என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என பெயரிடப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
    சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செல்வன் கடந்த ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் வெற்றி படமான ஓ மை கடவுளே மூலம் முன்னணி நடிகராகி விட்டார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

    இந்நிலையில், அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் டைட்டில் லுக் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டார். இப்படத்தை விஷால் வெங்கட் இயக்குகிறார். இப்படத்தில் மற்றொரு ஹீரோவாக நாசரின் மகன் அபிஹாசன் நடிக்கிறார்.

    சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் போஸ்டர்
    சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் போஸ்டர்

    மேலும் அஞ்சு குரியன், ரித்விகா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இப்படத்தை ஏ.ஆர்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ராதன் இசையமைக்கும் இப்படத்திற்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். 
    “இதுபோன்று டி.வி.யை உடைக்க வேண்டாம், பிறகு உன் தந்தை என்னிடம்தான் டி.வி. வாங்கி கொடுக்க சொல்லுவார்” என்று தனது குட்டி ரசிகனுக்கு சோனுசூட் அறிவுரை கூறியுள்ளார்.
    தெலங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தை சேர்ந்தவர் குருவையா. இவரது 7 வயது மகன் விராட், நடிகர் சோனு சூட்டின் தீவிர ரசிகனாம். குருவையா தனது மகனை உறவினர் வீட்டு திருமணத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரது மகன் விராட், சோனு சூட் நடித்த ‘துக்குடு’ என்ற தெலுங்கு படத்தை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தான். 

    ‘துக்குடு’ படத்தில் ஹீரோ மகேஷ் பாபு, வில்லன் சோனு சூட்டை அடித்து துவம்சம் செய்வது போன்று ஒரு சண்டைக் காட்சி இடம்பெற்றிருக்கும். தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் அடிவாங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாத விராட், மகேஷ் பாபு மீதான ஆத்திரத்தில் டி.வி மீது கல்லை எறிந்துள்ளான். டி.வி உடையும் சத்தம் கேட்டதும், உறவினர்கள் அங்கு விரைந்தனர். அதன்பிறகு தான் சிறுவன் விராட், சோனு சூட்டுக்காக டி.வி.யை உடைத்தது தெரியவந்தது. 

    சிறுவன் விராட் மற்றும் அவர் உடைத்த டி.வி.யின் புகைப்படம்
    சிறுவன் விராட் மற்றும் அவர் உடைத்த டி.வி.யின் புகைப்படம்

    இந்த செய்தியை அறிந்த சோனு சூட், “இதுபோன்று டி.வி.யை உடைக்க வேண்டாம். பிறகு உன் தந்தை என்னிடம்தான் டி.வி. வாங்கி கொடுக்க சொல்லுவார்” என்று தனது குட்டி ரசிகன் விராட்டுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
    நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் விஷ்ணு விஷாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

    இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. 

    நானே வருவேன் படத்தின் போஸ்டர்
    நானே வருவேன் படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இதில், நடிகர் விஷ்ணு விஷாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தனுஷுக்கு தம்பியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாக உள்ள தெலுங்கு படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளார். ராம்சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்தை தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

    இந்நிலையில், இப்படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ராம்சரணுக்கு தந்தையாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘ரங்கஸ்தலம்’ படத்தில் இணைந்து நடித்திருந்த ஜெகபதி பாபுவும், ராம்சரணும், தற்போது மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளனர்.

    ஜெகபதி பாபு
    ஜெகபதி பாபு

    நடிகர் ஜெகபதி பாபு, தற்போது சிவா - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகர் அமீர்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘லால் சிங் சட்டா’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் லடாக்கில் நடைபெற்றது.
    டாம் ஹாங்ஸ் நடிப்பில் 1994-ல் வெளியாகி வெற்றி பெற்ற ‘பாரஸ்ட் கம்ப்’ ஹாலிவுட் படம் இந்தியில் ‘லால் சிங் சட்டா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் அமீர்கான் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை சமீபத்தில் லடாக்கில் நடத்தினர். படப்பிடிப்பை முடித்து விட்டு கிளம்பியதும் அந்த பகுதியில் குப்பைகளை படக்குழுவினர் அப்படியே போட்டு விட்டு சென்றதாக சர்ச்சை கிளம்பியது. 

    படப்பிடிப்பு தளத்தில் குப்பைகள் கிடந்ததை ஒருவர் வீடியோவில் படம் எடுத்து டுவிட்டரில் பகிர்ந்து “லடாக்கின் வாகா கிராமத்தினருக்கு அமீர்கான் படக்குழுவினர் விட்டு சென்ற பரிசு இது. சுற்றுச்சூழல் தூய்மை பற்றி அமீர்கான் அதிகம் பேசுவார். அவரது படப்பிடிப்பு தளம் அசுத்தமாக உள்ளது’’ என்று கூறியிருந்தார். இதையடுத்து அமீர்கானை பலர் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

    அமீர்கான்

    இதையடுத்து அமீர்கான் பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களுடைய படப்பிடிப்பு தளம் சுத்தமாக இல்லை என்று குற்றச்சாட்டுகள் வருகின்றன. படப்பிடிப்பு தளத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதில் உறுதியாக இருக்கிறோம். படப்பிடிப்பு தளத்தில் குப்பைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள தனிக்குழுவையே வைத்துள்ளோம். நாங்கள் எப்போதுமே படப்பிடிப்பை முடித்து விட்டு அந்த இடத்தை சுத்தப்படுத்தி விட்டு தான் செல்கிறோம்’’ என்று கூறியுள்ளது.
    குடும்பப் பின்னணி கொண்ட கதையாக உருவாகும் ப்ரோ டாடி படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்து வருகிறார்.
    பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் 'ப்ரோ டாடி' படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது.

    இப்படத்தில் பிருத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா, லாலு அலெக்ஸ், முரளி கோபி, கனிகா உள்ளிட்ட பலர் மோகன்லாலுடன் நடிக்கவுள்ளனர். குடும்பப் பின்னணி கொண்ட கதையாக உருவாகும் இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்து வருகிறார்.

    மோகன்லால்
    மோகன்லால் - பிருத்விராஜ்

    இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு அனுமதி வழங்கப்படவில்லை. ஆகையால், ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளனர்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தாவின் புதிய படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகரின் மகள் ஒருவர் அறிமுகமாக இருக்கிறார்.
    முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தெலுங்கில் 'சகுந்தலம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 'ருத்ரமாதேவி' படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் குணசேகர், மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு 'சகுந்தலம்' படத்தை இயக்கி வருகிறார். 

    அல்லு அர்ஜுன்
    அல்லு அர்ஜுன் மகள்

    இந்த நிலையில், தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக, இப்படத்தில் அறிமுகமாகிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அல்லு அர்ஹா 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த அறிவிப்பை அல்லு அர்ஜுன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் அடுத்ததாக இயக்க உள்ள வாடிவாசல் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
    வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவாசல். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

    வாடி வாசல்

    இப்படத்தின் ஷூட்டிங் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நாளை மாலை 5.30 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
    தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டதாக பிரபல நடிகை ஒருவர் கூறியிருக்கிறார்.
    விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படம் மூலம் அறிமுகமான கிரண், தொடர்ந்து அஜித் நடித்த வில்லன், கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம், பிரசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

    முன்னணி நடிகையாக வலம் வந்த கிரண் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதன் பின்னர் சகுனி, ஆம்பள உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

    தற்போது பெரிய அளவில் திரைப்படங்களில் தலைகாட்டவில்லை என்றாலும், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    கிரண்
    கிரண்

    இதுகுறித்து கூறிய கிரண், பாபா படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நான் தவறவிட்டேன். அந்த சமயத்தில் நான் ஜெமினி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததால் என்னால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை. நடிப்பிலும் நடனத்திலும் அவரை யாராலும் தொடமுடியாது என்று இப்போதும் நான் சொல்வேன் என்றார்.
    பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூர் மீது மதநம்பிக்கையை புண்படுத்தியதாக சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    பிரபல இந்தி நடிகை கரீனா கபூருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 2-வதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் தனது கர்ப்பகால அனுபவங்களை தொகுத்து கரீனா கபூர் புத்தகம் ஒன்றை எழுதி கடந்த ஜூலை 9-ந் தேதி வெளியிட்டார்.

    “பிரக்னன்சி பைபிள்” என பெயரிடப்பட்ட அந்த புத்தகத்தை அவர் தனது 3-வது குழந்தை என குறிப்பிட்டு இருந்தார். இந்த புத்தகத்தின் தலைப்பில் உள்ள “பைபிள்” என்ற வாசகம் கிறிஸ்தவ மத நம்பிக்கையை புண்படுத்துவது போல அமைந்துள்ளதாக ஆல்பா ஒமேகா கிறிஸ்டியன் மகாசங் என்ற அமைப்பு மராட்டிய மாநிலம் பீட்டில் உள்ள சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது.

    கரீனா கபூர்

    இதுகுறித்து சிவாஜிநகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாய்நாத் தோம்ரே கூறுகையில், “நாங்கள் புகாரை பெற்றுக்கொண்டோம். இருப்பினும் சம்பவம் இங்கு நடக்காததால் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யவில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் மும்பை சென்று புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.
    பிரபுதேவா நடிப்பில் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது.
    'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்', 'இரண்டாம் குத்து' ஆகிய படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். இவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். 

    பல்லூ ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் மினி ஸ்டுடியோ என்னும் பட நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார்.

    வரலட்சுமி
    ரைசா - வரலட்சுமி சரத்குமார்

    இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
    ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஐங்கரன்' படத்தின் முன்னோட்டம்.
    காமன்மேன் நிறுவனம் சார்பில் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐங்கரன்’. ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஹரீஷ் பேரடி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

    மஹிமா நம்பியார், ஜி.வி.பிரகாஷ் குமார்
    மஹிமா நம்பியார், ஜி.வி.பிரகாஷ் குமார்

    சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஏ.எம்.ராஜா முகமது படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். கலை இயக்குனராக ஜி.துரைராஜ் பணியாற்றி உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் பாடல்களை மதன் கார்க்கி, ரோகேஷ், சிவசங்கர், விவேக் ஆகியோர் எழுதி உள்ளனர். நடன இயக்குனராக ராஜு சுந்தரம், ஷோபி பணியாற்றி உள்ளனர்.
    ×