search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    • இதில் 4.4 லிட்டர் டுவின் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது.
    • இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும்.

    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் SV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ரேன்ஜ் ரோவர் SV மாடலின் விலை ரூ. 2 கோடியே 80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எஸ்.யு.வி.-யின் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இதில் 4.4 லிட்டர் டுவின் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள 4.4 லிட்டர் வி8 என்ஜின் 626 ஹெச்.பி. பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 290 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.


     

    சக்திவாய்ந்த என்ஜின் மட்டுமின்றி, இந்த எஸ்.யு.வி. மாடலின் லோயர் பாடி ரி-ப்ரோஃபைல் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் கார்பன் ஃபைபர் டிப் கொண்ட குவாட் டெயில்பைப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் கேபின் பகுதியில் SV சார்ந்த பெர்ஃபார்மன்ஸ் ஸ்போர்ட் சீட்கள், கார்பன் ஃபைபர் பேக் உள்ளது.

    இதில் உள்ள பேக்ரெஸ்ட் மற்றும் கியர் லீவர்களில் இலுமினேட் செய்யப்பட்ட SV லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ரேன்ஜ் ரோவர் SV மாடல் லம்போர்கினி உருஸ், ஆடி RSQ8 மற்றும் ஆஸ்டன் மார்டின் DBX போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • லிமிடெட் எடிஷன் மாடலில் 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் டுவின் டர்போ டீசல் என்ஜின் உள்ளது.
    • லிமிடெட் எடிஷன் மாடலின் வெளிப்புறம் பசிபிக் புளூ மேட் பெயின்ட் ஃபினிஷ் உள்ளது.

    லேண்ட் ரோவர் ஆஸ்திரேலியா லிமிடெட் எடிஷன் டிஃபெண்டர் 90 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த லிமிடெட் எடிஷன் மாடல் மொத்தத்திலேயே 15 யூனிட்கள் தான் உருவாக்கப்படுகின்றன.

    டிஃபென்டர் 90 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய லிமிடெட் எடிஷன் மாடலில் 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் டுவின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 245 ஹெச்.பி. பவர், 570 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

     


    லிமிடெட் எடிஷன் மாடலின் வெளிப்புறம் பசிபிக் புளூ மேட் பெயின்ட் ஃபினிஷ் மற்றும் காண்டிராஸ்ட் நிற வைட் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இத்துடன் கிரில் ஹைலைட்கள், டோர் ஹேண்டில் அக்செண்ட்கள், 18 இன்ச் ஸ்டீல் வீல்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாடலில் ஸ்லைடிங் பானரோமிக் சன்ரூஃப் பிரைவசி கிளாஸ், எலெக்ட்ரிக் ஏர் சஸ்பென்ஷன் மற்றும் டிரைவ் மோட்கள் உள்ளன.

    புதிய லிமிடெட் எடிஷனின் 15 யூனிட்களுடன் டிஃபென்டர் சர்ஃப் போர்டு, பக்கவாட்டில் கியர் கேரியர், சைடு ஸ்டெப்கள், அக்வா ஸ்போர்ட்ஸ் கேரியர், போர்டபில் ரின்ஸ் சிஸ்டம், பிளாக் ரூஃப் ரெயில்கள், டோ ஹிட்ச் ரிசீவர் மற்றும் லாக்கிங் வீல் நட்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் ஸ்டீரிங் வீல், டோர் பேனல்களில் வைட் எலிமன்ட்கள் உள்ளன.

    இத்துடன் பவுடர் கோட் செய்யப்பட்ட டேஷ்போர்டு, 12 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மற்றும் ஹீடெட் முன்புற இருக்கைகள், எபோனி லெதர், மேம்பட்ட மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் லிமிடெட் எடிஷன் யூனிட்களை அடையாளப்படுத்தும் வகையில் 1 முதல் 15 வரையிலான பேட்ஜிங் வழங்கப்படுகிறது. 

    • ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா சொனெட் மாடல் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய சொனெட் மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.

    2024 கியா சொனெட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கியா சொனெட் மாடல் முதல் முறையாக மிகப் பெரிய அப்டேட் பெற்று இருக்கிறது. புதிய சொனெட் மாடலுக்கான முன்பதிவுகள் டிசம்பர் 20-ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா சொனெட் மாடல் HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+, மற்றும் X-Line என ஏழு வேரியண்ட்கள், 11 வெளிப்புற நிறங்களில் கிடைக்கிறது. இதன் மோனோடோன் வெர்ஷன் கிளேசியர் வைட் பியல், ஸ்பார்க்லிங் சில்வர், கிராவிட்டி கிரே, அரோரா பிளாக் பியல், இன்டென்ஸ் ரெட், இம்பீரியல் புளூ, க்ளியர் வைட், பீவ்டெர் ஆலிவ் மற்றும் மேட் கிராஃபைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

     


    டூயல் டோன் ஆப்ஷன்களில் இன்டென்ஸ் ரெட் மற்றும் கிளேசியர் வைட் நிறங்கள் பிளாக் ரூஃப் உடன் வழங்கப்படுகிறது. 2024 கியா சொனெட் மாடலின் முன்புறம் மாற்றப்பட்டு இன்வெர்ட் செய்யப்பட்ட "L" வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் முற்றிலும் புதிய டிசைன் கொண்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், புதிய எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள், பின்புறத்தில் லைட் பார் டெயில்கேட் முழுக்க நீளும் வகையில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கேபின் பகுதியில் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.25 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், லெவல் 1 ADAS சூட், புதிய ஏ.சி. பேனல், ஜன்னல்களில் வாய்ஸ் கண்ட்ரோல் வசதி, முன்புற இருக்கைகளில் வென்டிலேஷன் வசதி வழங்கப்படுகிறது.

     


    புதிய 2024 கியா சொனெட் மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் மாற்றம் செய்யப்படாமல், அதே என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த மாடலிலும் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 82 ஹெச்.பி. பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    1.5 லிட்டர் டீசல் யூனிட் 114 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டர்போ பெட்ரோல் என்ஜின் 118 ஹெச்.பி. பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு iMT, 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் மற்றும் 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    • கவாசகி நிறுவனம் W175 ஸ்டிரீட் மாடலை அறிமுகம் செய்தது.
    • எலிமினேட்டர் 450 மாடலில் 451சிசி, பேரலல் டுவின் என்ஜின் உள்ளது.

    கவாசகி நிறுவனம் தனது எலிமினேட்டர் 450 மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில், கவாசகி எலிமினேட்டர் 450 மாடல் இந்தியா பைக் வார நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. எனினும், இதற்கு மாற்றாக அந்நிறுவனம் W175 ஸ்டிரீட் மாடலை அறிமுகம் செய்தது.

    இந்த நிலையில், தான், கவாசகி நிறுவனத்தின் எலிமினேட்டர் 450 க்ரூசர் மாடல் மோட்டார்சைக்கிள் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்களில் பலர் எலிமினேட்டர் 450 குறித்த தகவல்களை கவாசகியிடம் தொடர்ந்து கேட்டு வருவதாக தெரிகிறது.

     


    தற்போது கவாசகி நிறுவனம் க்ரூயிசர் பிரிவில் வல்கன் எஸ் 650சிசி மாடலை விற்பனை செய்து வருகிறது. இதன் எடை 235 கிலோ ஆகும். இதன் காரணமாக இந்திய சந்தையில் 176 கிலோ எடை கொண்ட எலிமினேட்டர் மாடல் வல்கன் எஸ் மோட்டார்சைக்கிளை விட குறைந்த விலையில் கிடைக்கும் ஆப்ஷனாக அமையும்.

    புதிய எலிமினேட்டர் 450 மாடலில் 451சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 49 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் டிரெலிஸ் ஃபிரேம் உள்ளது. மேலும் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டூயல் ஸ்ப்ரிங்குகள், இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் கவாசகி எலிமினேட்டர் 450 மாடல் ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650-க்கு போட்டியாக அமையும். புதிய எலிமினேட்டர் 450 மாடல் இந்தியாவுக்கு முழுமையாக உருவாக்கப்பட்ட நிலையில், இறக்குமதி செய்யப்படுமா அல்லது பாகங்கள் கொண்டுவரப்பட்டு இந்தியாவில் அசெம்பில் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    • இந்த ஸ்கூட்டர் 104 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
    • கைனெடிக் ஜூலு மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்படுகிறது.

    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் அதிக பிரபல மாடல்களான லூனா மற்றும் கைனெடிக் ஹோண்டா ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்த கைனெடிக் கிரீன் இந்தியாவில் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. கைனெடிக் ஜூலு (Zulu) என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அந்நிறுவனத்தின் நான்காவது மாடல் ஆகும்.

    ஹப் மோட்டார் மூலம் இயங்கும் கைனெடிக் ஜூலு 2.1 கிலோவாட் பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர்கள் வரையிலான வேகத்தில் செல்லும். இந்த மாடலில் 2.27 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 104 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளது.

    எனினும், போக்குவரத்து மிக்க சாலைகளில் இந்த ஸ்கூட்டர் அதிகபட்சம் 75 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில், இந்த மாடல் அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற வாகனமாக இருக்கும்.

    கைனெடிக் ஜூலு மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், டுவின் ஷாக் அப்சார்பர்கள், இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள், 10 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் எல்.சி.டி. யூனிட், எல்.இ.டி. டி.ஆர்.எல். வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய கைனெடிக் ஜூலு மாடலின் விலை ரூ. 94 ஆயிரத்து 490, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • எங்களின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் ஒரு எஸ்.யு.வி. மாடல்.
    • 550 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் கொண்டிருக்கும்.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் eVX என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாருதி சுசுகி eVX மாடல், டொயோட்டா பிராண்டிங்கிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதோடு இந்த மாடல் வெளிநாட்டு சந்தைகளிலும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. இந்த காரின் வெளியீடு பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், 2025 நிதியாண்டு வாக்கில் மாருதி சுசுகி eVX மாடல் வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

     


    அதன்படி புதிய மாருதி சுசுகி eVX மாடல் அடுத்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு இதன் விலை விவரங்கள் 2025 துவக்கத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    "எங்களின் முதல் எலெக்ட்ரிக் வாகனம், ஒரு எஸ்.யு.வி. மாடல் அடுத்த நிதியாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும். தற்போது ஹன்சல்பூரில் உள்ள ஆலையில் மூன்று பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய தனி பிரிவு உருவாக்கப்பட இருக்கிறது," என மாருதி சுசுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகுல் பாரதி தெரிவித்து இருக்கிறார்.

    "எங்களின் எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட் கார் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இது அதிக அம்சங்கள் நிறைந்த எஸ்.யு.வி.யாக இருக்கும். இந்த எலெக்ட்ரிக் கார் 60 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 550 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கும்," என அவர் மேலும் தெரிவித்தார். 

    • டேசியா மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது.
    • இந்த கார் 7 சீட்டர் வேரியண்டிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

    ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முற்றிலும் புதிய டஸ்டர் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை ரெனால்ட்-இன் துணை பிராண்டு டேசியா அறிமுகம் செய்துள்ளது. புதிய டஸ்டர் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து மற்ற சந்தைகளில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இந்திய சந்தையில் முற்றிலும் புதிய டஸ்டர் மாடல் 2025 ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடல் CMF-B பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் இதுவரை பல்வேறு டேசியா, ரெனால்ட் மற்றும் நிசான் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.

     

    இந்த காரின் முன்புறம் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் டேசியா மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், ரெனால்ட் பிராண்டிங்கில் அறிமுகமாகும் டஸ்டர் மாடலில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. இந்த கார் 7 சீட்டர் வேரியண்டிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    டேசியா டஸ்டர் மாடலில் 1.6 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் 1.2 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங் வசதி வழங்கப்படுகிறது.

     

    இத்துடன் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் ஸ்டார்டர் மோட்டார் வழங்கப்படுகிறது. முந்தைய மாடலை போன்றே புதிய டஸ்டர் மாடலும் 4x2 மற்றும் 4x4 ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. 

    • இரு கார்களின் டாப் எண்ட் மாடல்களின் அம்சங்கள் உள்ளன.
    • காண்டிராஸ்ட் நிற க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது குஷக் எஸ்.யு.வி. மற்றும் ஸ்லேவியா செடான் மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 18 லட்சத்து 31 ஆயிரம், ரூ. 17 லட்சத்து 52 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    எலிகன்ஸ் எடிஷன் என்று அழைக்கப்படும் புதிய மாடல்களில் டீப் பிளாக் நிற வெளிப்புற பெயிண்ட், இரு கார்களின் டாப் எண்ட் மாடல்களின் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. பிளாக் ஃபினிஷ் தவிர கிரில், டெயில்கேட் மற்றும் டோர் மோல்டிங்களில் காண்டிராஸ்ட் நிற க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இரு மாடல்களின் கதவருகே படில் லேம்ப்கள் எனும் விசேஷ மின்விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

    குஷக் எலிகன்ஸ் எடிஷன் மாடலில் 17 இன்ச் வீகா அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் இரு கார்களின் ஸ்டீரிங் வீல் மற்றும் குஷன்களில் எலிகன்ஸ் எடிஷன் பேட்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் கிளஸ்டர், 6 ஸ்பீக்கர், சப்-ஊஃபர் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    புதிய எலிகன்ஸ் எடிஷன் மாடல்களில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 150 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    • புதிய கண்ட்ரிமேன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய மினி கண்ட்ரிமேன் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் அளவில் சிறிய கார்களை உற்பத்தி செய்வதில் உலகம் முழுக்க தனக்கென வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் பிராண்டாக மினி அறியப்படுகிறது. குட்டி கார் என்ற போதிலும், பெரும்பாலானோரை கவரும் வகையிலான டிசைன், ஃபிளாக்ஷிப் தர உற்பத்தி மற்றும் சக்திவாய்ந்த என்ஜின் என மினி கார்களில் அனைத்து அம்சங்களும் சிறப்பானதாகவே இருந்து வந்துள்ளன.

    அந்த வரிசையில், மினி பிராண்டின் முற்றிலும் புதிய கண்ட்ரிமேன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய 2025 மினி கண்ட்ரிமேன் மாடல், இதுவரை வெளியானதிலேயே மிகப்பெரிய மினி கார் ஆகும். அளவில் பெரிய கண்ட்ரிமேன் மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

    புதிய மினி கண்ட்ரிமேன் மாடல் S All4 மற்றும் JCW என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் S All4 வேரியண்டில் 2.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 241 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதன் JCW வேரியண்டில் 312 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் என்ஜின் வழங்கப்படுகிறது.

    2025 மினி கண்ட்ரிமேன் மாடலின் உற்பத்தி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கும் என்று தெரிகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மாடல்கள் 2024 மே மாதம் விற்பனை மையங்களை வந்தடையும் என்று கூறப்படுகிறது. இந்த கார் வெளியீட்டின் போதே All4 மற்றும் JCW என இரண்டு வேரியண்ட்களும் கிடைக்கும். இதே காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அடுத்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

    • டெஸ்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக கூறப்பட்டது.
    • இது மிட்-சைஸ் கிராஸ்ஒவர் எஸ்.யு.வி. ஆகும்.

    எலான் மஸ்க்-இன் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யும் நிறுவனமான டெஸ்லா தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் மாடலை ஜெர்மனி நாட்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் இரண்டு கதவுகளை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர இந்த குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் ஜெர்மனியை தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இந்திய சந்தையில் டெஸ்லா களமிறங்குவது குறித்து எலான் மஸ்க் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இந்நிறுவனம் தனது மாடல்களில் சிலவற்றை அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் இறக்குமதி செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், இதுபற்றிய தகவல்கள் ரகசியமாகவே உள்ளன.

    கடந்த 2020 ஆண்டு டெஸ்லா அறிமுகம் செய்த எலெக்ட்ரிக் கார் "மாடல் Y" சற்றே குறைந்த விலை பிரிவுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தெரிகிறது. இது மிட்-சைஸ் கிராஸ்ஒவர் எஸ்.யு.வி. ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் மாடல் 3 செடான் உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்மை தழுவி டிசைன் செய்யப்பட்டு இருந்தது.

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்திய அரசாங்கத்துடன் டெஸ்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக கூறப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து, அதன்பிறகு இரண்டு ஆண்டுகளுக்குள் உற்பத்தி ஆலையை கட்டமைக்க இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

    • புதிய ஸ்கூட்டர் அளவில் பெரியதாக இருக்கும்.
    • மனதில் வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனரும், மூத்த நிர்வாக அதிகாரியுமான தருன் மேத்தா உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்றும் தெரிவித்தார்.

    இது தொடர்பான எக்ஸ் பதிவில், "புதிய ஸ்கூட்டர் அளவில் பெரியதாக இருக்கும் என்றும், அது குடும்ப பயன்பாட்டுக்கான ஒன்றாக இருக்கும் என்றும் இது ஒட்டுமொத்த குடும்பத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது," என்று அவர் தெரிவித்துள்ளார்.

    தற்போது ஏத்தர் எனர்ஜி விற்பனை செய்து வரும் 450 சீரிசை தழுவியே புதிய மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், புதிய ஏத்தர் 450 சீரிஸ் தலைசிறந்த செயல்திறன் வழங்குவதில் சிறப்பான மாடலாக அறியப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    "அந்த மாடலில் ரைடிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பான அம்சங்கள் வழங்கப்படும்," என்று அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். இந்த மாடலின் விற்பனை அடுத்த ஆண்டு துவக்கத்தில் துவங்கலாம் என்றும் இதன் விலை சற்று அதிகமாக இருந்தாலும், அது கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    • இசை சார்ந்த அனுபவத்தை மேம்படுத்தும் வசதிகள் உள்ளன.
    • ஸ்கோடா ஸ்லேவியா மாடலிலும் இதே அப்டேட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது விர்டுஸ் மற்றும் டைகுன் சவுண்ட் எடிஷன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சில வாரங்களுக்கு முன்பு டைகுன் டிரையல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சவுண்ட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய வோக்ஸ்வேகன் விர்டுஸ் சவுண்ட் எடிஷன் மாடலின் விலை ரூ. 15 லட்சத்து 52 ஆயிரம் என்று துவங்குகிறது. டைகுன் சவுண்ட் எடிஷன் விலை ரூ. 16 லட்சத்து 33 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களிலும் மெக்கானிக்கல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாமல், இசை சார்ந்த அனுபவத்தை மேம்படுத்தும் வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    சவுண்ட் எடிஷன்என்ற பெயருக்கு ஏற்றார் போல் இரு மாடல்களிலும் ஸ்பீக்கர் மற்றும் ஆம்ப்லிஃபயர் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் பவர்டு முன்புற இருக்கைகள் உள்ளன. இதே போன்ற அம்சங்கள் இரு மாடல்களின் GT பிளஸ் வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. வோக்ஸ்வேகன் போன்றே ஸ்கோடா நிறுவனமும் தனது ஸ்லேவியா மாடலில் இதே அப்டேட்களை வழங்கி உள்ளது.

    இரு கார்களின் வெளிப்புற சி-பில்லர் மற்றும் கதவுகள் அருகே ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜிங் வழங்கப்படுகிறது. டைகுன் மாடலில் காண்டிராஸ்ட் நிற ரூஃப் மற்றும் விங் மிரர்கள் வழங்கப்படுகிறது. வோக்ஸ்வேகன் விர்டுஸ், டைகுன் சவுண்ட் எடிஷன் மாடல்கள்- லாவா புளூ, கார்பன் ஸ்டீல் கிரே, வைல்டு செர்ரி ரெட் மற்றும் ரைசிங் புளூ என நான்கு நிறங்களில் கிடைக்கின்றன.

    வோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் டைகுன் சவுண்ட் எடிஷன் மாடல்களில் 1.0 லிட்டர் TSI என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 115 ஹெச்.பி. பவர், 178 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இரு கார்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் வோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் ஸ்கோடா ஸ்லேவியா, ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் மாடல்களுக்கும், டைகுன் மாடல் ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கும் போட்டியாக அமைகின்றன.

    ×