என் மலர்
கார்
மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை இந்தியாவில் மூன்றாவது முறையாக மாற்றப்படுகிறது.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது வாகனங்கள் விலையை மீண்டும் உயர்த்த இருக்கிறது. விலை உயர்வு, செப்டம்பர் மாதத்தில் அமலுக்கு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மூன்றாவது முறையாக கார் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஆல்டோ முதல் விட்டாரா பிரெஸ்ஸா வரை மாருதி நிறுவனம் தற்போது விற்பனை செய்யும் அனைத்து மாடல்களின் விலையும் உயர்த்தப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் வாகனங்கள் உற்பத்திக்கான செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வாகனங்கள் விலை உயர்த்தப்படுகிறது. இந்த முறை கார்களின் விலை எவ்வளவு அதிகரிக்க இருக்கிறது என இதுவரை எந்த தகவலும் இல்லை.

முன்னதாக ஜனவரி மாத வாக்கில் கார் மாடல்கள் விலை ரூ. 34 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. பின் ஏப்ரல் மாதத்தில் கார்களின் விலை 1.6 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது. மாருதி சுசுகி மட்டுமின்றி பல்வேறு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும் வாகனங்கள் விலையை உயர்த்தி வருகின்றன.
மஹிந்திராவின் தார் மாடலுக்கு போட்டியாக உருவாகி இருக்கும் 2021 போர்ஸ் குர்கா மாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.
போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆப்-ரோடு எஸ்.யு.வி. குர்கா மாடல் விரைவில் அறிமுகமாகிறது. புதிய குர்கா 4x4 மாடலுக்கான டீசர் அந்நிறுவன சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
2021 போர்ஸ் குர்கா மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. குர்கா எஸ்.யு.வி. மாடல் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Bold. Mighty. Real.
— Force Motors Ltd. (@ForceMotorsFML) August 27, 2021
Make way for true-blooded adventure!
Comment with a 🔥 if you can't wait!
.
.
.#TheallnewGurkha#ForceGurkha#Comingsoon#StayTuned#GetReady#Gurkha4x4x4pic.twitter.com/Swk1LYaEYs
முன்னதாக 2021 போர்ஸ் குர்கா மாடல் கிரேட்டர் நொய்டாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. இந்திய சந்தையில் புதிய குர்கா 4x4 மாடல் மஹிந்திரா தார் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
கியா இந்தியா நிறுவனத்தின் செல்டோஸ் எக்ஸ்-லைன் மாடல் வெளியீட்டு விவரம் அறிவிக்கப்பட்டது.
கியா இந்தியா நிறுவனம் தனது செல்டோஸ் எஸ்.யு.வி. காரின் புதிய டாப் எண்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய டாப் எண்ட் மாடல் செல்டோஸ் எக்ஸ்-லைன் என அழைக்கப்படுகிறது. முன்னதாக இதே கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழா மற்றும் எல்.ஏ. ஆட்டோ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.
புதிய கியா செல்டோஸ் எக்ஸ்-லைன் அம்சங்கள் மற்றும் இந்திய விலை விவரங்கள் செப்டம்பர் மாத வாக்கில் அறிவிக்கப்பட இருக்கிறது. தற்போது செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் வேரியண்ட் விலை ரூ. 16.65 லட்சத்தில் துவங்கி ரூ. 17.85 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தோற்றத்தில் கியா செல்டோஸ் எக்ஸ் லைன் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதன் முன்புறம் கிளாஸ் பிளாக் நிற கிரில் கொண்டிருக்கிறது. இத்துடன் இந்த கார் டார்க் தீம் கொண்ட நிறங்களால் பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐ20 என் லைன் மாடலின் இந்திய விலை விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐ20 என் லைன் மாடல் அம்சங்கள் நேற்று (ஆகஸ்ட் 24) அறிவிக்கப்பட்டன. புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் அந்நிறுவனத்தின் என்ட்ரி லெவல் என் சீரிஸ் மாடல் ஆகும்.
நேற்று அம்சங்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது. புதிய என் லைன் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும். இந்த கார் ஹூண்டாய் விற்பனை மையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர், டி-ஜிடிஐ டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 118 பி.ஹெச்.பி. திறன், 172 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஐ.எம்.டி. டிரான்ஸ்மிஷன், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்த மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9.9 நொடிகளில் எட்டிவிடும். புதிய கார் வெளிப்புறத்தில் மேம்பட்ட பம்ப்பர்கள், பிளாக்டு-அவுட் செய்யப்பட்ட கேஸ்கேடிங் கிரில், என் லைன் பேட்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி. 700 மாடல் முன்பதிவு விரைவில் துவங்க இருக்கிறது.
மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 முதல் யூனிட் அந்நிறுவன உற்பத்தி ஆலையில் இருந்து வெளியாகி இருக்கிறது. புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 அந்நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 500 மாடலின் மேம்பட்ட வேரியண்ட் ஆகும்.
இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 அறிமுகமாகி இருக்கிறது. முன்னதாக மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 மாடல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கார் அறிமுகமாகிவிட்ட போதிலும் இதற்கான முன்பதிவுகள் இதுவரை துவங்கவில்லை.
புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 ஏற்கனவே விற்பனை செய்யப்படும் எக்ஸ்.யு.வி. 500 மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகி இருக்கிறது. இந்த கார் ஹூண்டாய் அல்காசர், டாடா சபாரி, எம்ஜி ஹெக்டார் பிளஸ் மற்றும் ஜீப் காம்பஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 மாடல் விலை ரூ. 11.99 லட்சத்தில் துவங்குகிறது. புதிய எக்ஸ்.யு.வி. 700 மாடலில் 2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4 சிலிண்டர் என்ஜின், 2.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின்கள் முறையே 200 பி.எஸ். பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 185 பி.எஸ். பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன. இவற்றுடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஏ.எம்.ஜி. சீரிஸ் மாடலை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா ஏ.எம்.ஜி. ஜி.எல்.இ. 63 கூப் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பென்ஸ் கூப் மாடல் துவக்க விலை ரூ. 2.07 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். ஏ.எம்.ஜி. 63 எஸ் மாடலில் முதல் முறையாக இ.கியூ. பூஸ்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது சந்தையில் கிடைக்கும் சக்திவாய்ந்த எஸ்.யு.வி. கூப் மாடல் ஆகும்.
இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள 12-வது ஏ.எம்.ஜி. மாடல் இது. புதிய ஜி.எல்.இ. 63 எஸ் மாடல் 4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 603 பி.ஹெச்.பி. திறன், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஏ.எம்.ஜி. ஸ்பீடுஷிப்ட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.8 நொடிகளிலும், மணிக்கு அதிகபட்சம் 280 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லும். இந்த மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிவேக கூப் எஸ்.யு.வி. மாடல் ஆகும்.
இந்திய சந்தையில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ.எம்.ஜி. ஜி.எல்.இ. 63 கூப் மாடல் ஆடி ஆர்.எஸ். கியூ8, மசிராட்டி லெவாண்ட், லம்போர்கினி உருஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி மாடல் இரண்டு வித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் நான்காம் தலைமுறை சிட்டி மாடலுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹோண்டா சிட்டி மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல் இந்த ஆண்டு விற்பனைக்கு வர இருந்தது. இந்த நிலையில், புதிய ஹைப்ரிட் மாடல் அடுத்த நிதியாண்டில் தான் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

2022 முதல் காலாண்டிற்கு பிறகு தான் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் விற்பனையகங்களுக்கு வரும் என கூறப்படுகிறது. சிட்டி ஹைப்ரிட் மாடலில் 98 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் மற்றும் 109 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது.
இவை இணைந்து 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன. இந்த கார் முழுமையாக இ.வி. மோடில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. ஹைப்ரிட் செட்டப் உடன் சி.வி.டி. யூனிட் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 27.78 கிலோமீட்டர் வரை செல்லும் என ஹோண்டா தெரிவித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல் இந்த ஆண்டு விற்பனைக்கு வர இருந்தது. இந்த நிலையில், புதிய ஹைப்ரிட் மாடல் அடுத்த நிதியாண்டில் தான் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

2022 முதல் காலாண்டிற்கு பிறகு தான் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் விற்பனையகங்களுக்கு வரும் என கூறப்படுகிறது. சிட்டி ஹைப்ரிட் மாடலில் 98 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் மற்றும் 109 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது.
இவை இணைந்து 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன. இந்த கார் முழுமையாக இ.வி. மோடில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. ஹைப்ரிட் செட்டப் உடன் சி.வி.டி. யூனிட் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 27.78 கிலோமீட்டர் வரை செல்லும் என ஹோண்டா தெரிவித்து இருக்கிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா இந்தியா நிறுவனம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
கியா இந்தியா நிறுவனத்தின் செல்டோஸ் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்திய விற்பனையில் 2 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. இவற்றில் சுமார் 1.5 லட்சம் யூனிட்கள் கனெக்டெட் மாடல் ஆகும். முன்னதாக இந்திய சந்தையில் மூன்று லட்சம் யூனிட்களை அதிவேகமாக விற்பனை செய்த நிறுவனம் என்ற பெருமையை கியா இந்தியா பெற்றது.

கியா இந்தியா ஒட்டுமொத்த விற்பனையில் செல்டோஸ் மட்டும் 66 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. இதில் 58 சதவீதம் டாப் எண்ட் மாடல்கள் ஆகும். கியா செல்டோஸ் ஒட்டுமொத்த விற்பனையில் டீசல் வேரியண்ட்கள் மட்டும் 45 சதவீதம் ஆகும்.
இந்தியாவில் கனெக்டெட் கார் விற்பனையில் கியா செல்டோஸ் மட்டும் 78 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. கியா கார் வாங்குவோரில் பெரும்பாலானோர் கியா செல்டோஸ் ஹெச்.டி.எக்ஸ். 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்டையே தேர்வு செய்து இருக்கின்றனர்.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது சி.ஆர்.-வி விற்பனையை சமீபத்தில் நிறுத்தியது.
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எஸ்.யு.வி. பிரிவில் மீண்டும் களமிறங்க இருப்பதை சமீபத்தில் உறுதிப்படுத்தியது. இந்திய சந்தையில் ஹோண்டா சி.ஆர்.-வி மாடல் விற்பனை நிறுத்தப்பட்டதில் இருந்து எஸ்.யு.வி. பிரிவில் ஹோண்டா அதிக கவனம் செலுத்தவில்லை.
"இந்திய சந்தையின் எஸ்.யு.வி. பிரிவை அறிந்து கொள்ள ஆய்வு செய்கிறோம். இந்தியாவுக்கென பிரத்யேக எஸ்.யு.வி. மாடலை உருவாக்கும் பணிகளில் ஹோண்டா ஈடுபட்டுள்ளது." என ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் மற்றும் இயக்குனர் ராஜேஷ் கோயல் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு முன் ஹோண்டா நிறுவனம் என்7எக்ஸ் கான்செப்ட் மாடலை இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்தது. என்7எக்ஸ் மாடல் இந்தியாவில் 5 இருக்கை கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஸ்கோடா குஷக் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஆஸ்டர் மாடல் அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஆஸ்டர் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆண்டு வாக்கில் இதன் வெளியீடு நடைபெற இருக்கும் நிலையில், தற்போது இதன் அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி கொண்ட கார் ஆகும். இந்த தொழில்நுட்பத்தை எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் 'டிரைவ் ஏ.ஐ.' என அழைக்கிறது. இந்த தொழில்நுட்பம் காரை பயன்படுத்துவோருக்கு பல்வேறு அம்சங்கள் மற்றும் சவுகரியங்களை வழங்குகிறது. இதை கொண்டு காரின் பல்வேறு அம்சங்களை எளிதில் இயக்க முடியும்.
எம்ஜி ஆஸ்டர் மாடலில் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது காரில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பார்வேர்டு கொலிசன் வார்னிங், ஆட்டோமடிக் எமர்ஜன்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், ஸ்பீடு அசிஸ்ட் சிஸ்டம் மற்றும் பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் 2021 அமேஸ் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2021 அமேஸ் மாடலின் வெளிப்புறம் பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கிறது. 2021 ஹோண்டா அமேஸ் பேஸ்லிப்ட் விலை ரூ. 6.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என துவங்குகிறது.
புதிய அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் அமேஸ் இ, அமேஸ் எஸ் மற்றும் அமேஸ் வி.எக்ஸ். என மூன்று வேரிண்ட்களில் கிடைக்கிறது. டாப் எண்ட் வி.எக்ஸ். மாடலில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2021 அமேஸ் பேஸ்லிப்ட் மாடலின் கிரில் முழுமையாக மாற்றப்பட்டு புதிய தோற்றம் பெற்று இருக்கிறது.

இத்துடன் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், 15 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், கார் கைப்பிடிகள் குரோம் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது. பின்புறம் சி வடிவ எல்.இ.டி. டெயில் லைட்கள், பம்ப்பகில் ரிப்லெக்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன.
2021 ஹோண்டா அமேஸ் பேஸ்லிப்ட் மாடலில் 1.2 லிட்டர் ஐ-வி.டி.இ.சி. பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஐ-டி.டி.இ.சி. டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் என்ஜின் 89 பி.ஹெச்.பி. திறன், 110 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
டீசல் என்ஜின் 99 பி.ஹெச்.பி. திறன், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், சி.வி.டி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
கியா இந்தியா நிறுவனம் தனது செல்டோஸ் காரின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
கியா இந்தியா நிறுவனத்தின் கியா செல்டோஸ் எக்ஸ் லைன் ஸ்பெஷல் எடிஷன் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
கியா செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன் எஸ்.யு.வி.-யை கியா நிறுவனம் பிராஜக்ட் எக்ஸ் என அழைக்கிறது. டீசரில் புது எஸ்.யு.வி. விவரங்கள் அதிகம் இடம்பெறவில்லை. எனினும், இந்த மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செல்டோஸ் எக்ஸ் லைன் மாடல் இந்த சீரிசின் புதிய டாப் எண்ட் வேரியண்ட் ஆக அறிமுகமாகிறது. புதிய எக்ஸ் லைன் மாடலில் 1.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.
இதன் பெட்ரோல் என்ஜின் 138 பி.ஹெச்.பி. திறன், 242 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.சி.டி. ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது. டீசல் என்ஜின் 113 பி.ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.






