என் மலர்
கார்
ரெனால்ட் நிறுவனத்தின் புதுவரவான டிரைபர் எம்.பி.வி. ரக கார் இந்திய விற்பனையில் 20,000 யூனிட்களை கடந்துள்ளது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்த டிரைபர் எம்.பி.வி. கார் 20,000-க்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவில் ரெனால்ட் டிரைபர் காரின் விற்பனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் துவங்கியது.
ரெனால்ட் டிரைபர் சப்-4 மீட்டர் அளவில் உருவாக்கப்பட்ட எம்.பி.வி. கார் ஆகும். இந்தியாவில் இந்த கார் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை ஆகஸ்ட் மாத்ததில் துவங்கப்பட்டது. அந்த வகையில் இந்திய சந்தையில் டிரைபர் கார் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
இந்திய சந்தையில் டிசம்பர் 2019-இல் அதிகம் விற்பனையான எம்.பி.வி. கார்களில் ரெனால்ட் டிரைபர் மூன்றாவது இடம்பிடித்துள்ளது. 2019 டிசம்பரில் மட்டும் சுமார் 5,631 டிரைபர் கார்களை ரெனால்ட் விற்பனை செய்துள்ளது. அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் மாருதி எர்டிகா மற்றும் மஹிந்திரா பொலிரோ கார்களுக்கு அடுத்த இடத்தில் டிரைபர் இருக்கிறது.

ரெனால்ட் டிரைபர் கார் சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் டூயல்-டோன் இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. டேஷ்போர்டு, ஸ்டீரிங் வீல் மற்றும் டோர் பேனல்களில் சில்வர் ட்ரிம் செய்யப்பட்டிருப்பது காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.
ரெனால்ட் டிரைபர் கார் 1.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் ரெனால்ட் க்ளியோ மற்றும் சான்ட்ரியோ போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 71 பி.ஹெச்.பி. பவர், 96 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஈசி ஆர் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரெனால்ட் டிரைபர் XE விலை ரூ.4.95 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் RXZ விலை ரூ.6.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்னோவா க்ரிஸ்டா பி.எஸ்.6 மாடலுக்கான முன்பதிவுகளை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் துவங்கியுள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பி.எஸ்.6 இன்னோவா க்ரிஸ்டா காருக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது. இன்னோவா க்ரிஸ்டா மற்றும் டூரிங் ஸ்போர்ட் பி.எஸ்.6 மாடல்களின் விலை ரூ. 15.36 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 24.06 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
புதிய பி.எஸ்.6 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா எம்.பி.வி. காருக்கான முன்பதிவுகள் முதற்கட்டமாக குறைந்த அளவில் மட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கார் விநியோகம் பிப்ரவரி மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

புதிய இன்னோவா க்ரிஸ்டா மற்றும் டூரிங் ஸ்போர்ட் மாடலில் பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் வெஹிகில் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கண்டோரல் மற்றும் இ.பி.எஸ். உள்ளிட்டவை முக்கியமானவைகளாக இருக்கின்றன.
பி.எஸ்.6 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரில் 2.4 லிட்டர், 2.8 லிட்டர் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் யூனிட் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளன. பி.எஸ்.6 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடல்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் விற்பனை துவங்கிய ஒரு வருடத்தில் டாடா ஹேரியர் கார் மொத்தம் 15,000 யூனிட்களை கடந்துள்ளது.
இந்திய சந்தையில் விற்பனை துவங்கிய ஒரு வருடத்தில் டாடா ஹேரியர் கார் மொத்தம் 15,000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான நிலையில், டாடாவின் புத்தம் புதிய OMEGArc பிளாட்ஃபார்மில் உருவான முதல் கார் என்ற பெருமையை ஹேரியர் பெற்றது.
மேலும் இம்பேக்ட் 2.0 வடிவமைப்பில் வெளியான முதல் காராகவும் ஹேரியர் இருக்கிறது. ஐந்து பேர் பயணிக்கக்கூடிய ஹேரியர் காரில் ஃபியாட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
விற்பனையில் ஒருவருடம் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் காரை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ஹேரியர் சர்வீஸ் கோல்டு கிளப் சேவையை வழங்குகிறது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேற்கொள்ளும் சர்வீஸ்களில் அதிகளவு ரூ. 8400 மதிப்புள்ள சலுகை மற்றும் தள்ளுபடி போன்றவற்றை பெற முடியும்.

கடந்த ஆண்டு மாதாந்திர விற்பனையில் டாடா ஹேரியர் சராசரியாக 1250 யூனிட்கள் வரை விற்பனையாகி இருந்தது. கடந்த ஆண்டு இரண்டாம் அரையாண்டு காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் எம்.ஜி. ஹெக்டார் மற்றும் கியா செல்டோஸ் போன்ற கார்களின் வரவு காரணமாக ஹேரியர் காருக்கு போட்டியாக அமைந்தது.
புதிய எஸ்.யு.வி.க்களின் விலை ஹேரியர் மாடலை விட விலை குறைவாகவும், பல்வேறு அதிநவீன அம்சங்களையும் கொண்டிருந்தன. சமீபத்தில் எம்.ஜி. ஹெக்டார் கார் விற்பனையில் ஹேரியர் மாடலை முந்தியது. எம்.ஜி. ஹெக்டார் கார் ஆறு மாதங்களில் 15,930 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் கார் முன்பதிவில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது. முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் கார் இந்திய சந்தையில் 1,00,000 முன்பதிவுகளை கடந்துவிட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் அறிமுகமான செல்டோஸ் எஸ்.யு.வி. மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிக பிரபல காராக உருவெடுத்து இருக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் செல்டோஸ் கார் முறையே 50,000 மற்றும் 80,000 யூனிட்கள் முன்பதிவை கடந்தது. டிசம்பர் மாதத்தில் செல்டோஸ் முன்பதிவுகளில் சரிவை சந்தித்தது.

செல்டோஸ் மாடலின் டீசல் வேரியண்ட்டிற்கு அதிக வரவேற்பு கிடைத்து வருவதாக கியா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த எஸ்.யு.வி.-யின் டாப் எண்ட் மாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்சமயம் வரை நடைபெற்று இருக்கும் முன்பதிவுகளில் பெரும்பான்மை வேரியண்ட்களில் டாப்-லைன் ஜி.டி.எக்ஸ்.+, ஹெச்.டி.எக்ஸ். மற்றும் ஹெச்.டி.எக்ஸ்.+ உள்ளிட்டவை இருக்கின்றன.
இதுதவிர இந்த பிரிவில் வேகமாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக கியா செல்டோஸ் இருக்கிறது. மேலும் இந்த எஸ்.யு.வி. மாடலில் கூர்மையான மற்றும் கம்பீர வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் பிளாக்-அவுட் மெஷ் கிரில், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.
டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா பி.எஸ். 6 மற்றும் ஃபார்ச்சூனர் பி.எஸ். 6 கார்களுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்டா பி.எஸ்.6 மற்றும் ஃபார்ச்சூனர் பி.எஸ்.6 மாடல்களுக்கான முன்பதிவு ஜனவரி 6-ம் தேதி அதிகாரப்பூர்வமாக துவங்க இருக்கிறது. எனினும், இரு கார்களுக்கான முன்பதிவுகளை விற்பனையாளர்கள் ஏற்கனவே துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி புதிய கார்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பூனேவை சேர்ந்த விற்பனையாளர் ஒருவர் இரு கார்களுக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் துவங்கப்பட்டுவிட்டதாக தெரிவித்து இருக்கிறார்.

புதிய கார்களுக்கான விநியோகம் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத துவக்கத்திலோ துவங்கும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுக்க பி.எஸ்.6 ரக எரிபொருள் கிடைப்பதற்காக டொயோட்டா நிறுவனம் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா மாடல்களின் பி.எஸ்.4 வெர்ஷன்களை விற்பனையாளர்கள் ஏற்கனவே விற்றுவிட்டதாக தெரிகிறது. இரு கார்களும் அதிகம் விற்பனையாகும் மாடல்களாக இருப்பதாக கூறப்படுகிறது. இரு கார்கள் மட்டுமின்றி யாரிஸ் பி.எஸ்.6 மாடலுக்கான முன்பதிவுகளை விற்பனையாளர்கள் துவங்கிவிட்டனர்.
இந்திய சந்தையில் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்கள் டொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் கார்களாக இருக்கின்றன. ஏப்ரல் 2020 முதல் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்படும் என தெரிகிறது.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஹெக்டார் கார் விற்பனை தொடர்ந்து இரண்டாவது மாதமாக சரிவை சந்தித்துள்ளது.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் டிசம்பர் 2019 மாத்திற்கான வாகன விற்பனை விவரம் வெளியாகியுள்ளது. அதில் எம்.ஜி. ஹெக்டார் கார் மொத்தம் 3,021 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றது. இந்தியாவில் ஜூலை 2019-ல் வெளியான ஹெக்டார் கார் இதுவரை 15,930 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
நவம்பர் மற்றும் அக்டோபர் 2019-ல் முறையே 3239 மற்றும் 3536 ஹெக்டார் கார்களை எம்.ஜி. மோட்டார் விற்பனை செய்துள்ளது. இந்திய சந்தையில் எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் முதல் காராக ஹெக்டார் இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமானதும் அமோக வெற்றி பெற்ற ஹெக்டார் கார் துவக்க கால விற்பனையில் அசத்தியது.

இதைத் தொடர்ந்து எம்.ஜி. மோட்டார் இந்தியா ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலின் உற்பத்தியை உயர்த்துவதாக அறிவித்தது. தற்சமயம் ஹெக்டார் காரை முன்பதிவு செய்தால், மூன்று மாதங்களுக்கு வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.
இந்தியா முழுக்க எம்.ஜி. மோட்டார் நிறுவனம் மொத்தம் 150 மைங்களில் இயங்கி வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விற்பனை மையங்களின் எண்ணிக்கையை 250 வரை படிப்படியாக உயர்த்த எம்.ஜி. மோட்டார் திட்டமிட்டுள்ளது.
விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமின்றி எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இசட்.எஸ். இ.வி. காரை இந்திய சந்தையில் வெளியிடும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் விற்பனை அடுத்த மாதம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டேட்சன் நிறுவனம் மேக்னைட் எனும் பெயரில் புதிதாக கார் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டேட்சன் நிறுவனம் மேக்னைட் எனும் பெயருக்கு காப்புரிமை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பெயரினை டேட்சன் தனது காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களில் பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் டேட்சன் நிறுவனம் புதிதாக எஸ்.யு.வி. மாடல் ஒன்றை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஹெச்.பி.சி. எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

புதிய மேக்னைட் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலில் ஹெச்.பி.சி. உற்பத்தி மாடலில் வழங்கப்பட்ட என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவற்றில் சி.எம்.எஃப். ஏ பிளஸ் பிளாட்ஃபார்ம் மற்றும் மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களின் கார்கள் ஒரே ஆலையில் உருவாக்கப்படுகின்றன.
இதனால் என்ஜின் மற்றும் ஒரே பிளாட்ஃபார்மில் கார்களை உருவாக்குவது சாதாரண விஷயமாக இருக்கிறது. இந்தியாவில் டீசல் மாடல்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க இருப்பதாக ரெனால்ட் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது. அந்நவகையில் புதிய மேக்னைட் கார் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.
புதிய கார் இந்தியாவில் வெளியானதும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, ஹோண்டா டபுள்யூ.ஆர்.-வி, கியா கியூ.வை.ஐ., மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மற்றும் டாடா நெக்சான் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும்.
ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார் டர்போ பெட்ரோல் வேரியண்ட் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார் சக்திவாய்ந்த டர்போ பெட்ரோல் என்ஜின் வேரியண்ட் இந்தியாவில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் என ரெனால்ட் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் தெரிவித்தார்.
ஸ்போர்ட் தோற்றம் கொண்ட ரெனால்ட் டிரைபர் காரில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட இருக்கிறது. 1.0 லிட்டர் டி.சி.இ டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் 99 பி.ஹெச்.பி. பவர், 160 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.
இந்தியாவில் இந்த என்ஜின் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இத்துடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய டிரைபர் ஸ்போர்ட் மாடலின் விலை தற்சமயம் விற்பனையாகும் வேரியண்ட்டை விட ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் டிரைபர் மாடலில் 1.0 லிட்டர் எஸ்.சி.இ. பி.எஸ்.4 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 72 பி.ஹெச்.பி. பவர், 96 என்.எம். டார்க் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் பி.எஸ். 6 அப்டேட் வழங்கும் பணிகளில் ரெனால்ட் ஈடுபட்டுள்ளது.
இந்த என்ஜின் விரைவில் 5-ஸ்பீடு ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்பட இருக்கிறது. பி.எஸ். 6 அப்டேட் பெறும் பட்சத்தில் ரெனால்ட் டிரைபர் காரின் விலை உயரும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் ரெனால்ட் டிரைபர் கார் மாருதி சுசுகி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் யாரிஸ் பி.எஸ்.6 செடான் காரின் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது பி.எஸ்.6 யாரிஸ் செடான் காரை இந்தியாவில் அறிமுகம் இருக்கிறது. இந்தியாவில் புதிய செடான் பி.எஸ்.6 மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
மேம்பட்ட டொயோட்டா யாரிஸ் பி.எஸ்.6 மாடலின் விலை ரூ. 11,000 வரை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய யாரிஸ் காருக்கான முன்பதிவுகளும் துவங்கி இருக்கிறது. மேம்பட்ட செடான் மாடலை வாடிக்கையாளர்கள் ரூ. 50,000 கட்டணத்தில் முன்பதிவு செய்யலாம்.

புதிய யாரிஸ் மாடல்: ஜெ ஆப்ஷனல், ஜெ, ஜி ஆப்ஷனல், ஜி, வி, வி ஆப்ஷனல் மற்றும் வி.எக்ஸ். என மொத்தம் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட்களும் பி.எஸ். 6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. மேம்பட்ட பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 140 என்.எம். டார்க் செயலதி்றன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆப்ஷனல் சி.வி.டி. கியர்பாக்ஸ் உடன் வருகிறது.
அனைத்து வேரியண்ட்களும் பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டிருக்கிறது. இவற்றில் பல்வேறு அம்சங்கள் இந்த பிரிவு வாகனங்களில் முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் புதிய யாரிஸ் காரை பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் கிடைக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அல்ட்ரோஸ் காரின் முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது.
இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் காருக்கான முன்பதிவு துவங்கியது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய காருக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறது. முன்பதிவு துவங்கியதை புதிய வீடியோ டீசர் மூலம் டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது.
டாடா அல்ட்ரோஸ் கார் ஆன்லைன் அல்லது நாடு முழுவதிலும் இயங்கி வரும் விற்பனை மையங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாடா அல்ட்ரோஸ் விற்பனை இந்தியாவில் ஜனவரி 2020 வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் டாட் நிவறுவனத்தின் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக அல்ட்ரோஸ் கார் இருக்கிறது. டாடா அல்ட்ரோஸ் கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாகியுள்ளது. டாடா ஹேரியர் மாடலை தொடர்ந்து இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாகி இருக்கும் இரண்டாவது கார் மாடலாக டாடா அல்ட்ரோஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டாடா நிறுவனம் புதிய அல்ட்ரோஸ் காரை நேரடியாக பி.எஸ். 6 விதகளுக்கு பொருந்தும் என்ஜின் ஆப்ஷன்களில் வெளியிட முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அல்ட்ரோஸ் காரின் வெளியீடு தாமதமாகி இருப்பதாக தெரிகிறது.
இந்திய சந்தையில் டாடா அல்ட்ரோஸ் கார் மாருதி சுசுகி பலேனோ, டொயோட்டா கிளான்சா மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
மஹிந்திரா நிறுவன கார் மாடலுக்கு ரூ. 4 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் தனது அல்டுராஸ் ஜி4 எஸ்.யு.வி. மாடலை வாங்குவோருக்கு ரூ. 4 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை டிசம்பர் 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. மேலும் சலுகை விற்பனையாளரை பொருத்து வேறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மராசோ மாடலுக்கு ரூ. 1.71 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக மராசோ இருக்கிறது. மேலும் 4 ஸ்டார் குளோபல் NCAP பெறும் மஹிந்திராவின் முதல் வாகனமாக இது இருக்கிறது. அந்த வகையில் இந்த பிரிவு வாகனங்களில் பாதுகாப்பான மாடலாக இது இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 மாடலுக்கு ரூ. 84,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு புதிய எக்ஸ்.யு.வி.500 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதேபோன்று மஹிந்திரா டி.யு.வி.300 மாடலுக்கு ரூ. 75,000 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் எக்ஸ்.யு.வி.300 மாடலுக்கு ரூ. 70,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஸ்கார்பியோ மாடலுக்கு ரூ. 60,000 வரையிலும், பொலிரோ மாடலுக்கு ரூ. 47,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள மாடல்களில் மஹிந்தியா கே.யு.வி.100 எலெக்ட்ரிக் வேரியண்ட் மட்டும் இடம்பெறவில்லை.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய செடான் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறை கியா ஆப்டிமா செடான் காரை உருவாக்கியுள்ளது. இதற்கு ‘கே5’ என பெயர் சூட்டியுள்ளது. சொகுசு மாடல் கார்களுக்குரிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் முன்பகுதி திமிங்கலத்தின் மூக்கு முனை போன்று உள்ளது. முன்புற கிரில் புலியின் முகம் போன்று உள்ளது. இவை அனைத்தையும் சேர்த்து பார்க்கும்போது காருக்கு கம்பீரமான தோற்றம் கிடைக்கிறது. 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. 10.5 இன்ச் தொடுதிரை மற்றும் 8 இன்ச் ஹெட் அப் டிஸ்பிளே ஆகியன உள்ளன.
போதிய அளவு வெளிச்சம், வயர்லெஸ் போன் சார்ஜிங் வசதி மற்றும் 12 போஸ் ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் உள்ளது. இந்த கார் டர்போ சார்ஜ்டு என்ஜினைக் கொண்டுள்ளது. 1.6 லிட்டர் முதல் 2.5 லிட்டர் வரை திறன் கொண்டதாக என்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 2.5 லிட்டர் டர்போ சார்ஜ்டு என்ஜின் 286 பி.ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும்.

8 ஸ்பீடு டியூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியோடு வந்துள்ளது. அனைத்து சக்கர சுழற்சி கொண்ட மாடலும் சில வேரியன்ட்களில் கிடைக்கின்றன. புத்தாண்டில் அறிமுகமாக உள்ள இந்த காரில் ஹைபிரிட் மாடலை அறிமுகம் செய்யவும் கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்புக்கு வசதியாக இதில் 9 ஏர்பேக்குகள் உள்ளன. மேம்பட்ட டிரைவர் உதவி (ஏ.டி.ஏ.எஸ்.) மற்றும் ரிமோட் மூலம் பார்க் செய்யும் (ஆர்.எஸ்.பி.ஏ.) வசதி கொண்டது. இதன் மூலம் வெளியிலிருந்தபடியே காரை பார்க் செய்யவும், பார்க் செய்த இடத்திலிருந்து கொண்டு வரவும் முடியும்.
இந்த காரை ஸ்டார்ட் செய்து 6.6 விநாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கி.மீ. வேகத்தை தொட்டுவிடமுடியும். குரல் வழி கட்டுப்பாடு மூலமும் இந்த காரை செயல்படுத்தும் வசதி உள்ளது. டெல்லியில் புத்தாண்டில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் இந்த கார் காட்சிப்படுத்தப்படுகிறது.






