என் மலர்
கார்
ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மாடல் இந்தியாவில் இரண்டு வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஸ்கோடா நிறுவனம் குஷக் 1.5 லிட்டர் என்ஜின் கொண்ட மாடல்களை இந்தியாவில் வினியோகம் செய்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு குஷக் அறிமுக நிகழ்வின் போதே துவங்கியது. எனினும், தற்போது தான் இந்த மாடலின் வினியோகம் துவங்கி இருக்கிறது.

இந்தியாவில் ஸ்கோடா குஷக் மாடலின் விற்பனை ஜூன் 28 ஆம் தேதி துவங்கியது. இதுவரை இந்த மாடல் 4 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட குஷக் எஸ்.யு.வி. மூன்று வேரியண்ட்கள், இருவித என்ஜின் ஆப்ஷன்கள், 3 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் லிட்டருக்கு 17.95 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐ20 என் லைன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
ஹூண்டாய் நிறுவனம் ஐ20 என் லைன் மாடலை ஆகஸ்ட் 24 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. முந்தைய தகவல்களில் இந்த மாடல் செப்டம்பர் மாதத்தில் அறிமுகமாகும் என கூறப்பட்டது.
புதிய ஹூண்டாய் ஐ20 என் லைன் - என்6 மற்றும் என்8 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. என் லைன் மாடல் ஐ20 ஆஸ்டா வேரியண்டை தழுவி உருவாகி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலில் 1 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 118 பி.ஹெச்.பி. திறன், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த மாடலில் ஐ.எம்.டி. யூனிட் ஸ்டான்டர்டு அம்சமாகவும், டாப் எண்ட் என்8 வேரியண்ட்டில் டி.சி.டி. யூனிட் வழங்கப்படுகிறது.
தோற்றத்தில் ஐ20 என் லைன் மாடலில் 17 இன்ச் டூயல்-டோன் அலாய் வீல், ஸ்போர்ட் பம்ப்பர், ரியர் டிப்யூசர், டூயல் எக்சாஸ்ட் டெயில்பைப், ஸ்போர்ட் கலர் மற்றும் காண்டிராஸ்ட் நிற ரூப் வழங்கப்படுகிறது. உள்புறத்தில் ஸ்போர்ட் இருக்கைகள், காண்டிராஸ்ட் ரெட் ஸ்டிட்ச் வழங்கப்படுகிறது.
எம்ஜி ஹெக்டார் ஷைன் மாடல் மூன்று வேரியண்ட்களில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் ஹெக்டார் ஷைன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் துவக்க விலை ரூ. 14.52 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடல் சூப்பர் மற்றும் ஸ்மார்ட் வேரியண்ட்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டார் ஷைன் மாடலில் ஒற்றை கண்ணாடி கொண்ட சன்ரூப் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹெக்டார் டாப் எண்ட் மாடல்களில் பானரோமிக் சன்ரூப், பேஸ் வேரியண்ட்களில் சன்ரூப் வழங்கப்படவில்லை. இத்துடன் ஹெக்டார் ஷைன் மாடல் புதிதாக ஹவானா கிரே நிறத்தில் கிடைக்கிறது.
புதிய எம்ஜி ஹெக்டார் ஷைன் வேரியண்ட் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சி.வி.டி. யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ஹெக்டார் ஷைன் வேரியண்ட் டீசல் என்ஜின் கொண்ட மாடல் விலை ரூ. 16.5 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் XUV700 எஸ்.யு.வி. மாடல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை பண்டிகை காலக்கட்டத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய XUV700 மாடலின் சில முக்கிய அம்சங்கள் ஸ்பை படங்கள் வாயிலாக ஏற்கனவே வெளியாகிவிட்டன. இதைத் தொடர்ந்து மஹிந்திராவும் XUV700 அம்சங்களை ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறது. சமீபத்திய டீசரில் புதிய XUV700 பெரிய பானரோமிக் சன்ரூப் கொண்டிருக்கும் என தெரியவந்தது. இத்துடன் தனிப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கை தகவல்கள், ஓட்டுனர் உறக்கத்தில் இருப்பதை கண்டறியும் வசதி போன்றவை வழங்கப்படுகிறது.

காரின் உள்புறம் 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல், டூயல் ஹெச்.டி. ரெசல்யூஷன் ஸ்கிரீன்- ஒன்று தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், சோனி மியூசிக் சிஸ்டம், மஹிந்திராவின் அட்ரினோ எக்ஸ் ஏ.ஐ. தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய 2021 மஹிந்திரா XUV700 மாடலில் 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இவற்றுடன் மேனுவல், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
ரெனால்ட் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்துக்கான சலுகை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. இது கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி க்விட், டிரைபர், டஸ்டர் மற்றும் கைகர் போன்ற மாடல்களுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான சலுகை விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்த சலுகை கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.
ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் அடங்கும்.
இந்த சலுகைகள் மகாராஷ்டிரா, குஜராத், கோவா மற்றும் கேரளா பகுதிகளுக்கும் மட்டும் தான் பொருந்தும். மற்ற மாநில வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது. டிரைபர் மாடலின் 2021MY வேரியண்டை வாங்குவோர் ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் பெற முடியும்.
ரெனால்ட் கைகர் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது. சில மாநிலங்களில் 5 ஆண்டுகள் | 1 லட்சம் கிலோமீட்டர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது. இத்துடன் சிறப்பு நிதி சலுகைகளும் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் டஸ்டர் மாடலை வாங்குவோருக்கு ரூ. 40 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் புதிய என் லைன் மாடல்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது என் லைன் கார் மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. முதல் என் லைன் மாடல் இந்தியாவில் இந்த ஆண்டே அறிமுகம் செய்யப்படும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் புதிய என் லைன் மாடல்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. என் லைன் மாடலில் முதல் காராக ஹூண்டாய் ஐ20 என் அறிமுகமாக இருக்கிறது.

"நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளராக, ஹூண்டாய் தொடர்ந்து தலைசிறந்த கார்களை அறிமுகம் செய்வதுடன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. என் லைன் மூலம் ஹூண்டாய் மோட்டார் இந்தியா தொடர்ந்து புதிய இலக்குகளை சவாலாக ஏற்று, புதிய தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் புதிய கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம்."
"அந்த வரிசையில் புதிய என் லைன் மாடல் 2021-இல் அறிமுகம் செய்வதோடு, வரும் ஆண்டுகளில் கூடுதலாக என் லைன் மாடல்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறோம்," என ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.எஸ். கிம் தெரிவித்தார்.
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் கைகர் RXT (O) காரை அறிமுகம் செய்தது. கைகர் மாடலின் புது வேரியண்ட் விலை ரூ. 7.37 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த கார் டாப் எண்ட் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
புதிய கைகர் RXT (O) 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த காரில் டாப் எண்ட் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் எல்.இ.டி. ஹெட்லேம்ப், 16 இன்ச் அலாய் வீல்கள், PM 2.5 AC பில்ட்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள என்ஜின் 72 பி.எஸ். திறன், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய கைகர் மாடல் நிசான் மேக்னைட், கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்சான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்கிய முதல் ஆண்டிலேயே 2 லட்சம் யூனிட்களை விற்பனை செய்தது.
இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் கார் உற்பத்தியாளராக கியா இந்தியா இருக்கிறது. தற்போது இந்திய சந்தையில் அதிவேகமாக மூன்று லட்சம் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக கியா இந்தியா உருவெடுத்து இருக்கிறது.

கொரியாவை சேர்ந்த கியா இந்தியா விற்பனை துவங்கிய முதல் ஆண்டிலேயே சுமார் 2 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. தற்போது இரண்டே ஆண்டுகளில் 3 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் கியா நிறுவனம் செல்டோஸ் மற்றும் சொனெட் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
கியா செல்டோஸ் காம்பேக்ட் எஸ்.யு.வி. ஒட்டுமொத்த விற்பனையில் 66 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. கியா சொனெட் மாடல் 32 சதவீதம் விற்பனையாகி இருக்கிறது. இந்திய சந்தையில் கியா நிறுவனம் 7310 கியா கார்னிவல் எம்.பி.வி. யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் அமேஸ் பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய காம்பேக்ட் செடான் மாடலுக்கான முன்பதிவு ஆன்லைனில் ரூ. 5 ஆயிரம், விற்பனையகங்களில் ரூ. 21 ஆயிரம் கட்டணத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய சந்தையில் புதிய அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டை தொடர்ந்து விரைவில் இந்த மாடலுக்கான வினியோகமும் துவங்குகிறது. முன்பதிவுடன் புதிய மாடலுக்கான டீசரையும் ஹோண்டா வெளியிட்டுள்ளது. இதில் புதிய கார் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப் எப்படி இருக்கும் என தெரியவந்துள்ளது.
தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா அமேஸ் மாடல் விலை ரூ. 6.22 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ. 9.99 லட்சம். எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன் செடான் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 740Li M ஸ்போர்ட் இன்டிவிஜூவல் (Individual) எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபிள்யூ. துவக்க விலை ரூ. 1.42 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். பி.எம்.டபிள்யூ. செடான் மாடலின் லிமிடெட் எடிஷன் ஒற்றை வேரியண்டில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் இன்டிவிஜூவல் அக்சஸரீக்களை கொண்டிருக்கிறது.
புதிய ஆடம்பர செடான் மாடலுக்கான முன்பதிவு பி.எம்.டபிள்யூ. அதிகாரப்பூர்வ வலைதளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய 740Li M ஸ்போர்ட் இன்டிவிஜூவல் எடிஷன் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இந்த செடான் மாடல் டன்ஸனைட் புளூ மற்றும் டிராவிட் கிரே நிறங்களில் கிடைக்கிறது.

பி.எம்.டபிள்யூ. 740Li M ஸ்போர்ட் இன்டிவிஜூவல் எடிஷனில் 3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் இரண்டு டர்போ சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகின்றன. இந்த என்ஜின் 335 பி.ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
புதிய பி.எம்.டபிள்யூ. செடான் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. பி.எம்.டபிள்யூ. 740Li M- ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ், கம்பர்ட், கம்பர்ட் பிளஸ், இகோ ப்ரோ மற்றும் அடாப்டிவ் என ஆறு டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது.
ஜாகுவார் நிறுவனத்தின் புதிய F Type R டைனமிக் பிளாக் மாடல் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய F Type R டைனமிக் பிளாக் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் பிளாக் தீம் செய்யப்படுகிறது. புதிய ஜாகுவார் F Type R டைனமிக் மாடல் - சன்டோரினி பிளாக், எய்கர் கிரே மற்றும் பிரென்ஸ் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

இதில் வழங்கப்படும் 5-ஸ்ப்லிட் ஸ்போக் கொண்ட 20 இன்ச் அலாய் வீல்களும் முற்றிலும் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. உள்புறம் விண்ட்சர் லெதர், ஒய்ஸ்டர் ஸ்டிட்ச் மற்றும் மார்ஸ், பிளேம் ரெட் ஸ்டிட்ச் போன்ற ஆப்ஷன்களில் இருக்கை வழங்கப்படுகிறது.
புதிய ஜாகுவார் F Type R டைனமிக் மாடலில் 5 லிட்டர் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 444 பி.ஹெச்.பி. பவர், 580 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு குவிக்ஷிப்ட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் கஸ்டோ பெயரில் புதிய எம்.பி.வி. மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கஸ்டோ எம்.பி.வி. மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டது. புதிய எம்.பி.வி. முதற்கட்டமாக சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது. தற்போதைய தகவல்களின்படி இந்த மாடல் சீன சந்தையில் மட்டுமே பிரத்யேகமாக அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
புதிய கஸ்டோ எம்.பி.வி. மாடல் ஹூண்டாய் நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறை பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. மேலும் இந்த கார் 6 மற்றும் 7 பேர் பயணிக்கக்கூடிய இருக்கை அமைப்புகளில் வெளியாகும் என தெரிகிறது. டீசர்களின்படி ஹூண்டாய் கஸ்டோ கியா கார்னிவல் மாடலில் உள்ளதை போன்ற ஸ்லைடிங் கதவுகளை கொண்டிருக்கிறது.

ஹூண்டாய் கஸ்டோ எம்.பி.வி. மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், பூட் லிட் பகுதியின் மேல் எல்.இ.டி. ஸ்ட்ரிப் லைட், நடுவில் ஹூண்டாய் எழுத்துக்கள் இடம்பெற்று இருக்கிறது. மேலும் ஸ்போர்ட் ஸ்பாயிலர், சற்றே உயரமாக ஸ்டாப் லேம்ப் இடம்பெற்றுள்ளது.
இந்த மாடலில் 1.6 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின், 2.0 லிட்டர் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 170 பி.ஹெச்.பி. பவர், 236 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.






