என் மலர்tooltip icon

    செய்திகள்

    10,000 எலெக்ட்ரிக் கார்களை விநியோகம் செய்யும் டாடா மோட்டார்ஸ்
    X

    10,000 எலெக்ட்ரிக் கார்களை விநியோகம் செய்யும் டாடா மோட்டார்ஸ்

    மத்திய அரசின் எரிசக்தி திறன் மேம்பாட்டு கழகத்திற்கு 10,000 எலெக்ட்ரிக் கார்களை விநியோகம் செய்வதற்கான உரிமத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய அரசு நிறுவனத்திற்கு எலெக்ட்ரிக் கார்களை விநியோகம் செய்வதற்கான உரிமத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மத்திய அரசு வெளியிட்ட டென்டர் அறிவிப்பில் மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனத்தை விட குறைவான விலையை நிர்ணயம் செய்து டாடா மோட்டார்ஸ் இந்த திட்டத்தை கைப்பற்றியுள்ளது.

    இந்திய மதிப்பில் ரூ.1,120 கோடி மதிப்புடைய திட்டத்திற்கான அனுமதியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில், சர்வதேச அளவில் மிகப்பெரிய திட்டமாக பார்க்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மத்திய அரசின் எரிசக்தி திறன் மேம்பாட்டு கழகத்திற்கு எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வழங்கும். வாகனம் ஒன்றின் விலை ரூ.11.2 லட்சம் என்ற விலையில் தயாரிக்கப்படுகின்றன. 2030-ம் ஆண்டு வாக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் திட்டத்தின் அங்கமாக இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

    மிகுந்த போட்டி நிறைந்த ஏலத்தில் டாடா மோட்டார்ஸ குறைந்த விலையை அறிவித்தது. ஜி.எஸ்.டி. வரி சேர்க்காமல் வாகனம் ஒன்றின் விலை ரூ.10.16 லட்சம் என நிர்ணயம் செய்தது. இந்த வாகனம் மத்திய எரிசக்தி திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ஜி.எஸ்.டி. வரி சேர்த்து ரூ.11.02 லட்சத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    புதிய எலெக்ட்ரிக் கார்கள் இரண்டு கட்டங்களில் விநியோகம் செய்யப்பட்டும். அந்த வகையில் நவம்பர் 2017க்குள் 500, மீதமுள்ள 9500 கார்கள் இரண்டாம் கட்டமாக விநியோகம் செய்யப்படும். இரண்டாம் கட்ட விநியோகத்திற்கான காலக்கெடு இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    மத்திய அரசுடனான ஒப்பந்தத்தின் படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டிகோர் செடான் மாடலின் எலெக்ட்ரிக் பதிப்பை விநியோகம் செய்யும் என்றும் இவை பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு மாற்றாக இருக்கும். புதிய எலெக்ட்ரிக் மாடல்கள் மாதம் ரூ.45,000 முதல் ரூ.50,000 விலையில் கிடைக்கும், இவை பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை விட குறைவு ஆகும்.  

    முன்னதாக டாடா டியாகோ மாடலின் எலெக்ட்ரிக் பதிப்பு லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கான்செப்ட் டாடா மோட்டார்ஸ் ஐரோப்பிய தொழில்நுட்ப மையம் உருவாக்கியதாகும். இந்த காரில் லிக்விட் கூல்டு 85 கிலோவாட் டிரைவ் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 200NM டார்கியூ கொண்டிருக்கிறது.

    அரசாங்கத்திற்கு எலெக்ட்ரிக் வாகனங்களை விநியோகம் செய்யும் உரிமத்தை பெற்றுள்ள டாடா மோட்டார்ஸ் புதிய டிகோர் எலெக்ட்ரிக் பதிப்பை வெளியிடும் என்பதோடு 2030-ம் ஆண்டிற்குள் அனைத்து வாகனங்களையும் மின்சக்தியில் இயங்க வைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
    Next Story
    ×