என் மலர்tooltip icon

    கார்

    மாருதி சசுகி நிறுவனத்தின் டிசையர் கார் இந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது. முழு விவரங்களை பார்ப்போம்.



    மாருதி சுசுகி டிசையர் கார் இந்திய சந்தையில் காம்பேக்ட் செடான் பிரிவில் கடந்த பல ஆண்டுகளாக அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. 

    2019-20 முதல் எட்டு மாதங்களில் மாருதி சுசுகி டிசையர் கார் சுமார் 1.2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலக்ட்டத்தில் அதிகம் விற்பனையான காராகவும் டிசையர் இருக்கிறது. இந்திய சந்தையின் காம்பேக்ட் செடான் பிரிவில் டிசையர் மட்டும் 60 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது.

    மாருதி சுசுகி டிசையர்

    இந்திய சந்தையில் மாருதி சுசுகி டிசையர் கார் சமீபத்தில் 20 லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் டிசையர் காரின் பி.எஸ். 6 வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்தியாவில் பி.எஸ். VI ரக டிசையர் பெட்ரோல் மாடல் விலை ரூ.5.82 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ.9.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் இசட்.எஸ். எலெக்ட்ரிக் காரின் முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.



    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது இசட்.எஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. காருக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது. எம்.ஜி. இசட்.எஸ். முன்பதிவுகள் முதற்கட்டமாக பெங்களூரு, டெல்லி, ஆமதாபாத், ஐதராபாத் மற்றும் மும்பை என ஐந்து நகரங்களில் நடைபெறுகிறது.

    முன்பதிவுகளை வாடிக்கையாளர்கள் எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் ஆன்லைன் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் நடைபெறுகிறது. எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. கார் சில வாரங்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் எம்.ஜி. இசட்.எஸ். காரின் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, குஜராத் மாநிலத்தின் ஹலோல் தயாரிப்பு ஆலையில் அசம்பிள் செய்யப்படுகிறது. எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. கார் 44.5 கிலோவாட் பேட்டரி பேக் மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

    எம்.ஜி. இசட்.எஸ்.

    இது அதிகபட்சமாக 141 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்குகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 340 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் இந்த காரை ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் போது 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.

    காரின் உள்புறம் முழுக்க கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் டேஷ்போர்டு பிரீமியம் உபகரணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன், ரிவர்ஸ் / பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மாருதி சுசுகி எர்டிகா கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. இந்தியாவில் விற்பனை துவங்கியது முதல் எர்டிகா கார் இதுவரை சுமார் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவில் மாருதி சுசுகி எர்டிகா கார் அறிமுகமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது.

    இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எம்.பி.வி. கார் மாடல்களில் ஒன்றாக எர்டிகா கார் இருக்கிறது. முதல் தலைமுறை எர்டிகா கார் ஏழு ஆண்டுகளில் 4,18,128 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. அடுத்த 13 மாதங்களில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    மாருதி சுசுகி எர்டிகா

    மாருதி எர்டிகா கார் இந்திய சந்தையில் எம்.பி.வி. ரக மாடல்களில் 50.3 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. இதனால் மாருதி நிறுவன விற்பனை 25.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    மாருதி எர்டிகா மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.3 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் முன்னதாக மேம்படுத்தப்பட்ட சியாஸ் செடான் மாடலில் வழங்கப்பட்டு இருந்தது. 

    இத்துடன் டீசல் என்ஜின் 1.3 லிட்டர் DDiS யூனிட் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய ஆல்டோ 800 VXI+ காரை அறிமுகம் செய்துள்ளது.



    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய ஆல்டோ VXI+ காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 3.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆல்டோ காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    அந்த வகையில் புதிய ஆல்டோ VXI+மாடலில் மாருதியின் அதிநவீன ஸ்மார்ட்பிளே 2.0 ஏழு இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் 2019 வேகன்ஆர் மாடலில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

    மாருதி ஆல்டோ 800 VXI+

    புதிய ஸ்மார்ட்பிளே 2.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கஸ்டமைஸ் செய்யும் வசதியும், பயனுள்ள கிராஃபிக்கல் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது. மாருதி நிறுவனம் ஆல்டோ 800 ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த கார் புதிய பாதுகாப்பு விதிகளை பூர்த்தி செய்யும் அம்சங்களை கொண்டிருந்தது.

    புத்தம் புதிய ஆல்டா VXI+ மாடலிலும் 796சிசி, 3 சிலிண்டர் பி.எஸ். 6 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. பவர், 69 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மேலும் இந்த என்ஜின் முந்தைய பி.எஸ். 4 என்ஜினை விட 25 சதவீதம் குறைவான நைட்ரஜன் ஆக்சைடை வெளியிடும் என கூறப்படுகிறது. 

    புதிய மாருதி ஆல்டோ 800 VXI+ மாடலில் டிரைவர் சைடு ஏர்பேக், ஏ.பி.எஸ், இ.பி.டி. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர், ஸ்பீடு அலெர்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் இசட்.எஸ். இ.வி. காரின் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. காரை அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிட இருக்கிறது. இந்நிலையில். எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. காருக்கான முன்பதிவுகளை எம்.ஜி. மோட்டார் நிறுவனம் டிசம்பர் 21 ஆம் தேதி துவங்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    புதிய எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. கார் சில வாரங்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் எம்.ஜி. இசட்.எஸ். காரின் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, குஜராத் மாநிலத்தின் ஹலோல் தயாரிப்பு ஆலையில் அசம்பிள் செய்யப்படுகிறது.

    எம்.ஜி. இசட்.எஸ். இ.வி.

    எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. கார் 44.5 கிலோவாட் பேட்டரி பேக் மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது அதிகபட்சமாக 141 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்குகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 340 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் இந்த காரை ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் போது 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.

    காரின் உள்புறம் முழுக்க கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் டேஷ்போர்டு பிரீமியம் உபகரணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன், ரிவர்ஸ் / பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. கார் ஹூண்டாய் கோனா காருக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் விலை ரூ. 22 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    மாருதி சுசுகி நிறுவன்தின் வேகன் ஆர் கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.



    மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. அந்நிறுவனத்தின் புதிய வேகன் ஆர் விற்பனை துவங்கியது முதல் இதுவரை 1,03,325 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த கார் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டது.

    நவம்பர் 2019 இல் மாருதி வேகன் ஆர் மொத்தம் 14,650 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 29.5 சதவீதம் அதிகம் ஆகும். மாருதியின் டால் பாய் மாடலுக்கு தொடர்ந்து அதிக வரவேற்பு கிடைத்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    வேகன் ஆர்

    தற்சமயம் விற்பனையாகும் மாருதி வேகன் ஆர் மாடல் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள்: 1.0 லிட்டர் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின்கள் முறையே 67 பி.ஹெச்.பி. பவர், 90 என்.எம். டார்க் மற்றும் 90 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மாருதியின் ஏ.ஜி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் மாருதியின் வேகன் ஆர் பெட்ரோல் மாடல் விலை ரூ. 4.42 லட்சத்தில் துவங்கி ரூ. 5.91 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் கார் இமய மலை சிகரத்தை எட்டும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் என்ற பெருமையை பெறுகிறது.



    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் கார் இமய மலை சிகரத்தை எட்டும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் என்ற பெருமையை பெறுகிறது.

    இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 23.86 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹூன்டாய் கோனா இ.வி. காரில் 39.2 கிலோவாட் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ARAI சான்றுடன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    ஹூண்டாய் கோனா

    கோனா இ.வி. மாடலில் உள்ள பேட்டரியை 80 சதவிகிதம் சார்ஜ் செய்ய 52 நிமிடங்களே போதும் என ஹூன்டாய் தெரிவித்துள்ளது. எனினும், வழக்கமான சார்ஜிங் முறைகளில் ஹூன்டா கோனா இ.வி. காரை முழுமையாக சார்ஜ் செய்ய ஒன்பது மணி நேரம் ஆகும்.

    ஹூன்டாய் கோனா இ.வி. மாடலில் 100 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 131 பி.ஹெச்.பி. பவர் 395 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9.7 நிமிடங்களில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ஆறு லட்சம் ஆட்டோமேடிக் கார்களை விற்பனை செய்துள்ளது.



    மாருதி சுசுகி நிறுவன்ம இந்திய சந்தையில் மொத்தம் ஆறு லட்சம் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்ட கார்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    தற்சமயம் மாருதி நிறுவனம் ஆட்டோ கியர் ஷிஃப்ட், டார்க் கன்வெர்ட்டர் மற்றும் சி.வி.டி. போன்ற டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. சமீப காலமாக இந்நிறுவன வாகனங்களில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டவைகளின் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து இருக்கிறது. 

    ஆட்டோ கியர் ஷிஃப்ட் அதாவது ஏ.ஜி.எஸ். வசதியினை மாருதி நிறுவனம் ஆல்டோ கே10, எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர், செலரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களில் வழங்கி வருகிறது. டார்க் கன்வெர்ட்டர் டிரான்ஸ்மிஷன் எர்டிகா, சியாஸ் மற்றும் எக்ஸ்.எல்.6 மாடல்களிலும் சி.வி.டி. யூனிட் பலேனோ மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

    மாருதி சுசுகி செலரியோ

    மாருதி நிறுவன வாகனங்களில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட முதல் காராக செலரியோ மாடல் வெளியிடப்பட்டது. இந்த கார் 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. செலரியோ மாடலில் ஏ.ஜி.எஸ். வசதி வழங்கப்பட்டது.

    இந்திய சந்தையில் பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், மும்பை, பூனே மற்றும் சென்னை போன்ற நகரங்களில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களுக்கு அதிகளழு வரவேற்பு கிடைத்து இருப்பதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
    போர்ஷ் நிறுவனத்தின் கயென் கூப் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    போர்ஷ் நிறுவனம் இந்தியாவில் புதிய கயென் கூப் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய போர்ஷ் கயென் கூப் பேஸ் மாடலின் துவக்க விலை ரூ. 1.31 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.97 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கூப் வெர்ஷன் மாடல் போர்ஷ் கயென் எஸ்.யு.வி. வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், புதிய கூப் மாடலின் மேல்புறம் சற்று கூர்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் புதுவிதமான ரூஃப்லைன் காரின் தோற்றத்தை அப்டேட் செய்ய வைத்துள்ளது.

    புதிய போர்ஷ் கூப் மாடல் இந்தியாவில் சி.பி.யு. முறையில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் பார்க்க ஐரோப்பிய வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது. இந்த காரில் தற்சமயம் அடாப்டிவ் பின்புற ஸ்பாயிலர், பானரோமிக் சன்ரூஃப் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

    போர்ஷ் கயென் கூப்

    காரின் உள்புறம் பெரிய டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெனட் கிளஸ்டர், டேஷ்போர்டில் பிரீமியம் லெதர் மற்றும் மென்மையான பொருட்கள் பயன்டுத்தப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு ஆடம்பர அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய போர்ஷ் கயென் கூப் மாடல் வி6 மற்றும் வி8 என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது 3.0 லிட்டர் வி6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 335 பி.ஹெச்.பி. பவர், 450 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. உயர் ரக மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 542 பி.ஹெச்.பி. பவர், 770 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் ஸ்டான்டர்டு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் ஜனவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. இந்த காருக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

    இந்திய சந்தையின் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார் மாடலாக டாடா அல்ட்ரோஸ் கார் இருக்கிறது. இந்தியாவில் அல்ட்ரோஸ் கார் டாடா நிறுவனத்தின் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் காராக அறிமுகமாகிறது. இந்த கார் இந்தியாவில் மாருதி சுசுகி பலேனோ, டொயோட்டா கிளான்சா மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.

    டாடா அல்ட்ரோஸ்

    டாடா அல்ட்ரோஸ் காரில் பல்வேறு புதிய அம்சங்கள், வடிவமைப்பு மற்றும் சக்திவாய்ந்த என்ஜன் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இந்த கார் ALFA தளத்தில் உருவாகி இருக்கிறது. 

    டாடா ஹேரியர் மாடலை தொடர்ந்து இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாகி இருக்கும் இரண்டாவது கார் மாடலாக டாடா அல்ட்ரோஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக டாடா அல்ட்ரோஸ் கான்செப்ட் கார் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இந்த ஆண்டு ஜெனீவா மோட்டார் விழாவில் ஹேரியர் மற்றும் இதர வாகனங்களுடன் புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தியது.
    சர்வதேச அளவில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 15 சதவீதம் சரிவடைந்துள்ளது.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த நவம்பர் மாதத்தில், உலக அளவில் மொத்தம் 89,671 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 15 சதவீத சரிவாகும். கடந்த ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1,04,964 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

    இதில் டாடா பயணிகள் வாகனங்கள் விற்பனை 12 சதவீதம் சரிந்து (66,429-ல் இருந்து) 58,641-ஆக குறைந்து இருக்கிறது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 19 சதவீதம் குறைந்து (38,535-ல் இருந்து) 31,030-ஆக சரிவடைந்துள்ளது.

    டாடா மோட்டார்ஸ்

    டாடா நிறுவனம் மொத்தம் 46,542 ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 3.4 சதவீதம் குறைவாகும். இதில் ஜாகுவார் கார்கள் விற்பனை 11,464-ஆக உள்ளது. லேண்ட் ரோவர் கார்கள் விற்பனை 35,078-ஆக இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.216 கோடியை ஒட்டுமொத்த நிகர இழப்பாக கண்டு இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.1,048 கோடியாக இருந்தது.
    சர்வதேச சந்தையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார்கள் விற்பனை, நவம்பர் மாதத்தில் 3.4 சதவீதம் சரிவடைந்துள்ளது.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த நவம்பர் மாதத்தில், உலக அளவில், 46,542 ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை விற்பனை செய்துள்ளது. 

    இது சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 3.4 சதவீதம் குறைவாகும். இதில் ஜாகுவார் கார்கள் விற்பனை 23 சதவீதம் குறைந்து 11,464-ஆக உள்ளது. லேண்ட் ரோவர் கார்கள் விற்பனை 35,078-ஆக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 5.5 சதவீதம் உயர்வாகும்.

    லேண்ட் ரோவர்

    சீனாவில் ஜே.எல்.ஆர். கார்கள் விற்பனை 29 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. வட அமெரிக்காவில் விற்பனை 4.9 சதவீதம் உயர்ந்துள்ளது. எனினும் இங்கிலாந்தில் 10.8 சதவீதமும், ஐரோப்பாவில் 16.8 சதவீதமும் குறைந்து இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.216 கோடியை ஒட்டுமொத்த நிகர இழப்பாக கண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.1,048 கோடியாக இருந்தது. அந்த வகையில், இழப்பு கணிசமாக குறைந்துள்ளது.
    ×