என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷாவின் திருமணம் குறித்த தகவலை பிரபல நடிகை வெளியிட்டுள்ளார்.
    சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் மே 4-ந்தேதியான நேற்று தனது 38ஆவது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடியிருக்கிறார். அவருக்கு அவரது சினிமா நண்பர்கள் பலரும் வாழ்த்து கூறினார்கள்.

    இந்நிலையில் திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ள நடிகை சார்மி, திரிஷாவின் திருமணம் குறித்தும் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில், திரிஷா பேச்சுலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இதுவாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    திரிஷா சார்மி

    இதன்மூலம் திரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்பதை அவர் மறைமுகமாக இப்படி தெரிவித்துள்ளார். நடிகை சார்மியும் திரிஷாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினுக்கு தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
    தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகிலிருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலரும் அவருக்கு நேரிலும் சமூக வலைதளம் மூலமும், தொலைபேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்கள்.

    இந்த நிலையில் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் அவர்கள் 14 கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

    விஜய் சேதுபதி

    தூத்துக்குடி ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, கூடங்குளம் உள்பட 14 கோரிக்கைகள் அவர்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாகவும், அந்த கோரிக்கைகளை கூடிய விரைவில் நிறைவேற்றும்படியும் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் கையெழுத்து போட்டு கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் அஸ்வின் இடத்தை காளிதாஸ் ஜெயராம் தற்போது பிடித்து இருக்கிறார்.
    உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி கடந்த 2013ஆம் ஆண்டு ’வணக்கம் சென்னை’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதனை அடுத்து அவர் விஜய் ஆண்டனி நடித்த ’காளி’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.

    தற்போது அவர் இயக்க உள்ள மூன்றாவது படம் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    காளிதாஸ் ஜெயராம்

    இந்த படத்தில் ’குக் வித் கோமாளி’ அஸ்வின் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது முழுக்க முழுக்க வதந்தி என்றும் இந்த படத்தில் நாயகனாக காளிதாஸ் ஜெயராம் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சின்னத்திரை நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளரான ஷிவானி தனது பிறந்தநாளை பாலாவுடன் இணைந்து கொண்டாடியிருக்கிறார்.
    பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    பாலா - ஷிவானி

    இந்நிலையில் ஷிவானி இன்று தனது பிறந்தநாளை பாலாவுடன் கொண்டாடி இருக்கிறார். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
    விஜய்யுடன் தளபதி 65 படத்தில் ஜோடியாக நடித்து வரும் பூஜா ஹெக்டேவின் கொரோனா பரிசோதனை ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
    மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது.

    பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா சென்று இருந்தார். விஜய், பூஜா ஹெக்டேவின் காதல் மற்றும் டூயட் பாடல் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜார்ஜியாவில் படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

    பூஜா ஹெக்டே

    அப்போது நடிகை பூஜா ஹெக்டேவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பதாக கூறி இருக்கிறார்.
    தமிழில் கமலுடன் அபூர்வ சகோதரர்கள் மலையாளத்தில் த்ரிஷ்யம் படங்களில் நடித்த பிரபல நடிகர் மேலா ரகு இன்று காலமானார்.
    கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். இதில் கமல் உயரம் குறைந்த நடிகராக நடித்திருப்பார். இந்த படத்தில் உயரம் குறைந்த நடிகர்கள் சிலர் நடித்திருப்பார்கள். அதில் ஒருவர் மேலா ரகு. 

    60 வயதாகும் மேலா ரகு இன்று காலமானார். கடந்த ஏப்ரல் 18ம் தேதி தனது வீட்டில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். அதன் பிறகு உடனே கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். 

    மேலா ரகு

    இவர் மோகன்லாலுடன் த்ரிஷ்யம், மேலா உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர் அனைவரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
    விஷாலின் சமர், சர்வம், அரிமா நம்பி படங்களில் நடித்த ஜேடி. சக்கரவர்த்தி தியேட்டரில் நடக்கும் திரில்லர் கதையில் தற்போது நடித்துள்ளார்.
    ஒரு திரையரங்கில் ஒரு நாளில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் 'MMOF'. இப்படத்தை என்.எஸ்.சி இயக்கி இருக்கிறார். திருமதி அனுஸ்ரீ வழங்கும் ஆர். ஆர். ஆர் மற்றும் ஜெகதீசன் இணைந்து தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாராகியுள்ளது.

    இப்படத்தில் நாயகனாக விஷாலின் சமர், சர்வம், அரிமா நம்பி படங்களில் நடித்த ஜேடி. சக்கரவர்த்தியும், நாயகியாக அக்ஷதாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஸ்ரீராம் சந்திரா, மனோஜ் நந்தன், பேனர்ஜி, செம்மக் சந்திரா, க்ராக் ஆர். பி ஆகியோரும் நடித்துள்ளனர்.

    ஜேடி. சக்கரவர்த்தி

    ஒரு திரையரங்கில் வரிசையாக கொலைகள் நடக்கின்றன. அந்தக் கொலைகளைச் செய்பவர் யார்? என்ன காரணம்? என்பது புதிராக உள்ளது. பரபரப்பான காட்சிகளோடு சஸ்பென்ஸ் திரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. திரை அரங்கில் நடக்கும் கொலைகளுக்கும் திரையரங்கில் காட்சிப்படுத்தும் படத்தில் வரும் காட்சிகளுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. அது என்ன? என்பது மர்மமாக வைத்து முழுக்க முழுக்க ஒரு திகில் படமாக உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு முழுவதும் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் நடைபெற்றுள்ளது.
    கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் இந்தியாவுக்கு உதவும்படி தனது ரசிகர்களுக்கு நடிகர் ஹேம்ஸ் மெக்அவாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    'எக்ஸ் மென்', 'ஸ்பிலிட்' உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜேம்ஸ் மெக்அவாய். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்கொடை அளிப்பதற்கான இணைப்பைப் பகிர்ந்துள்ளார். "இந்தியாவுக்கு ஆக்சிஜன் கருவிகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவ இந்த இணைப்பில் நன்கொடை அளியுங்கள். இந்தியாவுக்கு உதவி தேவை. உங்களால் உதவ முடியும். உங்களால் முடிந்ததை நன்கொடை கொடுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    காணொலி ஒன்றையும் பகிர்ந்திருக்கும் மெக்அவாய், "எல்லோருக்கும் இப்போது இந்தியாவின் நிலை தெரியும்.

    இப்போது மிக மோசமாக இருக்கிறது. அங்கு மிகப்பெரிய நெருக்கடி நிலவி வருகிறது. போதுமான ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் தேவைப்படும் இடங்களுக்கு என் மருத்துவ நண்பர் ஒருவர் அனுப்பி வருகிறார்.

    ஜேம்ஸ்

    உங்களிடம் பணம் இருந்தால் நல்லது. இல்லையென்றால், இதுகுறித்து மற்றவர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் இதற்கு கவனம் கொடுத்தாலே போதும். இந்தியாவின் நிலை நன்றாக ஆகும் என்று நம்புகிறேன். நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்" என்று பேசியுள்ளார்.
    'என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி' என்ற பாடலின் மூலம் புகழ்பெற்ற தெம்மாங்குப் பாடகர், நடிகர் டி.கே.எஸ். நடராஜன் காலமானார். அவருக்கு வயது 87.
    1933ஆம் ஆண்டு பிறந்தவர் டி.கே.எஸ். நடராஜன். சிறுவயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய டி.கே.எஸ். நடராஜன் எண்ணற்ற தெம்மாங்குப் பாடல்கள் மற்றும் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். பிரபல நாடகக் குழுவான டி.கே.எஸ். கலைக்குழுவில் நடித்ததால் இவரது பெயருக்கு முன்னால் டி.கே.எஸ். என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது.

    பாடல் தவிர்த்து ஏராளமான திரைப்படங்களிலும் நடராஜன் நடித்துள்ளார். 'ரத்தபாசம்', 'நாடோடி', 'நீதிக்குத் தலைவணங்கு', 'பொன்னகரம்', 'தேன் கிண்ணம்', 'கண்காட்சி', 'காதல் பரிசு' உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடராஜன் நடித்துள்ளார்.

    நடராஜன்

    'வாங்க மாப்பிள்ளை வாங்க' படத்தில் சங்கர் கணேஷ் இசையில் வெளியான 'என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி' என்ற பாடல் இவரைப் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. இப்பாடல் மீண்டும் அர்ஜுன் நடித்த 'வாத்தியார்' படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு பிரபலமானது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் டி.கே.எஸ். நடராஜன் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
    மு.களஞ்சியம் இயக்கத்தில் புகழ், சுபபிரியா, சீமான் நடிப்பில் உருவாகி உள்ள முந்திரிக்காடு படத்தின் முன்னோட்டம்.
    தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘முந்திரிக்காடு’. இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடித்துள்ளார். இவர்களுடன் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோர் நடித்துள்ளாகள்.

    ஜி.ஏ.சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை எல்.வி.கே.தாஸ் கவனிக்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கி உள்ளார் மு.களஞ்சியம்.

    முந்திரிக்காடு படக்குழு

    படம் பற்றி அவர் கூறியதாவது: “முந்திரிக்காட்டு மக்களின் வாழ்க்கை படம். யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலை உயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதை பதிவு செய்திருப்பதாக” அவர் தெரிவித்தார்.
    ‘துப்பறிவாளன் 2’ படத்தை விஷால் இயக்க உள்ளதாக கடந்தாண்டு அறிவிக்கப்பட்டதை அடுத்து, இப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை.
    மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் ஒரு நேர்மையான டிடெக்டிவ் அதிகாரியாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினர். 

    இதன் இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமியும் நடித்துள்ளனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்தது. இதையடுத்து விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இப்படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். இதனால் மீதிப் படத்தை தானே இயக்க உள்ளதாக விஷால் கடந்தாண்டு அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து இப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை.

    விஷால்

    நடிகர் விஷாலோ, அடுத்தடுத்து படங்களில் பிசியாகி வருகிறார். தற்போது எனிமி படத்தில் நடித்து வரும் விஷால், அடுத்ததாக து.ப.சரவணன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதுதவிர அடங்கமறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேலு இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் விஷால், துப்பறிவாளன் 2 படத்தை கிடப்பில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    சூர்யாவின் 39-வது படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா. இவர் தற்போது கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

    சூர்யா

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வக்கீல் வேடத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 
    ×