என் மலர்
கார்
- டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி-இன் AMT வகைகளை அறிமுகப்படுத்தியது.
- இந்தியாவில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட எஞ்சினுடன் கூடிய முதல் CNG வாகனம் இதுவாகும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டின் இறுதியில் அதன் பிரபலமான நெக்சான் காம்பாக்ட் எஸ்.யு.வி.யில் சிஎன்ஜி பவர்டிரெய்னை சேர்க்கும் என்று உறுதி செய்துள்ளது.
வரவிருக்கும் நெக்சான் சிஎன்ஜி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரத் மொபிலிட்டி விழாவில் உற்பத்திக்கு நிகரான நிலையில் (நெக்சான்-ஐ சிஎன்ஜி கான்செப்டாக) காட்சிப்படுத்தப்பட்டது.
நெக்சான் இந்தியாவின் முதல் டர்போசார்ஜ் செய்யப்பட்ட சிஎன்ஜி வாகனமாக வெளியாகிறது. நெக்சான் சிஎன்ஜி வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பு மற்றும் உபகரணங்கள் அதன் ஸ்டான்டர்டு வெர்ஷனில் உள்ளதை போன்றே கொண்டிருக்கும்.
இருப்பினும், சிஎன்ஜி தொடர்பான மெக்கானிக்கல் மேம்பாடுகள் மற்றும் மற்ற மாடல்களில் இருந்து வித்தியாசப்படுவதை குறிக்க இரண்டு இடங்களில் ஐ-சிஎன்ஜி பேட்ஜ்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
சிஎன்ஜி-யில் இயங்கும் நெக்சான் பெட்ரோல் மாடல்களில் இருந்து அதே 1.2-லிட்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட 3-சிலிண்டர் எஞ்சினுடன் வழங்கப்படும். அதாவது இந்தியாவில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட எஞ்சினுடன் கூடிய முதல் CNG வாகனம் இதுவாகும்.

டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி-இன் AMT வகைகளை அறிமுகப்படுத்தியது. எனவே வரவிருக்கும் நெக்சான் சிஎன்ஜி மாடலிலும் AMT-கியர்பாக்சை கொண்டிருக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.
அறிமுகப்படுத்தப்பட்டதும், பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி உள்ளிட்ட பல எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள், எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் கிடைக்கும் இந்தியாவின் ஒரே வாகனமாக நெக்சான் இருக்கும். நெக்சான் சிஎன்ஜி மாடல் இந்தியாவில் பிரெஸ்ஸா சிஎன்ஜி மாடலுக்கு போட்டியாக அமையும்.
நெக்சான் சிஎன்ஜியைத் தவிர, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் டாடா ஹேரியர் எலெக்ட்ரிக் மற்றும் கர்வ் மாடலை எலக்ட்ரிக் மற்றும் ஐசி எஞ்சின் என இருவித பவர்டிரெயின்களில் அறிமுகப்படுத்தும்.
- மிட் மற்றும் டாப்-எண்ட் டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களுக்கு தொடர்ந்து ரூ.64,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
- அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மாருதி சுசுகி இந்தியாவில் விற்பனை செய்து கொண்டிருக்கும் மிக சிறந்த கார் மாடல்களில் ஒன்றாக கிராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara) இருக்கின்றது. மேலும், அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் ஒன்றாகவும் இந்த கார் மாடல் இருக்கிறது.
மாருதி சுசுகியின் நெக்சா விற்பனை மையங்கள் ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் கிராண்ட் விட்டாரா, பிரான்க்ஸ் காம்பாக்ட் எஸ்.யு.வி. மற்றும் XL6 எம்.பி.வி. உள்ளிட்ட கார்களுக்கு அதிக தள்ளுபடியை வழங்குகின்றன.
பலேனோ, இக்னிஸ் மற்றும் சியாஸ் மாடல்கள் அதே விலையில் தொடர்கின்றன. அதே நேரத்தில் இன்விக்டோ எம்.பி.வி.-க்கு எந்த தள்ளுபடியும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே, மாருதி கிராண்ட் விட்டாரா மாடல்களுக்கு ரூ.74,000 தள்ளுபடியும், 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்ட்டி வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக ரூ. 66 ஆயிரம் தள்ளுபடி சேர்த்து காரின் விலை ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வரை குறைந்துள்ளது.
மிட் மற்றும் டாப்-எண்ட் டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களுக்கு தொடர்ந்து ரூ.64,000 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் சிக்மா மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் முறையே ரூ.34,000 மற்றும் ரூ.14,000 தள்ளுபடி பெறுகின்றன.
இந்தியாவில் கிராண்ட் விட்டாரா மாடல் ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், வோக்ஸ்வாகன் டைகுன் மற்றும் எம்.ஜி. ஆஸ்டர் போன்ற எஸ்.யு.வி. மாடல்களுக்கு போட்டியாக உள்ளது.

இந்த காரின் விலை ரூ.10.99 லட்சம் முதல் ரூ.19.93 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த காரில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 103 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. அதே எஞ்சின் CNG-மேனுவல் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இது 116 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இந்த கார் 1.5 லிட்டர் வலுவான ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.
மாருதி XL6 மீதான தள்ளுபடிகள் ரூ.15,000 வரை உயர்ந்துள்ளன. இதன் மூலம் பெட்ரோல் மாடல்களுக்கு ரூ. 40,000 ஆகவும், சிஎன்ஜி மாடல்களுக்கு ரூ. 25,000 ஆகவும் உள்ளது. இதன் விலை ரூ.11.61 லட்சம் முதல் ரூ.14.61 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த காரில் 103 ஹெச்பி திறன் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இந்த CNG மோடில் இயங்கும் போது 88 ஹெச்.பி. திறன் வழங்குகிறது.
அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- எங்களது நிறுவனத்தின் அனைத்து கார்களும் இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என்று நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை.
- இந்த அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.
சீனாவில் தயாரிக்கப்படும் கார்களை இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என பொய்யாக விளம்பரப்படுத்தியதால் டி.ஆர். ஆட்டோமொபைல்ஸ் கார் நிறுவனத்திற்கு இத்தாலி அரசு 53 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
டி.ஆர் ஆட்டோமொபைல்ஸ் கம்பெனி சீன கார் தயாரிப்பாளர்களான செரி, பி.ஏ.ஐ.சி. மற்றும் ஜே.ஏ.சி. தயாரித்த உதிரிபாகங்களை அசெம்பிள் செய்து கார்களை தயாரிக்கிறது.
ஆனால், டி.ஆர் ஆட்டோமொபைல்ஸ் தனது நிறுவனத்தின் கார்கள் இத்தாலியில் தயாரிக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தி விற்பனை செய்கிறது. அவற்றின் அசெம்ப்ளி மற்றும் இறுதிப் பணிகள் மட்டுமே இத்தாலியில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், "எங்களது நிறுவனத்தின் அனைத்து கார்களும் இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என்று நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை. ஆதலால் இந்த அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்" என்று டி.ஆர் ஆட்டோமொபைல்ஸ் தெரிவித்துள்ளது.
- இந்திய சந்தையில் மாருதி சுஸிகியின் பிரான்க்ஸ் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது.
- பிரான்க்ஸ் விற்பனைக்கு வந்த 10 மாதங்களில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் மாருதி சுஸிகியின் பிரான்க்ஸ் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது. பலேனோ அடிப்படையிலான சொகுசு (SUV) காரான பிரான்க்ஸ் இந்தியாவில் கடந்த ஆட்டோ எக்ஸ்போவின் போது அறிமுகப்படுத்தப்ப்டது.
தற்போது லிமிடெட் வேரியன்ட் உடன் பிரான்ஸ்க் வெலோசிட்டி எடிசனை அறிமுகம் செய்துள்ளது. இருந்த போதிலும் 14 வேரியன்ட்ஸ் வகையில் கிடைக்கும் வகையில் வெலோசிட்டி எடிசன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
7.29 லட்சம் ரூபாயில் இருந்து இதன் விலை ஆரம்பமாகிறது. தொடக்கத்தில் டுர்போ டிரிம்ஸ்யோடு மட்டும்தான் கிடைத்தது. தற்போது 1.2லி பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி பவர்டிரைன் உடன் கிடைக்கிறது.
மாருது சுஸிகி பிரான்க்ஸ் வெலோசிட்டி எடிசன் சிக்மா, பிரான்க்ஸ் வெலோசிட்டி எடிசன் டெல்டா, டெல்டா+, டெல்டா+ (ஓ) பெயரில் விற்பனையாகிறது.
360 டிகிரி வீயூ கேமரா, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே உடன் 9-இன்ஞ் ஸ்மார்ட் பிரோ+ இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
பிரான்க்ஸ் விற்பனைக்கு வந்த 10 மாதங்களில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
- பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடலானது, லாங் வீல்பேஸ் காராக உருவாக்கப்பட்டுள்ளது.
- 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் என இருவிதமாக இந்த பிஎம்டபிள்யூ கார் விற்பனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஜெர்மனியை சேர்ந்த முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று பிஎம்டபிள்யூ (BMW). பல்வேறு நாடுகளில் கார்களை விற்பனை செய்யும் BMW நிறுவனத்துக்கு முக்கியமான மார்க்கெட்டாக இந்தியா திகழ்கிறது. இதனாலேயே இங்கு அவ்வப்போது புதுப்புது கார்களை அறிமுகப்படுத்துகிறது BMW நிறுவனம்.
அந்த வகையில், தற்போது BMW நிறுவனத்தின் 8-வது தலைமுறை 5 சீரிஸ் லாங்க் வீல்பேஸ் (BMW 5 Series Long Wheelbase) மாடலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. வருகிற 24-ந்தேதி தான் இந்த மாடலை அறிமுகம் படுத்தப்படுகிறது. இதற்கு முன்னதாகவே முன்பதிவு தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள BMW டீலர்கள் அல்லது ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம்.

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடலானது, லாங் வீல்பேஸ் காராக உருவாக்கப்பட்டுள்ளது. 5 சீரிஸ் காரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் முன்பு இருந்ததை காட்டிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காருக்குள் இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் என இருவிதமாக இந்த பிஎம்டபிள்யூ கார் விற்பனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
- காரின் பின்புறத்தில் முழு அகல எல்இடி விளக்குகளின் மத்தியில் ‘புகாட்டி’ என்ற எழுத்து இடம்பெறுகிறது.
- டூர்பில்லன் 100 கி.மீ. வேகத்தை 2 வினாடிகளிலும், அதே நேரத்தில் 299 வேகத்தை 10 வினாடிகளிலும் கடந்துவிடும்.
புகாட்டி நிறுவனத்தின் "டூர்பில்லன்" புதிய ஹைப்பர் கார் உலக சந்தையில் வெளியாகி உள்ளது. புதிய புகாட்டி டூர்பில்லன் மாடல் கார் சிரோனுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் புதிய தோற்றத்தைக் கொண்டுள்ளது.
இத்துடன் முற்றிலும் புதிய பவர்டிரெய்ன் மற்றும் மெக்கானிக்கல்களையும் கொண்டுள்ளது. இதில் V16 என்ஜின்களைக் கொண்டிருப்பதால் இது புகாட்டியின் முதல் ஹைப்பர்கார் ஆகும். இது சிரோன் மற்றும் வெய்ரோன் ஆகிய இரண்டு கார்களில் வழங்கப்பட்ட W16 எஞ்சினுக்கு மாற்றாக உள்ளது.
புகாட்டி தனது புதிய ஹைப்பர் காரை வெறும் 250 யூனிட்கள் மட்டும் உற்பத்தி செய்கிறது. இந்த மாடலின் ஆரம்ப விலை 3.2 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ரூ.33 கோடி ஆகும். டூர்பில்லன் ஹைப்பர் காரின் முன்புறத்தில் ஒரு பெரிய ஹார்ஸ் ஷூ வடிவ கிரில் உள்ளது. இருபுறமும் குவாட் LED ஹெட்லேம்ப்கள் உள்ளன.
காரின் பின்புறத்தில் முழு அகல எல்இடி விளக்குகளின் மத்தியில் 'புகாட்டி' என்ற எழுத்து இடம்பெறுகிறது. டூர்பில்லன் முற்றிலும் மாற்றிஅமைக்கப்பட்ட கேபின் மற்றும் டேஷ்போர்டு அமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த ஹைப்பர் காரில் வி16 ஹைப்ரிட் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. IC என்ஜின் மட்டும் 1000 ஹெச்.பி. பவர் மற்றும் 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது மூன்று மின்சார மோட்டார்களுடன் இணைந்து, ஹைப்பர் காருக்கு மொத்தமாக 1,800 ஹெச்.பி. பவர் வழங்குகிறது. புதிய பவர்டிரெய்ன் 8-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
டூர்பில்லன் 100 கி.மீ. வேகத்தை 2 வினாடிகளிலும், அதே நேரத்தில் 299 வேகத்தை 10 வினாடிகளிலும் கடந்துவிடும். புகாட்டி டூர்பில்லன் மணிக்கு அதிகபட்சமாக 445 கிமீ/மணி வேகத்தில் செல்லும் என்று அந்நிறுவனம் கூறுகிறது.
- சிட்ரோயன் சி3 ஏர்கிராஸ் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை யூ, ப்ளஸ் மற்றும் மேக்ஸ் ஆகும்.
- விவரங்களுக்கு அருகிலுள்ள சிட்ரோயன் டீலரை தொடர்புகொள்ளலாம்.
பிரான்ஸ் நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனம் சிட்ரோயன். தனது பிரபலமான SUV-வின் மிட் ரேஞ்ச் வேரியண்டுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. சிட்ரோயன் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் புதிய சி3 ஏர்கிராஸ் டோனி மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.11.82, எக்ஸ்-ஷோரூம் ஆகும். சிட்ரோயன் சி3 ஏர்கிராஸ் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை யூ, ப்ளஸ் மற்றும் மேக்ஸ் ஆகும்.
இவற்றில் மிட் ரேஞ்ச் வேரியண்ட் பிளஸ் வகை கார்கள் ரூ.2.62 லட்சம் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடி காரின் குறைந்த யூனிட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இதற்கு முன்பு சி3 ஏர்கிராஸ் பிளஸ் மாடலின் ஆரம்ப விலையாக ரூ.11.61 லட்சம் என ஷோரூமில் விற்பனையான நிலையில் இனி ரூ.8.99 லட்சமாக விற்பனையாகும்.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் விலை டீலருக்கு டீலர் மாறுபடும். இது தொடர்பான விவரங்களுக்கு அருகிலுள்ள சிட்ரோயன் டீலரை தொடர்புகொள்ளலாம்.
- ஃபெராரி நிறுவனம் அதன் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனத்தை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
- புதிய ஆலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் இதர மாடல்களை ஃபெராரி உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது.
உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரி தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை அடுத்த ஆண்டு வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, ஃபெராரி அறிமுகம் செய்யும் எலெக்ட்ரிக் காரின் விலை மற்றும் விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் காரின் விலை தோராயமாக ரூ.4.17 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சொகுசு வாகனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதால் ஃபெராரியின் Purosangue கார் மாடலின் விலை அமெரிக்காவில் $3,98,350 (ரூ.3.32 கோடி) மற்றும் இந்தியாவில் ரூ.10.5 கோடியில் தொடங்குகிறது.

கோப்புப்படம்
ஃபெராரி அறிமுகம் செய்யும் எலெக்ட்ரிக் கார் இரண்டு இருக்கைகள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு மின்சார மோட்டார் கொண்டிருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஃபெராரி நிறுவனம் அதன் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனத்தை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. வடக்கு இத்தாலியில் புதிய தொழிற்சாலையை தொடங்கும் ஃபெராரி தனது வாகனங்களின் ஆண்டு உற்பத்தியை 20,000 யூனிட்டுகளாக உயர்த்த உள்ளது. இந்த ஆலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் இதர மாடல்களை ஃபெராரி உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது.
- சிறப்பு எடிஷனாக 100 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.
- இந்த காரை வாங்க டோனியின் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்ரோயன் இந்தியா நிறுவனத்தின் ப்ராண்ட் அம்பாசிட்டராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் எம்.எஸ்.டோனியை கவுரவிக்கும் விதமாக தோனி எடிஷன் சி3 ஏர்கிராஸ் என்ற புதிய காரை சிட்ரோயன் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த காரின் ஷோ ரூம் விலை ரூ.11.82 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சாதாரண சி3 ஏர்கிராஸ் காரின் விலை ரூ.8.99 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு எடிஷனாக 100 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காரை வாங்க டோனியின் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிறப்பு காரில் டோனி கிளவ்ஸ் பெட்டி ஒன்று இருக்கும் என்றும், 100 கார்களில் ஏதேனும் ஒரு காரில் டோனி ஆடோகிராப் போட்ட அவரின் கிளவ்ஸ் ஒன்றும் இருக்கும் என்றும், இது இந்த காரை வாங்கும் டோனி ரசிகரை ஆச்சரியப்படுத்தும் என்று கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- அதிக அம்சங்கள் கொண்ட டாப்-எண்ட் மான்ட் கார்லோ தற்போது ப்ரெஸ்டீஜ் வேரியண்டின் கீழே உள்ளது.
- டாப் 10-ல் முதலிடம் வகிக்கும் ஸ்லாவியாவின் விலைகள் கூட கணிசமான அளவு குறைந்துள்ளன.
ஸ்கோடா நிறுவனம் தனது ஸ்லாவியா மிட்சைஸ் செடான் மற்றும் குஷாக் மிட்சைஸ் எஸ்யூவியின் மாடல்களின் விலையை குறிப்பிட்ட காலத்திற்கு சுமார் ரூ.1 லட்சம் வரை குறைத்துள்ளது. இத்துடன் கார் வேரியண்ட்களுக்கு புதிய பெயர்களையும் ஸ்கோடா வைத்துள்ளது.
மேற்கூறிய மாடல்கள் குறிப்பிட்ட காலத்திற்கு இந்தக் குறைவான விலையிலேயே விற்பனை செய்யப்படும் எனவும் அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
குஷாக் மாடல் இப்போது ரூ.10.89 லட்சம் முதல் ரூ.18.79 லட்சம் வரையிலும், ஸ்லாவியாவின் விலை ரூ.10.69 லட்சம் முதல் ரூ.18.69 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 11.99 லட்சமாக இருந்த குஷாக் ஆக்டிவ் தொடக்க விலை இப்போது ரூ.1.1 லட்சம் குறைந்துள்ளது.

இந்த காரின் டாப் எண்ட் மாடல் இப்போது ப்ரெஸ்டீஜ் என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 16.09 லட்சம் முதல் ரூ. 18.79 லட்சம் வரை உள்ளது. இது முந்தைய டாப்-எண்ட் வேரியண்ட் உடன் (ரூ. 17.29 லட்சம்-20.49 லட்சம்) ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வகையில் குறைவு ஆகும்.
அதிக அம்சங்கள் கொண்ட டாப்-எண்ட் மான்ட் கார்லோ தற்போது ப்ரெஸ்டீஜ் வேரியண்டின் கீழே உள்ளது. மேலும் இதன் விலை ரூ.15.60 லட்சம் முதல் ரூ.18.30 லட்சம் வரை இருக்கும்.
ஸ்லாவியா ஆக்டிவ், மிட்சைஸ் செடான் பிரிவில் எண்ட்ரி லெவல் மாடலாக இருந்தது. இதன் விலை ரூ.11.63 லட்சம். இருப்பினும், புதிய ஸ்லாவியா கிளாசிக் தொடக்க நிலை விலையை ரூ.94,000 குறைந்து ரூ.10.69 லட்சமாகக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, டாப் 10-ல் முதலிடம் வகிக்கும் ஸ்லாவியாவின் விலைகள் கூட கணிசமான அளவு குறைந்துள்ளன.
- உலகின் முதல் பறக்கும் காரை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
- இதற்கான சோதனை ஓட்டம் துபாயில் கடந்த 2022ம் ஆண்டு நடத்தப்பட்டது.
பீஜிங்:
பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் நெரிசல் அதிகரித்து பயணத்தை தாமதப்படுத்துகின்றன. அத்துடன் பயணத்தையும் சலிப்படைய செய்கிறது.
எனவே, பயணத்தை எளிதாக்கும் வகையில் பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தப் போட்டியில் சீனா முந்தியுள்ளது. சீனாவின் தொழில்நுட்ப மற்றும் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பெங், உலகிலேயே முதல் பறக்கும் பேட்டரி காரை தயாரித்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டத்தை 2022ம் ஆண்டு துபாயில் நடத்தி வெற்றி பெற்றது.
கடந்த ஞாயிறன்று சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார வர்த்தக காட்சியில் இந்தப் பறக்கும் கார் பீஜிங்கின் டேக்சிங் விமான நிலையத்தில் முதல் முறையாக தனது பயணத்தை மேற்கொண்டது.
ஹெலிகாப்டர் தொழில்நுட்பத்தில் கார் போன்ற வடிவத்தில் பறக்கும் இந்தக் காருக்கு எக்ஸ்பெங் நிறுவனம் எக்ஸ் 2 என பெயரிட்டுள்ளது. அதிகபட்சம் 170 கிலோகிராம் எடையை தாங்கி பறக்கக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பறக்கும் கார்கள் விரைவில் விற்பனைக்கு வரும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- புது கார் பற்றி அந்நிறுவனம் வேறு எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- ரெனகேட் பெயரிலேயே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என தகவல்.
ஜீப் நிறுவனத்தின் புதிய தலைமுறை ரெனகேட் மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எஸ்.யு.வி. 2027 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது தொடர்பான தகவல் அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
புது கார் பற்றி அந்நிறுவனம் வேறு எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இந்த கார் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த கார் சிட்ரோயன் நிறுவனத்தின் காமன் மாட்யுலர் பிளாட்ஃபார்மில் (CMP) உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் சிட்ரோயன் C3 மாடல் இதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய ஜீப் எஸ்.யு.வி. ரெனகேட் பெயரிலேயே இந்தியாவில் விற்பனை செய்யப்படுமா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
புதிய ஜீப் ரெனகேட் மாடல் பேட்டரி எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனை செய்யப்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த காரின் விலை இந்திய மதிப்பில் ரூ. 20 லட்சம் முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
எலெக்ட்ரிக் வெர்ஷனின் விலை ரூ. 20 லட்சத்தில் துவங்கும் போது, அதன் பெட்ரோல் வெர்ஷனின் விலை சில லட்சங்கள் வரை குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில், புதிய ஜீப் எஸ்.யு.வி.யின் விலை ரூ. 15 லட்சத்தில் துவங்கலாம்.






