என் மலர்
கார்
ரெனால்ட் நிறுவனத்தின் கிராஸ்ஓவர் SUV ரக மாடலான கேப்டூர் இந்தியாவில் வெளியாவது சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
புதுடெல்லி:
பிரென்ச் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ரெனால்ட் இந்தியாவில் புதிய கிராஸ்ஓவர் மாடலான கேப்டூர் அறிமுகம் செய்துள்ள நிலையில், ஆட்டோகார் இந்தியா வெளியிட்ட தகவல்களின் படி நவம்பர் மாத முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் புதிய கேப்டூர் ஏற்கனவே அதன் விற்பனையாளர்களிடம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றும், ரெனால்ட் கேப்டூர் செயலி அல்லது ரெனால்ட் இந்தியா வலைத்தளத்திலும் முன்பதிவு செய்ய முடியும். புதிய கேப்டூர் முன்பதிவு செய் ரூ.25,000 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரெனால்ட் கேப்டூர் M0 தளம் சார்ந்திருக்கிறது. இதன் முன்பக்கம் வி வடிவிலான ரேடியேட்டர் கிரில் மற்றும் ரெனால்ட் லோகோ நடுவே இடம்பெற்றுள்ளது. இத்துடன் ஸ்வெப்ட் பேக் புரோஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் பகலில் வேலை செய்யும் எல்இடி மின்விளக்குகள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் பக்கவாட்டுகளில் உறுதியான வெய்ஸ்ட்லைன் மற்றும் உயர்த்தப்பட்ட ஸ்டான்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் எல்இடி டெயில் லேம்ப் மற்றும் சேடின் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்கிட் பிளேட் மற்றும் கிலீன் டெயில்கேட் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய கேப்டூர் இன்டீரியர் அம்சங்களை பொருத்த வரை டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ரெனால்ட் கேப்டூர் கிராஸ்ஓவர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் முறையே 104bhp மற்றும் 108bhp செயல்திறன் கொண்டுள்ளது. இதன் பெட்ரோல் மாடலில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டீசல் இன்ஜினில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
கேப்டூர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 12 கிலோமீட்டர் மற்றும் டீசல் மாடல் லிட்டருக்கு 17 கிலோமீட்டர் வரை செல்லும் என ARAI தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெனால்ட் கேப்டூர் AMT மாடல் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இதன் டாப் எண்ட் மாடலில் நான்கு-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ABS, EBD பிரேக் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் பயணிகள் வாகன ஏற்றுமதியில் மாருதி சுசுகி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
புதுடெல்லி:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்), பயணிகள் வாகன ஏற்றுமதியில் மாருதி சுசுகி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த காலக்கட்டத்தில், மாருதி சுசுகி நிறுவனம் 57,300 பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் மாருதி சுசுகி 54,008 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்த நிலையில், மொத்த ஏற்றுமதி 6 சதவீதம் அதிகரித்துள்ளதால் இந்நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது.
வாகன ஏற்றுமதியில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் பயணிகள் வாகன ஏற்றுமதி 17 சதவீதம் வளர்ச்சி கண்டு 50,410-ஆக உயர்ந்துள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 45,222 பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 48 சதவீத வளர்ச்சியாகும். இந்நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

நான்காவது இடத்தில் உள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஏற்றுமதி 44,585-ஆக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 29 சதவீதம் சரிவாகும். ஃபோர்டு மற்றும் நிசான் மோட்டார் இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஐந்து மற்றும் ஆறாவது இடங்களில் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் ஏற்றுமதி முறையே 42,412 மற்றும் 30,872-ஆக உள்ளது.
முன்னணி கார்களின் பட்டியலில் மாருதி சுசுகி நிறுவனத்தின் மாடல்கள் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில், டாப் 10 பட்டியலில் இந்நிறுவனத்தின் 7 மாடல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் மாருதி ஆல்டோ முதலிடத்தைப் பிடித்துள்ளது. எனினும் செப்டம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையான 10 கார்களில் இந்நிறுவனத்தின் டிசையர் மாடல் முதலிடம் பிடித்துள்ளது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலின் இந்திய வெளியீடு மற்றும் விற்பனை சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
மாருதி சுசுகி நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 2018-இல் நடைபெற இருக்கும் விழாவில் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் இந்தியாவில் ஏற்னவே நல்ல வரவேற்பை பெறும் டிசையர் மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது. டிசையர் காம்பாக்ட் செடான் மாடல் HEARTECT தளம் சார்ந்து உருவாக்கப்பட்டது. இந்த தளம் உயர் ரக ஸ்டீல் கொண்டிருப்பதால் வாகனத்தின் ஒட்டுமொத்த எடை குறைக்கப்படுகிறது. இதனால் புதிய ஸ்விஃப்ட் மாடலும் 50 கிலோ எடை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்விஃப்ட் எடை குறைவதால், வாகனத்தின் மைலேஜ் அதிகரிக்கும். புத்தம் புதிய ஸ்விஃப்ட் டிசையர் மாடலிலும் இதே நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரிலும் ஒரே மாதிரியான இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. எனினும் இதில் ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 1.2 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் 82 bhp மற்றும் 112 Nm செயல்திறன், 1.3 லிட்டர் ஃபியாட் மல்டிஜெட் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின் 75 bhp மற்றும் 190 Nm செயல்திறன் கொண்டுள்ளது. இரன்டு இன்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
இத்துடன் முதல் முறையாக ஸ்விஃப்ட் மாடலில் ஆட்டோமேட்டெட் கியர்பாக்ஸ் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது. இந்த கார் முந்தைய மாடல்களை விட அதிக இடம் பெற்றிருக்கும் என்றாலும், ஒட்டுமொத்த அளவுகளில் அதிகப்படியான மாற்றங்கள் இருக்காது என்றே கூறப்படுகிறது.

புதிய ஸ்விஃப்ட் மாடலில் ABS மற்றும் ஏர்பேக் வசதிகளும், முந்தைய மாடல்களை விட அதிக உறுதியான பாடி ஷெல் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனால் புதிய ஸ்விஃப்ட் இதுவரை இல்லாதளவு உறுதியாக இருக்கும் என்றும் இதன் ஸ்போர்ட் எடிஷன் அடுத்தடுத்து வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலில் 1.4 லிட்டர் 140 bhp செயல்திறன் கொண்ட டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்தகைய அம்சங்களால் புதிய ஸ்விஃப்ட் அதிகம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ அறிமுகம் செய்த மான்ட் கார்லோ எடிஷன் விற்பனை நிறுத்தப்பட இருக்கிறது. மான்ட் கார்ல் பெயரை இந்தியாவில் பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து விற்பனை நிறுத்தப்படவதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:
ஸ்கோடா ஆட்டோ இந்தியா ஆகஸ்டு மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்த ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ எடிஷன் மாடல்களின் விற்பனை அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மான்ட் கார்லோ பெயரை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து விற்பனை நிறுத்துப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லூதியானாவை சேர்ந்த மான்ட் கார்லோ எனும் ஆடை உற்பத்தி செய்யும் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஸ்கோடா நிறுவனம் மான்ட் கார்லோ பெயரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஸ்தோடா இந்தியா தனது விற்பனையாளர்கள் மான்ட் கார்லோ பெயரை பயன்படுத்தி விளம்பரங்கள், விற்பனை செய்ய வேண்டாம் என்றும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விற்பனையை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ 105hp, 1.6-லிட்டர் மோட்டார் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இன்ஜின் அம்சங்களை பொருத்தவரை 110bhp, 5-லிட்டர் மோட்டார், 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இந்தியாவில் மான்ட் கார்லோ 1.6 பெட்ரோல் இன்ஜின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலின் விலை ரூ.10.75 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ.13,57 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மான்ட் கார்லோ சிறப்பம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் கருப்பு நிற கிரில், 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல், பிளாக் டெயில்கேட் ஸ்பாய்லர் மற்றும் ஃபாக்ஸ் டிஃப்யூசர் வழங்கப்பட்டுள்ளது. வெளிப்புறங்களில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களிலும், கருப்பு நிற ரூஃப் கொண்டுள்ளது. உள்புற அம்சங்களை பொருத்த வரை, புதிய ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல், லெதர் ராப்பிங். மற்றும் சிவப்பு நிற ஸ்டிட்ச், சிவப்பு மற்றும் கருப்பு நிற லெதரேட் சீட் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஃபூட் பெடல்கள் வழங்ப்பட்டுள்ளது. இத்துடன் கஸ்டம் டோர் ஸ்டில் மற்றும் ஃப்ளோர் மேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இன்ஃபோடெயின்மென்ட் அம்சங்களை பொருத்த வரை ரேபிட் மான்ட் கார்லோ மாடலில் 6.5 இன்ச் சிஸ்டம், ஸ்மார்ட்லின்க் மற்றும் மிரர்லின்க், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டேடைம் லைட்ஸ், பின்புற பார்க்கிங் சென்சார்கள், டூயல் ரியர் ஏசி வென்ட், க்ரூஸ் கண்ட்ரோல், கூல்டு கிளவ் பாக்ஸ் மற்றும் மழையை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வைப்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உபகரணங்களை பொருத்த வரை முன்பக்க டூயல் ஏர்பேக், ABS, ESC உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் கடந்த மே மாதம் அறிமுகம் செய்த புதிய தலைமுறை டிசையர் கார் 150 நாட்களுக்குள் 95,000க்கும் அதிகமான யுனிட்கள் விற்பனை செய்துள்ளது.
புதுடெல்லி:
மாருதி சுசுகி டிசையர் இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை டிசையர் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கார் வெளியாகி ஐந்து மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இதுவரை மட்டும் சுமார் 95,000க்கும் அதிகமான யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய டிசையர் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அறிமுகமான மாதத்தில் இருந்து இதுவரை புதிய டிசையர் விற்பனை மும்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 60,000க்கும் அதிகமான யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், டிசையர் முன்பதிவு செய்வோர் மூன்று மாதங்களுக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய தலைமுறை மாருதி சுசுகி டிசையர் அந்நிறுவனத்தின் HEARTEC வடிவமைப்பை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் முந்தைய மாடல்களை விட மெல்லிய மற்றும் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது. புதிய வடிவமைப்பு காரணமாக காரின் எடை முந்தைய மாடலை விட 105 கிலோ வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதால் புதிய முன்புறம் பெற்றிருக்கிறது. க்ரோம் சரவுண்டு செய்யப்பட்ட புதிய கிரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டேடைம் ரன்னிங் லைட், புதிய பம்ப்பர் உள்ளிட்டவை காரின் தோற்றத்தை ஒட்டுமொத்தமாக வித்தியசமாக வெளிப்படுத்துகிறது.

உள்புற அம்சங்களை பொருத்த வரை டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, மிரர்லின்க் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை டூயல் ஏர்பேக்ஸ், EBD கொண்ட ABS (ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்), பிரேக் அசிஸ்ட் மற்றும் ISOFIX உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய சுசுகி டிசையர் 1.2 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின், 1.3-லிட்டர் DDiS டீசல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் மோட்டார் 82 bhp மற்றும் 113 Nm செயல்திறனும், டீசல் மோட்டார் 74 bhp மற்றும் 190 Nm செயல்திறன் கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதியை விரும்பும் வாட்க்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி சமீபத்தில் அறிமுகம் செய்த டிசையர், இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.
புதுடெல்லி:
மாருதி சுசுகி டிசையர் செடான் மாடல் கார் இந்திமயாவில் அதிகம் விற்பனையான பெருமையை பெற்றுள்ளது. செப்டம்பர் 2017-இல் மட்டும் டிசையர் மாடலினை 34,000க்கும் அதிகமானோர் வாங்கியுள்ளனர். இதனால் புதிய டிசையர் இந்தியாவில் ஒரே மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.
கடந்த மாதம் மட்டும் 31,000 டிசையர் யுனிட்கள் இந்தியாவில் விற்பனையானது. புதிய டிசையர் மாடலுக்கான தட்டுப்பாடு இந்தியாவில் அதிகரித்திருப்பதற்கு காரினை முன்பதிவு செய்து காத்திருக்கும் 40,000 பேரும் எடுத்துக்காட்டு எனலாம். அதிகப்படியான வரவேற்பு கிடைத்திருப்பதை தொடர்ந்து குஜராத்தில் புதிய டிசையர் தயாரிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மூன்றாவது தலைமுறை டிசையர் மாடல் குடும்ப வாடிக்கையாளர்களை விட வாடகைக்கு கார் ஓட்டுபவர்களே அதிகம் முன்பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது. புதிய மாடலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து காரின் ஒட்டுமொத்த தோற்றமும் முந்தைய மாடல்களை விட அழகாக காட்சியளிக்கிறது.
வெளிப்புறம் மட்டுமின்றி உள்புற வடிவமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் காரிற்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. காரின் எடை குறைவாக இருப்பதால், பிக்கப் வேகம் அதிகமாவதோடு மைலேஜ் அதிகமாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களிலும் AMT வசதி வழங்கப்படுகிறது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் செலரியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய செலரியோ ஃபேஸ்லிஃப்ட் விலை மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
மாருதி சுசுகி செலரியோ ஃபேஸ்லிஃப்ட் இந்தி.யாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய செலரியோ ஃபேஸ்லிஃப்ட் விலை இந்தியாவில் ரூ.4.15 லட்சத்தில் துவங்கி அதிபட்சம் ரூ.5.34 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட செலரியோ சுசுகி இந்தியாவில் 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதோடு, இந்தியாவில் ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி கொண்ட முதல் கார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பிரபலமான ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும் செலரியோ நான்கே ஆண்டுகளில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான விற்பனையை கடந்துள்ளது.
புதிய ஃபேஸ்லிஃப்ட் செலரியோ புத்தம் புதிய வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட முன்பக்கம் பம்ப்பர், மெஷ் ஃபினிஷ் கிரில், புத்தம் புதிய ஃபாக் லேம்ப் பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் டெயில்கேட் புதிய கார்னிஷ், பின்புற பம்ப்பர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றங்கள் காரின் தோற்றததை அழகாக வெளிப்படுத்துகிறது.

உள்புற வடிவமைப்புகளை பொருத்த வரை செலரியோ மாடலின் கேபின் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் சீட் டிரிம் புதிய பேட்டர்ன் கொண்டுள்ளதோடு, புதிய சீட் மற்றும் ஃபேப்ரிக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
அந்தவகையில் புதிய செலரியோ மாடலிலும் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜி்ன் 67bhp மற்றும் 90Nm செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கொண்டுள்ளது. இத்துடன் புதிய செலரியோ மாடலில் CNG கிட் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி பலேனோ, எஸ்-கிராஸ், எர்டிகா, இக்னிஸ், புதிய டிசையர் போன்று புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும் ஏழாவது மாருதி சுசுகி கார் ஆகும். இத்துடன் வழக்கமான பாதுகாப்பு அம்சங்களான டிரைவர்-சைடு ஏர் பேக், பாசென்ஜர் ஏர் பேக் மற்றும் ABS உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் எரிசக்தி திறன் மேம்பாட்டு கழகத்திற்கு 10,000 எலெக்ட்ரிக் கார்களை விநியோகம் செய்வதற்கான உரிமத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசு நிறுவனத்திற்கு எலெக்ட்ரிக் கார்களை விநியோகம் செய்வதற்கான உரிமத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மத்திய அரசு வெளியிட்ட டென்டர் அறிவிப்பில் மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனத்தை விட குறைவான விலையை நிர்ணயம் செய்து டாடா மோட்டார்ஸ் இந்த திட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இந்திய மதிப்பில் ரூ.1,120 கோடி மதிப்புடைய திட்டத்திற்கான அனுமதியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில், சர்வதேச அளவில் மிகப்பெரிய திட்டமாக பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மத்திய அரசின் எரிசக்தி திறன் மேம்பாட்டு கழகத்திற்கு எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வழங்கும். வாகனம் ஒன்றின் விலை ரூ.11.2 லட்சம் என்ற விலையில் தயாரிக்கப்படுகின்றன. 2030-ம் ஆண்டு வாக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் திட்டத்தின் அங்கமாக இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
மிகுந்த போட்டி நிறைந்த ஏலத்தில் டாடா மோட்டார்ஸ குறைந்த விலையை அறிவித்தது. ஜி.எஸ்.டி. வரி சேர்க்காமல் வாகனம் ஒன்றின் விலை ரூ.10.16 லட்சம் என நிர்ணயம் செய்தது. இந்த வாகனம் மத்திய எரிசக்தி திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ஜி.எஸ்.டி. வரி சேர்த்து ரூ.11.02 லட்சத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய எலெக்ட்ரிக் கார்கள் இரண்டு கட்டங்களில் விநியோகம் செய்யப்பட்டும். அந்த வகையில் நவம்பர் 2017க்குள் 500, மீதமுள்ள 9500 கார்கள் இரண்டாம் கட்டமாக விநியோகம் செய்யப்படும். இரண்டாம் கட்ட விநியோகத்திற்கான காலக்கெடு இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
மத்திய அரசுடனான ஒப்பந்தத்தின் படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டிகோர் செடான் மாடலின் எலெக்ட்ரிக் பதிப்பை விநியோகம் செய்யும் என்றும் இவை பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு மாற்றாக இருக்கும். புதிய எலெக்ட்ரிக் மாடல்கள் மாதம் ரூ.45,000 முதல் ரூ.50,000 விலையில் கிடைக்கும், இவை பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை விட குறைவு ஆகும்.
முன்னதாக டாடா டியாகோ மாடலின் எலெக்ட்ரிக் பதிப்பு லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கான்செப்ட் டாடா மோட்டார்ஸ் ஐரோப்பிய தொழில்நுட்ப மையம் உருவாக்கியதாகும். இந்த காரில் லிக்விட் கூல்டு 85 கிலோவாட் டிரைவ் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 200NM டார்கியூ கொண்டிருக்கிறது.
அரசாங்கத்திற்கு எலெக்ட்ரிக் வாகனங்களை விநியோகம் செய்யும் உரிமத்தை பெற்றுள்ள டாடா மோட்டார்ஸ் புதிய டிகோர் எலெக்ட்ரிக் பதிப்பை வெளியிடும் என்பதோடு 2030-ம் ஆண்டிற்குள் அனைத்து வாகனங்களையும் மின்சக்தியில் இயங்க வைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியக் மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெர்லின் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட கோடியக் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியக் மாடல் கார் இந்தியாவில் அக்டோபர் 4-ம் தேதி வெளியாக இருக்கிறது. பெர்லின் நகரில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கோடியக் காரினை வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்ய முடியும்.
ஸ்கோடா சூப்பர்ப், ஆக்டேவியா, ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஆடி மாடல்களை போன்று புதிய கோடியக் மாடலும் அந்நிறுவனத்தின் MQB ரகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் வெளியிடப்பட இருக்கும் கோடியக் முழு சிறப்பம்சங்கள் வெளியீட்டின் போது தான் தெரியவரும்.
சர்வதேச சந்தையில் கோடியக் ஐந்து வித இன்ஜின்- இரண்டு டீசல் மற்றும் மூன்று பெட்ரோல் மாடல்களை கொண்டுள்ளது. இந்த இன்ஜின்களில் 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு DSG மற்றும் 7-ஸ்பீடு DSG டிரான்ஸ்மிஷன்களை கொண்டுள்ளது. எனினும் இந்தியாவில் ஸ்கோடா கோடியக் மூன்று இன்ஜின்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஸ்கோடா கோடியக் 2-லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதாவது 177 bhp, 320 NM டார்கியூ, 2-லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் 147 bhp, 340 NM டார்கியூ அல்லது 187 bhp, 400NM டார்கியூ செயல்திறன் கொண்டுள்லது. இந்த இன்ஜின்களில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு DSG யுனிட் கொண்டுள்ளது.
புதிய ஸ்கோடா கோடியக் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி லைட் மற்றும் ஸ்ப்லிட் எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் பானாரோமிக் சன்ரூஃப், காரின் நிறத்திற்கு ஏற்ற நிறத்திலான ரூஃப் டெயில்கள், பிளாக்கன்-அவுட் முன்பக்கம் மற்றும் பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் எஸ்.யு.வி. கூர்மையான கோடுகளையும், பார்க்க ஸ்போர்ட் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.
மேலும் ஏழு பேர் அமரக்கூடிய முதல் ஸ்கோடா வாகனமும் கோடியக் தான். இதன் கேபினில் ஸ்கோடா கனெக்ட் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, நேவிகேஷன் மற்றும் ப்ளூடூத் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் ஸ்கோடா கோடியக் மாடலில் பார்க்கிங் அசிஸ்ட் சிஸ்டம், 24 டிரைவர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், பின்புற டிராஃபிக் அலெர்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 270 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது, எனினும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இருக்கைகளை மாற்றியமைத்து 2005 லிட்டர் வரை பூட் ஸ்பேஸ் நீட்டிக்க முடியும்.
மற்ற வசதிகளை பொருத்த வரை ஸ்கோடா கோடியக்கில் எலெக்ட்ரிக் டெயில்கேட், டூயல்-சோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், இன்ஜன் ஸ்டார்ட் / ஸ்டாப் அம்சம், எலெக்ட்ரிக் டிரைவர் சீட் மற்றும் ஸ்டீரிங் மவுண்ட்டெட் ஆடியோ மற்றும் குரூஸ் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் உயர் ரக மாடலில் ஆறு ஏர்பேக்ஸ் ABS மற்றும் EDB உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட இருக்கும் ஸ்கோடா கோடியக் மாடலின் விலை ரூ.30 லட்சத்தில் இருந்து துவங்கும் என்றும் இந்தியாவில் ஃபோர்டு என்டேவர், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் செலரியோ கிராஸ் ஹேட்ச்பேக் மாடல் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய மாடல் சார்ந்து வெளியாகியுள்ள முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
மாருதி சுசுகியின் செலரியோ கிராஸ்ஓவர் போன்ற வடிவமைப்பை பெற இருக்கிறது. செலரியோ X கிராஸ் ஹேட்ச்பேக் பதிப்பில் விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய செலரியோ கிராஸ் அக்டோபர் 4-ம் தேதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகி செலரியோ இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வருகிறது. மாருதி கார்களில் AMT அல்லது AGS (ஆட்டோ கியர் ஷிஃப்ட்) வசதி கொண்ட முதல் மாடல் ஆகும். இத்துடன் புதிய மாடலில் 2-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
ஹூன்டாய் i20 ஆக்டிவ், ஃபியாட் அவென்ச்சுரா மற்றும் டொயோட்டா எடியோஸ் என இந்தயாவில் கிடைக்கும் கிராஸ் ஹேட்ச்பேக் மாடல்களின் விலை செலரியோ X மாடலை விட விலை அதிகம் ஆகும். புதிய செலரியோ X கிராஸ்-ஹேட்ச் மாடலின் பக்கவாட்டு, வீல் ஆர்ச் உள்ளிட்டவற்றில் பிளாஸ்டிக் கிளாடிங் செய்யப்பட்டுள்ளன.

இத்துடன் புதிய பம்ப்பர்கள், கருப்பு நிறத்திலான பிளாஸ்டிக் கிளாடிங், பம்ப்பரை சுற்றி சில்வர் அக்சென்ட் செய்யப்பட்டுள்ளது. செலரியோ X மாடலில் புதிய வீல்களும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய செலரியோ மாடலில் மெக்கானிக்கல் அப்கிரேடுகள் செய்யப்படாது என்றாலும், புதிய டையர் மற்றும் வெளிப்புற தோற்றம் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பண்டிகை காலத்தில் வெளியாக இருக்கும் புதிய செலரியோ மாடல் ஸ்டான்டர்டு மாடலை போன்றே செலரியோ எக்ஸ் மாடலும் விநியோகஸ்தர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன்ஆர் ஹேட்ச்பேக் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 1999-ம் ஆண்டு அறிமுகமான வேகன்ஆர் இதுவரை 20 லட்சம் யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மாருதி சுசுகி நிறுவனம் 1999-ம் ஆண்டு வாக்கில் இந்தயாவில் அறிமுகம் செய்த வேகன்ஆர் ஹேட்ச்பேக் மாடல் இதுவரை 20 லட்சம் யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் கார்களின் டாப் 5 பட்டியலில் கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது.
இந்த சாதனையின் மூலம் இந்தியாவில் 20 லட்சம் யுனிட்களை விற்பனையான மாருதி 800 மற்றும் ஆல்டோ ஹேட்ச்பேக் உள்ளிட்ட மாடல்களுடன் இணைந்துள்ளது.
மாருதி சுசுகி வெளியிட்ட தகவல்களின் படி வேகன்ஆர் மாடல் பெரும்பாலானோருக்கும் முதல் காராக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் வேகன்ஆர் மாடலினை பலமுறை வாங்கியுள்ளனர் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 10 லட்சம் யுனிட் விற்பனையை வேகன்ஆர் 2011-ம் ஆண்டு கடந்தது. சமீப ஆண்டுகளில் வேகன்ஆர் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு விற்பனையில் கணிசமான பங்குகளை வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து 79 மாதங்களில் 10 லட்சம் யுனிட்கள் விற்பனையாகியுள்ளது.
முதன்முறையாக 1993-ம் ஆண்டு ஜப்பானில் வேகன்ஆர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் டால் பாய் வடிவமைப்பு கொண்ட முதல் கார் என்ற பெருமையை வேகன்ஆர் கொண்டிருந்தது. ஆரம்ப கால தோற்றம் பலருக்கும் பிடிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து அனைவரும் வங்கக்கூடிய மாடலாக வேகன்ஆர் இருந்தது. இதைத் தொடர்ந்து ஆண்டுகள் கடக்க பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் வசதிகள் சேர்க்கப்பட்டது.

ஆகஸ்டு மாத நிலவரப்படி இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல செடான் மாடல் இடம்பிடித்துள்ளது. இது ஏற்கனவே முதலிடத்தில் இருந்த மாருதி சுசுகி மாடலை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
மாருதி சுசுகி நிறுவனத்தன் செடான் மாடலான டிசையர் ஆகஸ்டு மாத விற்பனையில் இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளது. முன்னதாக ஆல்டோ மாடல் முதலிடத்தில் இருந்த நிலையில், முதல்முறையாக டிசையர் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் அமைப்பின் சமீபத்திய தகவல்களின் படி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 10 கார் மாடல்களில் ஆகஸ்டு மாத நிலவரப்படி ஏழு மாடல்கள் மாருதி சுசுகி வாகனங்கள் என்றும் மற்ற மாடல்கள் ஹூன்டாய் மோட்டார் நிறுவனத்துடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் இந்த ஆண்டு மே மாதம் வெளியிட்ட புதிய டிசையர் ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 26,140 யுனிட்கள் விற்பனையாகியுள்ளது. இதே மாதத்தில் 24,521 ஆல்டோ யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பல ஆண்டுகளாக விற்பனையில் ஆல்டோ மாடல் முதலிடத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பழைய டிசையர் மாடல்கள் 15,766 யுனிட்கள் விற்பனையான நிலையில், 20,919 ஆல்டோ யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு ஆகஸ்டு மாத விற்பனையில் முதல் 10 கார்களில் பலேனோ மாடல் 17,190 யுனட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 8,671 பலேனோ மாடல்கள் விற்பனையாகியுள்ளன.
இந்த பட்டியலில் விடாரா பிரெஸா 14,396 யுனிட்கள் விற்பனையாகி நான்காவது இடத்தில் உள்ளது. இந்த மாடல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 9,554 யுனிட்களை விற்பனை செய்து எட்டாவது இடத்தில் இருந்தது. வேகன் ஆர் மாடல் ஐந்தாவது இடத்தில் 13,907 யுனிட்களை விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாடல் 14,571 யுனிட்களை விற்பனை செய்து மூன்றாவது இடம் பிடித்தது.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 12,631 யுனிட்கள் விற்பனையாதைத் தொடர்ந்து பட்டியலில் ஆறாவது இடம் பிடித்துள்ளது. ஹூன்டாய் ஹேட்ச்பேக் கிரான்ட் ஐ10 ஏழாவது இடத்தில் உள்ளது. இந்த மாடல் 12,306 யுனிட்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு 12,957 யுனிட்கள் விற்பனையானது.
பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான எலைட் ஐ20 எட்டாவது இடத்திலும், எஸ்.யு.வி. கிரெட்டா மற்றும் செலரியோ முறையே ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களை பிடித்துள்ளது. கடந்த ஆண்டின் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த ரெனால்ட் நிறுவனத்தின் குவிட் மாடல் இந்த ஆண்டு பட்டியலில் இடம்பிடிக்கவில்லை.