search icon
என் மலர்tooltip icon

    கார்

    2023 கியா EV6 இந்திய விலை அறிவிப்பு - விரைவில் முன்பதிவு செய்யலாம்!
    X

    2023 கியா EV6 இந்திய விலை அறிவிப்பு - விரைவில் முன்பதிவு செய்யலாம்!

    • கியா இந்தியா நிறுவனத்தின் 2023 EV6 எலெக்ட்ரிக் கார் முன்பதிவு அடுத்த வாரம் துவங்குகிறது.
    • கியா EV விற்பனை மையங்கள் எண்ணிக்கை 44 நகரங்களில் 60-ஆக அதிகரிக்கப்பட இருக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் 2023 EV6 மாடல் விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. புதிய 2023 கியா EV6 GT லைன் மாடலின் விலை ரூ. 60 லட்சத்து 95 ஆயிரம் என துவங்குகிறது. இதன் GT லைன் AWD வேரியண்ட் விலை ரூ. 65 லட்சத்து 95 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய EV6 மாடலுக்கான முன்பதிவு ஏப்ரல் 15 ஆம் தேதி துவங்குகிறது.

    கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட கியா EV6 மாடலின் விலை ரூ. 59 லட்சத்து 95 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் EV6 காரின் இரண்டாம் கட்ட யூனிட்கள் இவை ஆகும். தற்போது எத்தனை யூனிட்கள் முன்பதிவு செய்யலாம் என்பதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.

    முதலில் முன்பதிவு செய்யும் சிலருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்படும் என கியா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. "விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, சந்தையில் வாடிக்கையாளர்கள் பிரீமியம் காரை வாங்குவதை உறுதிப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த இருக்கிறோம்," என்று கியா இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டே-ஜின் பார்க் தெரிவித்தார்.

    இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து கியா நிறுவனம் நாடு முழுக்க 432 EV6 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது கியா நிறுவனம் ஏற்கனவே திட்டமிட்டதை விட நான்கு மடங்கு அதிகம் ஆகும். தட்டுப்பாடை தக்கவைத்துக் கொள்ள கியா நிறுவனம் 12 நகரங்களில் செயல்பட்டு வரும் 15 விற்பனை மையங்கள் எண்ணிக்கையை 44 நகரங்களில் 60 விற்பனை மையங்களாக அதிகப்படுத்த இருக்கிறது.

    இதுதவிர அனைத்து விற்பனை மையங்களிலும் 150 கிலோவாட் அதிவேக சார்ஜர் இன்ஸ்டால் செய்ய கியா திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் கியா நிறுவனத்தின் முதல் 150 கிலோவாட் சார்ஜர் இன்ஸ்டால் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 240 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் இன்ஸ்டால் செய்யப்பட்டது.

    Next Story
    ×