search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹூண்டாய் வென்யூ
    X
    ஹூண்டாய் வென்யூ

    ஆறு மாதங்களில் 80,000 யூனிட்கள் - விற்பனையில் அசத்தும் ஹூண்டாய் வென்யூ

    ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்திய விற்பனை துவங்கிய ஆறு மாதங்களில் 80,000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.



    ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்தியாவில் 80,000 யூனிட்கள் விற்பனையை கடந்திருக்கிறது. இது விற்பனை துவங்கிய முதல் ஆறு மாதங்களுக்குள் ஹூண்டாய் எட்டியிருக்கிறது. இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ கார் இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    அறிமுகமானது முதல் இந்திய சந்தையில் ஹூண்டாய் வென்யூ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் வென்யூ கார் விலை ரூ. 6.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    வென்யூ கார் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை எலைட் ஐ20 மற்றும் கிரெட்டா மாடல்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிதாக 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் வென்யூ

    இந்த என்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 172 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டி.சி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ கார் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மற்றும் டாடா நெக்சான் கார்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
    Next Story
    ×