என் மலர்
சினிமா செய்திகள்
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் அண்ணாத்த படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியாகியுள்ளது.
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. ஆயுத பூஜையை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் ஆண்டனியுடன், ரித்திகா சிங் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இப்படத்தை அடுத்து, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்தார். மேலும் அருண் விஜய்யுடன் பாக்சர், அரவிந்த் சாமியுடன் வணங்காமுடி போன்ற படங்களில் ரித்திகா சிங் நடித்துள்ளார்.

இதைத்தவிர, பாலாஜி குமார் இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகாசிங் நடித்துள்ளார். தற்போது இப்படத்திற்கு ‘கொலை’ என்று தலைப்பு வைத்து போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தை இன்பினிட்டி பிலிம்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
இந்தி பட உலகில் யாரும் நட்புறவுடன் பழகுவது இல்லை, இங்கு இனவெறிதான் அதிகம் உள்ளது என்று பிரபல நடிகர் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நவாசுதீன் சித்திக். இந்தி பட உலகில் முன்னணி வில்லன் மற்றும் குணசித்திர நடிகராக இருக்கிறார். சிறந்த நடிகருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் திரைப்பட துறையில் இனவெறி இருப்பதாக நவாசுதீன் சித்திக் குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘இந்தி பட உலகில் நட்புறவுடன் பழகுவது இல்லை. இங்கு இனவெறிதான் அதிகம் உள்ளது. ஒரு நடிகை கருப்பாக இருந்தால் பட வாய்ப்பு அளிக்காமல் ஒதுக்குகிறார்கள். படம் நன்றாக வர திறமையானவர்களை நடிக்க வைக்கவேண்டும். ஆனால் இங்கு அந்த நிலைமை இல்லை. தோலின் நிறத்தை பார்க்கின்றனர். நான் உயரம் குறைவாக இருந்ததால் என்னையும் பல வருடங்களாக நிராகரித்தார்கள். ஆனால் நடிப்பு திறமையால் இப்போது எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்தி பட உலகில் நிலவும் இந்த இனவெறியை எதிர்த்து நான் பல வருடங்களாக போராடி வருகிறேன். பல பெரிய நடிகர்களும் இனவெறியால் பாதிக்கப்பட்டு உள்ளனர்” என்றார். இந்த குற்றச்சாட்டு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிக்கிலோனா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சந்தானம் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சந்தானம். இவர் நடிப்பில் டிக்கிலோனா என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை மனோஜ் பீதா இயக்கி வருகிறார். ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். மேலும் மனோஜ் பீதாவின் வஞ்சகர் உலகம் படத்தை நான் மிகவும் ரசித்தேன். தற்போது இந்தப் படத்தைக் காண ஆவலாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் அரண்மனை 3 திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘அரண்மனை 3’. சுந்தர்.சி இயக்கியுள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டு இருக்கிறார். இப்படத்தில் ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
ஆயுத பூஜையை முன்னிட்டு இப்படம் நேற்று திரையரங்கில் வெளியானது. ஹாரர் காமெடி கலந்து வெளியாகி இருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சுந்தர்.சி - ஆர்யா
இப்படம் குறித்து ஆர்யா கூறும்போது, ‘நான் திகில் படங்களை பார்த்ததும் இல்லை. நடித்ததும் இல்லை. திகில் படங்களை பார்க்க எனக்கு பயம். இந்நிலையில், அரண்மனை 3 படத்தில் நடிக்க சுந்தர்.சி கேட்டபோது, நான் மறுத்தேன். எப்படி நடிப்பது என்று கேட்டேன். அதற்கு சுந்தர்.சி, தலையை மெதுவாக கீழே சாய்த்து கண் விழித்து பார்த்தால் போது பேய் படமாக எடுத்து விடுவேன் என்றார். அவ்வளவுதானா என்று நான் நடிக்க சம்மதித்தேன். எனக்குள் இருந்த பயம் போய்விட்டது’ என்றார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவின் நடிப்பில் தற்போது ‘ஜெய் பீம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
நடிகர் சூர்யாவின் 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் சூர்யா, எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள் என்று பேசும் வசனம் ரசிகர்களிடையே கவனம் பெற்று, இணையத்தில் வைரலாகி வருகிறது.
கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் சி.பி, தயாரித்து நாயகனாக நடித்திருக்கும் 'கிரிமினல்’ படத்தின் முன்னோட்டம்.
கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் சி.பி, தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் 'கிரிமினல்'. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில், அறிமுக நடிகர்களும், சில முன்னணி நடிகர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சஸ்பென்ஸ் திரில்லராக அறிமுக இயக்குனர் ஆறுமுகம் இயக்கியிருக்கிறார்.
நாயகனின் அப்பா கொலை செய்யப்பட, அந்த கொலை பழி நாயகன் மீது விழுகிறது. ஒரு பக்கம் போலீஸ் துரத்த, மறுபக்கம் தனது தந்தையை கொலை செய்த உண்மையான கொலையாளியை பிடித்து, தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் முயற்சியில் நாயகன் இறங்குகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சீட் நுனியில் உட்கார்ந்து பார்க்கும் வகையில், சஸ்பென்ஸாகவும், திரில்லராகவும் சொல்லியிருக்கிறார்கள்.
'கிரிமினல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி, தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிரிமினல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஆப்பிள் - பைனாப்பிள் ஆகிய இருவர் இணைந்து இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கிரண் குமார் டொர்னாலா ஒளிப்பதிவு செய்கிறார். பவன் கவுடா படத்தொகுப்பு செய்ய, மோகன் பி.கேர் கலையை நிர்மாணிக்கிறார். சசி துரை தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்ற, ஹஸ்வத் சரவணன் பி.ஆர்.ஓவாக பணியாற்றுகிறார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள 'கிரிமினல்' படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படம் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படம் இந்தியில் ரீமேக்காக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியானது. புஷ்கர் - காயத்ரி இருவருமே இயக்க ஒப்பந்தமானார்கள். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிப்பதற்குப் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

நீண்ட மாதங்களாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை முடிந்து, மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
லிப்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் ‘கூழாங்கல்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் கூழாங்கல் திரைப்படம் சர்வதேச பட விழாக்களில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.

இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் கவின் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ‘ஊர்க்குருவி’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இயக்குனர் விக்னேஷ் சிவனின் உதவியாளராக ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திலும், இயக்குனர் அஜய் ஞானமுத்துவிடம் ‘டிமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள்’ படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அருண் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னணி நடிகர்கள் ரஜினி, சூர்யா, விஷால், சிம்பு, அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படங்கள் வெளியாக இருக்கிறது.
கொரோனா பரவலால் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனை 100 சதவீதமாக உயர்த்த திரைப்பட சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 1-ந் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை நிரப்ப அரசு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகி ஸ்ரீதர் கூறினார்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை விருந்தாக ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஷால், ஆர்யாவின் எனிமி, சிம்புவின் மாநாடு, அருண் விஜய்யின் வா டீல் ஆகிய 4 படங்கள் தியேட்டர்களிலும், சூர்யாவின் ஜெய்பீம் ஓ.டி.டி, தளத்திலும் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
வெனம் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து டாம் ஹார்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வெனம் 2’ படத்தின் விமர்சனம்.
வெனம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெனம் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. நாயகன் டாம் ஹார்டி ரிப்போர்ட்டராக இருக்கிறார். இவரது உடலுக்குள் இருக்கும் வெனம் உதவியாக செயல்பட்டு வருகிறது. டாம் ஹார்டியின் செய்தியால் சீரியல் கில்லராக இருக்கும் வில்லனுக்கு மரண தண்டனை கிடைக்கிறது.
கடைசி நேரத்தில் வில்லன், டாம் ஹார்டியை சந்திக்க அழைக்கிறார். இவரது அழைப்பை ஏற்று செல்கிறார் டாம். அங்கு ஏற்படும் மோதலில் சீரியல் கில்லர் டாமின் கையை கடித்து விடுகிறார். அதன்பின் வில்லனுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நேரத்தில் கார்னேஜ் என்னும் வேறொரு ஆளாக மாறி அனைவரையும் கொல்கிறார்.

அதே சமயத்தில் டாம் உடலினுள் இருக்கும் வெனம், அவரை விட்டு செல்கிறது. இறுதியில், வெனம் இல்லாமல் டாம் எப்படி வில்லனை எதிர்த்தார்? கார்னேஜாக மாறிய வில்லனை வெனம் கொன்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் டாம் ஹார்டி, வில்லனாக வரும் வூடி ஹாரெல்சன் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். படத்திற்கு பெரிய பலம் கிராபிக்ஸ் காட்சிகள். வெனம், கார்னேஜ் வரும் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகளை பிரம்மாண்டமாக காண்பித்து இருக்கிறார்கள்.

ரசிகர்களுக்கு ஏற்றவாறு இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆண்டி செர்கிஸ். திரைக்கதையும், காட்சி அமைப்புகளும் ரசிக்கும் படி உள்ளது. மார்வல் படங்களில் அடுத்த படத்திற்கான முன்னோட்டம் காண்பிக்கப்படும். இந்த படத்தில் அது ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘வெனம் 2’ வெறித்தனம்.
ஆயுத பூஜையை முன்னிட்டு ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் 2 பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு அண்ணாத்த டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதில் கிராமத்தான குணமாதானே பார்த்துருக்க... கோபப்பட்டு பார்த்ததில்லயே... என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இந்த டீசர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.






