என் மலர்
சினிமா செய்திகள்
குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது.
‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’ போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். இவர் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிலையில் ரம்யா பாண்டியனுக்கு கண்ணில் லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ரம்யா பாண்டியன் தற்போது நலமாக இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து ரம்யா பாண்டியன் விரைவில் நலம் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை ரம்யா பாண்டியன் தற்போது சூர்யா தயாரிக்கும் படமொன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சக்ரா. அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கிய இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா உள்பட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து ஆர்யாவுடன் இணைந்து எனிமி படத்தில் நடித்துள்ளார் விஷால். அரிமா நம்பி, இருமுகன் படங்களின் இயக்குநர் ஆனந்த் சங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.


இதையடுத்து பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார். இதில் அவருடன் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க உள்ளார். ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடித்த அடங்க மறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலு இந்தப் படத்தை இயக்குகிறார். அடங்க மறு போலவே ஆக்ஷன் அதிரடியுடன் இந்தப் படம் உருவாக உள்ளது.
வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமான அப்புக்குட்டி கொரோனா 2வது அலையை சமாளிக்க முடியாமல் தவிப்பதாக கூறி இருக்கிறார்.
'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர், அப்புக்குட்டி. இவர் நடித்த 'அழகர்சாமியின் குதிரை' படத்துக்காக தேசிய விருது கிடைத்தது. இந்த விருது தனக்கு நிறைய படவாய்ப்புகளை வாங்கி தரும் என்று எதிர்பார்த்தார். இவருடைய ஆசை நிறைவேறவில்லை.

அப்புக்குட்டியின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு. நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். முதலில் சென்னை சாலிகிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த அப்புக்குட்டி, இப்போது கோவூரில் வசிக்கிறார். இதுவும் வாடகை வீடுதான்.

"சொந்த வீடு வாங்குகிற அளவுக்கு கையில் பணம் இல்லை. கொரோனாவின் முதல் அலை வீசியபோது ரொம்ப கஷ்டப்பட்டேன். இப்போது தாக்கும் இரண்டாவது அலையை எப்படி சமாளிக்கப்போகிறேனோ தெரிய வில்லை" என்கிறார், அப்புக்குட்டி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி உழைப்பாளர் தினத்தில் மறைந்த இயக்குனருக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார்.
இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணியின் போது உடல் நலக்குறைவு காரணமாக எஸ்.பி.ஜனநாதன் காலமானார்.


நடிகர் விஜய் சேதுபதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, பின்னர் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டு கண்ணீர் மல்க விடைக்கொடுத்தார். இந்நிலையில் விஜய் சேதுபதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மறைந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனுக்கு மரியாதை செலுத்தும் புகைப்படத்தை வெளியிட்டு உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளரான சாக்ஷி அகர்வாலுக்கு போலீஸ் அதிகாரி உதவி செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நடிகை சாக்ஷி, சிண்ட்ரெல்லா, புரவி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.



சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். மேலும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களை ஊக்குவித்து வருவார். தற்போது போலீஸ் அதிகாரி ஒருவரை பாராட்டி பதிவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து சாக்ஷி அகர்வால் கூறும்போது, சென்னை ஜெமினி மேம்பாலத்தில் செல்லும்போது தனது கார் திடீரென்று பிரேக் டவுன் ஆகிவிட்டது. நீண்ட நேரம் ஆகியும் காரை இயக்க முடியவில்லை. இதனால் சாலையில் டிராபிக் ஆனது. இதை கவனித்த போலீஸ் அதிகாரி சிட்டிபாபு, காரை அங்கிருந்து அகற்றுவதற்கு உதவியிருக்கிறார். இக்கட்டான நிலையில் தனக்கு உதவிய போலீஸ் அதிகாரி சிட்டிபாபுக்கு நன்றி. கொரோனா ஊரடங்கு காரணத்தால் நீண்ட நாட்களாக தனது காரை எடுக்காததால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது என்று கூறினார். மேலும் உழைப்பாளர்கள் தினத்தில் இதை பெருமையாக சொல்வது மகிழ்ச்சி என்றார்.
கே என் ஆர் மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்து இயக்கி நடித்திருக்கும் மாவீரன் பிள்ளை படத்தின் முன்னோட்டம்.
கே என் ஆர் மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் மாவீரன் பிள்ளை. இப்படத்தில் வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி பெண்களுக்கு தற்காப்பு கலை கற்றுத்தரும் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசை ரவிவர்மா, ஒளிப்பதிவு மஞ்சுநாத், படத்தொகுப்பு ஜூலின். பாடல்கள் எழுதி பாடியுள்ளார் ஆலயமணி.
இப்படத்தின் படப்பிடிப்பு தர்மபுரி மாவட்டம் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் டெல்லியிலும் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தவர் தற்போது புதிய அவதாரம் எடுத்து இருக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் 'தலைவி'. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 23-ம் தேதி திரையரங்குகளில் 'தலைவி' வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், கொரோனா பரவலால் 'தலைவி' படத்தின் வெளியீட்டைத் தேதி குறிப்பிடாமல் படக்குழுவினர் ஒத்திவைத்தனர்.

நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கங்கணா, தற்போது தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். தனது மணிகர்னிகா பிலிம்ஸ் சார்பில் 'டிக்கு வெட்ஸ் ஷெரு' என்ற படத்தைத் தயாரிக்கவுள்ளார். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தெலுங்கு மொழி படங்களில் நடித்த மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்காவின் திருமணம் பற்றிய செய்தி ஒன்று தீயாய் பரவி வருகிறது.
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அனுஷ்கா 39 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அனுஷ்கா திருமணம் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தன.

பாகுபலி படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக பேசப்பட்டது. பின்னர் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக தகவல் பரவியது. ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஒருவருடன் இணைத்து பேசினர். இறுதியாக மனைவியை விவாகரத்து செய்த 44 வயது தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடியை அனுஷ்கா காதலிப்பதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்றும் பேசப்பட்டது. இவற்றையெல்லாம் அனுஷ்கா மறுத்தார்.

சமீபத்தில் அனுஷ்காவிடம் உங்கள் திருமணம் எப்போது என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது எனக்கு தெரியவில்லை. திருமணம் முடிவானதும் அனைவருக்கும் தெரிவிப்பேன் என்றார்.
இந்த நிலையில் துபாய் தொழில் அதிபர் ஒருவருடன் அனுஷ்காவுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகி உள்ளதாகவும், அந்த தொழில் அதிபர் அனுஷ்காவை விட வயதில் இளையவர் என்றும் தெலுங்கு திரையுலகில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அனுஷ்கா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படத்தின் தெலுங்கு அப்டேட் வெளியாகி உள்ளது.
தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. வருகின்ற மே 8 ஆம் தேதி இந்த திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் கைப்பற்றியுள்ளார். படத்தில் ஹீரோவாக அவருடைய மகன் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாத இறுதிக்குள் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை சமீரா ரெட்டி குணமடைந்துள்ளார்.
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த சமீரா ரெட்டி, தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பதாக கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் என் அன்பை வாங்கிக்கோங்க என்று பகிர்ந்திருக்கிறார்.
யோகி பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'மண்டேலா'. ஒரு முடிவெட்டும் தொழிலாளியை அசிங்கமாக நடத்தும் கிராமம். ஆனால், அவனுக்கு ஓட்டு இருக்கிறது என தெரிந்தவுடன், அந்த ஒரு ஓட்டுக்காக அவனை என்னவெல்லாம் செய்கிறார்கள் என இந்திய அரசியலையே ஒரு திரைப்படத்தில் காட்டியிருந்தனர்.

இப்படத்தை மடோனா அஸ்வின் எனும் இளம் இயக்குனர் இயக்கியிருந்தார். இப்படம் திரை விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. யோகிபாபுவின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பக்கத்தில் 'யோசிச்சு பார்த்தா கடந்த சில பல நாட்கள்ல என் கண்ணில் கருத்தில் பதிந்த ஒரே நல்ல விஷயம் 'மண்டேலா'. மடோனா அஸ்வின், யோகிபாபு அண்ணா.. என் அன்பை வாங்கிக்கோங்க. அவ்ளோதான். வேற ஒன்னுமில்லை. நன்றி வணக்கம்' என பதிவிட்டுள்ளார்.
தமிழில் அஞ்சான் மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால் இன்று கொரோனாவால் உயிரிழந்தார்.
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால் உயிரிழந்துள்ளார்.

இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தியில் பல படங்களில் நடித்து மிகப் பிரபலமானவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இவர் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு வயது 52. இவரின் இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






