search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்கோடா கோடியக்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்
    X

    ஸ்கோடா கோடியக்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியக் மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெர்லின் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட கோடியக் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியக் மாடல் கார் இந்தியாவில் அக்டோபர் 4-ம் தேதி வெளியாக இருக்கிறது. பெர்லின் நகரில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கோடியக் காரினை வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்ய முடியும்.

    ஸ்கோடா சூப்பர்ப், ஆக்டேவியா, ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஆடி மாடல்களை போன்று புதிய கோடியக் மாடலும் அந்நிறுவனத்தின் MQB ரகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் வெளியிடப்பட இருக்கும் கோடியக் முழு சிறப்பம்சங்கள் வெளியீட்டின் போது தான் தெரியவரும்.  

    சர்வதேச சந்தையில் கோடியக் ஐந்து வித இன்ஜின்- இரண்டு டீசல் மற்றும் மூன்று பெட்ரோல் மாடல்களை கொண்டுள்ளது. இந்த இன்ஜின்களில் 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு DSG மற்றும் 7-ஸ்பீடு DSG  டிரான்ஸ்மிஷன்களை கொண்டுள்ளது. எனினும் இந்தியாவில் ஸ்கோடா கோடியக் மூன்று இன்ஜின்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்தியாவில் ஸ்கோடா கோடியக் 2-லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதாவது 177 bhp, 320 NM டார்கியூ, 2-லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் 147 bhp, 340 NM டார்கியூ அல்லது 187 bhp, 400NM டார்கியூ செயல்திறன் கொண்டுள்லது. இந்த இன்ஜின்களில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு DSG யுனிட் கொண்டுள்ளது.  

    புதிய ஸ்கோடா கோடியக் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி லைட் மற்றும் ஸ்ப்லிட் எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் பானாரோமிக் சன்ரூஃப், காரின் நிறத்திற்கு ஏற்ற நிறத்திலான ரூஃப் டெயில்கள், பிளாக்கன்-அவுட் முன்பக்கம் மற்றும் பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் எஸ்.யு.வி. கூர்மையான கோடுகளையும், பார்க்க ஸ்போர்ட் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.

    மேலும் ஏழு பேர் அமரக்கூடிய முதல் ஸ்கோடா வாகனமும் கோடியக் தான். இதன் கேபினில் ஸ்கோடா கனெக்ட் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, நேவிகேஷன் மற்றும் ப்ளூடூத் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.



    இத்துடன் ஸ்கோடா கோடியக் மாடலில் பார்க்கிங் அசிஸ்ட் சிஸ்டம், 24 டிரைவர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், பின்புற டிராஃபிக் அலெர்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 270 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது, எனினும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இருக்கைகளை மாற்றியமைத்து 2005 லிட்டர் வரை பூட் ஸ்பேஸ் நீட்டிக்க முடியும்.

    மற்ற வசதிகளை பொருத்த வரை ஸ்கோடா கோடியக்கில் எலெக்ட்ரிக் டெயில்கேட், டூயல்-சோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், இன்ஜன் ஸ்டார்ட் / ஸ்டாப் அம்சம், எலெக்ட்ரிக் டிரைவர் சீட் மற்றும் ஸ்டீரிங் மவுண்ட்டெட் ஆடியோ மற்றும் குரூஸ் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் உயர் ரக மாடலில் ஆறு ஏர்பேக்ஸ் ABS மற்றும் EDB உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவிலேயே தயாரிக்கப்பட இருக்கும் ஸ்கோடா கோடியக் மாடலின் விலை ரூ.30 லட்சத்தில் இருந்து துவங்கும் என்றும் இந்தியாவில் ஃபோர்டு என்டேவர், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×