பிறகு, சிவாஜியை வைத்து ஜி.என்.வேலுமணி தயாரித்த "எதிரொலி'' படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

    முதல் நாள் படப்பிடிப்பு. சிவாஜியை முதன் முதலாக நான் இயக்கிடும் நேரம். எனது கை -கால் நடுங்கின. "பராசக்தி'', "மனோகரா'' படங்களைப் பார்த்து பிரமித்துப்போன எனக்கு, அவரை எப்படி இயக்குவது என்ற தடுமாற்றம்.

    அவர் நடிப்பைப் பார்த்து ராத்தூக்கம், பகல் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டவன் நான். அவரை இயக்கும் நேரம் வந்ததும், கை-கால் வெடவெடத்தன.

    நிலைமையை சரி செய்து கொண்டு, முதல் காட்சியை அவருக்குச் சொன்னேன். பொதுவாக முதல் நாள் என்றால், ஒரு `சக்சஸ்' அல்லது `வெற்றி' என்று கூறும் வழக்கமான காட்சியாக இல்லாமல், ஒரு நீள வசனத்தை அவரைப் பேசச் சொன்னேன். அப்போது, கே.ஆர்.விஜயாவும் உடன் இருந்தார்.

    "நான் உங்களுக்கு இப்படி ஒரு காட்சி வைத்துள்ளேன். சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமானால் சொல்லுங்கள். மாற்றி அமைத்துக் கொள்ளலாம்'' என்று சிவாஜியிடம் சொன்னேன்.

    அவர் உடனே, "அய்யய்யோ... நீங்கதான் டைரக்டர். நான் எதுவுமே சொல்லமாட்டேன். நினைக்கவும் மாட்டேன். எப்படி நடிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களோ அப்படியே நடிக்கிறேன்'' என்றவர், வசனத்தைப் படித்துக் காட்டும்படி கூறினர்.

    நான் படித்துக்காட்டினேன். "நான் எப்படி பேசவேண்டும் என்பதையும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்க!'' என்றார், சிவாஜி.

    "என்ன சார் இது... நீங்க போய் என்னிடம் கேட்கறீங்க... உங்களுக்கு நான் சொல்லிக் கொடுப்பது சரியா வராது!'' என்றேன்.

    "இல்லை பாலு! நீங்க எத்தனையோ வெற்றி நாடகங்களை டைரக்ட் செய்திருக்கீங்க. எனக்கும் சொல்ல வேண்டியதுதானே... இந்த படம் என்கிற கப்பலுக்கு நீங்கதான் கேப்டன்'' என்று விடாப்பிடியாகச் சொன்னார், சிவாஜி.

    இவ்வாறு சிவாஜி சொன்ன பிறகு எனக்கு தைரியம் வந்தது. படப்பிடிப்பு படுவேகமாக நடந்தது.

    இப்படி நடந்து வந்த படப்பிடிப்பின் நடுவே, ஒரு நாள் சிவாஜி என்னைத் தனியாக அழைத்தார். பட்டென்று ஒரு கேள்வி கேட்டார்.

    தனது மனசை நீண்ட நாள் உறுத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை அவர் கேட்டதும், நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் கேட்ட கேள்வி:-

    "ஏன் பாலு... எனது நடிப்புக்கு ஏற்றபடி ஒரு காட்சியை எனக்காக வைக்கக்கூடாதா....?''

    - இதுதான் சிவாஜி கேட்ட கேள்வி.

    நான் திடுக்கிட்டேன். "என்ன சார்... என்ன சொல்றீங்க?'' என்று கேட்டேன்.

    "இல்லை. நான் நடிக்கும்படியான ஒரு காட்சி இருந்தால் நன்றாக இருக்குமே'' என்று மíண்டும் சொன்னார்.

    எனக்குப் பெரும் அதிர்ச்சி. "அப்படியானால், நீங்கள் இதுவரை நடித்ததெல்லாம் நடிப்பு இல்லையா?'' என்று நான் கேட்க, "இல்லை... அப்படி சொல்லவில்லை. உங்களுக்கே தெரியும்... நான் நன்றாக நடிப்பதாகச் சொல்கிறார்கள். நவரச நடிப்பும் கலந்து தரும்படி ஒரு காட்சி வைக்கக்கூடாதா?'' என்று சிவாஜி கேட்டார்.

    "இது அப்படி ஒரு கதை அல்ல. ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கை பற்றிய இயல்பான கதை. மிதமிஞ்சிய நடிப்பு இந்தக் கதையில் தேவைப்படாதே'' என்று நான் சொல்ல, "அப்படியென்றால் சரி. கதையும், காட்சியும் மிகச்சிறப்பாக அமைந்துவிட்டன. எனது ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால், படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை'' என்று சொல்லி முடித்துவிட்டார், சிவாஜி.

    அவர் சந்தேகப்பட்டபடி சிவாஜி ரசிகர்கள் இந்தப்படத்தை ஏற்கவில்லை. அதனால் படம் வெற்றி அடையவில்லை.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்
    வின்சென்ட் செல்வா இயக்கத்தில் ஸ்டண்ட் சிவா, நேஹா மேனன் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் முன்னோட்டம்.
    யூத், பிரியமுடன், வாட்டாக்குடி இரண்யன், ஜித்தன் ஆகிய படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா, சில வருட இடை வெளிக்குப்பின் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘வேட்டையன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. பாலு கே. தயாரிக்கிறார்.

    இதில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர், ‘ஸ்டண்ட் சிவா கதாநாயகனாக நடிக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பிரெஞ்சு ஆகிய 6 மொழிகளில், 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை பயிற்சி அளித்தவர். ‘வேட்டையன்’ படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

    வேட்டையன் படக்குழு

    கேரளாவைச் சேர்ந்த நேஹா மேனன் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர், ‘மிஸ் கேரளா’வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இன்னொரு கதாநாயகியாக வைசாலி நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சுபா வெங்கட் ஆகிய மூன்று பேரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 
    நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக பிரபல டோலிவுட் இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் விஜய். இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. இப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க தாமதமாகி வருகிறது.

    வம்சி படிபல்லி, விஜய்

    இந்நிலையில், நடிகர் விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிபல்லி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் இயக்குனர் வம்சி சென்னையில் நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொன்னதாகவும், இந்தக் கதை விஜய்க்கு பிடித்துப்போனதால் முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்ய சொன்னதாகவும் கூறப்படுகிறது. தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற தோழா படத்தை வம்சி தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தை இயக்க உள்ளாராம்.
    தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல இயக்குனர்கள் சமீப காலமாக டோலிவுட் திரையுலகுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே ஷங்கர் ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். அதேபோல் இயக்குனர் லிங்குசாமியும், ராம் பொத்தினேனி நடிக்கும் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். இந்தப் பட்டியலில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்துள்ளார்.

    ஏற்கனவே தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், இம்முறை அல்லு அர்ஜுனுடன் கூட்டணி அமைக்க உள்ளாராம். இப்படத்தை அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு சுரேஷ் தயாரிக்க உள்ளாராம். மேலும் இது பான் இந்தியா படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

    அல்லு அர்ஜுன், ஏ.ஆர்.முருகதாஸ்

    கடைசியாக தமிழில் தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக விஜய்யின் தளபதி 65 படத்தை இயக்க ஒப்பந்தமானார். பின்னர் சில பிரச்சனைகள் காரணமாக ஏ.ஆர் முருகதாஸ் அப்படத்தில் இருந்து விலகியதால், தற்போது நெல்சன் ‘தளபதி 65’ படத்தை இயக்கி வருகிறார்.
    கொரோனா பாதிப்பை தவிர்க்க அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு நடிகை சாக்‌ஷி அறிவுறுத்தி உள்ளார்.
    நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். தற்போது மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

    அந்தவகையில், நடிகை சாக்‌ஷி அகர்வால் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர், தடுப்பூசி போடும் போது எடுத்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    கொரோனா பாதிப்பை தவிர்க்க அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார். நடிகை சாக்‌ஷி, கைவசம் அரண்மனை 3, பஹிரா, சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், புரவி, தி நைட் போன்ற படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


    கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், பாரதீய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
    தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியை தழுவினார். கமல்ஹாசன், பாரதீய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். 

    சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தோல்வி அடைந்தாலும், அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்துள்ளார் என்று அவரது கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    சுருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் பதிவு

    இந்நிலையில் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான சுருதிஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் கமல்ஹாசன் கையில் டார்ச் லைட் வைத்திருக்கும் (கட்சியின் சின்னம்) புகைப்படத்தை வெளியிட்டு, அதில் ‘என்னுடைய தந்தையை நினைத்து எப்போதும் நான் பெருமைப்படுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். 
    தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பார்த்திபன் தன் ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. தி.மு.க. மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

    இதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைக்க உள்ள தி.மு.க.விற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    பார்த்திபன்

    அந்தவகையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது: “இன்று... உதிக்கும் சூரியன், புதிய சூரியனல்ல... உதய சூரியன். நீண்ட காலம் ஆண்ட, பத்தாண்டு பொறுமை சின்னத்தின் முதல்வராக ஆட்சி புரிந்தவர் இனி, இனிய தமிழக முதல்வராக. வாழ்த்துகள் திமுகவின் அபரிமித வெற்றிக்கும், மாண்புமிகு ‘உதய்’சூரியனுக்கும்” என அவர் பதிவிட்டிருந்தார் 

    மற்றொரு டுவிட்டில் “மு.க.ஸ்டாலின் அவர்கள் மட்டும் முதல்வர் அல்ல, நானும் முதல்வனே. கோவையில் இன்றைய முதல்வருக்கு அன்றே “அடுத்துத் தாங்களே”- என மஞ்கள் துண்டு அணிவித்து வாழ்த்தியதில் முதல்வன் ஆனேன்” என பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.
    மாநாடு படத்தில் ஹீரோவாக நடித்துள்ள சிலம்பரசன், அப்படம் முடிந்தவுடன் நாடகத்தில் நடிக்க ஆசைப்பட்டதாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.
    சிலம்பரசன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், அரசியல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, வாகை சந்திர சேகர், எஸ் ஏ சந்திர சேகர், ஒய்.ஜி,மகேந்திரன், பிரேம்ஜி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

    குறிப்பாக இந்தப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளார். சிம்புவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து அவர் கூறியதாவது: “சிலம்பரசன் சினிமாவைப் பற்றி அனைத்தும் தெரிந்தவர். திறமையானவர். இந்த ‘மாநாடு’ படம் அவரது திரையுலகப் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும். அந்த அளவுக்கு படப்பிடிப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்துள்ளார். 

    ஒய்.ஜி.மகேந்திரன்

    அவர் இதுபோன்ற கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்தார் என்றால் இன்னும் மிகப்பெரிய இடத்துக்குச் செல்வார். சிலம்பரசனைப் பொறுத்தவரை ஸ்பாட்டில் நடிக்கும்போது புதிது புதிதாக நிறைய விஷயங்களை மெருகூட்டிக் கொள்வார். என்னைப் போன்ற நாடகக் கலைஞர்கள் கையாளும் பாணி அது. 

    இதைவிட ஒரு விஷயம் சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்.. “இந்தப்படம் எல்லாம் முடிந்து ஃப்ரீ ஆனதும் உங்களுடன் சேர்ந்து ஒரு நாடகம் நடிக்கவேண்டும் சார்” எனக் கூறினார். அது நடந்தால் நன்றாக இருக்கும்” என ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    சுமோ படத்தில் சிவா கதாநாயகனாகவும், பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளனர், ஹோசிமின் இப்படத்தை இயக்கி உள்ளார்.
    கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந்து திரைக்கு வர தயாராக இருந்த படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. தனுஷின் ஜகமே தந்திரம் படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

    இதுபோல் விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷாவின் ராங்கி ஆகிய படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. 

    சுமோ படத்தின் போஸ்டர்

    இந்தநிலையில் சிவாவின் சுமோ படம் ஓடிடியில் வெளியாவது உறுதியாகி உள்ளது. இந்த படத்தில் சிவா கதாநாயகனாகவும், பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹோசிமின் இப்படத்தை இயக்கி உள்ளார்.

    மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    ×