என் மலர்
சினிமா செய்திகள்
மங்காத்தா, ஜில்லா படங்களில் நடித்தவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான மகத் வீட்டில் விசேஷத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மகத். அதையடுத்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானார்.
இவர் தனது பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது மனைவி பிராச்சி மிஸ்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவருக்கு மகத் வளைகாப்பு நடத்தி இருக்கிறார். இவர் மனைவிக்கு மஞ்சள் பூசி முத்தமிட்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் இளம் தயாரிப்பாளர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் சாருஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தாதா87. இப்படத்தை கலை சினிமாஸ் சார்பில் ம.கலைச்செல்வன் தயாரித்திருந்தார். தற்போது கலைச்செல்வன் உயிரிழந்துள்ளார்.
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவந்த கலைச்செல்வன், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் முதல் முறையாக யு சான்றிதழை தவற விட்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். நெல்சன் இயக்கி உள்ள இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தை ரம்ஜான் பண்டியன்று வெளியிட உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், டாக்டர் படம் திட்டமிட்டபடி ரிலீஸாக முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் சென்சார் தகவல் வெளியாகி உள்ளது. சென்சாரில் டாக்டர் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த அனைத்து படங்களுக்கும் யு சான்றிதழ் கிடைத்தது. முதல் முறையாக யு சான்றிதழை சிவகார்த்திகேயன் தவற விட்டிருக்கிறார்.
பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் நடிகராக திகழ்பவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானார். வடசென்னை, பிகில் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.


தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக நடிகர் டேனியல் பாலாஜி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, சீதக்காதி, புரியாத புதிர் படங்களில் நடித்த காயத்ரி தற்போது பரியேறும் பெருமாள் நடிகருடன் இணைந்திருக்கிறார்.
தமிழில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, சீதக்காதி, புரியாத புதிர் படங்களில் நடித்தவர் காயத்ரி. இவர் விஜய் சேதுபதியுடன் மாமனிதன் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தை அடுத்து காயல் என்னும் படத்தில் காயத்ரி நடித்திருக்கிறார். இதில் பரியேறும் பெருமாள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லிங்கேஷ்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் ஐசக் வர்கீஸ், ஸ்வாகதா, ரமேஷ்திலக், பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். அனுமோள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரித்திருக்கும் இப்படத்தை தமயந்தி இயக்கி இருக்கிறார். விரைவில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது.
தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான ராய்லட்சுமி தற்போது பிகினி உடையில் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தின் மூலம்தான் பிரபலமானார். அதன்பிறகு ‘கற்க கசடற’, ‘குண்டக்க மண்டக்க’, ‘தர்மபுரி’, ‘வெள்ளித்திரை’, ‘மங்காத்த’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.
படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த ‘ஜூலி 2’ திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே தனது அடுத்த படத்தின் வாய்ப்புக்காக உடல் எடையை குறைத்து வருகிறார்.
இதையடுத்து பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது பின்க் நிற பிகினி அணிந்து ஒரு கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமயந்தி இயக்கத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ் , காயத்ரி, ஸ்வாகதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காயல்’ படத்தின் முன்னோட்டம்.
ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கும் புதிய படம் காயல். இப்படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ் , காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ்திலக், ரேடியோ சிட்டி பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். அனுமோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சாதி மாற்று திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் படமாக உருவாகி இருக்கும் காயல் திரைப்படம் காதலும் பயணமும் கலந்த ஒரு திரைவடிவம். ஒரு பெண்ணுடைய தேர்வை அங்கீகரிக்காத சமூகத்தை நோக்கி கேட்கப்படும் கேள்வியே இத்திரைப்படத்தின் ஆணிவேராக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் தமயந்தி.
முழுக்க முழுக்க கடல் சார்ந்த இடங்களான பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.

கார்த்திக் சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில், பி.பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பில், ஜஸ்டின் கெனன்யாவின் இசையமைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை அவரது மகள் சௌந்தர்யா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
சென்னை போயஸ் தோட்ட இல்லத்திலேயே ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி இன்று செலுத்திக்கொண்டார்.
ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை அவரது மகள் சௌந்தர்யா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பிய நிலையில் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை அவரது மகள் சௌந்தர்யா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பிய நிலையில் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
ஆடுகளம் படத்தில் திரிஷா நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ஆடுகளம். சேவல் சண்டையை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம் சிறந்த இயக்குனர், நடிகர், ஒளிப்பதிவாளர் உள்பட ஆறு பிரிவுகளில் தேசிய விருது வென்றது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாப்சி நடித்திருந்தார். அவரது கதாபாத்திரத்திற்கும் பாராட்டுக்கள் கிடைத்தன.

ஆனால் இப்படத்தில் டாப்சி நடித்த ஐரின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானது திரிஷா தான், அவர் சில காட்சிகளில் நடித்த பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியதால், பின்னர் டாப்சியை ஒப்பந்தம் செய்தனர். இந்நிலையில், ஆடுகளம் படத்தில் திரிஷா நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரகுல் பிரீத் சிங், கொரோனா பாதித்தவர்களுக்கு உதவ நிதி திரட்டி வருகிறார்.
தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக வந்த ரகுல் பிரீத் சிங் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பாலிவுட்டிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ரகுல் பிரீத் சிங், கொரோனா பாதித்தவர்களுக்கு உதவ நிதி திரட்டி வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் நிதியை ஆக்சிஜன் மற்றும் உயிர் காக்கும் உபகரணங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை ரகுல் பிரீத் சிங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் அதிலிருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லாக்டவுன் சமயத்தில் காதலர் சாந்தனுவுடன் இருப்பதாக தெரிவித்துள்ள சுருதிஹாசன், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுருதிஹாசன். இவரது நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ள சுருதிஹாசன், அடுத்ததாக பிரபாஸின் சலார் படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே இவர் காதல் வலையில் சிக்கியதும், அதிலிருந்து காதல் முறிவு ஏற்பட்டு சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்ததும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது அவர், சாந்தனு ஹசரிகா என்பவரைக் காதலித்து வருகிறார்.

இந்த லாக்டவுன் சமயத்தில் காதலர் சாந்தனுவுடன் இருப்பதாக சுருதிஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் எடுத்துக்கொண்ட விதவிதமான புகைப்படங்களையும் பகிர்ந்து, “லாக்டவுனில் என்னுடைய சிறந்தவருடன் இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். சுருதிஹாசனின் இந்தப் பதிவுக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது.
பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, தற்போது சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர், தற்போது சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.
உலகம் முழுவதும் பிரபலமான ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சி தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்கிறார்கள். அந்த நிகழ்ச்சியை தான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். ‘மாஸ்டர் செஃப் இந்தியா - தமிழ்’ என்ற பெயரில் இந்நிகழ்ச்சி தயாராகியுள்ளது.

உலகளவில் பிரபலமான இந்நிகழ்ச்சியை தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதால், இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஏற்கனவே ரசிகர்களிடம் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக இந்நிகழ்ச்சி அமையுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.






