என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் நேற்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
    • இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் நேற்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


    குடும்பத்தாருடன் அஜித்

    இந்நிலையில், நடிகர் அஜித்தின் பண்பை பாராட்டி இயக்குனர் பார்த்திபன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தந்தையின் மறைவின் போது,நண்பர் அஜீத் உள்ளூரில் இருந்தது நல்லது.சோகத்தை புதைத்துக் கொண்டு வந்தவர்க்கு நன்றி சொன்னார்.மயானம் செல்ல தயாரானபோது காரில் அமர்ந்தவர் என்னருகில் சோழா பொன்னுரங்கம் (அமராவதி தயாரிப்பாளர்)நிற்பதை கண்டு இறங்கி வந்து நன்றி சொல்லிச் சென்ற பண்பு அவருக்கானது" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகர் அக்‌ஷய்குமார் 'படே மியான் சோட்டே மியான்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    தமிழில் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது 'படே மியான் சோட்டே மியான்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராப், மலையாள நடிகர் பிரித்விராஜ், சோனாக்சி சின்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


    அக்ஷய் குமார்

    இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அக்ஷய்குமார், டைகர் ஷெராப் ஆகியோர் மோதும் சண்டை காட்சியொன்று படமாக்கப்பட்டது. இந்த சண்டை காட்சியில் அக்ஷய்குமாருக்கு அடிபட்டு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும், சண்டை காட்சியை படமாக்குவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    • மு.மாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'கண்ணை நம்பாதே'.
    • இப்படம் கடந்த 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.


    கண்ணை நம்பாதே

    மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    தாத்தாவுடன் ஆத்மிகா

    இந்நிலையில், நடிகை ஆத்மிகா 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தை தனது தாத்தாவுடன் பார்த்துள்ளார். இதனை சமூக வலைதளத்தில்  புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும், அதில், "மகிழ்ச்சி என்பது உங்கள் தாத்தாவின் முகத்தில் பெருமிதம் பிரகாசிப்பதை பார்ப்பது. 90 வயதிற்கு மேற்பட்டவர் அவரது பேத்தி படத்தைப் பார்க்க சிரமமின்றி படிக்கட்டுகளில் ஏறினார். விலைமதிப்பற்ற இந்த தருணங்கள் என்றென்றும் பொக்கிஷமாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார். 


    • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பகாசூரன்’.
    • இப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

    பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.


    பகாசூரன்

    இதையடுத்து இப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் மோகன் ஜி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "பகாசூரன் Amazon prime ல் தற்போது.. குடும்பத்துடன் தயவு செய்து பாருங்கள்.. பேச முடியாத சில விஷயங்களை திரையில் பேசி உள்ளோம்.. நிச்சயம் சில வகையான தவறுகளில் சிக்கி கொள்ளமல் இருக்க இந்த திரைப்படம் உதவும்.. தெரிந்தவர்களையும் பார்க்க சொல்லுங்கள் நன்றி.


    • இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடிக்க உள்ளார்.

    ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் முதல் பார்வையை வருகிற 31-ஆம் தேதி பத்து முன்னணி இயக்குனர்கள் வெளியிட உள்ளனர்.


    மனோஜ் பாரதிராஜா - மணிரத்னம்- சுசீந்திரன்

    பாரதிராஜா இயக்கிய 'தாஜ்மஹால்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தான் இயக்குனர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

    மேலும், இப்படம் அனைவரும் ரசித்து பாராட்டும் வகையில் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் ஜி.வி.பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கியப்பங்காற்றும் என்றும் மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார்.

    மனோஜ் பாரதிராஜா, இயக்குனர் மணிரத்னத்திடம் 'பம்பாய்' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இதனையொட்டி அவரை சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’.
    • இப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.


    பொன்னியின் செல்வன் -2

    இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 


    பொன்னியின் செல்வன் -2 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் டிரைலர் வருகிற 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்த ரசிகர்கள் போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.


    • இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'.
    • இப்படம் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    பத்து தல

    இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இதையடுத்து 'பத்து தல' படக்குழு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில், நடிகர் சிம்பு பேசியதாவது, "இந்த படத்தில் எல்லாருக்கும் அவர்களுடைய கதாபாத்திரத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை இயக்குனர் கிருஷ்ணா நல்ல செய்திருக்கிறார். நான் கடைசியாக விக்ரம் படத்தில் தான் பார்த்தேன், ஒவ்வொரு நடிகர்களுக்கும் சரியாக அவர்களுக்கான இடம் கொடுத்த ஒரு திரைப்படம் அது. அந்த மாதிரி இந்த படத்திலும் எல்லோருக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கும்.


    பத்து தல படக்குழு

    நான் இயக்குனரிடம் அடிக்கடி கூறுவேன் கவுதமுக்கு எதாவது ஷாட் கொடுங்கள் என்று அதற்கு இயக்குனர் எல்லோருக்கு சமமான ஷாட் தான் இருக்கிறது நீங்கள் பயப்படவேண்டாம் என்று எனக்கு அறிவுரை கூறுவார். இப்போது படம் பார்க்கும் போது தான் தெரிகிறது அவர் மிகவும் அருமையாக இயக்கியிருக்கிறார். இந்த படம் இயக்குனரை மேலும் மேலும் ஒரு இடத்திற்கு கொண்டு போகும் என்று நம்புகிறேன்.

    எல்லாரும் சொல்லுவார்கள் கவுதம் கார்த்திக் மிகவும் கஷ்டப்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார் என்று அந்த அளவிற்கு ஒரு வலியையும் ஜாலியாக எடுத்துக்கொள்பவர்கள் வாழ்க்கையில் தோற்றுப்போக வாய்ப்பேயில்லை, கண்டிப்பாக அவர்களது உயரம் பெரியதாக தான் இருக்கும். ஒரு ஹீரோ ஆக்ஷனில் ஈர்ப்பது ரொம்ப கஷ்டம் அதை மிகவும் சுலபமாக கவுதம் செய்வதை நான் அருகில் இருந்து பார்த்தேன். நான் அவரது ஆக்ஷனை ரசித்தேன். என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று ஆக்ஷன் செய்வதை நான் கவுதமிடம் பார்த்தேன். ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் 'பத்து தல' படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

    • தமிழில் பல பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தவர் பாம்பே ஜெயஸ்ரீ.
    • இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞராக வலம் வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி கவனம் பெற்றவர். தமிழில் இவர் பாடிய 'வசீகரா', 'ஒன்றா ரெண்டா ஆசைகள்', 'யாரோ மனதிலே' உள்ளிட்ட பல பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.


    இந்நிலையில், பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்திற்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அங்கு எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், இவரது மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது
    • மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு, "டி.எம்.சவுந்தரராஜன் சாலை" எனப் புதிய பெயர் சூட்டப்பட்ட பலைகை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 24-ந் தேதி தலைமைச் செயலகத்தில், பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு, "டி.எம்.சவுந்தரராஜன் சாலை" எனப் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் 1923-ம் ஆண்டு மதுரையில் பிறந்தார். தனது இளம் வயதிலேயே இசைப் பயிற்சி பெற்று இசை ஞானத்தை வளர்த்தார். 1950-ம் ஆண்டு முதல் அரை நூற்றாண்டு காலம் தமிழ்த் திரையுலகில் சிறப்புமிக்க பாடகராகத் திகழ்ந்த அவர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் நீங்கா இடம் பிடித்தார்.


    டி.எம்.சவுந்தர ராஜன் பெயர் பலகை

    டி.எம்.சவுந்தரராஜனுக்கு  கருணாநிதியால் 1970-ம் ஆண்டு "ஏழிசை மன்னர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது. மேலும், 1969-ம் ஆண்டு கவியரசர் கண்ணதாசனால் "இசைக் கடல்" என்றும் போற்றப்பட்டார். 2003-ம் ஆண்டு டி.எம்.சௌந்த ரராஜன் பத்மஸ்ரீ பட்டமும் பெற்றார். தனது குரல் வளத்தால் மக்கள் மனதில் இடம்பெற்ற டி.எம்.சவுந்தரராஜன் 25.5.2013 அன்று மறைந்தார்.

    பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் புகழுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் பாடிய புகழ்பெற்றப் பாடல்களை நினைவுகூரும் வகையில் இன்னிசைக் கச்சேரி இன்று மாலை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மு.பெ. சாமி நாதன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.ரா. செல்வராஜ்,செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் த.மோகன், டி.எம். சவுந்தரராஜன் மகன்கள் பால்ராஜ், செல்வக்குமார், மகள் மல்லிகா மற்றும் குடும்பத்தினர் கலந்து கொள்கின்றனர்.


    • நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
    • இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தம்பி அஜித்குமாரின் அப்பா திரு. சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


    • நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
    • இவரின் மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் என பலரும் நேரிலும், சமூக வலைத்தளத்தின் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்தனர்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.



    இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். 

    • தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வருபவர் ஜெய்.
    • ஜெய் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் ஜெய் தன் இன்னசெண்ட் கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த இவர் கடைசியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடித்திருந்த 'காபி வித் காதல்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.


    ஜெய்

    இதையடுத்து, இவர் தற்போது இயக்குனர் ரோகின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதி செய்யும் இப்படத்திற்கு பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.


    தீராக்காதல் முதல்தோற்ற போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'தீராக்காதல்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான முதல் தோற்ற போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னணி நிறுவனமான லைகா நிறுவனத்துடன் ஜெய் கைக்கோர்த்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


    ×