இரண்டு கதாநாயகிகளுடன் கைக்கோர்க்கும் ஜெய்.. கவனம் ஈர்க்கும் போஸ்டர்

தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வருபவர் ஜெய்.ஜெய் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜெய்
ஜெய்
Published on

தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் ஜெய் தன் இன்னசெண்ட் கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த இவர் கடைசியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடித்திருந்த 'காபி வித் காதல்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஜெய்

இதையடுத்து, இவர் தற்போது இயக்குனர் ரோகின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதி செய்யும் இப்படத்திற்கு பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.

தீராக்காதல் முதல்தோற்ற போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'தீராக்காதல்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான முதல் தோற்ற போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னணி நிறுவனமான லைகா நிறுவனத்துடன் ஜெய் கைக்கோர்த்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com