என் மலர்
கார்
மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ கார் நான்கு ஆண்டுகளில் சுமார் 6.5 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் நான்கு ஆண்டுகளில் சுமார் 6.5 லட்சம் பலேனோ கார்களை விற்று இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தயாவில் அக்டோபர் 2015 ஆண்டு அறிமுகமான பலேனோ முதல் ஆண்டிலேயே ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்தது. பின் அடுத்த எட்டு மாதங்களில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையானது.
இரண்டில் இருந்து மூன்று லட்சம் யூனிட்களை விற்பனை செய்ய மாருதி சுசுகி ஐந்து மாதங்களில் எட்டியது. அந்த வரிசையில் இந்த ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் ஆறு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்து இருக்கிறது. இந்த ஆண்டு மே மாதத்தில் பலேனோ கார் ஆறு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்தது. பின் ஐந்து மாதங்களில் 50,000 யூனிட்கள் விற்பனையானது.

இந்த ஆண்டு துவக்கத்தில் மாருதி சுசுகி நிறுவனம் பலேனோ காரை அப்டேட் செய்து பி.எஸ். 6 ரக என்ஜினை வழங்கியது. இது பி.எஸ். 6 பெட்ரோல் என்ஜின் கொண்ட மாருதியின் முதல் காராக அறிமுகமானது.
தற்சமயம் இந்த காரில் 1.2 லிட்டர் டூயல்ஜெட் டூயல் விவிடி பி.எஸ். 6 என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சி.வி.டி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் பி.எஸ். 6 கார் இந்தியாவில் வெளியாகியுள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் பி.எஸ். 6 கார் சத்தமில்லாமல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 4.42 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வேகன் ஆர் பி.எஸ்.4 மாடலை விட ரூ. 8000 அதிகம் ஆகும்.
பி.எஸ். 6 மாருதி வேகன் ஆர் 1.0 பார்க்க பி.எஸ். 4 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பி.எஸ். 6 மாடலில் ARAI சான்று பெற்றிருக்கிறது. இதனால் காரின் மைலேஜை லிட்டருக்கு 22.5 கிலோமீட்டரில் இருந்து 21.79 கிலோமீட்டராக குறைந்துள்ளது.

இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எஸ் பிரெஸ்ஸோ மாடலை விட சிறிதளவு அதிகம் ஆகும். மாருதியின் புதிய காரில் 998சிசி, 3 சிலிண்டர் K10B என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 68 ஹெச்.பி. செயல்திறன் வழங்குகிறது.
புதிய காரில் பி.எஸ். 6 தவிர எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மூன்றாம் தலைமுறை வேகன் ஆர் மாடல் முந்தைய கார்களை விட அதிக சக்திவாய்ந்ததாகவும், இடவசதி கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கார் மொத்தம் 14 வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதில் ஆறு வெர்ஷன்களில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் (மேனுவல் மற்றும் ஆட்டோ ஆப்ஷன்கள்), இரு மாடல்கள் பி.எஸ். 4 சி.என்.ஜி. திறன் கொண்ட என்ஜின் மற்றும் ஆறு வெர்ஷன்கள் பி.எஸ். 6 திறன் கொண்ட 1.2 லிட்டர் K12B பெட்ரோல் என்ஜினுடன் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்திய விற்பனை துவங்கிய ஆறு மாதங்களில் 80,000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்தியாவில் 80,000 யூனிட்கள் விற்பனையை கடந்திருக்கிறது. இது விற்பனை துவங்கிய முதல் ஆறு மாதங்களுக்குள் ஹூண்டாய் எட்டியிருக்கிறது. இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ கார் இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
அறிமுகமானது முதல் இந்திய சந்தையில் ஹூண்டாய் வென்யூ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் வென்யூ கார் விலை ரூ. 6.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வென்யூ கார் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை எலைட் ஐ20 மற்றும் கிரெட்டா மாடல்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிதாக 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

இந்த என்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 172 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டி.சி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ கார் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மற்றும் டாடா நெக்சான் கார்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் மாடல் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு அதிரடி சலுகை வழங்கப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனம் தனது ரேபிட் மாடல்: ஆக்டிவ் எம்.டி., ஆம்பிஷன் எம்.டி. மற்றும் இதர சில வேரியண்ட்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது. இந்த சலுகைகள் நவம்பர் மாதம் வரை மட்டும் வழங்கப்படுவதாக ஸ்கோடா தெரிவித்துள்ளது.
அதன்படி ஸ்கோடா ரேபிட் டீசல் ஆக்டிவ் எம்.டி. மாடலுக்கு ரூ. 1.6 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடியை தொடர்ந்து இந்த கார் ரூ. 9 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஆம்பிஷன் எம்.டி. மாடலின் விலை ரூ. 1.30 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 10 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்டைல் எம்.டி. மாடல் ரூ. 1.58 லட்சம் விலை குறைக்கப்படு ரூ. 12.74 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆம்பிஷன் எம்.டி. மாடலின் விலை ரூ. 1.14 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 12.50 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டைல் ஏ.டி. வேரியண்ட் விலை ரூ. 1.56 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 12.44 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஜீப் நிறுவனம் காம்பஸ் மாடல் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1.6 லட்சம் வரையிலான சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஜீப் நிறுவனம் தனது காம்பஸ் காரின் வேரியண்ட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை வழங்குவதாக தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் வேரியண்ட்களுக்கு ஏற்ப ஜீப் காம்பஸ் மாடலுக்கு ரூ. 1.6 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.
ஜீப் காம்பஸ் என்ட்ரி லெவல் ஸ்போர்ட் ட்ரிம் 4x2 டீசல் மாடலை வாங்குவோருக்கு ரூ. 1.6 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட்டை வாங்குவோருக்கு ரூ. 70,000 மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது. ஸ்போர்ட் பிளஸ் டீசல் மாடலை வாங்குவோருக்கு ரூ. 1.1 லட்சமும், பெட்ரோல் மாடலுக்கு ரூ. 50,000 பலன்கள் வழங்கப்படுகிறது.

இதேபோன்று லாங்கிடியூட் மற்றும் லிமிட்டெட் ட்ரிம் டீசல் மேனுவல் 4x2 மாடலுக்கு ரூ. 1.4 லட்சம், லிமிட்டெட் மாடலுக்கு ரூ. 1.40 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் லிமிட்டெட் பிளஸ், லிமிட்டெட் பிளஸ் 4x4 மற்றும் டிரெயில்ஹாக் மாடல்களுக்கு பொருந்தாது.
ஜீப் காம்பஸ் மாடல்: 173 ஹெச்.பி. செயல்திறன் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல், 163 ஹெச்.பி. செயல்திறன் வழங்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த பி.எஸ். 4 என்ஜின்களுக்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பி.எஸ். 6 வேரியண்ட் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் கொண்டிருக்கிறது.
அடுத்த ஆண்டு வாக்கில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பி.எஸ். 6 டீசல் என்ஜினுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டிரெயில்ஹாக் வேரியண்ட்களுக்கு 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இதேபோன்று 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய ஆரா சப்-காம்பேக்ட் செடான் காரின் சோதனையை அதிகாரப்பூர்வமாக துவங்கியிருக்கிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஆரா சப்-காம்பேக்ட் செடான் காரின் சோதனையை அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறது. புதிய ஆரா மாடல் அடுத்த தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஆரா காரின் சோதனை ஹூண்டாய் நிறுவனத்தின் சென்னை ஆலையில் இருந்து துவங்கப்பட்டுள்ளது. புதிய கார் பாலைவனங்கள், இமய மலை பகுதிகள் மற்றும் கிழக்கு கடலோர பகுதிகள் என இந்திய வானிலை மற்றும் சாலைகளில் தீவிர சோதனை செய்யப்படும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஹூண்டாய் ஆரா காரின் ப்ரோடோடைப் மாடல்கள் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், தற்சமயம் இந்த கார் இந்தியா முழுக்க சோதனை செய்யப்பட இருக்கிறது. புதிய ஹூண்டாய் ஆரா கார் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் காட்சிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் உள்புறங்களில் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற வடிவமைப்பும், 8.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டூயல் டோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் புளூ-லின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஆரா காரின் பின்புற பம்ப்பரில் பதிவு எண் பலகை, எல்.இ.டி. ஸ்ட்ரிப்கள், ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இதில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
புகைப்படம் நன்றி: TeamBHP
எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு இலவசமாக ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. டிசம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. இதன் விற்பனை ஜனவரி 2020 வாக்கில் துவங்கும் என தெரிகிறது.
புதிய இசட்.எஸ். எலெக்ட்ரிக் காரில் 150 ஹெச்.பி. எலெக்ட்ரிக் மோட்டார், 44.5 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 335 கிலோமீட்டர் வரை செல்ல முடியும்.
இந்த பேட்டரியை 7 கிலோவாட் ஏ.சி. சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்ய ஏழு மணி நேரங்களும், 50 கிலோவாட் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும் போது 0 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய 40 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது.

இந்தியாவில் எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது கார் மாடலாக எம்.ஜி. இசட்.எஸ். வெளியாக இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், இந்த காரை வாங்குவோருக்கு டி.சி. ஃபாஸ்ட் சார்ஜரை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக எம்.ஜி. மோட்டார் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சப்பா தெரிவித்தார்.
எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்குள்ள ஆலையில் அசெம்பல் செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்த காரின் விலை ரூ. 22 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஆரா காம்பேக்ட் செடான் மாடல் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் செடான் மாடல் கார் ஆரா எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் இந்தியாவில் எக்ஸ்-சென்ட் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படுகிறது.
புதிய ஹூண்டாய் ஆரா மாடல் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலை தழவி உருவாகி இருக்கும் என்றும் இதன் வடிவமைப்புகள் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருப்பதை போன்று உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் ஹூண்டாயின் பிரபல கேஸ்கேடிங் கிரில், ஹணிகாம்ப் மெஷ் ஃபினிஷ், பகலில் எரியும் எல்.இ.டி. லைட்கள் வழங்கப்படுகிறது.

காரின் பின்புற பம்ப்பரில் பதிவு எண் பலகை, எல்.இ.டி. ஸ்ட்ரிப்கள், ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. இதன் உள்புறங்களில் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற வடிவமைப்பும், 8.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டூயல் டோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.
இத்துடன் புளூ-லின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் ஹூண்டாய் ஆரா மாடலின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இதன் விலை ரூ. 6.5 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 9.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்தியாவில் ஹூண்டாய் ஆரா மாடல் மாருதி சுசுகி டிசையர், ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஆஸ்பையர், டாடா டிகோர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையலாம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்திய விற்பனையில் தொடர்ந்து அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் அதிக பிரபல மாடலாக இருக்கிறது. விற்பனை துவங்கிய சில மாதங்களில் ஹூண்டாய் எஸ்.யு.வி. கார் விட்டாரா பிரெஸ்ஸா மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து விற்பனை அதிகரித்து வருவதால் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை பெறுவதற்கான காத்திருப்பு காலம் 15 வாரங்கள் வரை அதிகரித்துள்ளது. இது என்ஜின்-கியர்பாக்ஸ் ஆப்ஷனிற்கு ஏற்ப வேறுபடும்.
தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின்படி வென்யூ 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. வென்யூ கார்: 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என மொத்தம் மூன்று ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

ஹூண்டாய் வென்யூ எஸ் 1.0 டி.சி.டி. மாடலை பெற வாடிக்கையாளர்கள் 15 வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. 1.0 லிட்டர் மாடலை பெற அதிகபட்சம் எட்டு வாரங்களும், டீசல் மாடலை பெற ஆறு வாரங்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு மே மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகமான ஹூண்டாய் வென்யூ காரின் விலை ரூ. 6.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 350 டி கார் விற்பனை துவங்கிய மூன்றே வாரங்களில் விற்று தீர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவுக்கென நிர்ணயித்த ஜி 350 டி யூனிட்களும் இந்தியாவில் விற்றுத் தீர்ந்ததாக அறிவித்துள்ளது. இந்தியாவில் அக்டோபர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட பென்ஸ் ஜி 350 டி வெறும் மூன்றே வாரங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது.
இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி எஸ்.யு.வி. மாடல் விலை ரூ. 1.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணண் செய்யப்பட்டுள்ளது. ஜி கிளாஸ் சீரிசில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் ஆஃப்-ரோடர் மாடல் இந்தியாவில் என்ட்ரி லெவல் சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது.
பென்ஸ் ஜி350டி மாடலில் 3.0 லிட்டர் இன்லைன் 6-சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 282 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 600 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இதே என்ஜின் எஸ் கிளாஸ் 350டி மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் பி.எஸ். 6 ரகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் 9ஜி-டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி மாடல் மணிக்கு 199 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி மாடலில் 12.3 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதிலேயே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் லெதர் இருக்கைகள், பவர் முன்புற சீட், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப், குரூஸ் கண்ட்ரோல், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், 3-சோன் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பிற்கென மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி மாடலில் மொத்தம் எட்டு ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், டிராக்ஷன் கண்ட்ரோல், இ.எஸ்.சி., ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் விற்பனைக்கு வந்த இரண்டு மாதங்களில் ரெனால்ட் டிரைபர் கார் புதிய மைல்கல் கடந்துள்ளது.
ரெனால்ட் டிரைபர் எம்.பி.வி. கார் இந்தியாவில் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்திய சந்தையில் முற்றிலும் புதிய வாகனமாக அறிமுகமான எம்.பி.வி. மாடல் வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
இந்தியாவில் விற்பனைக்கு வந்து இரண்டு மாதங்களில் ரெனால்ட் டிரைபர் மாடல் புதிய மைல்கல் கடந்துள்ளது. ரெனால்ட் டிரைபர் விற்பனையின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் 10,000 யூனிட்களை கடந்துள்ளது. டிரைபர் விற்பனை இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவன வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 2019 அக்டோபர் மாத விற்பனையில் ரெனால்ட் நிறுவனம் 63 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்ட காலக்கட்டத்தில் ரெனால்ட் விற்பனை வளர்ச்சியடைந்து இருக்கிறது.

ரெனால்ட் டிரைபர் கார் சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் டூயல்-டோன் இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. டேஷ்போர்டு, ஸ்டீரிங் வீல் மற்றும் டோர் பேனல்களில் சில்வர் ட்ரிம் செய்யப்பட்டிருப்பது காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.
இத்துடன் 7.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய ரெனால்ட் டிரைபர் கார் 1.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் ரெனால்ட் க்ளியோ மற்றும் சான்ட்ரியோ போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 71 பி.ஹெச்.பி. பவர், 96 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஈசி ஆர் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ கார் இந்திய விற்பனையில் அசத்தி வருகிறது. இதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் எஸ் பிரெஸ்ஸோ ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி எஸ் பிரெஸ்ஸோ ஹேட்ச்பேக் மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஃபியுச்சர் எஸ் கான்செப்ட்டை தழுவி உருவாகி இருக்கிறது.
முதல் மாத விற்பனையில் மாருதியின் எஸ் பிரெஸ்ஸோ கார் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்றிருக்கிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடல் 10,634 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் மாருதி சுசுகியின் பிரபல விட்டாரா பிரெஸ்ஸா மாடலை விட அதிகம் ஆகும்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடல் முதல் மாத விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸாவை முந்தியுள்ளது. இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி. மாடலாக விட்டாரா பிரெஸ்ஸா இருந்தது.
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் அக்டோபர் மாதத்தில் 10,227 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. மாருதி எஸ் பிரெஸ்ஸோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா மாடல்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் டாப் 10 பட்டியலில் இடம்பெற்று இருக்கின்றன.
அந்த வகையில் எஸ் பிரெஸ்ஸோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா மாடல்கள் முறையே எட்டு மற்றும் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றன.






