என் மலர்
சினிமா செய்திகள்
மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என நடிகர் கார்த்தி டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது. இறுதியில் தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. தி.மு.க. மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
இதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைக்க உள்ள தி.மு.க.விற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் கார்த்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் மு.க.ஸ்டாலின் அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம், கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து, மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட சினிமா பிரபலங்களின் நிலை குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் சிலர் போட்டியிட்டார்கள். அவர்களின் வாக்கு விவரம் மற்றும் வெற்றி - தோல்வி நிலை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

உதயநிதி ஸ்டாலின்
திமுக சார்பில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின், 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அத்தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். உதயநிதி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 93,285.

குஷ்பு
பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்பு 32,462 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எழிலன் 71,867 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். நடிகை குஷ்பு பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 39,405.

சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான், 39,588 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் 88,185 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். சீமான் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 48,597.

கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவை தொற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன், 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் 53,209 வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடினார். நடிகர் கமல்ஹாசன் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 51,481.

ஸ்ரீபிரியா
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகை ஸ்ரீப்ரியா, 53,488 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வேலு 68,392 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நடிகை ஸ்ரீபிரியா பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 14,904.

சினேகன் மற்றும் மயில்சாமி
விருகம்பாக்கம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட பாடலாசிரியர் சினேகன், 57,412 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிரபாகர ராஜா 74,351 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். பாடலாசிரியர் சினேகன் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 16,939. அதே தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மயில்சாமிக்கு 1,440 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

மன்சூர் அலிகான்
கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான், வெறும் 428 வாக்குகளை மட்டும் பெற்று படுதோல்வி அடைந்தார். அத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி 1,24,225 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

விஜய் வசந்த்
கன்னியாகுமரி தொகுதிக்கான மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகர் விஜய் வசந்த், 1 லட்சத்து 37 ஆயிரத்து 950 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 4,38,087 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார். நடிகர் விஜய் வசந்த் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 5,76,037.
கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது அசுரன் பட நடிகை கொரோனா தொற்றில் சிக்கி உள்ளார்.
தமிழில் விஜய்யின் பைரவா படத்தில் அறிமுகமானவர் அம்மு அபிராமி. தொடர்ந்து கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, தம்பி, சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விஷ்ணு விஷாலின் ராட்சசன், தனுசுடன் அசுரன் மற்றும் என் ஆளோட செருப்ப காணோம், துப்பாக்கி முனை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அம்மு அபிராமி தற்போது கொரோனா தொற்றில் சிக்கி உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். தேவையான மருந்துகளும் எடுத்து வருகிறேன். முன்பை விட வலிமையாக திரும்பி வருவேன். பாதுகாப்பாக இருங்கள். அதிக கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார். அம்மு அபிராமி விரைவில் குணமடைய வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைக்க உள்ள தி.மு.க.விற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது. இறுதியில் தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. தி.மு.க. மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
இதனைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைக்க உள்ள தி.மு.க.விற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஒரு எடுத்தக்காட்டாய் திகழ, திமுக கூட்டணிக்கு என் வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது: “இசைப்புயல் - ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்” என தெரிவித்துள்ளார்.
இசைப்புயல் - ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும். https://t.co/m0urghBjVr
— M.K.Stalin (@mkstalin) May 3, 2021
டைரக்டர் கே.பாலசந்தர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதாகும்
டைரக்டர் கே.பாலசந்தர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதாகும். அவரை சூப்பர் ஸ்டாராக உருவாக்கியதில் பாலசந்தருக்கு பெரும் பங்கு உண்டு.
"அபூர்வ ராகங்கள்'' கதை புதுமையானது. விக்கிரமாதித்தன் கதையில், விக்கிரமாதித்தனிடம் வேதாளம் பல விடுகதைகளை போடும்.
அதில் ஒரு விடுகதை:-
"தந்தையும், மகனுமான இருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, மணலில் இரண்டு பெண்கள் நடந்து சென்ற கால் தடங்களைப் பார்க்கிறார்கள். அந்த கால் தடங்களை பின்பற்றிச் சென்று அந்த இருவரையும் கண்டுபிடிப்பது என்றும், பெரிய கால் தடத்துக்கு உரியவளை தந்தையும், சிறிய கால் தடத்துக்கு உரியவளை மகனும் திருமணம் செய்து கொள்வது என்றும் முடிவு செய்கிறார்கள்.
அவ்வாறே, கால் தடங்களை பின்பற்றிச் செல்லும் தந்தையும், மகனும் அந்த 2 பெண்களையும் கண்டுபிடிக்கிறார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், பெரிய பாதங்களுக்கு உரியவள் மகள். சிறிய பாதங்களுக்கு உரியவள் தாய்!
ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்த இரு பெண்களையும் தந்தையும், மகனும் மணந்து கொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உறவு முறை என்ன?'' - இதுதான் வேதாளத்தின் விடுகதை.
அதற்கு விடை கூறமுடியாமல் விழிப்பான், விக்கிரமாதித்தன்.
வேதாளத்தின் விடுகதையை அடிப்படையாக வைத்து, அபூர்வராகங்கள் கதையைப் பின்னினார் பாலசந்தர்.
இதில் ஸ்ரீவித்யா தாய்; ஜெயசுதா மகள்.
மேஜர் சுந்தரராஜன் தந்தை; கமலஹாசன் மகன்.
ஸ்ரீவித்யாவை கமலஹாசன் காதலிப்பார்.
மேஜர் சுந்தரராஜன், ஜெயசுதாவை மணக்க விரும்புவார்!
கத்திமேல் நடப்பது போன்ற கதை.
கடைசியில், ஸ்ரீவித்யாவின் காணாமல் போன கணவன் திரும்பி வருவார். அவர்தான் ரஜினிகாந்த்!
கொஞ்ச நேரமே வந்தாலும், கதையை முடித்து வைக்கும் கதாபாத்திரம்!
தாடி -மீசையுடன், ஸ்ரீவித்யாவின் பங்களா கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைவார், ரஜினிகாந்த்.
"யார் இந்தப் புதுமுகம்?'' என்று படம் பார்க்கிறவர்கள் கேட்கும்படியாக அமைந்தது, அக்காட்சி.
பாலசந்தர் கண்டுபிடித்த வைரம்
கர்நாடகத்தை சேர்ந்தவர். கறுப்பு நிறம். தமிழை லாவகமாகப் பேசக்கூடிய ஆற்றல் அவ்வளவாக இல்லை. அப்படியிருந்தும், ரஜினிகாந்த் ஒரு வைரம் என்பதை கண்டுபிடித்து, அபூர்வராகங்களில் அறிமுகப்படுத்தினார், பாலசந்தர்.
"ரஜினிகாந்த் கண்களில் ஒருவித பிரகாசத்தைக் கண்டேன். எதிர்காலத்தில் பெரிய நட்சத்திரமாக வருவார் என்று அப்போதே கணித்தேன்'' என்று கூறுகிறார், பாலசந்தர்.
ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதோடு பாலசந்தர் நின்றுவிடவில்லை. அவரை பட்டை தீட்டும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
"மூன்று முடிச்சு'' படத்தில், முக்கிய வேடம் கொடுத்தார். இதில் கமலஹாசன் நடித்திருந்தாலும், அவர் ஏற்றிருந்தது "கவுரவ வேடம்'' போன்றதுதான்.
ஸ்டைல் மன்னன் என்று பிற்காலத்தில் புகழ் பெற்ற ரஜினிகாந்த், சிகரெட்டை தூக்கிப்போடும் ஸ்டைலை முதன் முதலாகச் செய்து காட்டியது, இந்தப் படத்தில்தான்.
இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. குழந்தை நட்சத்திரமாகப் புகழ் பெற்றிருந்த ஸ்ரீதேவி, கதாநாயகியாக நடித்த முதல் படம் இதுதான்.
மூன்று முடிச்சு பெரிய வெற்றிப்படம் அல்லவென்றாலும், ரஜினிகாந்துக்கு கணிசமான ரசிகர்களைத் தேடிக்கொடுத்தது.
பாலசந்தர் படத்தில் அறிமுகமானது பற்றி ரஜினிகாந்த் கூறியதாவது:-
"திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற பிறகு, மீண்டும் பெங்களூர் சென்று கண்டக்டர் வேலை பார்த்துக்கொண்டே பொழுது போக்காகக் கன்னடப் படங்களில் நடிக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.
தமிழ்ப்படத்தில் நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. ஆனால் நான் எதிர்பாராதவிதமாக பாலசந்தர் சாரை சந்தித்து, அவர் மூலமாக "அபூர்வ ராகங்கள்'' படத்தில் அறிமுகமானேன்.
அந்த `அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்பின்போதுதான், ஒரு நாள் என்னையே எனக்கு உணர்த்தினார், அவர். என்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன, அவற்றை எப்படி எல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்பனவற்றை எடுத்துக் கூறினார்.
அன்று அவர் வழங்கிய ஆலோசனைகள் அனைத்தும் எனக்குப் பெரிதும் உதவின. இன்றும் உதவி வருகின்றன.''
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

நமது தமிழகத்துக்கு நல்ல விஷயங்கள் கிடைத்துச் செழிக்கட்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) காலை முதலே மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.

இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
விஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "இந்த அற்புதமான வெற்றிக்கு திமுகவுக்கு வாழ்த்துகள்.

அன்பு நண்பர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் ஆகியோருக்கு நன்றி. நம் முதல்வர் மு.க.ஸ்டாலினை வருக வருக என வரவேற்கிறேன்.
அடுத்த சில வருடங்களில் நமது தமிழகத்துக்கு நல்ல விஷயங்கள் கிடைத்துச் செழிக்கட்டும். உடைந்து போயிருக்கும் நமது திரைத்துறைக்கும் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று பதிவு செய்துள்ளார்.
எதிர்பார்ப்புகளோடும் கேள்விகளோடும் உங்களைப் பார்க்கிறோம் என்று மு.க.ஸ்டாலினுக்கு பிரபல நடிகர் ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) காலை முதலே மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.

இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சித்தார்த் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

"ஜெயலலிதாவுக்குப் பிறகு நம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர்.
மகத்தான வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். எங்கள் அனைவரின் நலனுக்கு நீங்கள் நல்ல ஆட்சியைக் கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன். எதிர்பார்ப்புகளோடும் கேள்விகளோடும் உங்களைப் பார்க்கிறோம். வாழ்க தமிழ்". இவ்வாறு சித்தார்த் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய நடிகர் மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் விவரம்.
தமிழக தேர்தலில் போட்டியிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள். கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரை தவிர தமிழகத்தில் போட்டியிட்ட திரை நட்சத்திரங்களான குஷ்பூ, ஸ்ரீபிரியா, சினேகன், மயில்சாமி, உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பின்னடைவில் உள்ளனர்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். இந்த தொகுதியில் அவர் 201 வாக்குகள் பெற்று இருக்கிறார். இதுவரை 16 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில் முடிவில் மன்சூர் அலிகான் வெறும் 201 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது அவரது தரப்பினர்களுக்கு பெரும் அதிர்ச்சி.
முகேஷ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் முகேஷ் தயாரிக்கும் படம் " சல்பர் " படத்தின் முன்னோட்டம்.
முகேஷ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் முகேஷ் தயாரிக்கும் படம் " சல்பர் " யாஷிகா அனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்து, முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார்.
இயக்குனர் வடிவுடையானிடம் உதவியாளராக பணியாற்றிய புவன் இந்த படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவு - இனியன் ஜே ஹாரிஸ். இவர் கன்னிமாடம், பாம்பாட்டம் போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர்.
இசை - சித்தார்த் விபின், எடிட்டிங் - எலிசா, கலை - பழனி, ஸ்டில்ஸ் - சக்தி பிரியன்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய காமெடி நடிகர் மயில்சாமி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 08.00 மணிக்குத் தொடங்கியது.

இதில் திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 2வது இடத்தை வகித்து வருகிறது. இதனிடையே சுயேச்சை வேட்பாளராக நகைச்சுவை நடிகர் மயில்சாமி சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டுளார். இந்நிலையில், இன்று மாலை நான்கு மணி நிலவரப்படி நடிகர் மயில்சாமி இதுவரை 50க்கும் குறைவான வாக்குகளே பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார்.

இவருடன் இதே தொகுதியில் போட்டியிட்ட பிரபல திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா கொரோனா தடுப்பூசிக்கு நிதி திரட்டும் பணியில் இறங்கி உள்ளார்.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் கோரதாண்டவம் ஆடி வருகிறது. பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. . ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கொரோனாவின் 2வது அலையை எதிர்த்து போராட பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் ஒரு கோடி ரூபாயை கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கினார். இப்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நிதி திரட்டும் பணியில் இறங்கி உள்ளார். கிவ் இந்தியா என்ற அமைப்புடன் இணைந்து இந்த பணியில் இறங்கி உள்ளார்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் நிதி குவிந்துள்ளது. இந்த பணம் பெங்களூர் மற்றும் மும்பைக்கு ஆக்சிஜன் வாங்க பயன்படுத்தப்படும் என்று பிரியங்கா குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து நிதி குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் தனது பிறந்தநாளை வீட்டில் எளிமையாக கொண்டாடியுள்ளார்.
நடிகர் அஜித் நேற்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு நேற்று அதிகாலை முதலே திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு தொடர்ச்சியாக வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.

அஜித் ஒவ்வொரு பிறந்தநாளின் போது தனது வீட்டில் குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார். அந்த வகையில் நேற்று 50வது பிறந்தநாளையும் அவர் தனது வீட்டிலேயே மனைவி மற்றும் குழந்தைகளுடன் எளிமையாக கொண்டாடியுள்ளார். அஜித் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.