என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 

    18 போட்டியாளர்களுடன் தொடங்கிய ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில், நமீதா மாரிமுத்து மற்றும் நதியா சங் வெளியேறியதால் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

    இந்நிலையில், இந்த வாரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் படத்தின் புரமோஷனுக்காக அங்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் வருகிற அக்டோபர் 22-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

    ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர்
    ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர்

    அப்படத்தின் புரமோஷனுக்காகத் தான் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளாராம். அவருடன் நடிகர் ஹரீஷ் கல்யாணும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ஹரீஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
    சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக வரவேற்பை பெற்ற படம் ‘தர்மதுரை’. இதில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். தர்மதுரை படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய எந்த பக்கம் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. ஆர்.கே.சுரேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.

    இதனிடையே தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்தை சீனுராமசாமி இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

    சீனு ராமசாமி
    சீனு ராமசாமி

    இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து இயக்குனர் சீனு ராமசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தர்மதுரை பாகம் இரண்டு எடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. வாழ்த்துக்கள். ஆனால் அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள் உண்மையல்ல. ஆகவே அது சம்பந்தமான விசயத்தில் எனக்கு எவ்வித சம்பந்தம் இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில் என் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும்” என குறிப்பிட்டுள்ளார்.
    திட்டமிட்டபடி 12 நாட்களில் விண்வெளியில் படப்பிடிப்பை நடத்தி முடித்த படக்குழு, நேற்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.
    ஹாலிவுட்டில் விண்வெளியை மையமாக வைத்து கிராவிட்டி, இன்டர்ஸ்டெல்லர் போன்ற பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. முதன் முறையாக விண்வெளிக்கே சென்று ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள் ரஷ்ய படக்குழுவினர். இந்தப் படத்தை கிலிம் ஷிபென்கோ இயக்குகிறார்.

    கதைப்படி ஆய்வுக்காக விண்வெளிக்குச் செல்லும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவருக்கு இதயப் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. அவரை காப்பாற்ற பூமியிலிருந்து ஒரு மருத்துவர் செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் தான் படத்தின் கதை. இப்படத்திற்கு ‘தி சேலஞ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    இப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை யுலியா பெரெசில்ட், இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ மற்றும் அவர்களின் உதவிக்காக விண்வெளி வீரர் அன்டன் ஷகாப்லெரோவ் ஆகியோர் கடந்த 5-ந் தேதி கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் நகரில் இருந்து ‘சோயுஸ் எம்.எஸ்-19’ விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

    தி சேலஞ் படக்குழு
    தி சேலஞ் படக்குழு

    திட்டமிட்டபடி 12 நாட்களில் விண்வெளியில் படப்பிடிப்பை நடத்தி முடித்த படக்குழு, நேற்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். இதன் மூலம் விண்வெளியில் திரைப்படம் எடுத்த உலகின் முதல் நாடாக ரஷ்யா வரலாற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தீபாவளி பண்டிகையையொட்டி ரிலீசாக உள்ள ‘ஜெய் பீம்’ மற்றும் ‘அண்ணாத்த’ படங்களின் அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினி தற்போது சிவா இயக்கியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்துக்கு போட்டியாக சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படமும் ரிலீசாக உள்ளது. இப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

    படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், ‘ஜெய் பீம்’ மற்றும் ‘அண்ணாத்த’ படக்குழுவினர் அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரண்டு படங்களின் டீசர் வெளியிடப்பட்டன.

    ஜெய் பீம், அண்ணாத்த படங்களின் போஸ்டர்
    ஜெய் பீம், அண்ணாத்த படங்களின் போஸ்டர்

    இந்நிலையில், இந்த இரண்டு படங்களின் அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ‘ஜெய் பீம்’ படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்பாடலை தெருக்குரல் அறிவு பாடி உள்ளார்.

    அதேபோல் ‘அண்ணாத்த’ படத்தின் 3-வது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். மருதாணி என தொடங்கும் அப்பாடலுக்கு டி.இமான் இசையமைத்து உள்ளார்.
    பெங்களூரில் நடைபெற்ற இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டது.
    தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கர்ணன்’. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்திருந்தார். மேலும் யோகிபாபு, கௌரி கிஷன், லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

    கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரிக் குவித்தது. இப்படம் தற்போது தெலுங்கு மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

    தனுஷ்

    இந்நிலையில், பெங்களூரில் நடைபெற்ற இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்திய திரைப்படமாக கர்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை கட்டில் திரைப்படம் பெற்றது. இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. இந்த விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டது.  
    பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகருமான பிரகாஷ் ராஜ், தற்போது மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வருகிறார்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். 

    தற்போது இவர் கைவசம் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’, பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎப் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்டப் படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

    பிரகாஷ் ராஜ்

    இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் பிரகாஷ் ராஜ், விரைவில் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். சமீபத்திய பேட்டி மூலம் அவர் இதனை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே தமிழ் திரையுலகை சேர்ந்த தனுஷ், நெப்போலியன், ஜிவி பிரகாஷ் ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது பிரகாஷ் ராஜும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
    இ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் மிதுன், ரித்விகா, வடிவுக்கரசி, ரோகிணி நடிப்பில் உருவாகி வரும் ‘கருவறை’ படத்தின் முன்னோட்டம்.
    இ.வி.கணேஷ்பாபு நடித்து டைரக்டு செய்த ‘கட்டில்’ படம் முடிவடைந்து, திரைக்கு வர தயாராக இருக்கிறது. அவர் அடுத்து டைரக்டு செய்த ‘கருவறை’ படமும் முடிவடைந்தது. இது, பொருளாதார பின்னணியில் உருவான நடுத்தர குடும்பங்களை பற்றிய கதை. பெண் குழந்தை கருவை கலைக்கும் சூழல் அதிகமாகி வருவதை சித்தரிக்கும் படம்.

    மிதுன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்விகா நடித்துள்ளார். மேலும் வடிவுக்கரசி, ரோகிணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்துள்ளார், இ.வி.கணேஷ்பாபு. படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை.
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் திரிஷா, தற்போது வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
    கொரோனா சினிமா துறையை முடக்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு மவுசு கூடி உள்ளது. இந்த தொடர்கள் திரைப்படங்களைப்போல் காதல், ஆக்‌ஷன், மர்மம், பிரம்மாண்டம் என்று ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதாக பாராட்டுகள் கிடைத்துள்ளன. இதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு சினிமாவை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. 

    இதனால் நடிகைகள் பார்வை வெப் தொடர்கள் பக்கம் திரும்பி உள்ளது. ஏற்கனவே மீனா, காஜல் அகர்வால், நித்யா மேனன், ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் வெப் தொடர்களில் நடித்துள்ளனர். 

    திரிஷா

    இந்த நிலையில், நடிகை திரிஷாவும் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அவர் நடிக்கும் முதல் வெப் தொடருக்கு ‘பிருந்தா’ என பெயரிடப்பட்டு உள்ளது. தெலுங்கில் தயாராகும் இந்த வெப் தொடரை தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். சூர்யா வங்கலா இயக்கும் இந்த வெப் தொடரில் நடிகை திரிஷா துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், எனிமி, வீரமே வாகை சூடும் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    நடிகர் வி‌ஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து ‘சண்டக்கோழி’, ‘திமிரு’, ‘தாமிரபரணி’, ‘ஆம்பள’, ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘சக்ரா’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். 

    இவர் கைவசம் எனிமி, வீரமே வாகை சூடும் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர புதுமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார்.

    லத்தி சார்ஜ் படத்தின் போஸ்டர்
    லத்தி சார்ஜ் படத்தின் போஸ்டர்

    விஷாலின் 32-வது படமான இதற்கு ‘லத்தி சார்ஜ்’ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
    வடிவேலுவின் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிக்க உள்ள இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.
    நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்க உள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தற்போது இப்படத்தில் நடிக்க உள்ள இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.

    ரெடின் கிங்ஸ்லி
    ரெடின் கிங்ஸ்லி

    இந்நிலையில், ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோலமாவு கோகிலா, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரெடின், சமீபத்தில் நெல்சன் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான ‘டாக்டர்’ படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியான ‘அரண்மனை 3’ திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
    சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 3’. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். 

    அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார். அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

    ராஷி கன்னா, ஆர்யா
    ராஷி கன்னா, ஆர்யா

    இந்நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி ‘அரண்மனை 3’ திரைப்படம் தமிழகத்தில் முதல் 2 நாட்களில் 8.5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ‘அரண்மனை 3’ படம் இந்த அளவு வசூலித்துள்ளது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. 
    பிரபாஸின் சலார் படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் தற்போது பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், சலார் படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரணுடன் அவர் கூட்டணி அமைக்க உள்ளார். 

    ராம்சரண், பிரசாந்த் நீல், சிரஞ்சீவி
    ராம்சரண், பிரசாந்த் நீல், சிரஞ்சீவி

    சமீபத்தில் சிரஞ்சீவி மற்றும் ராம்சரணை சந்தித்து கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் பிரசாந்த் நீல். அப்போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தற்போது ஷங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இப்படத்தை முடித்த பின்னர் அவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    ×