என் மலர்
சினிமா

அசோக் செல்வன், அபிஹாசன்
அசோக் செல்வன் - அபிஹாசன் இணையும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’
அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என பெயரிடப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செல்வன் கடந்த ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் வெற்றி படமான ஓ மை கடவுளே மூலம் முன்னணி நடிகராகி விட்டார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் டைட்டில் லுக் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டார். இப்படத்தை விஷால் வெங்கட் இயக்குகிறார். இப்படத்தில் மற்றொரு ஹீரோவாக நாசரின் மகன் அபிஹாசன் நடிக்கிறார்.

சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் போஸ்டர்
மேலும் அஞ்சு குரியன், ரித்விகா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இப்படத்தை ஏ.ஆர்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ராதன் இசையமைக்கும் இப்படத்திற்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
Next Story






