என் மலர்
சினிமா செய்திகள்
பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் முதல் எவிக்ஷன் பட்டியலில் பாவனி ரெட்டி மற்றும் தாமரைச் செல்வி தவிர இதர 15 போட்டியாளர்கள் இடம்பெற்று இருந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 3-ந் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 10 பெண்கள், 7 ஆண்கள், 1 திருநங்கை என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நமீதா மாரிமுத்து, முதல் வார இறுதியில் மருத்துவ காரணங்களுக்காக வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும். அதன்படி பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் முதல் எவிக்ஷன் பட்டியலில் பாவனி ரெட்டி மற்றும் தாமரைச் செல்வி தவிர இதர 15 போட்டியாளர்கள் இடம்பெற்று இருந்தனர்.

நதியா சங்
இவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக இந்த வாரம் நதியா சங் வெளியேற்றப்பட்டு உள்ளாராம். இவர் மலேஷியாவை சேர்ந்தவர். பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படும் முதல் போட்டியாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4-ந் தேதியும், சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படம் நவம்பர் 2-ந் தேதியும் ரிலீசாக உள்ளது.
நடிகர் சூர்யாவின் 39-வது படம் ஜெய் பீம். இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.
இதனிடையே ஜெய் பீம் படத்தின் டீசர் கடந்த வெள்ளிக்கிழமை விஜயதசமி பண்டிகை அன்று வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த டீசர், யூடியூப் டிரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த டீசர் இதுவரை 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

சூர்யா, ரஜினி
மேலும், ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் டீசரை சூர்யாவின் ‘ஜெய் பீம்’ டீசர் பின்னுக்குத் தள்ளி உள்ளது. கடந்த வியாழக்கிழமை ஆயுதபூஜை தினத்தன்று வெளியிடப்பட்ட ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் டீசர், இதுவரை 72 லட்சம் பார்வைகளை மட்டுமே பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ‘அண்ணாத்த’ படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சீரியல் நடிகை உமா மகேஸ்வரியின் திடீர் மறைவு சின்னத்திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
‘மெட்டி ஒலி’ தொடரில் விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை உமா மகேஸ்வரி. கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 40.
மெட்டி ஒலி, ஒரு கதையின் கதை, மஞ்சள் மகிமை உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ள உமா மகேஸ்வரி, ‘வெற்றிக் கொடிகட்டு’, ‘அல்லி அர்ஜுனா’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருடைய கணவர் முருகன், கால்நடை மருத்துவராக இருக்கிறார். நடிகை உமா மகேஸ்வரி, திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

உமா மகேஸ்வரி
அவரது திடீர் மறைவு சின்னத்திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகை உமா மகேஸ்வரியின் மறைவுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தற்போது மாமனிதன், கடைசி விவசாயி, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் 2-ம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் படம் 3 பாகங்களாக வெளியானது. இந்தியன், சந்திரமுகி படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராகின்றன.
இந்த நிலையில் தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. தர்மதுரை படம் 2016-ல் வெளியாகி வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக வரவேற்பை பெற்றது. இதில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். சீனுராமசாமி இயக்கினார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

ஆர்.கே.சுரேஷின் டுவிட்டர் பதிவு
தர்மதுரை படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய எந்த பக்கம் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் டுவிட்டர் பக்கத்தில் தற்போது அறிவித்து உள்ளார். இதில் நடிக்கும் கதாநாயகன், கதாநாயகி, இயக்குனர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
சின்னத்திரையில் மிகவும் பிரபல நடிகையாக இருக்கும் பவித்ரா லக்ஷ்மி, ரியோவுடன் இணைந்து ஒரு ஆல்பம் பாடலில் நடனம் ஆடியிருக்கிறார்.
இளம் திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலபடுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது. அஸ்கமாரோ, குட்டிப்பட்டாஸ் பாடல்களின் பிரமாண்ட வெற்றியினை தொடர்ந்து, தற்போது இவர்கள் தயாரிப்பில் ஐந்தாவது ஆல்பம் பாடலாக, ரியோ ராஜ் மற்றும் பவித்ரா லக்ஷ்மி நடிப்பில் “கண்ணம்மா என்னம்மா” என்ற ஆல்பம் பாடல் உருவாகியுள்ளது.
தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ ஜே.பி இயக்கியுள்ளார். இப்பாடலின் வெளியீட்டு விழா, சின்னத்திரை பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், சூப்பர் சிங்கர் பாடகர்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கலை நிகழ்வுகள், நடனம் என கோலகலமாக நடைபெற்றது. பாடலை நடன இயக்குநர் சாண்டி வெளியிட பிரபலங்கள் பெற்றுக்கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட செஃப் தாமு, நடிகை சுனிதா “கண்ணம்மா என்னம்மா” பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

பவித்ரா - ரியோ
இதில் பவித்ரா லக்ஷ்மி பேசும்போது, ‘ஒரு ஆடியோ லாஞ்ச் என்பது ஒவ்வொரு நடிகருக்கும் கனவு. அது பெரிய படம் பெரிய நடிகர் இருந்தால் தான் நடக்கும் என்றில்லாமல், திறமையிருந்தால் அனைவருக்கும் அந்த மேடை கிடைக்கும் என்பதை நிரூபித்த நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்க்கு நன்றி. இந்த பாடலை ஷாம் விஷால் பாடியிருக்கிறார் என்றவுடனே, நான் ஓகே சொல்லிவிட்டேன். சூப்பர் சிங்கரிலிருந்தே அவருக்கு நான் ரசிகை. பிரிட்டோ இதனை அற்புதமாக இயக்கியிருக்கிறார். எனக்காக இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’ என்றார்.
சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான படத்தின் இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் ராணா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
பாகுபலி படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ராணா. இவர் அடுத்ததாக தமிழ், தெலுங்கு, இந்தி என பன்மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நெற்றிக்கண்’ பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்குகிறார்.

ராணா - மிலிந்த் ராவ்
ஸ்பிரிட் மீடியா நிறுவனம் விஷ்வசாந்தி பிக்சர்ஸ் மற்றும் வீடன்ஸ் கிரியேட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து வழங்குகிறது. கோபிநாத் அச்சந்தா, அர்ஜூன் தஷ்யன் மற்றும் ராம்பாபு சோடிஷெட்டி இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் பணிகள் 2022 ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது.
சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் அகடு படத்தின் முன்னோட்டம்.
சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் அகடு. இதில் சார்பட்டா பரம்பரை புகழ் "டாடி" ஜான் விஜய், அஞ்சலி நாயர், சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார்.
ஒரு பயணத்தின் போது புதிய நட்புகள் கிடைக்கிறார்கள். அந்த பயணத்தை மறக்க முடியாத பயணமாக மாற்றுகிறார்கள் அந்த புதிய நட்புகள்.நம்மோடு நன்றாக பழகியவர்கள், எதிர் பாராத ஒரு நிமிடத்தில் நம் வாழ்வையே கலைத்துப்போட்டால்...
ஆமாம்... போதை அப்படித்தான். எப்படிப்பட்ட நட்பையும் போதை முறித்துவிடும், எப்படிப்பட்ட உறவையும் போதை அழித்துவிடும். போதையின் மற்றவர்களை அழிப்பதோடு தன்னையும் அழித்துக்கொள்ளவே வழிவகுக்கும் என்பதை அழுத்தம் திருத்தமாக பேச வருகிறது, அகடு.

பாலியல் குற்றங்களுக்கு எதிராக அகடு திரைப்படம் உருவாகி வருகிறது. கொடைக்கானலுக்கு நான்கு இளைஞர்கள் சுற்றுலா செல்கிறார்கள். அங்கு சுற்றுலா வந்த 13 வயது சிறுமிக்கு நான்கு இளைஞர்களால் எதிர்பாராத ஒரு கொடூர செயல் நடைபெறுகிறது. அச்சிறுமிக்கு என்ன நடந்திருக்குமோ என்று எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவராஜ்சிங்காரவேலு,சஞ்சீவ் இணை தயாரிப்பு செய்திருக்கிறார். ஜோகன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சாம்ராட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கபிலன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். படத்தொகுப்பை தியாகு கவனிக்கிறார். அகடு படத்தின் படப்பிடிப்பு முடிந்து இம்மாதம் வெளியாக இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவரது நடிப்பில் ‘அரண்மனை 3’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவான இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் சாக்ஷியுடன், ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சாக்ஷி அகர்வால் - சுந்தர் சி
இப்படம் குறித்து சாக்ஷி அகர்வால் கூறும்போது, ‘அரண்மனை 3 படத்தில் நடித்தது நல்ல அனுபவம். இயக்குனர் சுந்தர்.சி திறமையானவர். படப்பிடிப்பு தளமே மிகவும் ஜாலியாக இருந்தது. ஒரு படத்தை இயக்கி நடிப்பது மிகவும் கடினமான விஷயம். அதை சுந்தர்.சி மிகவும் திறமையாக கையாண்டார். மேலும் படத்தில் நிறைய நடிகர்கள். அவர்களை ஒருங்கிணைத்து நன்றாக வேலை வாங்கினார். இவருடைய படங்களில் நடிகைகளை அழகாக காண்பிப்பார். அதுபோல் என்னை மிகவும் அழகாக காண்பித்து இருக்கிறார். சரியாக திட்டமிட்டு படத்தை அழகாக முடித்திருக்கிறார். தற்போது தியேட்டரில் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்’ என்றார்.
2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆர்ட்டிகில் 15’ படத்தின் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.
நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
உதயநிதி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்திற்கு “நெஞ்சுக்கு நீதி” என படத்தின் தலைப்பு வைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது.
இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா, அடுத்ததாக ரொமாண்டி பேண்டஸி படத்தில் நடிக்க இருக்கிறார்.
முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து நடித்தவர் சமந்தா. தற்போது விக்னேஷ் சிவனின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் தெலுங்கு படத்திலும் சமந்தா நடித்து வருகிறார். மேலும், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.

இந்நிலையில், ரொமாண்டிக் பேண்டஸி வகையில் உருவாகவுள்ள படத்தில் சமந்தா நடிக்க இருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாக உள்ளது.
தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. தற்போது இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

தனுஷ் - செல்வராகவன் - இந்துஜா
இதில் கதாநாயகியாக பிகில் படத்தில் நடித்த இந்துஜா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகராக இருக்கும் பிரகாஷ் ராஜ் தேர்தலில் தோல்வியடைந்ததால் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்துள்ளார். சங்கத்தின் புதிய தலைவராக விஷ்ணு மஞ்சு வெற்றி பெற்றுள்ளார். தன்னை வெளிநபர் என்றும், தெலுங்கு கலைஞர்களுக்கு மட்டும் ஓட்டுபோடுங்கள் என்றும் பிரசாரம் செய்து தோற்கடித்து விட்டனர் என்று பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டி உள்ளார். தனது தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதுபோல் தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட சில பொறுப்புகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரகாஷ்ராஜ் அணியை சேர்ந்த 11 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு போட்டியாக புதிய நடிகர் சங்கத்தை தொடங்கும் முயற்சியில் பிரகாஷ்ராஜ் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறும்போது, “என் பக்கம் நின்ற அன்பார்ந்த நடிகர் சங்க உறுப்பினர்களை கைவிடமாட்டோம். விரைவில் உங்களுக்கு விளக்கம் தருகிறோம்” என்றார். தேர்தலில் மோகன்பாபு அடியாட்களுடன் உறுப்பினர்களை அடித்து அச்சுறுத்தினார். எனவே தேர்தல் காணொலி பதிவுகளை தன்னிடம் வழங்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிக்கு பிரகாஷ்ராஜ் கடிதம் எழுதி உள்ளார்.






