என் மலர்
கார்
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்சான் EV மேக்ஸ் டார்க் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டிருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் EV மேக்ஸ் டார்க் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடலின் விலை ரூ. 19 லட்சத்து 04 ஆயிரம், என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் XZ+ மற்றும் 7.2 கிலோவாட் ஏசி வால் பாக்ஸ் சார்ஜர் கொண்ட XZ+ லக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் XZ+ லக்ஸ் விலை ரூ. 19 லட்சத்து 54 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய நெக்சான் நெக்சான் EV மேக்ஸ் டார்க் எடிஷன் மாடல் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதில் 16 இன்ச் சார்கோல் கிரே நிற அலாய் வீல்கள், சாடின் பிளாக் ஹியுமனிட்டி லைன், முன்புற ஃபெண்டர்களில் #Dark பேட்ஜிங் உள்ளது. இத்துடன் டிரை-ஏரோ டிஆர்எல்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டிரை ஏரோ எல்இடி டெயில் லைட்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் ரூஃப் ரெயில்கள் உள்ளன.

காரின் உள்புறம் டார்க் தீம் செய்யப்பட்ட இண்டீரியர் உள்ளது. இத்துடன் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புதிய EV டிஸ்ப்ளே தீம், வாய்ஸ் அசிஸ்டண்ட், EPB மற்றும் ஆட்டோ ஹோல்டு அம்சம், வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆட்டோ டிம்மிங் IRVM, எலெக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஏர் பியூரிஃபையர் போன்ற வசதிகள் உள்ளன.
புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் டார்க் எடிஷன் மாடலில் 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏசி மோட்டார் உள்ளது. இவை 141 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளுக்குள் எட்டிவிடும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 453 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
பாதுகாப்பிற்கு டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, டிராக்ஷன் கண்ட்ரோல், ரோல்-ஒவர் மிடிகேஷன், HSA, HDC, ESP, பிரேக் டிஸ்க் வைப்பிங், நான்கு டிஸ்க் பிரேக்குகள், பேனிக் பிரேக் அலர்ட், TPMS உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
- மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ N மாடல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்த ஆண்டிலேயே இரண்டாவது முறையாக ஸ்கார்பியோ N மாடல் விலை மாற்றப்பட்டு விட்டது.
மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ N விலையை இந்தியாவில் மீண்டும் உயர்த்தி இருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் ஸ்கார்பியோ N விலை மாற்றப்படுவது இரண்டாவது முறை ஆகும். முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ஸ்கார்பியோ N விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டது. அப்போது இதன் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது.
தற்போதைய விலை உயர்வின் படி மஹிந்திரா ஸ்கார்பியோ N விலை ரூ. 13 லட்சத்து 06 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 24 லட்சத்து 51 ஆயிரம் என்று மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2022-23 வரையிலான காலக்கட்டத்தில் ஸ்கார்பியோ சீரிஸ் மட்டும் 68 ஆயிரத்து 147 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

பிப்ரவரி மாத நிலவரப்படி புதிய ஸ்கார்பியோ N மாடலை வாங்க அதிகபட்சம் 65 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 198 ஹெச்பி பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 173 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.
இருவித என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4WD ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல் ஆறு மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.
- லம்போர்கினி நிறுவனத்தின் புதிய உருஸ் S மாடல் உருஸ் பெர்ஃபார்மாண்ட் வேரியண்ட் உடன் விற்பனை செய்யப்படுகிறது.
- கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் லம்போர்கினி உருஸ் S மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
லம்போர்கினி நிறுவனம் இந்திய சந்தையில் தனது உருஸ் S மாடலை அறிமுகம் செய்தது. புதிய உருஸ் S விலை ரூ. 4 கோடியே 18 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் இந்த ஆடம்பர எஸ்யுவி மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உருஸ் S பெயரில் உள்ள S என்ற வார்த்தை இந்த மாடலின் மிட்-லைஃப் அப்டேட்-ஐ குறிக்கிறது. முன்னதாக லம்போர்கினி அவெண்டடார் S மாடல் இதே போன்ற அப்டேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பெர்ஃபார்மண்ட் போன்றே உருஸ் S மாடலில் ஸ்டீல் ஸ்ப்ரிங் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏர் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

புதிய லம்போர்கினி S மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பின்புறம் குவாட் எக்சாஸ்ட் அவுட்லெட்கள், வெண்டெட் பொனெட் மற்றும் கார்பன் ஃபைபர் ரூஃப் உள்ளன. மேலும் டூயல் டோன் இண்டீரியர் தீம், செயற்கைக்கோள் சார்ந்த நேவிகேஷன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் டிஜிட்டல் கார் கீ உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
லம்போர்கினி உருஸ் S மாடலில் 4.0 லிட்டர் டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 666 ஹெச்பி பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
- ஜீப் மெரிடியண் அப்லேண்ட் என்று அழைக்கப்படும் புதிய காரில் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
- கார்களை வித்தியாசப்படுத்தும் ஸ்போர்ட் அப்கிரேடுகளை இரண்டு மாடல்களும் கொண்டிருக்கின்றன.
ஜீப் நிறுவனத்தின் இரண்டு ஸ்பெஷல் எடிஷன் எஸ்யுவி கார் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. மெரிடியன் X மற்றும் மெரிடியண் அப்லேண்ட் என்று அழைக்கப்படும் புதிய கார்களில் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவைதவிர கார்களை வித்தியாசப்படுத்தும் ஸ்போர்ட் அப்கிரேடுகளை இரண்டு மாடல்களும் கொண்டிருக்கின்றன. புதிய ஜீப் மெரிடியன் X ஸ்பெஷல் எடிஷன் மற்றும் மெரிடியன் அப்லேண்ட் மாடல்கள் லிமிடெட் (O) வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் ஜீப் 4x4 செலக்-டெரைன் 4-வீல் டிரைவ் சிஸ்டம் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.

இவைதவிர இரு ஸ்பெஷல் எடிஷன் மாடல்களிலும் சைடு ஸ்டெப், ஆம்பியண்ட் லைட்டிங், புதிய கால்மிதி, யு-கனெக்ட் 5 இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களும் தற்போது சில்வரி மூன் மற்றும் கேலக்ஸி புளூ என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கின்றன. இத்துடன் பின்புறம் எண்டர்டெயின்மெண்ட் பேக்கேஜ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
ஜீப் மெரிடியன் X மற்றும் மெரிடியன் அப்லேண்ட் மாடல்களில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டின் புதிய AMG GT 63 S E மாடல் வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.
- மெர்சிடிஸ் அறிமுகம் செய்ததிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஏஎம்ஜி மாடல் இது ஆகும்.
மெர்சிடிஸ் ஏஎம்ஜி AMG GT 63 S E பெர்ஃபார்மன்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஏஎம்ஜி கார் விலை ரூ. 3 கோடியே 30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது மெர்சிடிஸ் உற்பத்தி செய்ததிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஏஎம்ஜி மாடல் ஆகும்.
புதிய ஏஎம்ஜி AMG GT 63 S E பெர்ஃபார்மன்ஸ் மாடலில் 4.0 லிட்டர் டுவின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 640 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இந்த காரின் பெயரில் உள்ள E என்ற வார்த்தை எலெக்ட்ரிக் மோட்டாரை குறிக்கிறது. அந்த வகையில், இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் கூடுதலாக 204 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது.

இந்த காரில் உள்ள என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் இணைந்து 831 ஹெச்பி பவர், 1400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 316 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
காரின் பின்புறம் மவுண்ட் செய்யப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டாருடன் 2 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இது காரின் நான்கு சக்கரங்களுக்கும் எலெக்ட்ரிக் டார்க் அனுப்பி, காரை AWD வாகனமாக மாற்றுகிறது. இந்த காரில் உள்ள பேட்டரியை கொண்டு 12 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் பெற முடியும். இந்த கார் எலெக்ட்ரிக் மோடில் அதிகபட்சம் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்கிறது.
இந்திய சந்தையில் புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி AMG GT 63 S பெர்ஃபார்மன்ஸ் மாடல் போர்ஷே பனமெரா 4 E ஹைப்ரிட் மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இந்த காரின் விலையும் ரூ. 3 கோடியே 30 லட்சம் ஆகும். விரைவில் மசிராட்டி மற்றும் ஜாகுவார் பிராண்டுகள் இந்த காருக்கு போட்டியாக புதிய மாடலை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.
- ஜீப் நிறுவன கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- சமீபத்தில் கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக ஜீப் இந்தியா நிறுவனம் அறிவித்து இருந்தது.
ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் மற்றும் மெரிடியன் எஸ்யுவி-க்கள் விலையை மாற்றியமைத்து இருக்கிறது. அதன்படி இரு கார்களின் பேஸ் வேரியண்ட்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. விலை அப்டேட்களுடன் புதிய கார்கள் RDE விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளன.
விலை மாற்றத்தின் படி ஜீப் காம்பஸ் ஸ்போர்ட் ஆட்டோமேடிக் பெட்ரோல் மாடல் விலை தற்போது ரூ. 20 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது முந்தைய மாடல் விலையை விட ரூ. 1 லட்சம் வரை குறைவு ஆகும். இதர பெட்ரோல் மாடல்களின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதர டீசல் வேரியண்ட்களின் விலை ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு விட்டது.

புதிய அறிவிப்பின் படி ஜீப் காம்பஸ் மாடலின் விலை ரூ. 20 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 31 லட்சத்து 64 ஆயிரம் அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஜீப் மெரிடியன் மாடலை பொருத்தவரை மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கு ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு விட்டது. தற்போது ஜீப் மெரிடியன் விலை ரூ. 27 லட்சத்து 75 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 37 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- டொயோட்டா நிறுவனத்தின் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல், 2.0 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் முன்பதிவு நிறுத்தப்பட்டு விட்டது. இன்னோவா ஹைகிராஸ் ZX மற்றும் ZX (O) வேரியண்ட்களின் முன்பதிவு நிறுத்தப்பட்டது. புதிய தலைமுறை இன்னோவா ஹைகிராஸ் மாடல் நவம்பர் 2022 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், ஸ்டிராங் ஹைப்ரிட் ஆப்ஷனில் வழங்கப்படுகிறது. புதிய காருக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், வினியோக சிக்கல் காரணமாக முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது.

இரு வேரியண்ட்கள் தவிர இன்னோவா ஹைகிராஸ் மாடலின் மற்ற வேரியண்ட்களுக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. "வினியோக சிக்கல் காரணமாக இன்னோவா ஹைகிராஸ் ZX மற்றும் ZX (O) வேரியண்ட்களின் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். முன்பதிவு நிறுத்தம் ஏப்ரல் 8 ஆம் தேதி அமலுக்கு வருகிறது."
"இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரிட் மாடலின் இதர வேரியண்ட்களுக்கு தொடர்ந்து முன்பதிவு நடைபெறும். மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வேரியண்ட்களுக்கு விரைவில் முன்பதிவை துவங்குவதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்." என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்து உள்ளது.
- மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஜிம்னி மாடல் வினியோகம் பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.
- இந்திய சந்தையில் புதிய மாருதி ஜிம்னி மாடல் இரண்டு வேரியண்ட்கள், ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது.
மாருதி சுசுகி ஜிம்னி மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து புதிய மாருதி ஜிம்னி 5-டோர் வேரியண்டிற்கான முன்பதிவு துவங்கியது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மாருதி சுசுகி நிறுவனம் புதிய ஜிம்னி மாடலை இந்தியாவில் மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.
புதிய மாருதி ஜிம்னி மாடல் இரண்டு வேரியண்ட்கள் மற்றும் சிஸ்லிங் ரெட், கிராணைட் கிரே, நெக்சா புளூ, புளூயிஷ் பிளாக், பியல் ஆக்டிக் வைட், சிஸ்லிங் ரெட் மற்றும் புளூயிஷ் பிளாக் ரூஃப், கைனடிக் எல்லோ மற்றும் பிளாக் ரூஃப் என மொத்தத்தில் ஏழு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை 5-டோர் ஜிம்னி மாடலில் 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
மாருதி ஜிம்னி மாடலில் 1.5 லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 134 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் ஆல்க்ரிப் ப்ரோ சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி ஜிம்னி மாடலை வாங்க இதுவரை சுமார் 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். மாருதி ஜிம்னி மாடல் ஏற்கனவே விற்பனை மையங்களை வந்தடைய துவங்கிவிட்டன.
- மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யுவி மாடலின் 4-வீல் டிரைவ் வேரியண்டிற்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- மஹிந்திரா தார் தவிர மஹிந்திராவின் எம்பிவி கார் மராசோ மாடலுக்கு அதிகபட்ச சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது கார்களில் தேர்வு செய்யப்பட்ட எஸ்யுவி மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 72 ஆயிரம் வரையிலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் மராசோ, பொலிரோ, பொலிரோ நியோ, தார் 4 வீல் டிரைவ் மற்றும் XUV300 போன்ற மாடல்களை அசத்தல் சலுகைகளுடன் வாங்கிட முடியும். தற்போது அதிக பிரபலமாக இருக்கும் ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ N, தார் 2 வீல் டிரைவ், XUV400 EV மற்றும் XUV700 போன்ற மாடல்களுக்கு எவ்வித சலுகையும் அறிவிக்கப்படவில்லை.
இந்த மாத சலுகைகளில் மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 72 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் டாப் எண்ட் M6 மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மிட் ரேஞ்ச் M4பிளஸ் மற்றும் பேஸ் M2 வேரியண்ட்களுக்கு முறையே ரூ. 34 ஆயிரம் மற்றும் ரூ. 58 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. மராசோ மாடல் இந்தியாவில் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

மஹிந்திரா பொலிரோ மாடலுக்கு ரூ. 66 ஆயிரம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் டாப் எண்ட் B6 (O) வேரியண்டிற்கு ரூ. 51 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. மிட் ரேஞ்ச் மற்றும் எண்ட்ரி லெவல் வேரியண்ட்களுக்கு முறையே ரூ. 24 ஆயிரம் மற்றும் ரூ. 37 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.
இதே போன்று XUV300 மாடலுக்கு ரூ. 52 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் W8 டீசல் வேரியண்டிற்கு ரூ. 42 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான அக்சஸீர்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா பொலிரோ நியோ மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 48 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. இதன் டாப் எண்ட் மாடல்களுக்கு ரூ. 36 ஆயிரம் வரையிலான தள்ளுபடி, ரூ. 12 ஆயிரம் வரையிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.
மஹிந்திரா தார் 4X4 மாடலை வாங்குவோருக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இது பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இந்திய சந்தையில் தார் 4X4 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- கியா இந்தியா நிறுவனத்தின் 2023 EV6 எலெக்ட்ரிக் கார் முன்பதிவு அடுத்த வாரம் துவங்குகிறது.
- கியா EV விற்பனை மையங்கள் எண்ணிக்கை 44 நகரங்களில் 60-ஆக அதிகரிக்கப்பட இருக்கிறது.
கியா இந்தியா நிறுவனம் 2023 EV6 மாடல் விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. புதிய 2023 கியா EV6 GT லைன் மாடலின் விலை ரூ. 60 லட்சத்து 95 ஆயிரம் என துவங்குகிறது. இதன் GT லைன் AWD வேரியண்ட் விலை ரூ. 65 லட்சத்து 95 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய EV6 மாடலுக்கான முன்பதிவு ஏப்ரல் 15 ஆம் தேதி துவங்குகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட கியா EV6 மாடலின் விலை ரூ. 59 லட்சத்து 95 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் EV6 காரின் இரண்டாம் கட்ட யூனிட்கள் இவை ஆகும். தற்போது எத்தனை யூனிட்கள் முன்பதிவு செய்யலாம் என்பதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.

முதலில் முன்பதிவு செய்யும் சிலருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்படும் என கியா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. "விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, சந்தையில் வாடிக்கையாளர்கள் பிரீமியம் காரை வாங்குவதை உறுதிப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த இருக்கிறோம்," என்று கியா இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டே-ஜின் பார்க் தெரிவித்தார்.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து கியா நிறுவனம் நாடு முழுக்க 432 EV6 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது கியா நிறுவனம் ஏற்கனவே திட்டமிட்டதை விட நான்கு மடங்கு அதிகம் ஆகும். தட்டுப்பாடை தக்கவைத்துக் கொள்ள கியா நிறுவனம் 12 நகரங்களில் செயல்பட்டு வரும் 15 விற்பனை மையங்கள் எண்ணிக்கையை 44 நகரங்களில் 60 விற்பனை மையங்களாக அதிகப்படுத்த இருக்கிறது.
இதுதவிர அனைத்து விற்பனை மையங்களிலும் 150 கிலோவாட் அதிவேக சார்ஜர் இன்ஸ்டால் செய்ய கியா திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் கியா நிறுவனத்தின் முதல் 150 கிலோவாட் சார்ஜர் இன்ஸ்டால் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 240 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் இன்ஸ்டால் செய்யப்பட்டது.
- ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விர்டுஸ் மற்றும் ஸ்லேவியா மாடல்கள் கிராஷ் டெஸ்டில் பெற்ற முடிவு விவரங்கள் வெளியாகியுள்ளன.
- முற்றிலும் புதிய விதிகளுக்கு உட்பட்டு தற்போதைய டெஸ்டிங் செய்யப்பட்டு உள்ளன.
குளோபல் NCAP நிறுவனம் சார்பில் சமீபத்தில் நடத்திய கிராஷ் டெஸ்ட் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ், ஸ்கோடா ஸ்லேவியா, மாருதி சுசுகி வேகன் ஆர் மற்றும் மாருதி சுசுகி ஆல்டோ K10 போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலை மேம்பட்ட குளோபல் NCAP விதிகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐந்து நடசத்திர குறியீட்டை பெற்று அசத்தி இருக்கிறது. குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்கு இந்த கார் 49-க்கு 42 புள்ளிகளை பெற்றது. பெரியவர்கள் பாதுகாப்புக்கு விர்டுஸ் மாடல் 34-க்கு 29.71 புள்ளிகளை பெற்று இருக்கிறது.
விர்டுஸ் செடான் மாடலுக்கான பாடி ஷெல் நிலையாக இருக்கிறது என சான்று பெற்றுள்ளது. இந்த மாடலில் டூயல் ஏர்பேக், முன்புற சீட் பெல்ட் பிரீ-டென்ஷனர்கள், லோட் லமிடர்கள், நான்கு கூடுதல் ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சீட் மவுண்ட்கள், ஏபிஎஸ், ஏபிடி மற்றும் இஎஸ்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
- சிட்ரோயன் நிறுவனத்தின் C3 ஹேச்பேக் மாடல் ஏற்றுமதி இந்தியாவில் இருந்து துவங்கி இருக்கிறது.
- கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் சிட்ரோயன் C3 ஹேச்பேக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
சிட்ரோயன் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்த C3 ஹேச்பேக் மாடலை ASEAN மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கியது. சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடல் காமராஜர் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்கிறது. முதற்கட்ட யூனிட்கள் காமராஜர் துறைமுகத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் ஏற்றுமதி செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடல் - 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இருவித எஞ்சின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்தியாவில் சிட்ரோயன் முழுமையாக உற்பத்தி செய்த முதல் கார் இது ஆகும்.

"2019 ஆண்டு முதல் எங்களது ஓசூர் ஆலையில் இருந்து பவர்டிரெயின்களை ஏற்றுமதி செய்ய துவங்கினோம். புதிய C3 மாடல்களை சிபியு யூனிட்களாக ஏற்றுமதி செய்ய துவங்கியதில் இருந்து இந்தியாவில் புதிதாக மிகமுக்கிய மைல்கல்லை துவங்குகிறோம்."
"நாங்கள் உருவாக்கி இருக்கும் 360 டிகிரி அமைவு எங்களின் விற்பனையில் பிரதிபலிக்க துவங்கியுள்ளது. இதை கொண்டு எதிர்காலத்திலும் வளர்ச்சி பெறுவோம்." என்று ஸ்டெலாண்டிஸ் இந்தியா தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ரோலண்ட் பௌச்சாரா தெரிவித்து இருக்கிறார்.






