search icon
என் மலர்tooltip icon

    கார்

    காமராஜர் துறைமுகத்தில் இருந்து சிட்ரோயன் C3 ஏற்றுமதி துவக்கம்
    X

    காமராஜர் துறைமுகத்தில் இருந்து சிட்ரோயன் C3 ஏற்றுமதி துவக்கம்

    • சிட்ரோயன் நிறுவனத்தின் C3 ஹேச்பேக் மாடல் ஏற்றுமதி இந்தியாவில் இருந்து துவங்கி இருக்கிறது.
    • கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் சிட்ரோயன் C3 ஹேச்பேக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    சிட்ரோயன் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்த C3 ஹேச்பேக் மாடலை ASEAN மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கியது. சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடல் காமராஜர் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்கிறது. முதற்கட்ட யூனிட்கள் காமராஜர் துறைமுகத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் ஏற்றுமதி செய்யப்பட்டன.

    கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடல் - 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இருவித எஞ்சின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்தியாவில் சிட்ரோயன் முழுமையாக உற்பத்தி செய்த முதல் கார் இது ஆகும்.

    "2019 ஆண்டு முதல் எங்களது ஓசூர் ஆலையில் இருந்து பவர்டிரெயின்களை ஏற்றுமதி செய்ய துவங்கினோம். புதிய C3 மாடல்களை சிபியு யூனிட்களாக ஏற்றுமதி செய்ய துவங்கியதில் இருந்து இந்தியாவில் புதிதாக மிகமுக்கிய மைல்கல்லை துவங்குகிறோம்."

    "நாங்கள் உருவாக்கி இருக்கும் 360 டிகிரி அமைவு எங்களின் விற்பனையில் பிரதிபலிக்க துவங்கியுள்ளது. இதை கொண்டு எதிர்காலத்திலும் வளர்ச்சி பெறுவோம்." என்று ஸ்டெலாண்டிஸ் இந்தியா தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ரோலண்ட் பௌச்சாரா தெரிவித்து இருக்கிறார்.

    Next Story
    ×