என் மலர்
சினிமா

கிரிமினல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
கிரிமினல்
கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் சி.பி, தயாரித்து நாயகனாக நடித்திருக்கும் 'கிரிமினல்’ படத்தின் முன்னோட்டம்.
கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் சி.பி, தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் 'கிரிமினல்'. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில், அறிமுக நடிகர்களும், சில முன்னணி நடிகர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சஸ்பென்ஸ் திரில்லராக அறிமுக இயக்குனர் ஆறுமுகம் இயக்கியிருக்கிறார்.
நாயகனின் அப்பா கொலை செய்யப்பட, அந்த கொலை பழி நாயகன் மீது விழுகிறது. ஒரு பக்கம் போலீஸ் துரத்த, மறுபக்கம் தனது தந்தையை கொலை செய்த உண்மையான கொலையாளியை பிடித்து, தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் முயற்சியில் நாயகன் இறங்குகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சீட் நுனியில் உட்கார்ந்து பார்க்கும் வகையில், சஸ்பென்ஸாகவும், திரில்லராகவும் சொல்லியிருக்கிறார்கள்.
'கிரிமினல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி, தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிரிமினல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஆப்பிள் - பைனாப்பிள் ஆகிய இருவர் இணைந்து இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கிரண் குமார் டொர்னாலா ஒளிப்பதிவு செய்கிறார். பவன் கவுடா படத்தொகுப்பு செய்ய, மோகன் பி.கேர் கலையை நிர்மாணிக்கிறார். சசி துரை தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்ற, ஹஸ்வத் சரவணன் பி.ஆர்.ஓவாக பணியாற்றுகிறார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள 'கிரிமினல்' படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Next Story






